அவசர கூட்டணி – காரணங்கள்…? விளைவுகள்…?

….
….

….

நேற்று மாலை அவசர அவசரமாக, அரசு விழாவிலேயே
பாஜகவுடன்,அதிமுக கூட்டணி உறுதி என்று அறிவிக்கிறார்கள்…

சரி கூட்டணி வைக்கட்டும்.
அதை இவ்வளவு அவசரமாக அரசு விழா என்று கூடப்பார்க்காமல்
அறிவித்தது ஏன்…? அப்படி என்ன கட்டாயம்…?

நான் உணர்ந்த சில கருத்துகளை கீழே
வரிசைப்படுத்துகிறேன்… இவை முழுமையானவை அல்ல.
இதற்கு மேலும் பல காரணங்கள்/விளைவுகள் நிச்சயம்
இருக்கின்றன…

விவாதிப்போம். நண்பர்கள் பின்னூட்டங்களின் மூலம் தங்கள்
கருத்துகளை முன் வைக்க வேண்டுகிறேன்.

காரணங்கள் –

1) தமிழக பாஜக-விற்கும், அதிமுக அரசுக்கும் இடையே
மோதல்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. தொடர்ந்து கருத்து
மோதல்கள்; அவமானப்படுத்துதல்கள் அதிகரிக்கின்றன.
தமிழக பாஜக-வில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்
தாங்கள் தனியே போட்டியிட்டு, (வெற்றி பெற முடியாவிட்டாலும்
கூட) தங்கள் பலத்தை தனித்து உறுதிசெய்ய விரும்புபவர்கள்
அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

தங்களால் அதிமுக-வின் ஓட்டு வங்கியை (அதிகமாக
இந்து மதஅபிமானம் கொண்டவர்களை) பிரிக்க முடியும் என்று
இவர்கள் நம்புகிறார்கள்… அதன் மூலம் அதிமுக-வை சில
தொகுதிகளிலாவது தோற்கடித்து பழி வாங்க வேண்டுமென்று
அத்தகையோர் விரும்புகிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் வென்று எம்.எல்.ஏ. ஆக விரும்பும் சிலர்
மட்டும், அதிமுக-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே
பாஜக எம்.எல்.ஏ.க்கள் உருவாவது சாத்தியம் என்று
நினைக்கிறார்கள். ஆனால் இத்தகையோர் எண்ணிக்கை குறைவே.

2) அதிமுக-வுடன் கூட்டணி வைப்பதில்லை என்று பாஜக
முடிவு செய்தால், அடுத்த 3-4 மாதங்களில்,
அதிமுக முக்கியஸ்தர்கள் மீது – வருமான வரி, அமலாக்கப்பிரிவு
விசாரணை என்று பரபரப்பான ஊழல் புகார்கள் வெளிவரும்.
அதிமுக அரசின் மீதும், கட்சியின் முக்கியஸ்தர்கள் மீதும்
மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் முழுவேகத்துடன் பாயும்.
இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கேஸ்’கள்
வேகம் பெறும்.

3) தேர்தலைப் பொறுத்த வரையில், பாஜக-வுடன் கூட்டணி
வைத்தால், அதிமுக-வுக்கு பலத்த ஓட்டிழப்பு ஏற்படும்.
மைனாரிடி சமூகத்தினர் ஒட்டுமொத்தமாக அதிமுக-வுக்கு
விரோதமாக திரும்பி விடுவர் என்பது உண்மையேயானாலும்,

4) அதிமுக இந்தமுறை வலியச்சென்று கூட்டணியை
உறுதி செய்வதற்கான காரணங்கள் –

ஒன்று – தேர்தல் நேரத்தில் ரெய்டுகள் வந்து தங்களது
பண பலத்தையும், மனோதிடத்தையும் இழப்பதை அதிமுக
தலைமை விரும்பவில்லை.

இரண்டு – பாஜகவுடன் கூட்டணி சேர மறுத்து,
ஒருவேளை தேர்தலிலும் தோற்று ஆட்சியை இழந்து விட்டால்,
அடுத்த 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் தாக்குதல்களை
அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது….

மூன்று – குருமூர்த்தி அவர்கள் ஏற்கெனவே, சட்டமன்ற
தேர்தலில் தமிழக பாஜக தனியே போட்டியிட்டு, வெற்றி பெறா
விட்டாலும் கூட, தங்கள் வாக்கு வங்கியை (அதிமுக-வுக்கு
சென்று விடாமல்) தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனால், அதிமுக தோற்று, திமுக ஜெயித்தாலும் கூட
பரவாயில்லை என்று பாஜக தலைமைக்கு ஆலோசனை
சொல்லி இருக்கிறார் என்று தெரிகிறது.

