நயன்தாரா, உதயநிதி பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ….

….
….

….


….

இன்றைய தினம் அதிமுக பொதுக்கூட்டம் போட்டால்,
யாருக்கு அதிக கூட்டம் வருகிறது தெரியுமா…?

அமைச்சர்களில் ஒருவருக்கு தனி ரசிகர் பட்டாளமே
இருப்பது உங்களுக்கு தெரியுமா…?

திரு.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு மட்டும்
இத்தனை ரசிகர் பட்டாளம் உருவானது எப்படி….?

கீழேயுள்ள அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜியின்
பேச்சை படியுங்களேன்… உங்களுக்கே காரணம் புரியும்…..!!!

விருதுநகரில் அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி
அவர்கள் பேசியதன் சில பகுதிகள் கீழே –

————————————

நயன்தாரா போலீசுக்கு போக போகிறார்..
“அவர்” உள்ளே போகப் போறார்..
குண்டை போட்ட ராஜேந்திர பாலாஜி!

Saturday, November 21, 2020,[IST] விருதுநகர்:
https://tamil.oneindia.com/news/virudhunagar/minister-rajendra-balaji-slams-mk-stalin-and-udhayanidhi-stalin-403694.html

————————————–

ஸ்டாலின் என்னவோ முதலமைச்சர்
மாதிரியே நடந்துக்கிறாரே..
மருத்துவ கல்லூரியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு
7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றியது
முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை
ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்……

யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்-ன்னு
ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு.

இப்போ ஸ்டாலினுக்கு புது பிரச்சனை ஒன்னு இருக்கு..
அவரை பழிவாங்க அவரது அண்ணன் அழகிரி கிளம்பிவிட்டார்…

ஸ்டாலின் சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று, அழகிரி
போலீஸ்கிட்ட புகார் மட்டும் தரட்டும், நாங்க உடனே
நடவடிக்கை எடுப்போம்.. நாங்கள் நயமாக பேசி,
அறிவாலயத்தில் ஒரு பக்க வாசல் ஸ்டாலினுக்கும்,
இன்னொரு பக்க வாசல் அழகிரிக்கும் பிரித்து கொடுத்து
விடுவோம்…

உங்களுடைய ஒரு லட்சம் கோடி சொத்தை குடும்பத்தில்
எல்லாருக்குமே பிரித்து கொடுத்து விடுவோம்.

உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பெரிய பிரச்சினை வருகிறது…
அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார்.
உதயநிதி ஸ்டாலின், இப்போ போக்சோ சட்டத்தில் உள்ளே
போகப் போகிறார்.. ஆனால் இவங்க என்னை பிடிச்சு உள்ளே
போட்டுவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறாங்க..
நான் நினைத்தால், இன்னிக்கே இவங்களை பிடிச்சு உள்ளே
போட்டுடுவேன்.. ஏன்னா, எங்களிடம்தான் அதிகாரம் இருக்கு..
மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நான் கிடையாது..

என் பேச்சுக்கு பதில் சொல்ல முடியும்னா, எதிரெதிரே நின்று
வெட்ட வெளியில் பேசுவோம் வா. நான் 10 வருஷமாக
மந்திரியாக இருக்கேன்.. நான் அன்னையில இருந்து கோஷம்
போட்டவன் கொடி பிடித்தவன், போஸ்டர் ஒட்டியவன்…

நான் ஒன்னும் மிட்டா மிராசுதாரர் கிடையாது..
வாக்கு சாவடியில் வாழ்க்கையை தொலைத்தவன்..
இன்னைக்கு உழைப்பால் மாவட்ட செயலாளராக
ஆகியிருக்கேன்.. அதிமுக உழைக்கிற கட்சி,
திமுக பிழைக்கிற கட்சி” என்றார்.

