….
….
….
பாஜக குறித்த தனது நிலையை ஆளும் அதிமுக
இன்று தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறது…
இதுவரை, இத்தகைய தைரியமான பிரகடனம்
வெளியானதில்லை;
கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை
உணர்ந்தும், சரியான நிலைப்பாட்டை அறிவித்திருக்கும்
அதிமுக தலைமையை பாராட்டுவோம்; வரவேற்போம்.
அழுத்தங்கள் வந்தாலும், இதே நிலை தொடரவேண்டும்
என்று வலியுறுத்துவோம்.
இன்றைய அம்மா’வில் அதிமுக கொள்கை விளக்கம் –
…..
.
———————————————————————————————————————–
உடனடி விளைவு : அதிமுக முக்கியஸ்தர்கள்
வருமானவரி ரெய்டு’களை
எதிர்நோக்க வேண்டியிருக்கும். !
முதல்வர் முடிவெடுக்கும்போதே
விளைவுகளுக்கு தயாராக
இருப்பாரென்று நம்பலாம்.
இன்றைக்கு காலையில் தொலைக்காட்சியில் இதனைப் பார்த்தேன். அதிமுக தலைமை சரியான முடிவெடுத்திருக்கிறது என்றே நம்புகிறேன். ‘வேல் யாத்திரை’ என்று பாஜக ஆரம்பித்திருப்பது அடாவடிச் செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது. திமுக, இந்துக்களைப் பழிப்பது, கடவுள்களைப் பழிப்பது என்று ஆரம்பித்திருக்கிறது (இந்த கருப்பர் கூட்டம் திமுகதான்). அதற்கு போராட்டம் செய்வதில் தவறில்லை. அரசு அந்தக் ‘கருப்பனை’ சிறையில் வைத்தது. அத்தோடு தீர்ந்தது பிரச்சனை. அதற்கு மேல், ‘வேல் யாத்திரை’ என்று முருகன் ஆரம்பிப்பது பாஜகவுக்கு எந்த நன்மையையும் செய்யாது, தமிழகத்துக்குத் தீமைதான் செய்யும்.
அதிமுகவைப் பொருத்தவரையில், பாஜக என்பது தேவையில்லாத கட்சிதான் (தேர்தலின்போதான சித்து விளையாடல்களுக்கு மட்டும் தேவையாக இருக்கலாம். அவ்ளோதான். பாஜகவினால் 5-10 சதவிகிதம் வாக்குகளை அதிமுக இழக்கும். அதனால் அவங்களா (பாஜகவா) கழண்டுக்கிட்டாங்கன்னா ரொம்பவே நல்லது.
இதை வைத்து பாஜக கூட்டணியிலிருந்து
விலகினால் விட்டது சநியன் என்று
அதிமுக சந்தோஷப்படலாம்.
மிரட்டல் வேலைகளில் ஈடுபட்டால்,
முன்னெச்சரிக்கையாக இருந்துகொண்டு,
“தற்காப்பு” ஏற்பாடுகளை பண்ணிக்கொள்ள
வேண்டியது தான்.
இதிலெல்லாம் அவர்களுக்கு ஏற்கெனவே
அனுபவம் இருக்குமே !
வணக்கம் தமிழ்நாடு முதல்வர்.அவர்களுக்கு
ஐயா நான் தினமும் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உடையவன் இனிமேல் நான் தினமும் கோயிலுக்கு செல்வதற்கு யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் இடமா அல்லது கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் தலைவர்களிடமா. இல்லை உங்கள் தாயாதிகளான திமுகவிடமா இல்லை தமிழ் தேசியவாதிகள். இடமா யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் முதல்வர் ஐயா அவர்களே
கார்த்திகை மாதம் பிறக்க போகிறது ஐயப்பனை காண மாலையணிந்து சபரிமலை செல்வதற்கு யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் உங்கள் ஏவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமா
அதைப் போல தமிழகத்தில் இனி இந்து மக்கள் திரு நிறு. மற்றும் திருநாமம் இடுவதற்கும் உங்கள் அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர்கள் இடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டுமா
அப்படி அனுமதி இல்லாமல் திருநீறு இட்டால் அது மிகப் பெரிய குற்றம் என்று காரா கிரஹத்தில் அடைத்து விடுவீர்களா?
இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இந்து மக்கள் வசிக்க அவுரங்கசீப் காலத்தில் இருந்ததைப் போல ஜசியா வரி கட்ட வேண்டுமா ஐயா ஆம் என்று சொல்லிவிடுங்கள்
இந்துக்களாகிய நாங்கள் வேறு மாநிலத்தில் குடியேறுவதற்கு முயற்சி செய்கின்றோம் ஏனென்றால் தமிழகத்தில் இந்து பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னதற்கு இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை சொன்னவர் இதுவரை கைது செய்யப்படவில்லை
அதைப்போல இந்து கோவில்களை ஆபாசத்தின் பிறப்பிடம் என்று சொன்னதற்கும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
ஆனால் ஈ வெ ராமசாமியின் சிலை மீது காவி சாயம்ஊற்றியதற்கு இருபத்தோரு வயது கூட நிரம்பாத இளைஞனுக்கு குண்டர் தடுப்பு சட்டம் மிக வேகமாக வருகிறது யாரை திருப்திப்படுத்த என்று தெரியவில்லை
ஆனால் இந்துக்களையும் இந்து கடவுள்களையும் இந்துக் கோயில்களையும் கேவலப்படுத்திய நபர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை ஆகவே.கேவல பட்டு இந்துக்கள் இங்கு மூன்றாம் தர குடிமக்களாக பாதுகாப்பின்றி வசிப்பதை விட வேறு மாநிலத்திற்கு சென்று கௌரவமாகவாழ்ந்து கொள்கின்றோம்
தமிழக இந்து பெருமக்கள் எதிரியைக் கூட மன்னித்து விடுவார்கள். நட்பு பாராட்டி கொண்டு துரோகம் செய்யும் துரோகிகளை என்றும் மன்னிக்க மாட்டார்கள்
முன்னாள் முதல்வர், நீங்கள் அம்மாவென்று அழைத்த ஜெ., இருந்திருந்தால் எங்கள் வேல் யாத்திரைக்கு தடை சொல்லி இருப்பாரா? என்ன செய்வது தமிழகத்தில் இந்துக்கள் மூன்றாம் தர குடிமக்கள்தான். பாகிஸ்தானில் தான் இந்து மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றால் தமிழகத்திலும் மதச்சார்பின்மை என்ற போலியான போர்வையில் இழைக்கப்படும் அந்த மாதிரிஅநீதியை இந்து.மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்
இதற்கெல்லாம் கண்டிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக இந்து மக்கள் உங்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொண்டு வெற்றிவேல் வீரவேல் என்று சூளுரைத்து எங்கள் யாத்திரை கண்டிப்பாக நடைபெறம்.
அதற்கு எத்தனை தடை ஏற்படுத்தினாலும் எங்கள் கந்தனும் எங்கள் மாநிலத் தலைவர் முருகனும் அதை அழித்தொழித்து யாத்திரையை வெற்றிபெற வைப்பார்கள்
பாரத் மாதா கி ஜே
தீவிர பாஜகா பையா அவர்களுக்கு
1) முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டிய பெட்டிஷனை
இங்கே ஏன் போடுகிறீர்கள் ? மூளை சலவைக்குச்
சென்று விட்டதா ?
இருந்தாலும் முடிந்தவரையில் உங்களுக்கு விளக்கம் –
2) கோவிட் உத்திரவுகளை பின்பற்றி கோவிலுக்கு
செல்வதிலிருந்து உங்களை யார் தடை செய்கிறார்கள் ?
தினமும் என்ன, ஒரு நாளைக்கு 3 முறை கூட செல்லலாமே –
3) அரைமூளைக்குக் கூட தெரியுமே – ஆன்லைனில்
பெர்மிஷன் வாங்கிக்கொண்டு சபரிமலைக்கு செல்லலாமென்று.
பெட்டிஷன் போடும் முன்பு இதையெல்லாம் பார்ப்பதில்லையா ?
4) // அதைப் போல தமிழகத்தில் இனி இந்து மக்கள் திரு நிறு. மற்றும் திருநாமம் இடுவதற்கும் உங்கள் அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர்கள் இடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டுமா
அப்படி அனுமதி இல்லாமல் திருநீறு இட்டால் அது மிகப் பெரிய குற்றம் என்று காரா கிரஹத்தில் அடைத்து விடுவீர்களா? //
முட்டாள்தனமாக வாட்சப்பில் வந்ததை எல்லாம் இங்கே
வாந்தி எடுக்கும் முன்னர் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா ?
இப்போது தினமும் நீங்கள் திருநீறு, திருநாமம் இடுவதில்லையா ?
ஏன் குளிப்பதற்கு கூட பெர்மிஷன் வேண்டுமென்று
நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ ?
