….
….
….
….
இன்று காலை நான் பதிவிட்ட “அச்சச்சோ மாலன்…”
இடுகையைத் தொடர்ந்து எனக்கு வேறு ஒரு காட்சி நினைவிற்கு
வந்தது. முன்னொரு சமயம், NDTV தொலைக்காட்சியில்
நடந்த ஒரு விவாதத்தைப் பார்த்த ஞாபகம். அதையும்
இங்கே பதிவிட்டால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன்.
தேடியெடுத்து கண்டு பிடித்துவிட்டேன்.
இது சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு தொலைக்காட்சி
விவாதம் …தமிழகத்திலிருந்து, “தமிழ்” சார்பாக எழுத்தாளர் ஞாநி
அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
நான் விவரிப்பதை விட நீங்களே
பார்த்தால் தான் சுவாரஸ்யம் கூடுதலாக இருக்கும்…
பாருங்களேன் –
…………
…………
.
————————————————————————————————————————
ஞாநி சார் பிரமாதம்.
இந்தி வெறியர்களுக்கெல்லாம் இந்த மாதிரி
ட்ரீட்மெண்ட் தான் சரிப்படும்.
மறைந்த ஞாநி சாரின் நினவை
சரியான இடத்தில் கொண்டு வந்தீர்கள்;
நல்ல, மிகப்பொருத்தமான காணொலி.
யார் யார் கலந்துகொண்டார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். ஞாநி – Well Done. இருவருக்கும் நடுவில் உள்ளவர் – Beautiful Point. வேலை என்று வரும்போது அதில் மொழிப்பற்று காற்றில் போய்விடும், ஆனால் பொதுவில் பேசும்போது மொழிவெறியைக் காட்டுவார்கள் (இது திமுகவுக்கும் பொருந்தும். ஊருக்கு தமிழ் மொழி, வியாபாரத்துக்கு ஹிந்திப் பள்ளி, ஊருக்கு கடவுள் இல்லை, தங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடவுள் உண்டு, ஊருக்கு பிராமணர்கள் வேண்டாம் ஆனால் தங்கள் தொழில்களில் எல்லாவற்றிர்க்கும் ஆடிட்டர், வக்கீல், தேர்தல் ஆலோசனை, மருத்துவர் ….. பிராமணர்கள் மட்டும்தான் வேண்டும்). அந்த லேடி யாரென்று தெரியவில்லை. யாரை represent செய்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் செய்வது மிகப்பெரிய தவறு. இங்கு நான் மார்வாரி, குஜராத்தி, ஜெயின் என்று பல்வேறு இனக்குழுக்களைப் பார்க்கிறேன். அவர்களில் சிலர், நாங்கள் பொதுவில் இருக்கும்போது உடைந்த தமிழ் பேசுவார்கள், நானும் உடைந்த ஹிந்தி பேசுவேன்…ஆனால் அவர்களது சொந்த மொழியின் முக்கியத்துவம் இந்தியாவில் குறைந்துவரும் என்பதை அவர்கள் உணரவேண்டும். (பீகாரி, உபி வாலாக்களை நான் உபதொழில்கள் புரிபவர்களாகத்தான் பிளம்பர், ஃபிட்டர் என்பது போன்று, இங்கு பார்க்கிறேன்) நூற்றாண்டுகள்கூட இல்லாத மொழிக்கு இத்தனை வெறி இருந்தால், உலகின் மூத்த மொழிகளான தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இந்தியா கொடுக்கவேண்டும்?
On this account, I also want to relate to another point. தமிழகத்தில் ஒரு சாதிக்கு எதிராக, பெரும்பான்மையினரைக் கவரலாம் (வாக்குவங்கி) என்ற எண்ணத்தில் திமுக செயல்பட்டபோது தெரியாத ‘பன்முகத்தன்மை’, மொழி, மாநிலங்கள் என்று வரும்போது மட்டும் தெரிந்து, ‘பன்முகத்தன்மை’ என்று கூவுவதற்கு திமுகவுக்கோ அல்லது ஸ்டாலினுக்கோ யோக்கியதை உண்டு என்று நம்புகிறீர்களா?
திருமதி சித்ரா முத்கல், 1943-ஆம் ஆண்டு மத்ராஸ்-ல் பிறந்தவர். பம்பாயில் உள்ள கல்லூரியில் MA Hindi பட்டம் பெற்றவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
நன்றி அஜீஸ்.
திருமதி சித்ரா முத்கல்
மத்ராஸில் படித்தவர் என்பது
ஆச்சரியமான தகவல்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்