நான்கு – கூட்டணி அமைவதை தாமதப்படுத்தினால்,
இந்த ஆலோசனையை, பாஜக தலைமை ஏற்றுக்கொண்டு
விடக்கூடிய நிலை ஏற்படலாம் என்று அதிமுக கருதக்கூடும்.

ஐந்து – மாலையில், அரசு நிகழ்ச்சி… அதையடுத்து ஓட்டலில்
தமிழக பாஜகவினருடன் சந்திப்பு என்கிற நிலையில், கூட்டணி
பற்றிய அறிவிப்பை அரசு நிகழ்ச்சியிலேயே செய்து விட்டால்,
அடுத்து நடக்கும் கட்சி சந்திப்பில், தங்களுக்கு எதிரான மனநிலை
எடுபடாது என்று அதிமுக தலைமை நினைத்திருக்கலாம்.

—————————-

விளைவுகள்….?

1) மத்திய பாஜக அரசின் மீது தமிழக மக்களுக்கு இருக்கும்,
கோபம், எதிர்ப்பு உணர்வு – அனைத்தும், அதிமுகவுக்கு
எதிராக திரும்பும். அத்தனைக்கும் அதிமுக அரசும்
உடந்தை, ஒரு காரணம் என்கிற காரணத்தை தமிழக மக்களின்
மனதில் ஆழமாக பதிய வைக்க அனைத்து எதிர்க்கட்சிகளும்
முனையும்.

2) திமுக-வை சங்கடப்படுத்த, திமுக முக்கியஸ்தர்களின் மீது
ரெய்டுகள் நடக்கும்….அவர்களின் கருப்புப்பணமும் –

தேர்தல் செலவுகளுக்காக திமுக-வால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பணத்தில் பெரும் பகுதியும் ரெய்டுகளில் மாட்டும்.

தேர்தலுக்காகவென்று பதுக்கி வைத்த பணபலத்தின் துணையின்றி,
திமுக தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.

3) திமுக-வில் பிளவுகள் உண்டாகும். சில முக்கிய தலைகள்,
திமுக தலைமைக்கு எதிராக திரும்புவார்கள்; அத்தகைய
சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படும்…

4) இத்தனையும் நிகழ்நாலும் கூட –

பலமான மூன்றாவது அணி ஒன்று உருவானால் தவிர,
திமுக ஜெயிப்பதும் ஆட்சியைப் பிடிப்பதும் உறுதியாகி விடும்.

ஆனால், நேற்றைய நிகழ்வுகளின் மூலம், தமிழக ஊடகங்கள்
கால் காசுக்கு பிரயோஜனமில்லை என்கிற கருத்தை மீண்டும்
உறுதி செய்கின்றன… விமான நிலையத்தின் வாசலில்
அதிமுக தொண்டர்கள் பாஜக தலைவரை வரவேற்கும்
வகையில் காத்திருப்பதை பார்த்த பிறகும்,

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்,
விமான நிலையத்திற்கே சென்று
உள்துறை அமைச்சரை வரவேற்பதை பார்த்த பிறகும் கூட –

இந்த வீண் வம்பு அரட்டையாளர்களுக்கு,
பாஜக+ அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது
என்பதை புரிந்துகொள்ளத் துப்பில்லை;
அதிமுக ஒருங்கிணைப்பாளரே அறிவிக்கும் வரை
எந்த மட்டிக்கும் இதை யூகிக்கத் தெரியவில்லை;

இன்னமும் பல கருத்துகள் தோன்றுகின்றன… நண்பர்களும்
தங்கள் கருத்தை பின்னூட்டங்களின் மூலம் பகிர்ந்துகொள்ள
வேண்டும்.

பின்னூட்டங்களில் மற்ற கருத்துகளுடன் சந்திப்போம்.

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to அவசர கூட்டணி – காரணங்கள்…? விளைவுகள்…?

  1. புதியவன் சொல்கிறார்:

    //தங்கள் பலத்தை தனித்து உறுதிசெய்ய விரும்புபவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.// – அதனால் அதிமுகவுக்கு என்ன பாதகம் ஏற்பட்டுவிடும்? தேர்தல் என்று வரும்போது, “முஸ்லீம்கள் பாஜகவை யார் தோற்கடிக்க முடியும் என்று பார்ப்பது” போலவே “இந்து மத அபிமானிகள்-இந்துக்கள் என்று ஏன் குறிப்பிடவில்லை என்றால் இப்போது அத்தகைய பிளாக் இல்லை” யாருக்கு வாக்களித்தால் திமுகவைத் தோற்கடிக்க முடியும் என்று பார்ப்பார்களே தவிர பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் இது காரணம் இல்லை.

