மாலன் v/s ஸ்டாலின்-முரசொலி மோதல் அவலம் ….

….
….
….

முதலில் மூத்த பத்திரிக்கையாளர் மாலன் அவர்கள்,
02/12/2020 தேதியிட்ட துக்ளக் வார இதழ் மூலம், திமுக
தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள “திறந்த” கடிதம்….

———————–

அன்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம்

இன்னும் ஆறுமாதம் இருக்கிறது என்ற போதிலும் அனேகமாக
எல்லோரும் -தேர்தல் அதிகாரிகள் உள்பட- இப்போதே
சுறுசுறுப்பாகக் களம் இறங்கியிருக்கிறார்கள். நீங்களும் அது
குறித்த ஆலோசனைகளில் மும்முரமாக இருக்கிற நேரத்தில்
இந்தக் கடிதத்தை நீங்கள் ஒரு தொந்தரவாகக் கருதக் கூடும்.

என்றாலும் இன்று வேண்டாம், நாளை என ஒத்திவைக்க
இயலாது என்பதால் இதை இப்போது எழுதுகிறேன் இந்த
’நாளை அல்ல, இன்றே’ என்ற வாசகம் கூட என்னுடையதல்ல.
காங்கிரஸ் கட்சியினுடையது. பிஹார் தேர்தலில் காங்கிரஸிற்கு
ஏற்பட்டிருக்கும் சரிவுக்குப் பிறகு அவர்களது கட்சிக்குள்
எழுந்திருக்கும் குரல் இது.

இந்தச் சரிவு அவர்களுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
2014லிருந்தே தொடர்ந்து வரும் –குறிப்பாக ராஹூல்
பொறுப்பேற்ற பிறகு- கட்சி கண்டுவரும் தோல்விதான்.
அண்மையில் பிஹாரில் அது மீண்டும் உறுதிப்பட்டிருக்கிறது.
உங்கள் நண்பருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இடுக்கண் குறித்து
நிச்சயம் நீங்கள் வருத்தம் கொண்டிருப்பீர்கள். (….? )

இந்தியாவில் எவரும்-அவரது கட்சி உட்பட-அவரைப் பிரதம
வேட்பாளராக அறிவிக்காத நிலையில் நீங்கள் அறிவித்தீர்கள்.
ஆனால் உங்கள் ராசி அவர் சொந்த ஊரில் கூட ஜெயிக்க
முடியவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த கட்சித் தலைவர்
பொறுப்பையும் உதறினார் என்று சிலர் சொல்கிறார்கள்.

பகுத்தறிவாளர்களுக்கு ராசியில் நம்பிக்கை கிடையாது
என்பதால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.
ஆனால் வள்ளுவர் வழியில் நடப்பது நம் பண்பாடு.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண்
களைவதாம் நட்பு” என்கிறார் வள்ளுவர். இதற்கு அர்த்தம்
என்ன? உங்கள் தந்தையையே கேட்போம்:

”அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக்
கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய
உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும்
துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு
இலக்கணமாகும்” என்கிறார் அவர் தனது திருக்குறள் உரையில்.

ஆடை நழுவிக் கொண்டிருக்கும் காங்கிரசைக் காப்பாற்ற,
நட்புக்கு இலக்கணம் வகுக்கும் வகையில் நீங்கள் நடந்து
கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு
அதிக இடங்களை ஒதுக்குங்கள். கடந்த தேர்தலில்
41 இடங்களை ஒதுக்கினீர்கள் அவர்கள் 8 இடங்களில்,
அதாவது ஐந்தில் ஒரு பங்கு, வென்றார்கள், பிஹாரில்
ராகுலுக்கு இம்முறை ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க
வேண்டுமானால் நீங்கள் அவர்களுக்கு 100 இடங்கள் ஒதுக்க
வேண்டும். அவர்கள் அதில் நிச்சயம் 20 இடங்கள், பிஹாரை
விடக் கூடுதலாக ஒரு இடம் வென்று ராஹூலுக்குப் புகழ்
சேர்ப்பார்கள்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சிலர், துரைமுருகன்
போன்றவர்கள், காங்கிரசிற்கு வாக்கு வங்கியே கிடையாது
அவ்வளவு இடம் கொடுக்கக் கூடாது என்று சொல்லக் கூடும்.
அப்படிச் சொல்கிறவர்களுக்கு இதயத்தில் இடம் கொடுங்கள்.
ஆனால் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

