….
….
….
….
….
சோம்நாத் கோவிலின் வரலாறு….
…..
…..
நாம் இங்கே பார்ப்பது சுதந்திரத்திற்குப் பிறகு
சர்தார் பட்டேல் அவர்களின் முயற்சியால்
புதுப்பிக்கப்பட்ட சோம்நாத் ஆலயம்…
…..
…..
இந்தக் கோவில் புனரமைக்கப்பட்டது நாடு சுதந்திரம் பெற்றவுடன்
அமைக்கப்பட்ட முதல் காங்கிரஸ் ஆட்சியில் என்பதும்,
இதில் பெருமுயற்சி எடுத்தவர் மூத்த காங்கிரஸ் தலைவரும்
அப்போதைய இந்திய துணைப்பிரதமருமான சர்தார் பட்டேல்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவில், முழுக்க முழுக்க பொதுமக்களின்
நன்கொடையாலேயே மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
————————————————————————————————————————————-
இந்த ஃபெப்ரவரியில் இந்தக் கோவிலுக்கு முதல் முறையாகச் சென்றிருந்தேன். கோவிலை அழகாகக் கட்டியிருக்கிறார்கள், ஆனால் ஹிஸ்டாரிகல்லி சொல்லப்படும் கட்டிடக் கலைச் சிறப்புகளை (சிவலிங்கம், காந்தக் கற்கள்) பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்று தோன்றியது. கூட்டம் இல்லை, ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளது.
Strategically, temple location சுலபமாக படையெடுத்து அழிக்கக்கூடிய இடத்தில்தான் முன்பு கட்டப்பட்டிருக்கிறது. அந்நியர்கள், தற்காலத்திலும் மும்பையைப் போன்ற தாக்குதல்களில் ஈடுபட்டால் (சோம்நாத்தில்) அது இந்தியாவில் மிகப்பெரிய மதக் கலவரமாக மாறிவிடும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. செக்யூரிட்டி வளாகத்துக்கு வெளியே, சிறந்த முறையில் பாத்ரூம் வசதிகள்லாம் கூட்டத்தைச் சமாளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பார்க்கவேண்டிய கோவில் இது.
Very interesting to know about Somnath temple. The video was so good that i felt like seeing in real.
Thank you for sharing.
சோமநாதர் கோவிலிலிருந்து ஆட்டோவில் போகும் தூரத்தில்தான், ஆதி சங்கரர் தவம் செய்த குகை, அங்கிருந்து சிறிது தொலைவில், பகவான் கிருஷ்ணரின் பூத உடல் தகனம் செய்த இடம், அதையொட்டிய பிரபாவதி நதி ஆகியவை இருக்கின்றன. சோம்நாத் கோவிலிலிருந்து 7-8 கிலோமீட்டர் தொலைவில்தான் கிருஷ்ணர் மறைந்த இடம் (வேடனின் அம்பால் கால்விரல் துளைக்கப்பட்டு) விராவல் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கிறது. அவரது பூத உடல், அங்கிருந்து பிரபாஸ் நதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு (8-9 கிலோமீட்டர்) அங்கு தகனம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
“இந்தக் கோவில், முழுக்க முழுக்க பொதுமக்களின்
நன்கொடையாலேயே மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது
என்பதும் குறிப்பிடத்தக்கது.”
சோம்நாத் ஜூனாகதில் உள்ளது – அதை ஆண்டது ஒரு நவாப் .
திரு பூட்டோவின் தாத்தா அங்கே திவானாக
இருந்தார் . இந்தியா சுதந்திரம் அடைந்த போது
நவாப் பாகிஸ்தானில் சேர விரும்பினார் . சர்தாரின்
பெருமுயற்சியால் அது நடைபெறவில்லை .
சுதந்திரம் கிடைத்த பிறகு ஜூனாகாத சென்ற சர்தார்
சோம்நாத் கோவிலுக்கும் சென்றார் . கோவிலை
பார்த்ததும் சர்தார் நெஞ்சு பொறுக்கவில்லை .
காந்தியிடம் கலந்து ஆலோசித்த போது அவர் கோவில்
கட்டுவதை ஆதரித்தார் . அரசை எதிர்பார்க்காமல்
பொதுமக்களே கட்டட்டும் என்றார் . படேல்
எண்ணமும் அதுவாகவே இருந்தது . வரும் நாட்களில்
அரசின் குறுக்கீடு வருவதை அவர் விரும்பவில்லை .
கோவில் கட்டும் பொறுப்பை திரு கே எம் முன்ஷி
ஏற்றுக்கொண்டு அதை முடித்தார் .கோவில் முடிந்த
போது பட்டேல் , காந்தி இருவரும் இல்லை .
திரு முன்ஷி இதை பற்றி ஒரு புத்தகமே எழுதினார் .
நேரு கெடுத்தார் , காந்தி கெடுத்தார் என்பது வெறும் சரடு .
It is my opinion to leave சாமானியன் comments. He also represents a section who believes in his theory.
//This article talks about the interesting conversations that went on between the leaders while the Somnath temple was proposed to be rebuilt. Of how Congress asked the people to fund for the temple and the government did not want to play any role in this temple reconstruction in order to play the secular card. It is an interesting read – Nehru vs Patel – Prasad on Somnath.//
https://indianexpress.com/article/explained/somnath-temple-rahul-gandhi-babri-demolition-ram-rath-yatra-ram-mandir-ayodhya-verdict-hindutvain-nehru-sardar-patel-4971403/
பொதுவா இந்தியன் எக்ஸ்பிரஸ், நேர்மையான எழுத்தைக் கொண்டது என்று நான் நம்புவதால் அதனை quote செய்கிறேன்.
புதியவன்,
எழுதியவரின் பின்னணி, பின்புலம்
தெரியாமல் அவருக்கு
வக்காலத்து வாங்க வேண்டாம்.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்