    //அதிமுக அரசின் மீதும், கட்சியின் முக்கியஸ்தர்கள் மீதும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் முழுவேகத்துடன் பாயும்.// – திமுக, பாஜகவுடன் திரைமறைவு டீல் போட்டுக்கொண்டாலோ அல்லது, டீல் போட்டுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கு என்று தோன்றினாலோ, பாஜக, அதிமுகவுக்கு தேர்தலின் போது கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்கும். இது அதிமுகவுக்கு பாதகமாகும்.

    //திமுக-வில் பிளவுகள் உண்டாகும். சில முக்கிய தலைகள், திமுக தலைமைக்கு எதிராக திரும்புவார்கள்; அத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படும்…// – பாஜக, அதிமுக கூட்டணி தோற்கும் கூட்டணியாகத்தான் பார்க்கப்படும். அதனால் திமுக அதிருப்தியாளர்கள் கொஞ்சம் அமைதியாயிடுவாங்க என்றே நான் நினைக்கிறேன்.

    பிறகு எழுதுகிறேன்.

  2. selvam சொல்கிறார்:

    ஐயா,

    நான் அம்மாவின் தீவிர விசுவாசியாக இருந்தவன். தேவர் ஐயா வழியில் நின்று தமிழ்நாட்டு உரிமைக்காக அம்மா அவர்கள் போராடியதால் நான் அதிமுகவையும் அம்மாவையும் உயிராக நேசித்தேன். ஆனால் இப்பொழுது இருப்பவர்கள் தங்களின் சுயநலனுக்காக அதிமுகவையும் தமிழ்நாட்டையும் சேர்த்தே பிஜேபிக்கு விற்றுவிட்டார்கள் என்பது எனது கருத்தாக உள்ளது

    நான் ஒரு இடைநிலை சாதியை சார்ந்தவன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்னால் உயர் சாதியினரை போல இப்பொழுது இருக்கும் அதிமுகவினர் என்னதான் தப்பு செய்தாலும் கருணாநிதியையும் திமுகவையும் மட்டுமே எதிர்த்தே என்னால் பேச முடியாது.

    நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். அண்ணா, நீங்கள்தான் வழிகாட்டி எனது குழப்பத்தை போக்கவேண்டும்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வம்,

      நீங்கள் இப்படி உயர்சாதி,
      இடைநிலை சாதி என்றெல்லாம்
      பேசுவதை நான் ஏற்க மாட்டேன்.

      எனவே இந்த கோணத்தில்
      பேசுவதையோ, எழுதுவதையோ
      தயவுசெய்து தவிர்த்து விடவும்.

      எந்தவித முன் முடிவும் இல்லாமல்
      திறந்த மனதோடு தொடர்ந்து இந்த தளத்தில்
      வெளிவரும் அரசியல் கட்டுரைகள்,
      பின்னூட்ட விவாதங்கள் ஆகியவற்றை
      கவனித்து வாருங்களேன்.
      உங்களுக்கே தெளிவு ஏற்படும்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Raghavendraw சொல்கிறார்:

    சார், பலமான மூன்றாவது அணி ஒன்று
    ஏற்பட்டாலொழிய – திமுக தான் ஜெயிக்கும்
    என்று கூறி இருக்கிறீர்கள்.
    உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்.
    ஆனால், அப்படி பலமான மூன்றாவது அணி
    என்று ஒன்று தோன்றுவதற்கான அறிகுறிகள்
    எதையும் காணுமே.
    கமல்ஹாசனின் தலைமையில் ஏற்படக்கூடிய
    சிறு கட்சிகள் சிலவற்றின் கூட்டணி பலமாக
    இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
    மூன்றாவது அணி குறித்து
    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ராகவேந்திரா,

      என்னுடைய கருத்து –

      மூன்றாவது அணி என்று பலமான அணி
      ஒன்று உருவாக வேண்டுமென்றால்,
      அது ரஜினி அரசியலுக்கு வந்தால் தான்
      சாத்தியமாகும்.

      அதிமுக+பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டதன்
      மூலம் அதற்கான positive signal ஒன்று இப்போது
      உருவாகி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

      பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம்,
      அதிமுக வெற்றி பெறுவதற்கு இருந்த கொஞ்சநஞ்ச
      வாய்ப்பையும் இழந்து விட்டது.

      ரஜினி வருவதற்கு இருந்த தயக்கங்களில்
      ஒன்று, வந்தால் கூடவே பாஜக வந்து
      தொற்றிக்கொள்ளுமே என்பது. இப்போது
      பாஜக அதிமுகவுடன் போய் விட்டதால்,
      இனி ரஜினிக்கு அந்த தொந்திரவு இருக்காது.

      ரஜினி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது
      என்று நான் இன்னமும் நம்புகிறேன்.

