– ஒளிக்கப்பட்ட உண்மைகள் …

….
….

….

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் –
தமிழகத்தின் உண்மையான நிலை என்ன….?

கீழே உள்ள காணொலியில் சொல்லப்படும்
புள்ளிவிவரங்கள் … பல உண்மைகளைச் சொல்லும்.

நீயா நானா புகழ் – கோபிநாத் நிகழ்த்துகின்ற
இந்தப் பேட்டியில் விளக்கம் தருபவர் –
சாதனைத் தமிழன் என்று புகழப்படும்
சுரேஷ் சம்பந்தம் Founder & CEO of KissFlow and
Orange Scape Technologies

…..

…..

……

இந்தியாவில்- மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம்,
டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில்
நான் பணி புரிந்திருக்கிறேன்… வசித்திருக்கிறேன்…

மேலும் வேறு பல மாநிலங்களுக்கும்,
முக்கிய நகரங்களுக்கும் பயணம் சென்றிருக்கிறேன்.
என் அனுபவத்தில், தமிழ்நாட்டிற்கு ஈடு, இணை –
இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இல்லை
என்பதே உண்மை.

ஆனால், இங்கேயே குண்டுசட்டியில் குதிரையோட்டிக்
கொண்டிருக்கும் பலருக்கு –
குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு
இந்த விஷயம் தெரியவில்லை;
தெரிந்த சிலருக்கோ ஒப்புக்கொள்ள மனமில்லை;

இந்த நிலைக்கு காரணமாக நான் எந்த கட்சியையும்
குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன்.

சுதந்திரம் பெற்றது முதலே இங்கே நடந்த
பல கட்சி அரசுகளின் – பல அரசுகளின் –
தொடர்ந்த பங்களிப்புகள் –

மேலும் முக்கியமாக –
தமிழ் மக்களின் கல்வி, கலாச்சாரம், மத ஒற்றுமை,
மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகிய எல்லாமே
சேர்ந்து தான் தமிழகத்தை இந்த நிலைக்கு
உயர்த்தி இருக்கின்றன.

தமிழகத்தை விட பாதுகாப்பான, சிறப்பான வேறு மாநிலம்
இந்தியாவில் இல்லை என்பது தமிழகத்திற்கு
வெளியே சென்று பார்த்தால் தான் புரியும்.

ஒரு தமிழனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to – ஒளிக்கப்பட்ட உண்மைகள் …

 1. கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

  இந்தியாவின் அருமை இந்தியாவைவிட்டு வெளியே சென்று வசித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திகேயன் பழனிசாமி,

   ஏற்றுக்கொள்கிறேன்.
   நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   அப்படி நாம சொல்லிட முடியாது என்றே நினைக்கிறேன். நாம் வளர்ந்த இடம், பழக்கமாக இடம், பழக்கமான கலாச்சாரம், உணவு, மொழி என்று பல கூறுகள் இருப்பதால்தான் இந்த மாதிரி நாம சொல்கிறோம்/நினைக்கிறோம்.

   தமிழகத்திலேயே, ‘எங்க கோவையைப் போல வராதுங்க’, ‘நெல்லையைப் போல வருமா’, ‘மதுரைதான் சூப்பர் இடம்’ என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கும் (சந்தேகம் இருந்தா யாரிடம் வேணும்னாலும் கேட்டுப்பாருங்க). என்னையோ இல்லை வட மாநிலங்களில் வேலை பார்ப்பவர்களிடமோ கேட்டால் (அவர்கள் அங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகாதவரை), தமிழகம்தான் பெஸ்ட் என்று சொல்வாங்க. I really miss Tamil food, Dosa, Poori masal, பேச்சு மொழி etc……. வட இந்தியாவில் இருப்பவங்க, தென் இந்தியா மாதிரி வராது என்பாங்க. அதுபோல இந்தியாவை விட்டு வேறெங்கோ வேலை பார்ப்பவங்க, இந்தியா பெஸ்ட் என்று சொல்லலாம். அதுக்கு உணவு, உடை, மொழி, கலாச்சாரம் மட்டுமே காரணம். இந்தியாவில் நல்ல கல்வி முறை, அரசுத் துறைகள் செம்மையாக இயங்குகின்றன, போக்குவரத்து சூப்பர் என்ற மாதிரியான அடிப்படைக் காரணங்கள் கிடையாது.

