நிதிஷ்குமாரை பாஜக தான் திட்டம் போட்டு தோற்கடித்தது -பொன்ராஜ்…

….
….

….

பீஹார் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
நடந்துகொண்டிருக்கும்போது தந்தி டிவியில்
தொடர் விவாதம் நடந்துகொண்டிருந்தது.

ஹரிஹரனின் கேள்விக்கு பதில் சொல்லும்போது,
டாக்டர் கலாம் அவர்களின் சீடரும்,
அரசியல் ஆர்வலருமான திரு.பொன்ராஜ் –

பீஹார் அரசியலிலிருந்து நிதிஷ்குமாரை ஒழித்துக்கட்ட
பாஜக திட்டம் போட்டு வேலை செய்ததாக கூறுகிறார்.

நிதிஷ்குமார் தோற்றதற்கு காரணம் பாஜக
ஜூனியர் பஸ்வானை தனது B team ஆக செயல்பட வைத்து
குறிபார்த்து நிதிஷ்குமார் கட்சியை காலி செய்ததே ….

இதை ஏற்கெனவே நிதிஷ்குமார் அறிவார்…
தேர்தல் முடிவுகள் வெளியானதும் அது உறுதியாகி விட்டது.

இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிதிஷ்குமார்
பாஜகவை விட்டு அகன்று, எதிரணியுடன்
கைகோர்க்ககூட வாய்ப்பிருக்கிறது … என்கிறார்.

சுமார் 30 தொகுதிகளில் நிதிஷ் கட்சி தோற்க
பாஜகவின் B டீமான ஜுனியர் பஸ்வானின் கட்சி தான்
காரணமாக இருந்தது.

மோடிஜி மற்றும் நிதிஷ்ஜி இடையேயான
பழைய பகைமையை நினைத்துப் பார்க்கும்போது –
இது நிஜமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

பொன்ராஜ் கூறுவதுபோல் பாஜக, ஜூனியர் பஸ்வானை
பயன்படுத்தி நிதிஷ்குமாரின் கட்சியை தோற்கடிக்கச்
செய்திருக்கக்கூடும்….

அரசியலில், அதுவும் பாஜகவைப்
பொறுத்த வரையில் இது சாத்தியமே…!!!

….

….

பின் குறிப்பு –

மேலே எழுதப்பட்டவை தேர்தலில் முழு ரிசல்ட் வெளிவரும்
முன்பு நடந்த விவாதங்களின் அடிப்படையானவை.

முழு முடிவுகளும் தெரிந்த பின் – சில விஷயங்கள்
தெளிவாகி இருக்கின்றன.

தம்பியாக இருந்த பாஜக அண்ணனாக மாறி விட்டது.
பாஜகவிடம் இப்போது -74
நிதிஷ்குமாரிடம் -43

பாஜகவில் பாதியளவே உள்ள நிலையில், நிதிஷ்குமார்
முதலமைச்சர் பொறுப்பை ஏற்பது பற்றி குழப்பமான
நிலையில் இருக்கிறார். தன்னை முதல்வர் ஆக்கினாலும்,
முக்கிய அமைச்சரகங்களை பாஜக பிடுங்கிக் கொள்ளும்.
தன்னை அதிகாரமற்றவர் ஆக்கி விடும் என்று உணர்கிறார்.

மேலும், தன்னை வேண்டுமென்றே ஜூனியர் பஸ்வானை
வைத்து பழிவாங்கி விட்டது என்கிற குற்றச்சாட்டை
விலக்கிக்கொள்ள வேண்டுமென்றால், பாஜக –
மத்திய NDA கூட்டணியிலிருந்து ஜுனியர் பஸ்வான் கட்சியை
விலக்க வேண்டுமென்று நிபந்தனை விதிப்பதாகவும்
தகவல் வெளியாகி இருக்கிறது.

பீஹார் நிலை தெளிவாகத் தெரிய இன்னும் சில நாட்கள்
பிடிக்குமென்று தெரிகிறது.