      அப்படி ரஜினி வரவில்லையென்றால் –

      அநேகமாக இன்றிருக்கும் சூழ்நிலையில் –
      ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர்…
      திமுக தான் தமிழ்நாட்டை ஆளுப்போகும் கட்சி.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • SELVADURAI MUTHUKANI சொல்கிறார்:

        நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் சசிகலா வந்தால் சீன் மாறும் என்று நீங்கள் நினைக்கவில்லையா??

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


          SELVADURAI MUTHUKANI

          வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
          எடப்பாடி அவர்கள் தனது இடத்தை
          படு ஸ்டிராங்காக தக்க வைத்துக்கொண்டு
          விட்டார். வேறு வழியின்றி ஓபிஎஸ்ஸும்
          அவருடன் ஒத்துழைக்கிறார்.

          மேலும் திருமதி சசிகலா அடுத்த
          6 ஆண்டுகளுக்கு சட்டப்படி தேர்தல்
          அரசியலில் நேரடியாக ஈடுபட முடியாது.
          தினகரனை நம்பி கையில் இருக்கும்
          சொத்துக்களையும் இழக்க அவர் தயாராக
          இருக்க மாட்டார்… அநேகமாக சசிகலா
          இனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்றே
          நான் நினைக்கிறேன்.

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

          • மெய்ப்பொருள் சொல்கிறார்:

            கா மை சார்
            அநேகமாக சசிகலா
            இனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்றே
            நான் நினைக்கிறேன் என சொல்லியுள்ளீர்கள் .

            நான் அப்படி நினைக்கவில்லை .
            சசிகலா சாதாரண பெண் இல்லை .
            ஜெயா காலத்தில் ஆட்சியையும்
            கட்சியையும் நடத்தியவர் .

            அவரால் தேர்தலில் நிற்க முடியாது .
            அவ்வளவுதான் – மற்றபடி கட்சியையோ
            ஆட்சியையோ நடத்த முடியும் .

            அன்னை சோனியா ஒரு உதாரணம் .

            தமிழகத்தில் மினிஸ்டர் பி ஏ என்ற
            ஜந்துக்கள் உள்ளன – அவர்கள்
            செய்யாத அட்டகாசமா ?

          • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            மெய்ப்பொருள்,

            //சசிகலா சாதாரண பெண் இல்லை .
            ஜெயா காலத்தில் ஆட்சியையும்
            கட்சியையும் நடத்தியவர் .//

            உண்மை தான் நீங்கள் சொல்லுவதை
            ஏற்கிறேன். நான் அவரது திறமையை
            குறைத்து சொல்லவில்லை

            நான் சொல்ல வந்தது –

            காலம் மாறிவிட்டது;
            இப்போது ஜெ.இல்லை.

            4 ஆண்டுக்கால தனிமை, சிறைவாசம்
            நோய் ஆகியவற்றால் அவர்
            தளர்ந்து போயிருக்கிறார்..

            அந்நாள் போல, இப்போது
            சசிகலாவைக்கண்டு அதிமுகவில்
            யாரும் அஞ்சவில்லை;
            4 ஆண்டுகளாக சசிகலாவோ,
            அவருக்கு வேண்டியவர்களோ –
            அதிகாரத்தில் இல்லை;

            அவரது பழையஆதரவாளர்கள் எல்லாம்
            இப்போது பதவிகளையும், அதிகாரத்தையும்,
            அதனால் கிடக்கக்கூடிய “வசதி”களையும்
            அனுபவித்து பழகி விட்டார்கள்.
            அவற்றை விட்டு வெளியே வர
            யாரும் விரும்ப மாட்டார்கள்.

            இதெல்லாம் தான் என் அனுமானத்திற்கான
            அடிப்படைகள்…

            இருந்தாலும் – என்ன நடக்கிறது என்று
            பொறுத்திருந்து பார்ப்போம்.

            .
            -வாழ்த்துகளுடன்,
            காவிரிமைந்தன்

  4. Bandhu சொல்கிறார்:

    பிஜேபி கூட்டணி என்பது அதிமுக வுக்கு சாதகம், நீங்கள் சொன்ன ‘ஒட்டு தவிர்த்த ‘ காரணங்களினால். பிஹாரில் ஓட்டை பிரித்த ஒவைசி கட்சி தமிழகத்தில் பல இடங்களில் போட்டி இடுமேயானால் அது தான் பலமான மூன்றாவது அணியாக இருக்கும். அவர்கள் திமுக ஓட்டை பிரிப்பது உறுதி. அது அதிமுக / பிஜேபி கூட்டணிக்கு ஆதரவாக முடியும். இப்படி நடந்தால், மறுபடியும் ஸ்டாலின் இலவு காத்த கிளி தான்!