   பாதிக்குமேல் வெளிநாட்டில் வாழ்ந்தவன், பல நாடுகளைப் பார்த்தவன் என்பதால், நான் சொல்வதில் அர்த்தம் உண்டு. வெளிநாடுகளைப்போல், சுத்தம் சுகாதாரம், ஒழுங்கு, அரசுத் துறை என்பது மக்களுக்காகவே, போலீஸ் மக்களின் நண்பன், அச்சமின்மை, வளைகுடா நாடுகளைப்போல பெண்களுக்கான பாதுகாப்பு, நல்ல போக்குவரத்து இவைகளை எடுத்துக்கொண்டால், நாம் எங்கோ பின்னால் இருக்கிறோம்.

   இப்படி நாம் முக்கியமானவைகளில் பின் தங்கி இருந்தபோதிலும், ஈவு இரக்கம் போன்றவற்றில் நாம், இந்தியர்கள் மற்ற நாட்டினரைவிட ரொம்பவே இயல்பான குணமுடையவர்கள்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // நாம் வளர்ந்த இடம், பழக்கமாக
    இடம், பழக்கமான கலாச்சாரம், உணவு,
    மொழி என்று பல கூறுகள் இருப்பதால்
    தான் இந்த மாதிரி நாம சொல்கிறோம்/
    நினைக்கிறோம்.//

    கார்த்திகேயன் பழனிச்சாமி சொன்னது
    அதே காரணத்திற்காகத்தான்…
    நான் அதை வழி மொழிந்ததும்
    அதே காரணத்திற்காகத்தான்.

    வளர்ச்சி நோக்கில் மற்ற நாடுகளை விட
    இந்தியா சிறந்தது என்று கூறவில்லை;

    நீங்கள் தான் தவறாக புரிந்து
    கொண்டிருக்கிறார்கள்…

    பண்பாட்டின் அடிப்படையில் தான்
    வெளிநாட்டுக்கு போனால் தான்
    இந்தியாவின் அருமை தெரியும் … என்று
    தான் சொல்கிறேன். வெளிநாடுகளுக்கு
    பணிக்காகச் செல்லும் பல இந்தியர்கள்,
    குழந்தைகள் வளரும்போது இந்தியா
    திரும்பிவிட வேண்டுமென்று நினைப்பது
    ஏன்…? இதற்காகத் தானே…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     கார்த்திகேயன் அவர்கள் சொன்னது இதை வைத்துத்தான் என்பது தெளிவாக இல்லை. பண்பாட்டின் அடிப்படையில் நாம் பிற நாடுகளைவிட உயர்வான நிலையில் இருக்கிறோம் மேற்கத்தைய நாடுகள், சுயநலம் என்பதைத்தான் பண்பாட்டின் அடித்தளமாகக் கொண்டுள்ளது என நான் நம்புகிறேன். (there can be debates from which angle one sees) இதைப்பற்றி விரிவாக எழுதலாம் (ஓரளவு மற்ற சில தேசங்கள் எப்படி அணுகுகின்றன என்று). ஆனால் பொதுவாக, மேற்கத்தைய நாடுகளில் வசித்து அதன் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும்போது, ஆண்கள் நிறைய பாடங்கள், மனைவியை எப்படி நடத்தவேண்டும், வீட்டில் தங்கள் பங்கு என்ன, நம் குழந்தைகளுக்கு நாம் செய்யவேண்டியது என்ன போன்று, கற்கின்றனர், பெண்கள், ‘அடப்பாவி…இந்தியாவுல நம்மை, நம் முன்னோர்களை இப்படி அடிமையாக நடத்தியிருக்கிறார்களே இந்த ஆண்கள்’ என்று புரிந்துகொள்வர். பெண்களை நடத்தும் விதத்தில் நம் கலாச்சாரம் சீரழிந்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

 2. புதியவன் சொல்கிறார்:

