துரைமுருகன், பொன்முடி விவகாரத்தில் ஸ்டாலினால் ஏன் பதில் சொல்ல முடியவில்லை …?


….
….

….

2 நாட்களுக்கு முன்னர், திமுக தலைவர் திரு.ஸ்டாலின் –
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மீது ஒரு பலத்த ஊழல்
குற்றச்சாட்டை கூறினார்…

இது குறித்த பத்திரிகைச் செய்தியின் சுருக்கம் –

https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/11/16/mk-stalin-condemns-edappadi-govt-for-permitting-tenders-to-officials-relatives

“பொது ஊழியர்களின் உறவினர்களுக்கு குத்தகைகள் –
டெண்டர்கள் வழங்கும் முறைகேடு தொடர்கிறது; அ.தி.முக
எம்.எல்.ஏ சக்ரபாணியின் மகனுக்கு வழங்கிய கல்குவாரி
லைசன்ஸை ரத்துசெய்து – அமைச்சர் சி.வி.சண்முகம்
ராஜினாமா செய்ய வேண்டும்” என தி.மு.கழக தலைவர்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பொது ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது தங்களுடைய
உறவினர்களுக்கோ அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக்
கூடாது. அரசின் காண்டிராக்டுகள் மற்றும் குத்தகைகளைப்
பெறக் கூடாது என்பது எல்லோரும் அறிந்திருக்கும் விதி.

ஆனால் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கே
கல்குவாரி கொடுத்திருப்பதால் அமைச்சர் சி.வி.சண்முகம்
ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சக்ரபாணி,
தனது மகனுக்கே அரசு கல்குவாரியைக் குத்தகைக்குப்
பெற்றிருப்பதால் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து
தகுதி நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.

எனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சக்ரபாணியின் மகனுக்கு
அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்ஸை உடனடியாக ரத்து
செய்ய வேண்டும்; அந்த லைசன்ஸ் வழங்கிய துறை
அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா
செய்ய வேண்டும்…

மேலும் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க சட்டமன்ற
உறுப்பினர் சக்ரபாணி ஆகியோர் மீது, லஞ்ச ஊழல்
தடுப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து,
சட்ட நெறிகளைப் பின்பற்றி, உரிய முறையில் விசாரணை
நடத்திட வேண்டும்….”

-என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

————————-

இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உடனடியாக பதில்
தந்திருக்கிறார்….அதிலிருந்து சில பகுதிகள் –

https://www.dinamalar.com/news_detail.asp?id=2654381&Print=1

பொது ஊழியராக உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், பல்வேறு குத்தகை எடுத்து,
தொழில் செய்கின்றனர்.

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், எம்.எல்.ஏ.,வாக
உள்ளார். அவரது மகன் எம்.பி.,யாக உள்ளார். அவரது மனைவி
சங்கீதா பெயரில், காட்பாடி தொகுதி, அரும்பாக்கம் கிராமத்தில்,
இரண்டு கல் குவாரிகள், இரு மாதங்களுக்கு முன், ஏலம்
எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, துரைமுருகனை ராஜினாமா செய்ய சொல்வாரா
ஸ்டாலின்?

அதேபோல, ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு, 100 சதவீதம்
பொன்முடிக்கும் பொருந்தும். அவர் கனிம வளத்துறை
அமைச்சராக இருந்தபோது, தற்போது எம்.பி.யாக உள்ள,
அவரது மகன் கவுதம் சிகாமணி, செம்மண் எடுக்க
அனுமதி கோரி, அரசிடம் விண்ணப்பம் கொடுத்தார்.

துறை அமைச்சரான, அவரது தந்தை பொன்முடி, செம்மண்
எடுத்து விற்க அனுமதி கொடுத்தார். பொது ஏலம் நடத்தாமல்,
நேரடியாக அனுமதி வழங்கப்பட்டது. பொன்முடி தன்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்.

ஸ்டாலின் கூறிய கருத்தின்படி, துரைமுருகன், பொன்முடி
ஆகியோரை, ராஜினாமா செய்யும்படி சொல்லத் தயாரா?
ராஜினாமா செய்யும்படி, ஸ்டாலின் கூறினால், வீரன் என்று
ஏற்றுக் கொள்கிறேன்.