எமர்ஜென்சியின் போது, உங்களை உட்பட, திமுகவினரை
ஜெயிலில் வைத்து உதைத்த பின்பும் நேருவின் மகளே வா
என்று காங்கிரசோடு கூட்டு வைத்துக் கொண்டவர் உங்கள்
தந்தை. கூடா நட்பு கேடாய் முடியும் என்ற உணர்ந்த
பின்னும் காங்கிரஸோடு கூட்டைத் தொடர்ந்தவர்.

தந்தை வழியில் கட்சியை நடத்த வேண்டியது தனயனான
உங்கள் கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதனால் பாதிக்கப்படுமோ என்று
அச்சப்படாதீர்கள். ஆட்சி என்பது தோளில் போட்டிருக்கும்
துண்டு போன்றது. நட்பு என்பது இடுப்பு வேட்டி அல்லவா?

அன்புடன்
மாலன்

————————-

இதற்கு பதில் ஸ்டாலினிடமிருந்து அல்ல….
அவரது நாளிதழான முரசொலியிடமிருந்து வந்திருக்கிறது.
கீழே –

….

….

….

மேற்கண்ட இரண்டிலிருந்தும் தெரிய வருவது –

மாலனுடைய நோக்கம் –
காங்கிரசை மட்டம் தட்டுவதும், அந்த சாக்கில்
போகிற போக்கில் திமுக-வை கிண்டல் செய்வதும் …
– இது அரசியல் குசும்பு .. அவ்வளவே.

முரசொலியின் நோக்கம் – மாலனை தாக்குவதும்,
அவரை ஜாதி அடிப்படையில் திட்டுவதும்
மட்டுமே என்று தெரிகிறது…

முன்பெல்லாம், திமுகவைப்பற்றி யாராவது குறை சொன்னால்,
அறிவுபூர்வமாக விவாதம் செய்வார்கள். குறை சொன்னவரை
தங்கள் தரப்பு வாதங்களால், கிழி-கிழியென்று கிழிப்பார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லையே…
அரசியல் கிண்டலுக்கு ஜாதியைச் சொல்லி சாடுவது
தான் விடையா…? திமுக 60-70 ஆண்டுகள்
பின்னோக்கிச் செல்கிறதா…?

மாலன் எழுப்பிய பிரச்சினைகளைப்பற்றி திமுகவால்
அறிவுபூர்வமாக வாதிக்க முடியவில்லையே …? ஏன்…?
அதே கேலியும் கிண்டலுமாக பதிலளிக்க முடியாதா என்ன…?

“இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்கிற வாசகத்தையே
“LOGO” வாகக் கொண்ட முரசொலி’யில்
புத்திசாலித்தனமாக விவாதிக்கக்கூடியவர்களின்
காலமும் முடிந்து வரலாறு ஆகி விட்டதா…?

தலைமைக்கு ஜால்ரா போடுபவர்களும், கூலிக்கு
மாரடிப்பவர்களும் இருந்தால்
போதும் என்று திமுக தலைமை கருதுகிறதா…?

.
—————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மாலன் v/s ஸ்டாலின்-முரசொலி மோதல் அவலம் ….

 1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  எனக்கு விவரம் தெரிந்தவரையிலிருந்து திமுகவிற்கு தரம் தாழ்ந்து பேசுவதென்பது அவர்களது நாப்பழக்கம் கருணாநிதி காமராஜர் மற்றும் இந்திராவை பேசாத பேச்சா…

 2. புவியரசன் சொல்கிறார்:

  தலைமைக்கு ஜால்ரா போடுபவர்களும், கூலிக்கு
  மாரடிப்பவர்களும் இருந்தால்
  போதும் என்று திமுக தலைமை கருதுகிறதா…?