  இவைகள் ஒளிக்கப்பட்ட உண்மைகள் கிடையாது. இவைகள் எல்லோருக்கும் தெரிந்தவைகள்தாம். நம் அரசியல்வாதிகள் செய்யத் தவறியவைகள், மத்திய அரசுக்கு தமிழகம் வழங்குவதற்கு ஏற்ப நமக்கு நிதி பெறுவது, மலையாளிகள் தமிழர்களுக்குள்ள இடங்களைப் பெறாமல் தடுப்பது, மத்திய அரசு வேலையில் மாநிலத்துக்கு ஏற்ற பங்கினைப் பெறுவது (100 இடங்கள் என்றால் தமிழகத்துக்கு 15 இடங்கள் என்பது போல) – இந்த மாதிரி உரிமைகளைப் பெறுவது மிக மிக அவசியம். முன்பெல்லாம் தில்லி மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் ஆதிக்கம் (நாம் சாதிக்கண்ணோட்டம் கொண்டவர்கள் என்பதால் பிராமணர்களின் ஆதிக்கம் என்று சொல்லிக்கொள்ளலாம்) மற்ற மாநிலத்தவர்களைவிட மிக அதிகம். ஆனால் இப்போது என்ன நிலைமை? தமிழர்கள் மத்திய அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது மிகக் குறைவு. மற்ற திறமையில்லாதவர்கள் ஹிந்தியில் பரீட்சை எழுதுகிறேன் என்ற சாக்கில் இடங்களை ஆக்கிரமிப்புச் செய்துவிடுகிறார்கள்.

  அடுத்ததாக, சுரேஷ் சம்பந்தம் சொல்வதில் ஒரு தவறு இருக்கிறது. தமிழகத்தில் பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் பெருக எம்.ஜி.ஆர் மட்டுமே முழுக்காரணம். சுரேஷ், ரொம்ப கன்வீனியண்டாக 80களில் ஏற்பட்ட மாற்றத்திற்கு கருணாநிதியும் எம்ஜிஆரும் காரணம் என்று பொய் சொல்கிறார். 89 வரை கருணாநிதி ஆட்சியின் அருகிலேயே இல்லை. இதனை கோபிநாத் கண்டுகொள்ளாமல் இருந்தது ஆச்சர்யம். நாம் ஸ்டேடிஸ்டிக்ஸ் எடுத்துப் பார்த்தால், கருணாநிதி காலத்தில் யாருக்கு இந்த மாதிரி கல்லூரிகள் நடத்தும் உரிமை கிடைத்தது, அதில் கருணாநிதி குடும்பத்திற்கு எவ்வளவு ஷேர் உண்டு என்பதை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். இல்லைனா கைநாட்டுகளான அழகிரிக்கு ஒரு பொறியியல் கல்லூரி, இன்னும் ஏகப்பட்ட கைநாட்டுகள் திமுகவில் உண்டு, எப்படி வந்தது? இதுவா கல்லூரி வளர்ச்சி?

  இப்போ யாரிடம் கல்லூரிகள் இருக்கின்றன என்று பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். ஜேப்பியார், ஜி.விஸ்வநாதன், எ.வ.வேலு, ஏவி சண்முகம், ராமசந்திரா, என்று லிஸ்ட் எடுத்தாலே (புகழ்பெற்ற கல்லூரிகள்) வெகு சுலபமாக இதனைக் கண்டுபிடித்துவிடலாம். திமுக பக்கத்தில், கல்வி வாசனை இல்லாதவர்களிடம் கல்லூரிகள் இருப்பதையும் கண்டுபிடிக்கலாம்.

  தமிழகம் நிச்சயமாக மிக மிகச் சிறப்பான மாநிலம் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழனாக, இந்தியனாக இருப்பதில் நம் எல்லோருக்கும் பெருமைதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   // இவைகள் ஒளிக்கப்பட்ட உண்மைகள் கிடையாது.
   இவைகள் எல்லோருக்கும் தெரிந்தவைகள்தாம்..//

   நீங்கள் செய்வது விதண்டாவாதம்.
   உங்களுக்கு திமுக/கலைஞரின் மீதுள்ள வெறுப்பை
   இதனுடன் சம்பந்தப்படுத்துவது சரியல்ல.

   தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலம்
   என்று யார் ஏற்றுக்கொண்டார்கள்…?
   (இந்தியா டுடே – இப்போது அறிவித்ததை
   கூட கேள்வி கேட்கிறார்களே…? )

   மத்திய அரசு என்றாவது அறிவித்ததா…?
   இங்கே சுரேஷ் சம்பந்தம் சொல்லும்
   உண்மைகளும், தரும் புள்ளி விவரங்களும்
   எத்தனை பேருக்கு தெரியும்…?

   ஏன் – இதை பார்ப்பதற்கு முன்னால்
   உங்களுக்கே தெரியுமா…?