5) //இந்துக்களாகிய நாங்கள் வேறு மாநிலத்தில் குடியேறுவதற்கு முயற்சி செய்கின்றோம் //
” நாங்கள் ”
இந்த மாநிலத்தில் வசிக்கும் ஏழரை கோடி பேரில் எத்தனை பேரை
நீங்கள் represent பண்ணுகிறீர்கள் ?
அனைவரின் சார்பாகவும் பேசுவதற்கு நீங்கள் யார் ?
எங்கு வேண்டுமானாலும் போய் குடி “ஏறுங்களேன்” யார் தடுத்தது ?
ஏன் மொட்டை ஆளும் மானிலத்திற்கே போகலாமே.
அங்கே தினமும் நடக்கும் கற்பழிப்புகளை/கொலைளை கொண்டாடி ரசிக்கலாம்.
6) //தமிழக இந்து பெருமக்கள் எதிரியைக் கூட மன்னித்து விடுவார்கள். நட்பு பாராட்டி கொண்டு துரோகம் செய்யும் துரோகிகளை என்றும் மன்னிக்க மாட்டார்கள் //
அடடா என்ன அருமையான தத்துவமெல்லாம் பேசுகிறீர்கள் ?
உங்களுக்கு யார் எதிரி ? யார் துரோகி ? கொஞ்சம் விவரியுங்களேன்.
மன்னிக்க மாட்டேன் என்றால், வேறுஎன்ன செய்வீர்கள் ?
வட மாநிலங்களில் நீங்கள் செய்வதுமாதிரி அடித்தே
கொன்று விடுவீர்களா ?
7) // அம்மாவென்று அழைத்த ஜெ., இருந்திருந்தால் எங்கள் வேல் யாத்திரைக்கு தடை சொல்லி இருப்பாரா? //
“அம்மா” இருந்திருந்தால், முதலில் இந்தமாதிரி ஒரு கடிதத்தை
அனுப்ப உங்களுக்கு துணிச்சல் இருந்திருக்குமா ?
8) // இதற்கெல்லாம் கண்டிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில்
தமிழக இந்து மக்கள் உங்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள் //
தயவுசெய்து 2021 சட்டமன்ற தேர்தலில் யாருடனும்,
முக்கியமாக அதிமுகவுடன் கூட்டணி இல்லை;
நாங்கள் தனித்தே போட்டியிட்டு அரசமைப்போம் என்று
இன்றே அறிவித்து விடுங்களேன்.
முதலில் அப்படி அறிவிக்கவாவது
உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ?
KM சார்
இந்துக்களாகிய நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல்தான் கோவிலுக்கு சென்று வருகிறோம்.
திரு paiya அவர்கள் சொல்வதை போன்ற பிரச்சனைகள் இந்துக்களுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.
அப்படி இருக்கும்போது யாருக்கு பிரச்சனை என்றுதான் புரியவில்லை. நாங்கள் ஐயப்பன் கோவிலுக்கும் செல்கிறோம். நாங்கள் யாரிடமும் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல்தான் செல்கிறோம்.
இங்கே போலி ஒப்பாரி பலிக்காது
(நண்பர் jksmraja – உங்கள் மறுமொழியிலிருந்து பிரச்சினைக்குரிய
சில வார்த்தைகளை டெலிட் செய்திருக்கிறேன்…காவிரிமைந்தன் )
paiya
சொந்தமாக ஒரு பின்னூட்டத்தை கூட
எழுத முடியாமல் பாஜக கட்சி வெளியிடும்
அறிக்கைகளை ‘கட் பேஸ்ட்’ செய்யும்
அளவிற்கா மதவெறீ உங்களைப்பிடித்து
ஆட்டி வைக்கிறது ? வெட்கக்கேடு.
Dear Mr.Gopi
இந்து பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னதற்கு இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை சொன்னவர் இதுவரை கைது செய்யப்படவில்லை
அதைப்போல இந்து கோவில்களை ஆபாசத்தின் பிறப்பிடம் என்று சொன்னதற்கும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
please answer
dear mr.paiya
எனக்குத் தெரிந்து இந்து பெண்கள் விபச்சாரிகள்
என்று எவரும் சொல்லவில்லை;
இது பாஜகவின் mis-interpretation.
முதலில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு
பதில் சொல்லுங்கள் . பிறகு மற்ற விஷயங்களை
விவாதம் செய்யலாம்.
Dear Mr.gopi
That is the core issue. When you do not agree, it’s waste continue arguments.
KM சார்,
நீங்கள், நான் எழுதிய பின்னூட்டத்தை அப்படியே விட்டிருக்கவேண்டும்.. தமிழ் நாடு அமைதி பூங்காவாக நிலைக்க வேண்டும் என்றால், சில வற்றை வெளிப்படையாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். . இல்லை என்றால் அவதி பட போவது நாம் எல்லோருமேதான்.
jksmraja,
உங்கள் கருத்தைச் சொல்வதை
நான் தடை செய்தது கிடையாது.