    எனக்கென்னவோ ஒவைசி / பிஜேபி இடையே ஒரு உள்புரிதல் இருக்கிறது என்று தோன்றுகிறது!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Bandhu,

      நீங்கள் தமிழ்நாட்டில் இல்லாததால்,
      உங்களுக்கு இங்கு உள்ள
      கள நிலவரம் தெரியவில்லையென்று
      நினைக்கிறேன்.

      தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,
      ஓவைசி’க்கு இங்கு எந்தவித
      செல்வாக்கும் கிடையாது.

      அநேகமாக இங்கு இருக்கிற
      இஸ்லாமிய கட்சிகள் அனைத்துமே –
      தங்கள் மதிப்பீட்டில்,
      பாஜக-வுக்கு எதிராக எந்த கட்சிக்கு
      வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று
      நினைக்கிறார்களோ, அவர்கள் பக்கம்
      தான் நிற்பார்கள்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      //பிஜேபி கூட்டணி என்பது அதிமுக வுக்கு சாதகம்,//

      Bandhu – உங்க அனுமானம் தவறு. திமுகவை அதன் தீய கொள்கைகளுக்காக, நாட்டு நலனுக்கு எதிரான நிலைகளுக்காக, ஊழல்களுக்காக, அதைவிட அதன் ரவுடியிசத்துக்காக எதிர்ப்பவர்கள், அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள். நிச்சயம் மறந்தும்கூட பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். பாஜக என்பது, அதிமுகவுக்குச் சுமை. அதாவது ஒரு கையைக் கட்டிக்கொண்டு (உண்மையில் ஒற்றைக் கண்ணையும் மூடிக்கொண்டு) கிரிக்கெட்டில் பேட் செய்ய இறங்குவது போன்றது. அதிமுகவுக்கு என்று எப்போதும் இருக்கும் 30-40 சதவிகித சிறுபான்மையினர் வாக்குகள் (என்னதான் கருணாநிதி தாஜா செய்தாலும் அவங்க கட்சியினரின் ரவிடியிசம்தான் 40% சிறுபான்மையினரை அதிமுகவுக்கு வாக்களிக்க வைக்கும்) அதிமுகவை விட்டு நிரந்தரமாக விலகக்கூடாது என்று நான் ஆசைப்படுகிறேன், ஆனால் அதிமுக தலைமை வாக்குகளைப் பற்றி, கட்சியைப் பற்றிக் கவலைப்படவில்லை போலிருக்கு.

  5. GOPI சொல்கிறார்:

    திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் ஒரு சாம்பிள் –
    “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்”
    போலீசை மிரட்டும் உதயநிதி

    https://www.dinamalar.com/news_detail.asp?id=2657889

  6. tamilmani சொல்கிறார்:

    ஹிந்துக்களின் ஓட்டுகள் இந்ததடவை திமுகவுக்கு விழுவது கடினமே.
    அந்த அளவுக்கு இந்துக்களின் வெறுப்பை தி மு க , விசிக
    சம்பாதித்துள்ளன.
    மைனாரிட்டி ஓட்டுகள் எப்போதும் போல் திமுக வுக்குதான்
    அதை வைத்து வென்று விடலாம் என்பது அவர்கள் திட்டம். ரஜினியின் கொள்கை
    பிஜேபி யுடன்தான் ஒத்துப்போகும். அவரை தனியாக போட்டியிட வைத்து
    தேர்தலுக்கு பின் ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது அல்லது அவர் கட்சி தொடங்காவிட்டால்
    முன்பு திமுக தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தது போல்
    ஒரு சூழ்நிலை கூட ஏற்படலாம். பலமான மூன்றாவது அணி ரஜினி தலைமையில்
    உருவானால் மும்முனை போட்டி ஏற்பட்டு திமுக . அதிமுக இரண்டுமே வெற்றி வாய்ப்பை இழக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த utopia உருவானால் அது தமிழ்நாட்டுக்கு மிகவும் நல்லது .
    now or never என்பது ரஜினியின் tagline . இந்த தடவை தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை
    தர வேண்டும் என்பதே நடு நிலையாளர்களின் விருப்பம். இந்த சந்தர்ப்பத்தை விட்டால்
    மீண்டும் குடும்ப,கொள்ளைக்கூட்ட அராஜக அரசியல்தான் .