   “குஜராத்” தான் இந்தியாவிலேயே
   சிறந்த மாநிலம் என்று காட்டப்பட்ட
   மாயா பிம்பத்தை நம்பித்தானே
   மக்கள் ஏமாந்து போனார்கள்…?

   குஜராத் மாடலை மத்தியிலும்
   கொண்டு வருவோம் என்று சொன்னதை
   நம்பித்தானே பல படித்தவர்களும் கூட
   ஓட்டுப்போட்டார்கள்.

   தமிழ் நாடு தான் இந்தியாவிலேயே
   அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் என்பதில்
   எந்தவித சந்தேகமும் இல்லை; ஆனால்,
   அதற்கான அங்கீகாரத்தை நாம் பெறவில்லை
   என்பதும் உண்மை. எல்லா இடங்களிலும்
   குஜராத்தும், மஹாராஷ்டிராவும் தான்
   முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
   இது தெரிந்தே வேண்டுமென்றே செய்யப்படும்
   அடாவடி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை.சார்… அவர் சொன்ன பாயிண்ட் தவறா இல்லையா? 80களில் கலைஞர் மற்றும் எம்ஜியாரால் கல்லூரிகள் வந்தன என்று சொன்னது தவறுதான். நான் சொன்ன விளக்கமும் சரிதான்.

   ஆனால், இந்தப் பத்திரிகைகளை, தொலைக்காட்சிகளை விடுங்கள். அவர்கள் சொன்னது பெரும்பாலும் பொய்களைத்தான். குஜராத் வியாபாரத்தால் முன்னேறி இருக்கிறது. மகாராஷ்டிராவும் அப்படித்தான். ஆனால் தமிழகம் overallஆக முன்னேறி இருப்பதை ஊடகங்கள் மறைத்தன. ஊடகங்கள் தங்கள் கருத்துக்கு, அல்லது அந்த மாதிரி சொல்வதற்குக் கொடுக்கும் காசுக்காக, வலுவில் பொய்களைத் தெளித்தன, பெரும்பாலானோர்கள் நம்பும் கல்கி போன்றவை உட்பட.

   I had come across so many, so many educated, knowledgeable persons from very very ordinary background, from TN (தவறாக எண்ணவேண்டாம், community பெயர் குறிப்பிடுவதற்கு. மீனவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அந்த மாதிரி brilliant personsல் அநேகம். அவங்க குவாலிபிகேஷனும் சாதாரணம் அல்ல). ஆனால் வடவர், தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலத்தவர்களில் – except Goa) ஆங்கில அறிவு மிகவும் குறைவு. தென்னகத்தில் ஒரு மாநிலம் மட்டும், தொடர்புகளால்தான் நிறைய வேலைவாய்ப்பைப் பெறுகிறது, தங்கள் ஆட்கள் என்ற எண்ணம் அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. தமிழர்களில் அந்தக் குணம் கிடையாது. பொதுவாக நேர்மையும், செய்யும் வேலை/கம்பெனிக்கு விசுவாசமும் தமிழர்களிடம் மிக அதிகம்.Sorry if I have deviated from the topic.

   நாம், தமிழர்கள், இந்த முன்னேற்றத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் மதுப்பழக்கத்தை, அரசே மது விற்பனை செய்வதை எதிர்க்கவேண்டும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நீங்கள் சொன்னது – நான் மறுத்தது – இதையே –

    // இவைகள் ஒளிக்கப்பட்ட உண்மைகள் கிடையாது.
    இவைகள் எல்லோருக்கும் தெரிந்தவைகள்தாம்.//

    சுரேஷ் சம்பந்தம் புள்ளி விவரங்களைத் தரும் வரை
    இந்த விவரங்கள் எனக்கும் தெரியாது.
    உங்களுக்கும் தெரியாது…..

    இது உங்களுக்கும் புரியும்.
    ஆனால் உங்கள் ஈகோ உங்களைத் தடுப்பது தெரிகிறது.
    பரவாயில்லை;

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    //ஆனால் உங்கள் ஈகோ உங்களைத் தடுப்பது தெரிகிறது.// அப்படி இல்லை கா.மை.சார். எல்லோருக்கும் ஒரு சிலதான் தெரிந்திருக்கும். அவர் சொன்ன ஸ்டாடிஸ்டிக்ஸில் சிலவற்றை நான் படித்திருந்தேன். அதுனால தெரியாததை புதிது என்று ஒத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்கும்? ஆனால் அவர் கட்சி சார்பா பேசியதுதான் சகிக்கவில்லை.