  இன்றைய திமுக தலைவருக்கு இது தான்
  பிடித்திருக்கிறது. புத்திசாலிகளுக்கோ,
  திறமைசாலிகளுக்கோ அங்கே இடமில்லை;
  ஏனென்றால், எதிர்காலத்தில் அவர்களால்
  கட்சித்தலைமைக்கு நெருக்கடி ஏற்படக்கூடும்.
  எனக்கு முட்டாள்கள் தான் தேவை
  என்று சொன்னவரின் சீடர்கள் தானே ?

 3. புதியவன் சொல்கிறார்:

  மாலன் செய்தது சந்தர்ப்பவாதம்தான். இப்போது காங்கிரஸை அவமரியாதை செய்வதற்கான அவசியம் என்ன? துக்ளக்கில் எழுதச் சொன்னார்கள் என்பதற்காக மற்ற கட்சிகளை தூசுபோல கிண்டல் செய்வதா? ‘மூத்த பத்திரிகையாளர்’ என்று சொல்லும் அருகதை இருப்பதுபோல எனக்குத் தோன்றவில்லை.

  அதற்கு நேர்மையாக, இன்றைய நிலையில் திமுகவால் பதில் கொடுக்க இயலாது. நாளை ஒருவேளை காங்கிரஸை கழற்றிவிட்டால், உங்கள் நிலைமையைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் இப்படித்தானே எழுதின என்று இதனை எடுத்துக்காட்டுவர். பேசாமல் கொடுத்த சீட்டுகளை (20) வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டால் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவர். பதில் சொல்ல முடியாத நிலையில்தான் எரிச்சலைக் காண்பிக்க பெர்சனல் விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு இராமதாஸ் சொல்லியிருக்காரே, தன் சமூகத்தில் உள்ள 10,000 பேரையும், வன்னியர் இட ஒதுக்கீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லையே என்று கருணாநிதி அங்கலாய்த்தாராமே.

  //திமுக 60-70 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா…?// – திமுகவின் கொள்கையே இதுதான். அவங்களைக் கேள்வி கேட்டால் உடனே கேள்விக்குப் பதில் சொல்லமாட்டார்கள், நீ எந்தப் பத்திரிகை, எந்த ஜாதி, எந்தக் கட்சி என்று பெர்சனல் விஷயத்தை மட்டும் எடுப்பார்கள். கருணாநிதி சக்கர நாற்காலியில் இருக்கும்போதே கோவையில் ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இந்த மாதிரித்தானே எரிந்துவிழுந்தார். (சக்கர நாற்காலி என்று எதற்குக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றால், வாழ்க்கையின் கடைசிப் பகுதிக்கு வந்தாலும் அவருக்கு மெச்சூரிட்டி வந்ததே இல்லை, இன்னமும் கீழ்த்தரமான குணங்கள்தான் அவரிடம் இருந்தன என்பதைக் காட்டுவதற்காக)

 4. tamilmani சொல்கிறார்:

  மாலன் எவ்வளவு அங்கதமாக இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்?
  அதை சகித்துக்கொள்ளமுடியாமல் தக்க எதிர் வினைகள் வைக்காமல்
  ஆபாசமாக எதிர் கொள்வது, முரசொலி மற்றும் திமுகவின் பலவீனத்தையே
  காட்டுகிறது. தங்களால் தக்க பதிலை அளிக்க முடியாத போது
  சாதி மதத்தை கொண்டு வருவது திமுகவின் வழக்கம். ஓடாத நொண்டி குதிரை
  ராகுலை .முன்னிறுத்தி தேர்தலில் ஸ்டாலின் மூக்கறுபட்டதன் கோபம், மாலன் மீது
  திரும்பியிருக்கறது. முரசொலிக்கு ஆசிரியர் ஆவதற்கு ஆபாசமாக எழுதுவது என்ற ஒரு தகுதி
  போதும்.ஆனால் india today ஆசிரியர் ஆவதற்கு மாலனுக்கு எல்லாம் தகுதிகளும் இருக்கிறது.
  .

 5. பிரேம் சொல்கிறார்:

  //முரசொலியின் நோக்கம் – மாலனை தாக்குவதும்,
  அவரை ஜாதி அடிப்படையில் திட்டுவதும்
  மட்டுமே என்று தெரிகிறது…//
  அவர் பிராமணர் அல்ல… வேறு என்ன சாதி இங்கு சுட்டப்பட்டிருக்கிறது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.