  7. Balachandar Ganesan சொல்கிறார்:

    1.BJP Factor
    Stalin has concretely established that inspite of the favours he can get by joining hands with BJP, He will be dead against BJP. Besides
    DMK will be major party in their alliance and Decisive party. ADMK has done exacty opposite. Depsite being a ruling party and biggest party
    in alliance, it has shown that BJP will be their key alliance and BJP will be decisive factor and not ADMK. This will heavily dissolve
    ADMK image and DMK alliance will become center for all Non BJP votes

    2. Alliance strength
    ADMK at state , BJP at center but absolutely no progress for TN. moreover when it comes campaigning, ADMK cadres have been always found to be major disadvantage. Even when JJ was at peak, Party was always ensuring she will get less votes because of their poor behavior during campaign.Last time many people died whever she went and that actually helped DMK more. and the problem still exists now also. On the other hand, stalin has ensured no major complaints against him (He sidelined Maran,Alagiri,Kanimozhi to minimum against whom there are major complaints). He has parties with him VC,Communists,MDMK leaders of whom known for proper ground work and less complaints. This is also in favour of DMK alliance

    3.Money Factor and central support
    ADMK won by all by election and got the necessary seats even though it lost all parlimentary constituencies!!!!. Major factor that can not be negleted.ADMK for sure knows they can not get thumping majority but win 125 seats with all alliances and they will exclusively target 140 and money will pour like any thing. This will be a key factor for them. And This can tilt balance in the last minute. BJP will do every thing to vote scaterrting, There will be cash flow telling vote for some other party then DMK alliance…It will be close race. Only People frustration like Job opportunities, Tutikorin shooting, Pollachi harassment case,Corruption charges can damage ADMK chances and ADMK will pay cash to overcome and take advantage of community support
    for EPS and OPS

    Cash and Community support to what extent can help ADMK will decide the outcome. But DMK most likely win even by narrow margin in 160 + constituencies…!!!

    • புதியவன் சொல்கிறார்:

      பாலசந்தர் – உங்க அனாலிசிஸ் ஓரளவு சரியானதுதான். ஆனால் அதிமுக இந்தத் தடவை மிகத் தவறான முடிவு எடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன். 30 சதவிகித வாக்குகளை வைத்துக்கொண்டு 1 சதவிகித வாக்குக்கு பணிந்து போவதுபோல பப்ளிக்குல எண்ணம் வரவழைச்சுட்டாங்க. இதே திமுக இமேஜ் , மாடில சிபிஐ தயாளுவை விசாரித்து, கீழ்த்தளத்துல 64 சீட்டுகளைப் பேரம் பேசி அடாவடியாக வாங்கியதால், சரிந்து அவங்க வாக்கு வங்கில (குறைந்த பட்சம் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்க மாட்டாங்க திமுக உணர்வு கொண்டவர்கள்) சேதாரம் ஏற்பட்டது. பாஜக எந்த மாதிரியான அரசியல் அழுத்தம் கொடுத்தது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. (ஊழல் என்பதையெல்லாம் நான் நம்பவில்லை. லட்சம் கோடி அடித்தவங்களே காந்தியின் வாரிசுகள் போலப் பேசும்போது, அவங்களையே ஆளும் பாஜக ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது நிதர்சனம் என்று இருக்கும்போது, அதிமுகவை ஒன்றும் செய்திருக்க முடியாது, அப்படியே நெருக்கினாலும், அது அதிமுகவின் சிறுபான்மையினர் வாக்குகளை நிச்சயம் அதிமுகவுக்குக் கொண்டு சேர்த்திருக்கும்)

      நானும் 150க்கு மேல் திமுக இடங்கள் பெறும், அதற்கு அடுத்த தேர்தல்ல தோற்கும் என்றுதான் நம்புகிறேன். (வட்டம் முதற்கொண்டு அடாவடி அரசியல், மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிப்பது என்று செயல்படுவாங்க). எங்கோ ஒரு பட்சி இந்தத் தடவை ஐந்தாண்டுகளுக்குள், கனிமொழி முதலமைச்சர் ஆவார் என்று சொல்லுது. (3-4 வருடங்களில்)

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        புதியவன்,

        // எங்கோ ஒரு பட்சி இந்தத் தடவை
        ஐந்தாண்டுகளுக்குள், கனிமொழி
        முதலமைச்சர் ஆவார் என்று சொல்லுது. //

        நீங்கள் அடிக்கடி இந்த
        Statement ஐ
        சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

        ஒருவேளை இது உங்கள் விருப்பமோ ?

        நீங்கள் திருமதி கனிமொழியை, அவரது
        இயல்புகளை – நேரில் பார்த்திருக்கிறீர்களா….?
        திமுக நடத்திய நிகழ்ச்சிகள் எதிலாவது
        அவர் கலந்துகொள்ளும்போது
        பார்த்திருக்கிறீர்களா ?
        அவரது performance ஐ, capacity -ஐ
        பார்த்திருக்கிறீகளா…?
        திமுக நிர்வாகிகளிடையே
        அவர் பெற்றிருக்கும் இடம் எதுவென்று தெரியுமா…?

