….
….
….
பல ஆண்டுகள், இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன்
அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி நெஞ்சத்தை விட்டகலாத
பல பாடல்களை உருவாக்கிய திரு.புகழேந்தி,
கே.வி.எம். அவர்களை உடன் வைத்துக்கொண்டு அளித்த
தூர்தர்ஷன் பேட்டி முதலிலும், (கே.வி.எம். அவர்களுக்கு
உடல் நலம் சரி இல்லாத சூழ்நிலை…)
பின்னர் அதையடுத்து, தனியே அளித்த பேட்டியும் கீழே –
பழைய திரைப்பட பாடல்கள் பிடித்தவர்களுக்கு
இந்த பேட்டி பிடிக்கும்.
எனவே OLD IS GOLD பிடித்தவர்கள் மட்டும் இதைப் பார்க்கவும்.
…….
………
………
………
………
………
.
——————————————————————————————————-
Very interesting. நேரமானாலும் இதனை முழுமையாகக் கேட்டேன். நீங்கள் கொடுத்திராத அடுத்த பகுதிகளையும் கேட்டேன். அவரிடம் நீண்ட பேட்டியே எடுத்திருக்கலாம் (நிறைய பாடல்கள் எப்படி இசையமைத்தாங்க என்றெல்லாம்).
அவர் சொன்னதில் என் சந்தேகம், ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே – இதை ஆரபி என்றுதான் படித்திருந்தேன் – சிந்துபைரவியில் அப்படித்தான் வசனமும் வரும். ஆனால் இவர் தேவகாந்தாரி என்று சொல்கிறார்.
மாமா மாமா மாமா… சிட்டுப்போல.. இந்தப் பாட்டு உருவான விதம்லாம் மிகவும் ரசிக்கும்படி அமைந்திருந்தது.
அருமையான பகிர்வு. யூ டியூபில் வைரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
புதியவன்,
யூ டியூபில் நிறைய வைரங்கள் இருப்பது
உண்மை தான். ஆனால், அவை
கரிக்கட்டிகளிடையே மறைந்திருக்கின்றன.
அவற்றைத் தேடி எடுத்து இங்கே தரும்
முயற்சியில் தான் நான் அவ்வப்போது
ஈடுபடுகிறேன்.
நான் இந்த தளத்திற்கு பலவித ரசனைகளையும்
கொண்ட வாசக நண்பர்கள் வருவதைப்
பார்க்கிறேன். நல்ல ரசனைகள் அனைத்திற்கும்
இங்கே இடம் கொடுக்க வேண்டும் என்பது
என்பது என் நோக்கம். இந்த தளம்
அனைவருக்கும் பயனுள்ளதாக, பிடித்ததாக
இருக்க வேண்டும்.
உங்களுக்கு இது பிடித்திருப்பதில்
எனக்கு மிக்க மகிழ்ச்சி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்