 3. selvam சொல்கிறார்:

  நான், புதியவன் அண்ணன் கருத்துக்களோடு உடன் படுகிறேன்.

  கார்த்திகேயன் பழனிசாமி அவர்கள் இந்தியாவில் உத்திர பிரதேசம், பிஹார், ஜார்கண்டு, ஹரியானா போன்ற மாநிலங்களில் வசிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் தமிழ்நாடு என்பதை தவிர்த்து இந்திய முழுமைக்கும் சொல்லுகிறார்.

  பாதுகாப்பில் ஹிமாச்சல பிரதேசம் தமிழ் நாட்டைவிட எந்தவகையிலும் குறைந்தது அல்ல.

  இந்த பேட்டி பல உண்மைகளை சொன்னாலும்கூட அரசியல் கண்ணோட்டத்துடன் வெளியிடப்படுவதாகவே தோன்றுகிறது. அந்த காலகட்டத்தில் பல கட்சிகளுக்கு மாறி ஒரு சதவிகிதம் தொண்டரைக்கூட வைத்திராத பெரியாரை, நாற்பது சதவிகிதத்திற்கு மேல் தொண்டரை வைத்திருந்த காமராஜரை விட உயந்தவராக காட்ட முயல்கிறார். பெரியார் அவ்வளவு பெரிய ஆளாக இருந்திருந்தால் காங்கிரஸிலேயே தொடர்ந்திருந்து முதல் அமைச்சர் ஆகியிருக்கலாமே. அங்கு மதிப்பு இல்லை என்று தெரிந்த பின்பு தானே காங்கிரசை விட்டு வெளியேறினார். பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பஞ்சமும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டமும் இல்லை என்றால் திக ஏது? திமுகதான் ஏது ? இதை மறைக்கிறார்

  இரண்டாவதாக காமராஜரை சாதிய தலைவரைப்போல சொல்லுகிறார். அவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் நேசித்த அளவிற்கு இன்று வரை யாரும் நேசிக்கவில்லை என்பதுதான் உண்மை. காமராஜரை பெரியாரின் அடிமைபோல சித்தரிக்கிறார். காமராஜர் பெரியாரை எங்குமே பொருள்படுத்தியதாகவே தெரியவில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை.

 4. GOPI சொல்கிறார்:

  புதியவன் சாருக்கு ஒரு அன்பு பார்சல் :

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தமிழ்நாடு மற்ற மாநிலங்களை பார்க்கும் போது
  முன்னேறிய மாநிலம் என்று கருதலாம் .

  இதற்கு ஒரு காரணம் இங்கே பல பெரிய நகரங்கள்
  உள்ளன . கிராமங்கள் சாலை வசதி பெற்றுள்ளன .
  படிப்பு அதிகம் .பெண்களும் படிக்கிறார்கள் .

  BC /OBC /MBC மக்கள் முன்னேறியிருக்கிறார்கள் .
  மற்ற மாநிலங்களில் இது கிடையாது .

  ஜிடிபி அதிகமாக வர ஐ. டி ஒரு முக்கிய காரணம் .

  தமிழ்நாட்டில் எது சரியில்லை என பார்ப்போம்

  முதலில் மோசமான அரசு அதிகாரிகள் இங்குதான் அதிகம் .
  அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும் கொம்பு
  இருக்கும் . வருபவர்களை சுற்ற விடுவது ,
  இழுத்தடித்து காசு பிடுங்குவது அதிகம் .

  சௌகார் பேட்டை ஆட்களிடம் பேசினால் தெரியும் .
  சேட்டு சுத்தமாக அதிகாரிகளை மதிக்க மாட்டார் .
  இவனுகளாம் மனுசனா ? என்றே சொல்வார்கள் .

  இரண்டாவது குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது .
  பெண்டு பிள்ளைகளை தவிக்க விடுகிறார்கள் .

  மூன்றாவது கந்து வட்டி – தைரியமாக சொத்தை
  அடித்து பிடுங்குகிறார்கள் . இதற்கு காரணம்
  கீழே பார்க்க .

  நாலாவது போலீஸ் சரியில்லை

 6. GOPI சொல்கிறார்:

  ஆம். சிஸ்டம் மாற வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.