….
….
….
….
“என்ன கொடுமை சார் இது ” – என்று கேட்காமல் கொஞ்சம்
பொறுமையாக இறுதிவரை பார்த்தீர்கள் என்றால்
இந்த இடுகை நிச்சயம் ரசிக்கும்படி இருக்கும்….!!!
நேரமில்லாதவர்கள் கடைசீ வீடியோவை
மட்டுமாவது அவசியம் பாருங்கள்…
மிக மிக ஸ்பெஷல்…!!!
….
சிந்தாமணி – பழைய திரைப்படத்தில்
எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல் –
-“ராதே உனக்கு கோபம் ஆகாதடி…”
….
….
குலமகள் ராதை படத்தில் டி.எம்.எஸ்.
அதே “ராதே உனக்கு கோபம் ஆகாதடி ….”
…..
சிவகவி – பழைய திரைப்படத்தில்
– எம்.கே.தியாகராஜ பாகவதர் –
“வதனமே சந்திரபிம்பமோ”
……
……
அதே பாடல் ரி-மிக்ஸ் …
…….
“மன்மத லீலையை வென்றார் உண்டோ”
ஹரிதாஸ் பழைய திரைப்படத்தில் எம்.கே.டி.பாகவதர் –
….
…..
அதே பாடல் குன்னக்குடி வைத்தியநாதன்
கரங்களில் விளையாடும் விதம் –
…..
…..
இதை கொடூரம் என்று சொல்லாமல்
பொறுமையாக முழுவதும் பாருங்கள் – ரசிக்கும்….
—————————-
எம்.கே.டி.+மைக்கேல் ஜாக்சன்
ஒன்று சேர கலக்கும் ….
“ஜீவப்ரியே சியாமளா’வும் –
…………….
…………….
.
——————————————————————————————————————————-
நான் எம்.கே.டி அவர்கள் பாடல்களை மிகவும் ரசிப்பேன். ஒரு சில தவிர (ஸ்வரங்கள் வரும் பாடல்கள்) மற்றவை எனக்கு மனப்பாடம். ரொம்பநாள், ‘வதனமே சந்த்ரபிம்பமோ’ என்ற பாடலில், ‘மானினம்போல் நீள் விழியோ மதுர கானமோ’ என்றே நினைத்துக்கொண்டிருந்தேன், அப்பத்தான் அர்த்தம் சரியா வருது என்று எண்ணியிருந்தேன். அப்புறம்தான் ‘மாறன் அம்போ நீள் விழியோ’ என்று கண்டுபிடித்தேன் (மாறன் – மன்மதன், மன்மதன் அம்பு மாதிரி இழுக்கிறது என்னை’ என்று சொல்கிறார். நான் இதுவரை கேட்டிராத பாடல் இந்த “ஜீவப் ப்ரியே ச்யாமளா’ பாடல்.
இதற்கு முன் எழுதியிருந்தேன். மிகத் திறமைசாலியாக இருந்தாலும், டிரெடிஷனை விட்டு விலகினதால்தான் பழமைவாதிகளால் குன்னக்குடியை recognize செய்யவில்லை.
எனக்குத் தெரிந்து, ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற ஒரு பாடலில்தான் டி.எம்.எஸ். அவர்கள் எம்.கே.டியை அடியொற்றிப் பாடியிருக்கிறார். மற்றபடி அவரது தனிக் குரலில்தான் எல்லாப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
மைக்கேல் ஜாக்சன் – ஹாஹா.
பாடல்களுக்கு மிக்க நன்றி !
தியாகராஜ பாகவதர் பாடல்கள் பல ராகங்களில்
பாடியிருப்பார் .
மன்மத லீலையை வென்றார் – சாருகேசி
ராதே உனக்கு கோபம் – செஞ்சுருட்டி
வதனமே சந்திர பிம்பமோ – சிந்து பைரவி
என் ஜீவப்ரியே ஷ்யாமளா- திலாங் .
சில அபூர்வ ராகங்கள் கூட வரும் .
அதற்கு காரணம் உண்டு . பாகவதர் படங்களுக்கு
பாடல் ஆசிரியர் திரு பாபனாசம் சிவன் அவர்கள் .
அவர் பெயர் சிவன் இல்லை – ஊரும் பாபனாசம் இல்லை
உண்மையான பெயர் ராமையா .
தன் நேரத்தை பெரும்பாலும் கோவிலில் செலவிடுவார்..
சாகித்திய கர்த்தா என்றே சொல்லலாம் .
பாடலை எழுதி ராகமும் கொடுத்து விடுவார் .
இது மற்ற எவரும் செய்ய முடியாதது .
இவர் பாடல்களில் தமிழுடன் சம்ஸ்க்ரிதம்
கலந்தே வரும் . சில பாடல்கள் முழுக்க வடமொழி !
இசை அமைத்தது ஹார்மோனிய சக்கரவர்த்தி
திரு G ராமநாதன் .
தகவல்கள் பிரமாதம்.
நன்றி நண்பர் மெய்ப்பொருள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்