ஆனால், நீங்கள் தரமாக எழுதுவதை
உறுதி செய்ய வேண்டும். எதிர் தரப்பில்
பேசினாலும், நாகரிகமான வார்த்தைகளை
பயன்படுத்தினீர்கள் என்றால் நான்
குறுக்கே வர மாட்டேன்.
உங்கள் பின்னூட்டத்தில் நான் எத்தகைய
வார்த்தைகளை நீக்கி இருக்கிறேன் என்று
மீண்டும் ஒரு தடவை பார்த்துக் கொள்ளுங்கள்.
அவை தரமானவையா… ? நீங்கள்
எதை தவிர்த்திருக்க வேண்டும் என்பது புரியும்.
நான் சொல்வதை அவசியத்தை புரிந்துகொண்டு
தாராளமாக எழுதுங்கள்… நான் குறுக்கே
வர மாட்டேன்…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
திருமாவளவன் எந்த இடத்திலும், இந்து பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லவே இல்லை. மனுநீதியில் அப்படி குறிப்பிட்டிருக்கிறது என்றுதான் சொல்லியுள்ளார். உண்மையான இந்துவாக இருந்தால், நீ யார் மீது கோவப்பட வேண்டும்? அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறது என்று சொன்னவன் மீதா? அல்லது அதை எழுதி வைத்துவிட்டு போனவன் மீதா? அல்லது நாற்பது நிமிட வீடியோவை நான்கு செகண்டாக சுருக்கி அயோக்கியத்தனம் பண்ணியவன் மீதா?
திரு paiya கொஞ்சம் விளக்குங்களேன்.
நாம் எல்லோரும் இந்த கட்டுரையில் இருந்து விலகி எங்கோ செல்கிறோம். இது எல்லாமே அதிமுக மற்றும் பிஜேபி சேர்ந்து செய்யும் விளம்பர யுக்தி. தடை செய்து அவர்களை கைது செய்திருந்தால் அது ஒருநாள் விளம்பரம் மட்டுமே. அதே போல அனுமதித்திருந்தாலும் அது ஒருநாள் விளம்பரம் மட்டுமே. ஆனால் தொடர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவர்கள் செய்யும் இந்த நாடகங்கள் அனைத்துமே. மற்றபடி இது அதிமுக வின் உண்மையான நோக்கம் அல்ல. பார்த்துக்கொண்டே இருங்கள் இந்த நாடகம் தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலமோ அல்லது தேர்தல் வரையோ நடந்து கொண்டே இருக்கும்.
Paiya says :
That is the core issue. When you do not agree, it’s waste continue arguments.
இதுதான் பா ஜ க. . இதை காட்டிலும் சுருக்கமாக
யாரும் அவர்கள் கொள்கைகளை சொல்ல முடியாது .
நிற்க – “நமது அம்மா ” எழுதியவர் பெயர் இல்லை .
‘குத்தூசி ‘ என்று உள்ளது . இதை முதல் அமைச்சரோ
இல்லை மற்ற அமைச்சர்களோ சொல்லவில்லை .
வெறும் பொழுதுபோக்கு – Timepass .
Mr.paiya
ஏடாகூடமாக இங்கே வந்து
வாட்சப்பில் வந்ததையெல்லாம்
வாந்தியெடுத்து அசிங்கம் பண்ணிவிட்டு,
விவாதத்திற்கு பயந்து
ஓடிப்போகப் பார்க்கிறீர்கள்.
//இந்துக்களாகிய நாங்கள் வேறு மாநிலத்தில்
குடியேறுவதற்கு முயற்சி செய்கின்றோம் //
படித்த, சுயபுத்தியுள்ள எவரும்
இந்த மாதிரி அசட்டுத்தனமாக எழுத மாட்டார்கள்.
அடிமைகள், பாஜக அடிமைகளுக்கே
உரிய வார்த்தைகள் இவை.
நீங்கள் இதைச் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.
போங்களேன்; இந்தியா முழுவதும் நம்ம நாடு தானே ?
எங்கே வேண்டுமானாலும் போங்களேன்
யார் உங்களை தடுக்கிறார்கள் ?
போய் அனுபவித்துவிட்டு வந்தால் தான் தெரியும்-
தமிழ்நாட்டின் அருமை.