        இவற்றிற்கெல்லாம் “ஆம்” என்று
        சொன்னால், உங்கள் எடைபோடல்
        தவறானது என்று தான்
        என்னால் சொல்ல முடியும்…!

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

  8. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    தமிழகத்தை பொறுத்த வரையில் தேர்தல்கள் பணம்
    மூலமே தீர்மானிக்கப்படுகிறது .
    ஒரு தொகுதியில் உள்ள சாதி அடிப்படையில்
    வேட்பாளர்களை நிற்க வைக்கிறார்கள் . எனக்கு தெரிந்து
    கம்யூனிஸ்ட் தவிர்த்து மற்ற கட்சிகள் வேட்பாளர்களை
    இந்த அடிப்படையில்தான் எடுக்கிறார்கள் .

    அதற்காக சாதி வைத்து அரசியல் செய்ய முடியாது .
    சாதிக் கட்சிகள் பெரும்பாலும் எடுபடுவதில்லை .
    ஒரு குறிப்பிட்ட சாதி என்று தேர்தலுக்கு போனால்
    மற்ற சாதிகள் ஒட்டு சுத்தமாக விழாது .

    மற்றொன்று சின்னம் – அ தி மு க இரட்டைஇலை
    சின்னம் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறாது .
    எம் ஜி ஆர் சின்னம் என்று சொல்லி இன்றளவும்
    தெற்கு மாவட்டங்களில் ஒட்டு விழுகிறது .

    தி மு க , அ தி மு க நேருக்கு நேர் போட்டி என்றால்
    தி மு க வெற்றி பெறலாம் –
    Caveat
    காங்கிரஸுக்கு தொகுதி அதிகம் கொடுக்காமல்
    இருந்தால் மட்டுமே !

    EPS தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே
    எண்ணுகிறார் .பணம் செலவழித்து வெற்றி
    பெற வாய்ப்பு இல்லை என்றால் அவர் பேசாமல்
    ஒதுங்கி இருந்திருப்பார் .

  9. selvam சொல்கிறார்:

    கருணாநிதி தனது பதவி அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தார் என்பதால் தான் அம்மா அவர்கள் அவரை தீய சக்தி என்றார். அதே போல தானே இப்பொழுது இருப்பவர்களும் தங்களின் பதவி அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக அதிமுகவையும் தமிழ் நாட்டையும் சேர்த்தே பிஜேபியிடம் விற்றே விட்டார்கள் . அப்படி இருக்கும்போது நாம் இந்த கொடிய தீய சக்தியையும் சேர்த்து தானே தமிழ் நாட்டின் நலனுக்காக எதிர்க்க வேண்டும் . ஆனால் நாம் எல்லோருமே இன்னும் திமுகவை மட்டுமே எதிர்க்கிறோம். அப்படி என்றால் திமுக மீது மட்டும் சாதிய பாகுபாடோ அல்லது வேறு ஒன்றோ இருக்கிறது என்பதுதானே பொருள். அது என்னது என்பதுதான் எனக்கு புரியவில்லை. கமலஹாசன் மிகவும் மோசமானவர் ஆகையால் அவரை விட்டு விட்டு நாம் எல்லோரும் அண்ணன் தினகரனையோ அல்லது அண்ணன் சீமானையோ தானே ஆதரிக்க வேண்டும்.

  10. GOPI சொல்கிறார்:

    //// நாம் எல்லோரும் அண்ணன் தினகரனையோ
    அல்லது அண்ணன் சீமானையோ தானே
    ஆதரிக்க வேண்டும். ////

    ஏன் , வேறு அண்ணன் யாரும் இல்லையா என்ன ?

  11. selvam சொல்கிறார்:

    ஏன் இல்லை . சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இருக்கிறார். மேலும் அண்ணண் அன்புமணி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பிஜேபிக்காரன் சொல்லுவதால்தான் அரசியலுக்கு வருவதாக சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் டிவி விவாதங்களை பாருங்கள். பிஜேபிக்காரன் மட்டும்தான் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி பிஜேபிக்காரன் சொல்லுவதால் அரசியலுக்கு வருகிறவர், ஜெயித்தால் அதன்பின்பும் பிஜேபிக்காரன் சொல்வதைத்தான் செய்வார் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆகையால் தான் அவர் பெயரை சொல்லவில்லை. அண்ணண் அன்புமணி சாதி கட்சி நடத்துகிறார். அவர்கள் சாதிக்காரனை மட்டும் முன்னேற்றுவதற்கு நாம் ஏன் ஒட்டு போடவேண்டும். ஆகையால் தான் அவர் பெயரையும்
    சொல்லவில்லை.