——————————

தினந்தோறும் சின்ன சின்ன விஷயங்களூக்கு கூட,
நீள நீளமாக அறிக்கை விடும் ஸ்டாலின் அவர்கள்
இந்த ஒரு விஷயத்தைப்பற்றி மட்டும் இதுவரை
வாயே திறக்கவில்லை…

பலத்த மௌனம் சாதிக்கிறார்…. ஏனோ….?

————-

அதிமுக எம்.எல்.ஏ.சக்ரபாணியோ,
அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களோ செய்தது
சட்டப்படி குற்றம் என்றால்,

திரு.துரைமுருகன், அவரது மகன் –
திரு.பொன்முடி, அவரது மகன் –
ஆகியோர் செய்ததும்
ஸ்டாலின் முன்வைக்கும் சட்டங்களின்படி குற்றம் தானே….?

ஸ்டாலின் கூறியவை –
இவர்களுக்கும் பொருந்துகின்றனவே…

ஆனால் ஸ்டாலின் இதுவரை இதைப்பற்றி எதுவும்
பதில் சொல்லாமல் மௌனம் காப்பது ஏன்…?

விளைவைப்பற்றி யோசிக்காமல் தான் உளறி விட்டோம்
என்று நினைக்கிறாரா அல்லது

துரைமுருகனையும், பொன்முடியையும் பகைத்துக்கொள்ள
முடியுமா என்று பயப்பட்டு மௌனமாக இருக்கிறாரா…?

முதல் முறையாக –

-எதிர்க்கட்சித்தலைவர்,
வருங்கால முதலமைச்சர் வேட்பாளர் முன் –

ஒரு பலத்த சவால் விடுக்கப்பட்டிருக்கிறது….

ஸ்டாலின் அவர்களின் நிலை என்ன…?

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to துரைமுருகன், பொன்முடி விவகாரத்தில் ஸ்டாலினால் ஏன் பதில் சொல்ல முடியவில்லை …?

 1. GOPI சொல்கிறார்:

  சார் நீங்கள் இந்த குற்றச்சாட்டு குறித்து
  என்ன நினைக்கிறீர்கள் ? அதிமுக அமைச்சர்,
  எம்.எல்.ஏ. செய்தது சரியா ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கோபி,

   நிச்சயமாக இல்லை.
   அமைச்சரோ, எம்.எல்.ஏ.வோ –
   நெருங்கிய உறவினருக்கு
   காண்டிராக்டுகள், லைசென்சுகள்
   கொடுப்பது நிச்சயமாக தவறு தான்.
   அதைச் செய்தது திமுகவாக
   இருந்தாலும் சரி, அதிமுகவாக
   இருந்தாலும் சரி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  டெண்டர் என்பது அரசு நடைமுறை. சட்டம், ஒவ்வொருவரையும் தனிப்பட்ட நபராகப் பார்க்கிறது. இதனை உபயோகித்துக்கொண்டு, அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல் செய்கின்றனர். என் ஆள் டெண்டர் எடுக்கப்போகிறான் என்ற தகவலைப் பரப்பி, அதிகாரத்தால் equal opportunity இல்லாமல் செய்துவிடமுடியும். இதற்கு ஆரம்பம் கருணாநிதி.

  தமிழரசு, செல்வி, கேடி பிரதர்ஸ், மாறன், ஸ்டாலின், தயாளு அம்மாள், ராஜாத்தி, கனிமொழி என்று அவங்க குடும்ப மெம்பர்கள் ஒவ்வொருவரும் இவ்வளவு சொத்து சேர்த்தது எப்படி? இவங்க இப்படி சுருட்டுவதா, அவங்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் நிறைய சுருட்டியிருக்கிறார்கள். என பத்திரிகைகளில் எவ்வளவு படித்திருக்கிறோம்.

