திமுக ஓட்டுகளைப் பிளக்கப் போகும் அழகிரியின் தனிக்கட்சி …?

….
….

….

டிசம்பர் முதல் வாரத்தில் கலைஞரின் மூத்த மகன் அழகிரி
“கலைஞர் திமுக” என்கிற பெயரில், தனது ஆதரவாளர்களின்
துணையோடு புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் என்று
நேற்று மாலை செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அழகிரி, தீபாவளியன்று(அமாவாசை….!!! ) – திமுகவில்
இருக்கும் தனது பழைய நண்பர்கள், ஆதரவாளர்கள் என்று
பலரையும் டெலிபோனில் தொடர்புகொண்டு இதற்கான
விதையைத் தூவி இருக்கிறாரென்று தெரிகிறது.

தமிழ்நாடு முழுக்கவும் தனது தனிக் கட்சிக்கான நிர்வாகிகளை
நியமிப்பது தொடர்பான ஏற்பாடுகளையும் அவர் துவங்கி விட்டதாகத்
தெரிகிறது.

அடுத்த 2 வாரங்களில், செயல்வீரர்களின் கூட்டம் முதலில்
திருச்சியில் கூட்டப்படும் என்றும் தெரிகிறது.

பாஜகவில் நேரடியாக அழகிரி சேர்ந்தால், அவருடன்
சேரக்கூடியவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்காது.
அதுவே தனியாக புதிய கட்சியைத் துவக்கினால்,
நிறைய நிர்வாகப் பதவிகள் இருக்கும்/கிடைக்கும் என்பதால்,
அதிகம் பேரை அது ஈர்க்கும்.

கலைஞரின் பெயரில் புதிய திமுகவை துவக்கும் பட்சத்தில்,
திமுகவில் உள்ள அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள்,
தற்போது கட்சியில் ஒதுக்கப்பட்ட, முக்கியத்துவம் இழந்துவிட்ட
நிலையில் உள்ள பலர் அதில் சேரக்கூடும்.

எனவே, தனிக்கட்சியை அழகிரி துவக்குவது –
முதலில் திமுகவைப் பிளந்து, ஸ்டாலினின் பலத்தைக்
குறைக்கவும், பின்னர் தேர்தல் சமயத்தில்
பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்காகவும் இருக்குமென்று
தெரிகிறது.

இந்தியா முழுவதும் பல மாநில கட்சிகளில் புகுந்து
உடைத்து விளையாடிய பாஜக தமிழ் நாட்டிலும்,
அழகிரியை முன் நிறுத்தி,
தன் லீலைகளை துவக்கி விட்டதாகத் தோன்றுகிறது.

என்ன – பிரசாந்த் கிஷோர்
புதிய வியூகங்களை வகுத்தாக வேண்டும் …
ஆனால், இதற்கான பில் அமௌண்ட் தனியாகப் போடலாம் ..!!!
அவர் காட்டில் மழை தான்.

.

———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to திமுக ஓட்டுகளைப் பிளக்கப் போகும் அழகிரியின் தனிக்கட்சி …?

 1. tamilmani சொல்கிறார்:

  ரஜினி, அழகிரி யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவிற்கு தலைவலியே.
  தென் மாவட்டங்களில் அழகிரிக்கு திமுக ஆதரவாளர்கள் நிறைய ,
  குடும்ப ஆட்சியை விரும்பாத திமுகவின் அதிருப்தியாளர்கள் அழகிரிக்கு
  பின் அணிவகுப்பது திமுகவுக்கு பின்னடைவே. பிஹாரில் வெற்றி ருசி
  கண்ட அமித் ஷா தன்னுடைய பார்வையை தமிழகம் பக்கம் திருப்புகிறார்.
  பிரஷாந்த் கிஷோருக்கு நீங்கள் சொல்வது போல் ஜாக்பாட் அடிக்கிறது.