    • GOPI சொல்கிறார்:

      selvam

      Selvadurai Muthukani சொல்கிறார்:
      ////தினகரனும் சசிகலா குடும்பத்தில் ஒருவர்தான்!
      அவருக்கும் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும்
      தலையாய பணி இருக்கிறது! எனவே அவரும்
      பா. ஜ. க. வின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டே
      ஆகவேண்டும். எஞ்சி இருப்பவர் சீமான் மட்டுமே. ////

      இதுக்கு என்ன சொல்றீங்க ?

      • GOPI சொல்கிறார்:

        தினகரன் அண்ணணை விட்டுடலாமா ?

        • selvam சொல்கிறார்:

          எங்கள் ஊரில் வயதானவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால் “டேய் வெளி நாட்டில்தாண்டா அதிகம் படிக்கப்படிக்க நாட்டுப்பற்று அதிகமாகி நேர்மையுடன் இருப்பார்கள். நம் நாட்டில் அதிகம் படிக்கப்படிக்க சுயநலம்கூடி எப்படி அடுத்தவரை ஏமாற்றலாம் என்றுதான் யோசிப்பார்கள்”

          இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் கருணாநிதி செய்ததைத்தான் இப்பொழுது இருப்பவர்களும் செய்கிறார்கள், இன்னும் அதிகமாக உடலை வளைத்து கூழை கும்பிட்டுடன், தமிழ் நாட்டின் மானத்தை வாங்கிக்கொண்டு. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும். திமுகவை எதிர்ப்பதை போலவே இவர்களையும் இன்னும் அதிகமாக எதிர்க்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். மேலே உள்ள பின்னுட்டங்களை பாருங்கள் அண்ணன் கோபி அவர்களே. அதிமுகவை எப்படி ஜெயிக்க வைப்பது என்று ஐடியா சொல்லிக்கொண்டு இருக்கிறோம் . நீங்கள் நான் சொன்ன வற்றிற்கு கருத்து சொல்லாமல் ஸ்கூல் வாத்தியாரை போல என்னிடம் மட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

          • GOPI சொல்கிறார்:

            selvam

            அதிமுகவை எதிர்க்க வேண்டும் என்று
            நீங்கள் சொல்வதை ஏற்றூக்கொள்கிறேன்.
            ஆனால் நீங்களே உங்கள் வார்த்தைக்கு
            மாறாக தினகரன் அண்ணனை ஆதரிப்போம்
            என்று சொல்கிறீர்களே; இது எப்படி பொருந்தும் ?
            அதிமுக சேர்த்த சொத்துக்களில் பெரும்பகுதி
            சசிகலா-தினகரன் ஆகியோரிடம் தானே
            இருக்கின்றன ? அப்புறம் நீங்கள் தினகரனை
            ஆதரிக்கலாம் என்று சொல்வது எப்படி பொருந்தும் ?

  12. Selvadurai Muthukani சொல்கிறார்:

    தினகரனும் சசிகலா குடும்பத்தில் ஒருவர்தான்! அவருக்கும் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும் தலையாய பணி இருக்கிறது! எனவே அவரும் பா. ஜ. க. வின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். எஞ்சி இருப்பவர் சீமான் மட்டுமே. தமிழ்நாட்டுக்கு இப்போது இருக்கும் ஆபத்தே மதவாதம், மொழி ஆதிக்கம், வட மாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு, மாநிலத்தின் அதிகார பறிப்பு என்பவைகளே. “நாம் தமிழர்” என்கின்ற ஒருங்கிணைப்பு இல்லாமைதான் தமிழ்நாட்டை முன்னேறவிடாமல் அமுக்குகின்றது. மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு பயத்தினால் அடிபணிபவர்களையே நம்பி நம்பித்தான் இந்நாள் வரை தமிழ்நாடு அதன் தகுதிக்கேற்ற முன்னேற்றமில்லாது போனது. எனவே “தமிழ் தேசியம்” என்ற சித்தாந்தம் ஒன்றுதான் இப்போதிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்கும். அதனை முன்னெடுக்கும் ஒரே அரசியல் கட்சி தலைவர் சீமான் மட்டுமே. எனவே இப்போதைக்கு அவரை முன்நிறுத்தினால் மட்டுமே ஆதிக்க சிந்தைகொண்ட வட மாநிலத்தவரின் கைக்கு நாம் தப்பமுடியும். அவர் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இப்போதைக்கு அவரை விட்டால் வேறுவழியில்லை. வேறு எவருக்கும் அவருக்கு இருக்கும் தில்லும் திராணியும் சித்தாந்த ரீதியான படை வலிமையும் இல்லை என்பதே நிதரிசனமான உண்மை!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.