  கருணாநிதி மீது குற்றம் சாட்டினால், அவங்க குடும்பக் கிளைகள் எல்லாவற்றையுமே குற்றச்சாட்டில் அட்டாச் செய்யணும். ஆனால் நடைமுறைச் சட்டம் அப்படி இல்லை. அதனால் சுருட்டும் பணங்களை ‘ஷேர்’ என்ற முறையில் குடும்ப உறுப்பினர்கள் எல்லாருக்கும் போய்விடுகிறது. (சமீபத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள், சி.டி.ஐ ராஜாத்தி அம்மாள் வீடு வாடகைக்கு விட்டு, அவரிடமே விற்று, பின் வாங்கியவரிடமே திரும்பி வாங்கிக்கொண்டதாக என்றெல்லாம் அஜால் குஜால் கணக்குகள் காண்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று)

  இப்போ உதயநிதி, அழகிரி பையன் – இவங்கள்லாம் என்ன படிச்சிருக்காங்க, என்ன திறமை இருக்கு? ஆனால் அவங்க ஏகப்பட்ட படங்கள் தயாரிச்சிருக்காங்க. யாரை நம்பி காசு தர்றாங்க? கொஞ்சம் யோசிங்க. அழகிரி பையனுக்கு எஞ்சினீயர்ங் கல்லூரி, கல்குவாரி என்று ஏகப்பட்ட பிஸினெஸ். இதையெல்லாம் யார் கேட்பது?

  தொழில் – அரசியல் னு வச்சிக்கிட்டு நூறு கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்த்தவங்க, பல்லாயிரம்கோடி சொத்துக்கு அதிபதிகள், மற்றவர்களைக் குற்றம் கூற என்ன தகுதி இருக்கிறது?

  ஊழலைப் பற்றி ஸ்டாலின் பேசுவதே, அவருக்கு சிறிதுகூட வெட்கம் இல்லாததைத்தான் காட்டுகிறது. அந்த வார்த்தையே கருணாநிதியால் உருவாக்கப்பட்டு, அடையாறு ஆலமரம் போல் அவர் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டது.

  இந்த இடுகைத் தகவலைச் செய்திகளில் படித்தேன். மற்றவருக்கு வைத்த ஆப்பில், தான் மாட்டிக்கொண்ட குரங்கு என்பதுதான் என் நினைவுக்கு வந்தது.

 3. jksmraja சொல்கிறார்:

  பதவி சுகத்தை அனுபவிக்கவும், தனது பதவி அதிகாரத்தை மற்றவர் மீது செலுத்தி கொடிய இன்பம் காணவும், தனது பதவி அதிகாரத்தை பயன் படுத்தி கோடான கோடி மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்திடவே
  அரசியல் என்று ஆன பின்பு, யார் யாரை குற்றம் சொன்னாலும் நகைப்புக்கு உரியதே. . கருணாநிதி ஊழலை ஆரம்பித்து வைத்திருந்தாலும் , அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் மற்றும் ஒவ்வொரு ஊரிலும் இருந்த சசிகலாவின் சமூகத்தை சேர்ந்த சிலரும் 1991 முதல் 1996 வரையான கால கட்டத்தில் செய்த ஊழல் மற்றும் சுருட்டல் அட்டூழியங்களையும் கொஞ்சம் நினைத்து பார்க்கவேண்டும்.

  எல்லா ஊரிலும் உள்ள பெரிய பெரிய கட்டிடங்களை, சொத்துக்களை வைத்திருந்தவர்கள் எல்லாம் நடுங்கிப்போய் தூக்கமற்று அலைந்த காலங்கள் அவை. மேலே குறிப்பிட்டிருப்பவர்கள் கண்களுக்கு எது எல்லாம் மதிப்புடையது என்று தோன்றியதோ அதை அனைத்தையுமே அதிகார வெறிகொண்டு தனதாக்கி கொண்ட காலம் அது.. தென் மாவட்டங்களில் சில பிச்சைக்கார நாய்கள் எல்லாம் பெரிய பெரிய கோடீஸ்வரர்களாக உரு மாறிய காலம் அது.

