பயத்தில் வைகுண்டராஜன் ….!!!வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் -ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் ….!!!

….
….

….

இது செய்தி ……!!!
( https://tamil.oneindia.com/news/thirunelveli/vv-minerals-vaikunda-rajan-complaint-cop-nellai-attempt-to-kidnap-403547.html )

Published: Thursday, November 19, 2020, 16:12 [IST] திருநெல்வேலி:
————-

என்னை கடத்தி கொல்ல முயற்சி…
உயிருக்கு ஆபத்து – வி வி மினரல்ஸ் வைகுண்டராஜன் கதறல்

….

அடையாளம் தெரியாத நபர் தன்னை கடத்த முயன்றதாகவும்
மர்ம நபர்களால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்,

வி.வி.மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் நெல்லை
மாநகர காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

தப்பிச்சென்ற நபரை பிடித்து கொடுத்தும் காவல் துறையினர்
விடுவித்து விட்டதகவும் கூறியுள்ளார் வைகுண்ட ராஜன்.

என்னை கொலை செய்ய முயன்ற குற்றவாளிகளை தப்பிக்க
விட்டனர் – வைகுண்டராஜன்.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளர்
வைகுண்டராஜன். ( அது எந்த தொலைக்காட்சி என்பதையும்
இங்கே சொல்லி இருக்கலாம்…!!! )

இவர் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில்
ஒன்றான வி.வி. மினரல்ஸ் நிறுவனருமானருமாவார்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை என்ற ஊரை
தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது வி.வி.மினரல்ஸ்
நிறுவனம்.

பல தொழில்கள் செய்து வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு
வருமான வரித்துறையிடம் சிக்கினார். முறைகேடாக சொத்து
சேர்த்ததாக அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள்
என 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகாலமாகவே ஊடக வெளிச்சத்தில் சிக்காமல்
இருந்த வைகுண்டராஜன் இன்று நெல்லை மாநகர காவல்துறை
அலுவலகத்திற்கு வந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக
புகார் அளித்துள்ளார். மர்ம நபர்கள் தன்னை நோட்டம் விட்டு
போட்டோ எடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகுண்ட ராஜன்,
பாளையங்கோட்டையில், வழக்கறிஞர் மகாராஜன் வீட்டில்
இருக்கும்போது –

எனது சகோதரர் ஜெகதீசன் நிறுவனத்தில் பணியாற்றும்
மாரிகண்ணனும் மற்றொருவரும் நோட்டமிட்டனர். அதில்,
மாரிகண்ணனை பிடித்து விசாரித்த போது, எனது சகோதரர்
மகன் செந்தில்ராஜன் கூறி போட்டோ மற்றும் வீடியோ
எடுத்ததாகவும் தெரிவித்தார். இதற்காக அவர்களுக்கு கார்,
இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டோ வீடியோ எடுத்த மர்ம நபர் தப்பி சென்ற நபரின்
பெயர் நாகராஜன் என்று கூறிய வைகுண்ட ராஜன்,
அவர் எடுத்த புகைப்படம், வீடியோக்களை முத்துகிருஷ்ணன்,
செந்தில்ராஜன் மற்றும் பலருக்கு அனுப்பி வருவதாக
தெரிவித்தார்.

வைகுண்ட ராஜன் பீதி –

அண்ணாச்சி என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும்
வைகுண்டராஜனை பார்த்துதான் பலரும் பீதியடைவார்கள்.

இன்றைக்கு அந்த வைகுண்ட ராஜனே முகம் முழுக்க பீதியுடன்
வந்து உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார்.

————————————————————————————————————————————————-
( இந்த செய்தியின் கவர்ச்சியே அந்த கடைசி 2 வரிகளில் தான்
இருக்கிறது…மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்…!!! )

(அதென்ன – அடையாளம் தெரியாத நபர் தன்னை கடத்த
முயன்றதாகவும், மர்ம நபர்களால் தன் உயிருக்கு அச்சுறுத்தல்
இருப்பதாகவும் – புகார்….?

ஏன் – செய்தியில், சுற்றி வளைத்து…
அடையாளம் தெரியாத etc. etc….?
என்றெல்லாம்…?

