….
….
….
இன்றைக்கு 71 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கல்கி வார
இதழின் சில பக்கங்களை திரு.பசுபதி அவர்களின்
வலைப்பக்கத்தில் பார்த்தேன்.
( திரு.பசுபதி அவர்களின் வலைத்தள உதவிக்கு நன்றி )
எனக்கு சுவாரஸ்யமாகப்பட்ட சிலவற்றை கீழே
மீண்டும் பதிப்பித்திருக்கிறேன்…
முதலில் அட்டைப்படம் – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
கல்கி பத்திரிகையின் ஆஸ்தான ஓவியர் மணியம் அவர்களின்
சித்திரம்….
…..
…..
அடுத்து ஒரு விளம்பரம் –
அந்நாள் சூப்பர் ஸ்டார் பி.யூ. சின்னப்பா அவர்கள்
புகைப்படம் செய்தியுடன் ஒரு விளம்பரம்….
….
….
அடுத்து ஒரு கைக்கடிகார(வாட்ச்) கம்பெனியின்
விளம்பரம்…
……..
………
நான் அறிந்தவரையில், அந்தக் காலத்தில் (1949-ல்)
இந்தியாவில் வாட்சுகள் உற்பத்தி கிடையாது.
எல்லாமே இறக்குமதி தான்.
நான் அரசுப்பணியில் சேர்ந்தபிறகு, தேவை காரணமாக
வாங்கிய முதல் வாட்ச் 1963-ல் — ஃபேவர்லுபா – ஸ்விஸ்
தயாரிப்பு. அப்போது அதன் விலை 60 ரூபாய் பக்கம்
என்று நினைவு…
சுமார் 15 வருடங்கள் கழித்து அடுத்து அதை
1978-ல் நான் ஒரு HMT வாட்ச் வாங்கிய பிறகு,
என் மனைவியின் தந்தைக்கு கொடுத்தேன்… அவர்
அதை பல வருடங்கள் ஆசையாக கட்டிக்கொண்டிருந்தார்…
….
….
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள்
அந்த ஃபேவர்லுபா வாட்ச் பயன்பாட்டில் இருந்தது.
அந்தக் காலத்து வாட்சுகள் கீ கொடுத்தால் தான் ஓடும்…
ஞாபகமாக குறிப்பிட்ட இடைவெளிகளில் கீ கொடுக்க வேண்டும்..!!!
இந்தியாவில் முதல் முதலில் வாட்ச் தயாரிக்கப்பட்டது
அரசு நிறுவனமான பங்களூர் HMT -யில் தான் -1961-ல் என்று
நினைக்கிறேன். ….
சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் வரை நாம்
ஷேவ் செய்யும் ப்ளேடைக்கூட இறக்குமதி தான்
செய்து கொண்டிருந்தோம்…அப்போதைய ஃபேவரைட்
இங்கிலாந்திலிருந்து வந்து கொண்டிருந்த
– 7 O’clock பிளேடுகள் தான்…. ஒரு ப்ளேடு தினசரி
ஷேவிங்குக்கே 10 நாட்கள் வரை வரும்…!!!
(பக்கம் மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும்…!!!)
வாட்சும், பிளேடும் மட்டும் தானா…?
இன்னும் எத்தனையோ பொருட்களுக்கு நாம் சுதந்திரம் பெற்று
பல வருடங்கள் இறக்குமதியையே நம்பிக்கொண்டிருந்தோம்.
பெரும்பாலும் மேட் இன் இங்கிலாந்து அல்லது ஜப்பான்…!!!
சுதந்திரம் கிடைத்த பிறகு, ஒவ்வொன்றுக்குமான மாற்று
இந்திய தயாரிப்புகளுக்கான ஏற்பாடுகளை முதல் இந்திய அரசு
செய்து கொண்டிருந்தது. அவற்றின் அடிப்படை தான்
HMT – Hindustan Machine Tools Ltd. HAL – Hindustan Aircraft Ltd.
I.T.I – Indian Telephone Industries போன்றவை.
இப்போது நினைத்தால் கேவலமாக இருக்கிறது…
அடிமை இந்தியாவில் –
எவ்வளவு பிற்போக்கானவர்களாக,
எதற்கும் லாயக்கு அற்றவர்களாக நாம் இருந்திருக்கிறோம் ..
எவனோ,8000 கி.மீ.தூரத்திலிருந்து இங்கே வந்து
200 ஆண்டுகள் நம்மை ஆட்டிப் படைத்திருக்கிறான்…
நாமும் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறோம்.