 2. புதியவன் சொல்கிறார்:

  திமுக ஸ்டாலினுக்கு யாருமே புதிய கவர்ச்சியானவர்கள் இப்போது தேர்தல் களத்துக்கு வருவது பெரிய தலைவலியே. எனக்கென்னவோ அழகிரி தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. நிர்வாகிகள் பக்கத்தில் தாக்கம் ஏற்படலாம். தீவிர திமுக கொள்கைகளைக் கடைபிடிப்பவர்களுக்கு ஒரு புகலிடமாக அது இருக்கும். திமுக காரர்கள் பாஜகவுக்குச் செல்வதால், அப்படிச் செல்பவர்களது வாக்கு (ஓரிரண்டு) மட்டுமே திமுகவுக்கு இழப்பாகும்.

  எனக்கென்னவோ திமுகவின் எதிர்காலம் கனிமொழி என்றே தோன்றுகிறது. ஸ்டாலினுக்குப் பிறகு நிச்சயம் அவர்தான் வருவார். அதை யாருமே தடுக்க இயலாது.

 3. GOPI சொல்கிறார்:

  Gap கிடைக்கிற சமயங்களில் எல்லாம்
  கனிமொழியை promote பண்ணிக்கிட்டே
  இருக்கீங்களே – 2ஜி என்று ஒரு சமாச்சாரம்
  இருந்ததே – இருக்கிறதே
  அதை வசதியாக மறைத்து – மறந்து
  விடுகிறீர்களே சார்.

  • புதியவன் சொல்கிறார்:

   தொலைக்காட்சி ஊழல்னாங்க…(லஞ்சம் வாங்கினார்னாங்க). ஆனா அவரைத்தான் இப்போ முதலமைச்சர் ஆயிடுவார்ன்றாங்க. பி.எஸ்.என்.எல் லைன் ஊழல்னாங்க. அதுக்கு அப்புறம் அவர் மத்திய மந்திரியாவே ஆயாச்சு. திமுகவின் தலைவர்னா அவங்க கொள்கைக்கு ஏத்தவர் – ஊழல்வாதி, கருணாநிதியின் மகள். இதில் நானென்ன ப்ரொமோட் செய்வது?

   அழகிரிக்கு அந்த அளவு சிந்திக்கும் திறன் இல்லை. இல்லாவிடில் அமைதியா இருந்து தன் காரியத்தைச் சாதிக்கத் தெரியாமல், கருணாநிதியாலேயே கட்சியை விட்டு துரத்திவிடப்பட்டிருப்பாரா?

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  சோ விற்கு ஒரே ஒரு கொள்கைதான் இருந்தது .
  “தி மு க வரக்கூடாது – மற்றப்படி வேறு யார்
  வந்தாலும் பரவாயில்லை ”

  கலைஞரை பற்றி எழுதும் போது “ஊழல்
  கருணாநிதி ” என்றே எழுதுவார் .
  ஜெயாவை பற்றி எழுதும் போது “இரும்புப்
  பெண்மணி ” என்றெல்லாம் வரும் .
  மொத்தத்தில் –
  ஜெயா எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடாதவர் .

  கருணாநிதியுடன் ஒப்பிடுமளவு ஜெயாவிடம் எந்த
  திறமையும் கிடையாது .
  Most of the discussions on Tamilnadu politics follow this template !

  அழகிரி பெரிய செல்வாக்கு என்று மதுரை பக்கம்
  மட்டுமே – மற்றபடி ஒன்றும் கிடையாது .
  தி மு கவை தோற்கடிக்க மெனக்கெட வேண்டியதில்லை .
  சீட் கிடைக்காத தி மு கவினரை அழைத்து
  பணம் கொடுத்து எதிர்த்து வேலை செய்ய
  சொன்னாலே போதும்

  அப்புறம் ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த தலைவர் –
  உதயநிதிதான் .

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   ஆமாம் ஜெயலலிதாவிற்கு கருணாநிதி மாதிரி மாட்டிக்காம ஊழல் செய்யத்தெரியாது தான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.