மொத்தத்தில் –
குடும்பப்பிரச்சினை… கொலுமண்டபத்திற்கு வருவானேன் –
என்கிற மனோகரா வசனம் நினைவிற்கு வருகிறது…

வினை விதைத்து விட்டு, தினையா அறுக்க முடியும்…? )

———————————————————————————————————————

வைகுண்டராஜன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு காணொலி …..
…..

…..

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பயத்தில் வைகுண்டராஜன் ….!!!வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் -ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  ஓ… இவர்தான் நெல்லை நேருவா? அரசியலில் உள்ளிறங்கினாலும், அரசியல்/சாதி வலிமையை வைத்து திரைமறைவு பிஸினஸ் செய்தாலும் , சாதியை வைட்து அரசியல் பிளாக்மெயில் செய்தாலும், அது ரொம்ப நாள் ஓடாது. எதிரிகள் நிச்சயம் தக்க சமயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  அண்ணாச்சி என்று அழைக்கப்படும் திரு வைகுண்டராஜன்
  மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு ஏற்றுமதி பரிசை
  21 ஆண்டுகள் தொடர்ந்து பெற்றவர் .

  இவர் அதிகம் படிக்கவில்லை .இன்று கூட அவருக்கு
  ஆங்கிலம் தெரியாது . இருந்த போதும் பன்னாட்டு
  வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தவர் .முதலில்
  அரிசி வியாபாரம் செய்து முன்னுக்கு வந்தவர் .

  இவருக்கு போட்டியாக டாடா , வேதாந்தா போன்றவர்கள்
  முயற்சி செய்து விட்டு வாபஸ் ஆனார்கள் .

  நியூஸ் 7 அவர் நடத்தும் தொலைக்காட்சி ,இரண்டு
  வருடம் முன்பு அவர் மீது ஐ டி ரெய்டு ஒரு வார
  காலம் நடைபெற்றது – அந்த ஒரு வாரம் அவர்
  வீட்டுச்சிறையில் இருந்தார் .

  மு க ,ஜெயா போன்றவர்கள் கூட அவர் மீது
  மோதிப் பார்த்துவிட்டு விலகிவிட்டார்கள் என
  சொல்வதுண்டு .

  யூ டியூபில் ‘வைகுண்டராஜன் ‘ என நிறைய வருகின்றது
  உண்மையா பொய்யா என்பது தெரியாது .

 3. புவியரசு சொல்கிறார்:

  “ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்;
  வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.”

  சரியாகச் சொன்னீர்கள் காவிரிமைந்தன் சார்.
  இந்த ஆள் ஆடாத ஆட்டமா ?
  இப்போது பயத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்.

  இன்னமும் கூட திரைமறைவு அரசியலில்
  ஆடிக்கொண்டு தான் இருக்கிறார்.
  அதிமுக முடிந்து, தினகரன் அதிமுக முடிந்து,
  இப்போது அடுத்து ஆட்சிக்கு வரப்போகும்
  ஸ்டாலின் திமுகவில் தற்போதைக்கு
  அவர் திரைமறைவில் ஐக்கியம்.
  ஒரு பெரிய ரவுடி கேங்கே அண்ணாச்சியிடம்
  இருக்கிறது. இருந்தாலும் செய்தியாளர்களிடம்
  உத்தமர் வேடம் !

 4. tamilmani சொல்கிறார்:

  இவரது நியூஸ் 7 தொலைக்காட்சியில் எப்போதும் அதிமுகவை மற்றும் பாஜகவை எதிர்த்தே பல நிகழ்ச்சிகள் , செய்திகள் வந்து கொண்டே இருக்கும். கடந்த 10 வருடங்களாக திமுகவின் ஊதுகுழலாகவே செயல் படுகிறது. இதன் நெறியாளர்கள் அதிமுக, பாஜக பேச்சாளர்களை பேசவே விட மாட்டார்கள். திமுக கம்யூனிஸ்ட் , விசிக பேச்சாளர்கள் பேசியவுடன் ஒரு ட்விட்டர் poll வெளியிடப்படும். அது பெரும்பான்மை மாநில , மத்திய அரசை குறை கூறும் நபர்களின் சதவீதம் அதிகம் என்று காட்டும்.
  நடுநிலை என்பது மருந்துக்கு கூட கிடையாது.
  இந்த நியூஸ் 7 சேனலுக்கு ரஜனிகாந்தையும் பிடிக்காது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.