போங்க – மொட்டையர்கள் ஆளும் உத்திரபிரதேசம்
போங்க; மத்தியபிரதேசம், பீகார், குஜராத் என்று
உங்கள் ஆட்சி நடக்கும் எவ்வளவோ மாநிலங்கள்
இருக்கின்றனவே; போங்க சார்; இங்கே இருக்கசொல்லி
யாரும் உங்களை கெஞ்சவில்லை;
உங்கள் மாதிரி ஜால்ராக்கள், பாஜக அடிமைகள்
போனால் தமிழ்நாடு இன்னும் கொஞ்சம் சுத்தமாகும்.
ஆனால் தப்பித்தவறி மஹாராஷ்டிரா பக்கம் மட்டும்
போயிடாதீங்க. அங்க ஒங்க பழைய கூட்டாளி
சிவசேனாக்காரன் நீங்க பாஜக என்று தெரிஞ்சாலே
நசுக்கி விடுவான்; எல்லாம் ஒங்க கூட பழகின தோஷம் தான்.
போறதுக்கு முன்னாடி ஒரு காரியம்
பண்ணிட்டு போங்க; ஒங்க தலைவருக்கு
ஒரு கடுதாசு எழுதுங்க: தைரியம் இருந்தா,
வாய்ப்பேச்சோடு நிக்காம, அதிமுகவுக்கும் எங்களுக்கும்
ஒட்டும் இல்லை;; உறவும் இல்லை;
அவங்களோட கூட்டணி கிடையாது;
தமிழ் நாடுசட்டமன்ற தேர்தலை தனியாவே சந்திப்போம்
அப்படின்னு ஒரு அறிக்கை விடச்சொல்லுங்க பாப்போம்.
அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டவே வேண்டும். பிரச்சனைகள் வரும் என்று தெரிந்துமே அனுமதி கொடுக்கவில்லை என்ற தைரியமே நமக்கு நிம்மதி.
திரு. பையா போன்றவர்கள் தான், தற்போதைய பாஜகவிற்கு தேவை. நாட்டில் நடக்கும் விஷயங்களை எதையும் புரிந்து, உணர்ந்து முடிவெடுக்க விடாமல், மதத்தை முன்னிறுத்தி மூளையை மழுங்கச்செய்வது. இத்தனை பேர் அவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பது நல்ல விஷயமாக இருந்தாலும், இதெல்லாம் அவருக்கு சுத்தமாக புரியாது என்பதே உண்மை.
பாஜக, இந்த விஷயத்தில் மிகக்கண்டிப்பாக பக்காவாக திட்டமிட்டே வைத்திருப்பார்கள் என்றே தோன்றியது. அனுமதி கொடுத்தால் ஒரு மாதிரி, கொடுக்காவிட்டால் வேற மாதிரி என்று. ஆனால் அத்வானியின் ர(த்)தயாத்திரையை பற்றி தெரிந்தும் இந்த வேல் யாத்திரையை எப்படி தமிழர்களான பாஜக காரர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று புரியவில்லை. பிரச்சார வண்டியில் ஒரு வேல் யாத்திரை போன்று இருந்தது. மனிதத்தை, மறந்தும் உபயோகப்படுத்தக்கூடாது என்று இருக்கிறார்கள் போலும்.
இதில் மிகவும் வேதனைப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், பையா போன்றவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதே. வாழ்க தமிழ், வீழ்க பாஜக..
திரு பையா அவர்களின் கவனத்திற்கு,
மேலே நண்பர் எழில் சொல்லி இருப்பது உங்களுக்காகத்தான்.
இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் நண்பரே.
உங்களுக்காக மீண்டும் ஒரு முறை ;
// நாட்டில் நடக்கும் விஷயங்களை எதையும் புரிந்து,
உணர்ந்து முடிவெடுக்க விடாமல், மதத்தை முன்னிறுத்தி
மூளையை மழுங்கச்செய்வது.
இத்தனை பேர் அவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பது
நல்ல விஷயமாக இருந்தாலும், இதெல்லாம்
அவருக்கு சுத்தமாக புரியாது என்பதே உண்மை. //
இன்று பாஜக தேடுவது
மதத்தைச் சொல்லி வெறியேற்றினால்
சுயமாக சிந்திப்பதை மறந்து விடும்
உங்களைப் போன்றவர்களைத்தான் என்பதை
தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
ஹிட்லர் 90 வருடங்கள் முன்னே சொன்னது :
primary rules were:
never allow the public to cool off;
never admit a fault or wrong;
never concede that there may be some good in your enemy;
never leave room for alternatives;
never accept blame;
people will believe a big lie sooner than a little one; and
if you repeat it frequently enough people will sooner or later believe it