——————————————————————————————————————————————–

மேலேயுள்ள இடுகைக்கு சம்பந்தமில்லை;
இடுகையை பதிவேற்றிய பிறகு தான் இவற்றைப் பார்த்தேன்…

Just இந்த வித்தியாசமான புகைப்படங்களை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்….

இதற்கென்று தனியே ஒரு இடுகை போடுவானேன் …!
– இங்கேயே தந்து விட்டேன்…

திமுக தலைவர் ஸ்டாலின்,
பின்னால் போலீஸ் வேன் துணைக்கு வர- சைக்கிள் ஓட்டும் காட்சி…

சைக்கிள் ஓட்டுவதற்கு சட்டப்படி தலைக்கு கவசம்
அவசியமில்லையென்று நினைக்கிறேன்…
ஆனால், அவருக்கு மட்டுமான காரணங்கள்
எதாவது இருக்கலாம்…
தலையில் கர்ச்சிப் வேறு கட்டி இருக்கிறாரே …!!!

ஆனால் சட்டப்படி அவசியமான முகக்கவசத்தை காணோமே…!!!

புகைப்படம், வீடியோ எடுக்கும் டீம் –
தனியாக முன்னே போய்க்கொண்டிருக்கும் போலிருக்கிறது….!!!

….

….
இது தனி – வேறு காஸ்டியூமில், வேறு பின்னணியில் –

……

……

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to நயன்தாரா, உதயநிதி பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ….

 1. GOPI சொல்கிறார்:

  பாலாஜி சார் ரொம்ப ஒபனாகப் பேசுகிறார்.
  அவருக்கு கூட்டம் வருவதற்கு அது தான்
  காரணம்.

 2. புதியவன் சொல்கிறார்:

  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகிறார். ஜெ. பதவி ஏற்ற அடுத்த நிமிடமே, ஓனரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி 6 கோடி பெறுமான பங்களாவை 1 கோடி கொடுத்து ஆக்கிரமித்துக்கொண்ட உதயநிதி, அடித்துப் பிடித்து இன்னொரு 1 1/2 கோடி செட்டில் செய்தார், ஓனர், அரசியல்வாதிகளுடன் கோர்ட்டுக்குச் செல்ல எனக்கு வயதில்லை என்று சொன்னதினால். அதுதான் இப்போது இருக்கும் தலைமை மற்றும் அமைச்சர்களுக்கும் ஜெ வுக்கும் உள்ள வித்தியாசம்.

  செட்டப் படங்கள் – பீகார் சாணக்கியனின் அறிவுரை போலிருக்கிறது. அதிமுக, குஜராத் சாணக்கியனின் உதவியை நாடுகிறதே. ஆக மொத்தம், சாணக்கியன் உதவியோடுதான் அரியணை ஏறணும் போலிருக்கு. சொந்தத் திறமை இரண்டு கட்சிகளுக்கும் இல்லை போலிருக்கு, அதிலும் ஸ்டாலினுக்கு.

 3. jksmraja சொல்கிறார்:

  ……
  ………
  ……….. இவன், அதிமுகவை பிஜேபியுடன் இணைத்துவிட்டால் , நாம் மாநிலத்திலும் மந்திரியாக இருக்கலாம் அதே போல மத்தியிலும் மந்திரியாக வாய்ப்பும் அமையலாம் என்று பிஜேபியின் சார்பாக அதிமுகவில் லாபி பண்ணிக்கொண்டு இருக்கிறான்.

  ———

  நிறைய வார்த்தைகள் நீக்கப்பட்டு விட்டன…
  காவிரிமைந்தன்
  ……..
  ……….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   jksmraja

   நான் பலதடவை உங்களுக்கு சொல்லியும்
   கேட்காமல் நீங்கள் மீண்டும் மீண்டும்
   அவன் இவன் என்று தரக்குறைவாகவே
   எழுதுகிறீர்கள். நான் இதை ஏற்பதற்கில்லை.

   எனவே, இனி நீங்கள் இங்கே பின்னூட்டம்
   எழுதுவதை நிறுத்திக் கொள்ளவும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.