சுதந்திரம் பற்றி சிவாஜி – ஒரு காணொலி ….!!!

….
….

….

ஒரு சுதந்திர தினத்தையொட்டி, நடிகர் திலகம் சிவாஜி
ஆற்றிய உணர்ச்சிகரமான உரையொன்று –

……

……

பின் குறிப்பு –

ஒரு சின்ன சந்தேகம் தோன்றியது….

மேலே பேசி இருப்பது அந்தக்கால சிவாஜி.
ஒருவேளை இன்றும் சிவாஜி இருந்திருந்து,
அவரை பொதுவாக இன்றைய அரசியலைப்பற்றி
ஒரு உரையாற்றச் சொல்லி இருந்தால்,
அவர் எதெதைப்பற்றி பேசி இருப்பார்….?

வந்தேமாதரத்திற்கு புதிய விளக்கம் எதாவது….?

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சுதந்திரம் பற்றி சிவாஜி – ஒரு காணொலி ….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    Sorry… காணொளி கேட்கும்போதே நினைவுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டன.

    80ம் வருடம் என்று நினைவு. அப்போது திருவண்ணாமலையில் சிவாஜி கூட்டம். அதற்கு, சிவாஜி மீது கல் எறிந்து அதனால் உண்டான காயங்களுக்குக் கட்டுப்போட்ட படத்தைத்தான் ஊரெங்கும் ஒட்டியிருந்தார்கள். (முன்பு எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா அவர்கள் சுட்ட படத்தை, கட்டுக்களோடு இருந்த எம்.ஜி.ஆர் படம் தமிழக மக்களிடையே பெரிய எழுச்சியையும், அவர் மீதான அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அதை மனதில் கொண்டு ஒட்டியிருப்பார்கள்). அப்போது சிவாஜி அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்கவில்லை. பின்பு ஒரு வருடம் கழித்து, பாளையங்கோட்டையில் எங்கள் வீட்டிற்கு அருகில் தேர்தல் கூட்டம் இருந்ததால் சிவாஜி அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்டேன். 40-50 பேர்தான் இருந்தனர் (தேர்தல் கூட்டம், அதனால் நிறைய இடங்களில் இது மாதிரி பேசுவார். 89ல் ராஜீவ் காந்தி, காங்கிரஸுக்காக தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தபோது-இரவு 9 மணி, ப.சிதம்பரம் தமிழ்ப்படுத்தினார், அந்தக் கூட்டத்திலும் 30-40 பேர்கள்தாம் இருந்தனர். அதனால் எண்ணிக்கையில் குற்றமில்லை).

    படத்தில் பார்த்த சிவாஜி வேறு. மேடையில் பேசும் சிவாஜி வேறு. எனக்கு ரொம்பவே ஏமாற்றம். சரித்திரப் படங்களில் நடித்து மக்களிடையே ஒரு கம்பீர இமேஜைக் கொண்டிருந்த சிவாஜி அவர்கள், சாதாரணவர்களைப்போல மேடையில் பேசியதால், என்னைப்போல அனேகமாக சாதாரண மக்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர், தன் படவுலக இமேஜ், வெளி இமேஜ் இரண்டையும் கடைசிவரை கட்டிக்காத்தார். இதுதான் சிவாஜி அவர்களின் அரசியல் தோல்விக்கான முழுமுதற்காரணம் என்று நான் நினைக்கிறேன் (இமேஜைக் கட்டிக் காத்திருந்தால் எம்.ஜி.ஆர் போல ஆகியிருப்பாரா என்று எதிர்க் கேள்வி கூடாது. அவரால் தன் கருத்துக்களைக் கேட்கும் மக்களை இம்ப்ரெஸ் செய்திருக்க முடியும், இன்னும் தன் கட்சிக்கான ஆதரவுத் தளத்தைப் பெருக்கியிருக்க முடியும். அருவி போன்ற மேடைப் பேச்சு, அவருக்கு மிகவும் கைகொடுத்திருக்கும். எம்ஜிஆருக்கான ப்ளஸ் பாயிண்ட், இவர் நல்லவர் என்று மக்கள் மனதில் பதிந்துவிட்ட இமேஜ். கருணாநிதி பேச்சைக் கேட்கத் திரளும் கூட்டத்தில் பெரும் பகுதி, வாக்குச்சாவடி என்று வரும்போது இரட்டை இலைக்குக் குத்திவிடும், இதனை கருணாநிதியே மதுரையில் ஒரு கூட்டத்தில் பேசினார்-இரட்டை இலை என்று சொல்லலை, அவர் சொன்னது, என் பேச்சைக் கேட்க பெரும் திரளாக வருகிறீர்கள் ஆனால் வாக்களிப்பதில்லை என்றார்)

    (பொதுக் காணொளியிலும் அரசியலை இழுத்துவிடணுமா என்ற யோசனை வந்தது. ஆனால் இடுகை/காணொளி என் நினைவுகளைக் கிளறிவிட்டன)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.