  அதே மாதிரி இப்பொழுது அதிகார பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் சசிகலாவின் கொத்தடிமைகளாகவும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு நரேந்திர மோடியின் கொத்தடிமைகளாகவும்
  மாறிநிற்பதற்கு காரணம் என்ன ? ஆகையினால் யார் யார்மீது ஊழல் குற்றசாட்டு கூறினாலும் நகைத்து விட்டு கடந்து செல்ல நாம் தான் பழகிக்கொள்ள வேண்டும்.

  அல்லது திரு புதியவன் அவர்களை போல ஊழலுக்கே அரசன் எடியூரப்பா போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டே மஞ்சகாமாளைகாரனை போல எப்பொழுதோ மரணித்த கருணாநிதியை மட்டுமே குறைகூறி இன்பம் காண பழகி கொள்ள வேண்டும். கருணாநிதி ……..(deleted)

  ———————
  ( jksmraja -இன்னும் கொஞ்சம் நாகரிகமாக
  எழுதப் பழகுங்களேன்… காவிரிமைந்தன்)

 4. GOPI சொல்கிறார்:

  சி.வி.சண்முகத்தின் அறிக்கையை
  பார்த்தபிறகு துரைமுருகனும், ஸ்டாலினும்
  தனியே ஒரு அறையில் சந்தித்தால் –

  உள்ளே எப்படி பேசிக்கொள்வாகள்,
  அவர்களிடையே என்ன நடக்கும் என்று
  நினைத்துப் பார்த்தேன்.
  சிரிப்பை அடக்க முடியவில்லை;
  நீங்களும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்-
  அந்த சீன் எப்படி இருந்திருக்குமென்று !

 5. tamilmani சொல்கிறார்:

  ஊழலின் ஊற்றுக்கண்ணே கருணாநிதி தான். உலகின் மிக பெரிய
  பணக்கார குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்று. சாதாரண ஆசிரியராக
  இருந்த பொன்முடி எந்த வியாபாரம் செய்து இவ்வளவு பெரிய
  பணக்காரர் ஆனார்? துரை முருகன் வீட்டில் பணம் கோடௌனில்
  பதுக்கி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அது
  கள்ளப்பணம் இல்லாமல் நல்ல வழியில் சம்பாதிக்கப்பட்ட பணமா?
  இந்த கொரானா காலத்திலும் பாதிக்கப்படாத ஒரே கூட்டம்
  இந்த கொள்ளை கூட்டம்தான். திமுகவினர் செய்வதை தான்
  அதிமுகவினர் செய்கினறனர். ஒரு அயோக்கியன் இன்னொருவனை
  அயோக்கியன் என்கிறான் . நம் தலையெழுத்து இந்த இரண்டு கட்சிகளும்
  மாறி மாறி நம்மை ஆள்கின்றன. 2021ல் ஒரு மாற்றம் வந்து விடிவு ஏற்படுமா?

  • Selvadurai Muthukani சொல்கிறார்:

   பா. ஜ. க. + அ. தி. மு. க. Vs தி. மு. க. + காங்கிரஸ் அணிகள் மோதும்போது மூன்றாவதாக யாரை நம்பி வாக்களிக்கலாம் என்று அனைவரும் குழம்பிக் கிடக்கையில் ஒரு தெளிவு ஏற்படும் வகையில் ஒரு விவாதத்தை உங்கள் தளத்தில் ஏன் ஏற்படுத்தி உதவக்கூடாது??

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    செல்வதுரை முத்துக்கனி,

    தேர்தலுக்கு இன்னமும்
    நீண்ட நாட்கள் இருக்கின்றன.
    தேர்தல் களத்தில் யார் யார் இருப்பார்கள்…
    யார் எந்தப்பக்கம் இருப்பாகள் என்பதெல்லாம்
    இன்னும் முடிவாகவில்லையே…

    தேர்தல் அருகில் நெருங்குகையில்
    நாம் இதைப்பற்றி யோசிப்பது தான்
    சரியாக இருக்கும்.. அல்லவா …?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 6. SELVADURAI MUTHUKANI சொல்கிறார்:

  சரிதான், பதிலுக்கு நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.