.
————————————————————————————————————————
உண்மைதான். நாம் நிறைய வளர்ந்திருக்கிறோம். உணவு, பால், உடை உற்பத்திகளில் தன்னிறைவை எட்டியிருக்கிறோம். கட்டுமானம், போக்குவரத்து என்று நிறையவே வளர்ச்சி. நாளை நம்மீது எக்கனாமிக் தடை, உலகத்தால் விதிக்கப்பட்டாலும், நம்மால் ஈரான் போல தாக்குப்பிடிக்க இயலும். (ஈரான், பெட்ரோல் வளம் அதிகம், அதை விற்று காசு புரட்ட முடியாது. நமக்கு உள்நாட்டு உற்பத்தி உள் நாட்டுச் சந்தையின் தேவையைச் சமாளிக்கும்)
//அடிமை இந்தியாவில் – எவ்வளவு பிற்போக்கானவர்களாக, எதற்கும் லாயக்கு அற்றவர்களாக நாம் இருந்திருக்கிறோம் .// – இது கொஞ்சம் ஸ்டிராங் ஸ்டேட்மெண்ட். நான் பிட்சா சாப்பிடவில்லை, பூரி சப்பாத்தி சாப்பிடவில்லை, பேண்ட் ஷர்ட் போடுவதில்லை என்பதால் பிற்போக்கானவனாக ஆகிவிடுவேனா? அப்போதைய நுகர்வுக் கலாச்சாரத்தில் இவைகள் தேவைப்படவில்லை. 40களில்தான் தேநீர் என்பதே தமிழகத்துக்கு வந்தது. அதற்கு முன்பு அதன் தேவை இல்லை. அது மிக முக்கியமான பொருள் என்ற எண்ணத்தை நம்மிடம் விதைத்ததனால் அதனை நுகர்பவர்கள் அதிகமானார்கள், அந்த இண்டஸ்டிரி வளர ஆரம்பித்தது.
அப்போது நாம் அடிமையாக இருந்தோம் என்றால் இப்போதும் ஒரு விதத்தில் அடிமையாகத்தான் இருக்கிறோம். இல்லாவிட்டால், ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா சாப்பிட்டால்தான் வளருவோம், ஃபேர் & லவ்லி போட்டுக்கொண்டு சிவப்பு நிறம் வரும், ஷாம்பூ என்று பலவித நுகர்வுப் பொருட்களின் விளம்பரத்தின் அடிமையாகத்தானே இருக்கிறோம்.
//எவனோ,8000 கி.மீ.தூரத்திலிருந்து இங்கே வந்து 200 ஆண்டுகள் நம்மை ஆட்டிப் படைத்திருக்கிறான்… நாமும் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறோம்.// – இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? நம் கலாச்சாரத்திலேயே இல்லாத, குதிரை சாப்பிடும் உணவான ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், ப்ரெட் போன்றவைதான் காலை உணவுக்கு லாயக்கு, டீசண்டாக உணவருந்தவேண்டுமானால் பிட்சா, பர்கர், அமெரிக்கன் உணவு, காஃபி ஷாப் போன்றவைதான் நல்ல கலாச்சாரம், சாதம்/குழம்பு இவைகள் சாப்பிடுபவர்கள் பிற்போக்கானவர்கள் என்ற மாதிரியான எண்ணங்களால்தானே நாம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம். இன்றைக்கும் நாம் வி.ஐ.பி. சூட்கேஸ்களைவிட அமெரிக்கன் டூரிஸ்டர் போன்ற வெளிநாட்டுப் பொருட்களுக்குத்தானே அடிமையாக இருக்கிறோம்.
ஆனால் ஆங்கில ஆட்சியால் ஏற்பட்ட நன்மை என்று பார்த்தால், நம்மை நாமே ஆளும்படி ஒரு தேசத்தை உருவாக்கியிருக்கிறான் (கூடவே பிரச்சனைகளையும்). அதற்கு முன்னால் கலாச்சார ரீதியாக நமக்கு கோவில்கள், வழிபடும் இடங்கள், நதிகள் போன்றவற்றினால்தான் பாரதம் என்றொரு தேசம் உணர்வில் இருந்தது.
ஷாம்பு இந்தியாவில் தோன்றியது . சம்பி என்ற
இந்தி சொல் ஷாம்பு என்று ஆனது .