.
—————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நிதிஷ்குமாரை பாஜக தான் திட்டம் போட்டு தோற்கடித்தது -பொன்ராஜ்…

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  மறுமொழி பகுதி திறந்து விட்டது.
  நீங்கள் உங்கள் பின்னூட்டத்தை இங்கேயே எழுதலாம்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  இதில் பொன்ராஜ் அவர்களின் விமர்சனம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இதே காரணங்களை, ஒவைசி தனியாக நின்றதால் காங்கிரஸ் சீட்களை இழந்தது அதனால் காங்கிரஸோ அல்லது பாஜகவின் பி.டீம்தான் இந்த ஒவைசி கட்சி என்றும் வாய்க்கு வந்தபடி எழுதலாமே.

  1. பாஸ்வான் சாம்ராஜ்யம் முடிந்தது. அடுத்தது அவரது மகன் அந்த லெவலுக்கு உயரணும் என்றால், முதலில் தேர்தலில் தன்னுடைய செல்வாக்கைக் காட்டணும். அடுத்து திரும்பவும் நிதீஷுடன் கூட்டணி வைக்காமல், அவரை மீறி தனியான தலைவராக வருவதற்கு முயற்சிக்கணும். அதே சமயம் மத்தில் உள்ள கூட்டணியான பாஜகவைச் சீண்டாமல், நட்புறவோடு இருந்து இந்தக் காரியத்தைச் சாதிக்கணும் என்று நினைத்ததில் என்ன தவறு? (ஒருவேளை காங்கிரஸுக்கு நல்ல வாய்ப்பு, அதுதான் தற்போதைய மத்திய அரசு என்றிருந்தால், இதே மாதிரி, காங்கிரஸை பகைக்காமல் ஒரு தீர்வை எடுத்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது) மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக்கொண்டதால்தான் பாமக, க்ரெடிபிலிட்டியை இழந்து, 20 எம்.எல்.ஏ சீட்டுகள் கட்சி என்று ஆகிவிட்டது. இனி கனவிலும் அவங்களால கட்சியை வளர்க்க முடியாது, கூட்டணி மட்டும்தான் போடமுடியும் என்று ஆகிவிட்டதையும் கவனிக்கணும்.

  2. வலுவில் ஒருவர் இந்த முடிவை எடுக்கும்போது பாஜக எதற்கு இதில் மூக்கை நுழைக்கணும்? அவர்களின் எண்ணம் தங்கள் கட்சியை நிதீஷுக்கும் பிரகான காலகட்டத்தில் பிரதானமாகக் கொண்டுவரணும் என்று இருப்பதில் என்ன தவறு?

  3. நிதீஷின் கடந்தகால அரசியல் நிலைப்பாட்டைப் பார்த்தால், தேவை என்றால், ஆர்.ஜெ.டியுடன் கூட்டுச் சேர்ந்து அவரால் அரசு அமைக்க முடியும். அப்போது அவர் ஆர்.ஜெ.டியின் ஆணைகளுக்குக் கீழ் செயலாற்றணும் இல்லைனா இப்போது உள்ளதுபோல known devil பாஜக கீழ் செயலாற்றணும்.

  4. ஓவைசி கட்சி, கூட்டணி கொடுக்கும் 10 சீட்டுகளில் போட்டியிட்டு 3 சீட்டுகள் வெற்றி பெறுவது என்று எத்தனை காலம்தான் இருப்பது? தன் கட்சியை வளர்ப்பதற்காக ஓவைசி, இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாக உள்ள பகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார். அதனால் இஸ்லாமியர்கள், இவர் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெறுவார் என்று நம்பியதால் அவருக்கு வாக்களித்திருக்கின்றனர், காங்கிரஸ், ஆர்ஜெடியை புறக்கணித்திருக்கின்றனர். (Something similar to what had happened in WB. மம்தாவைத் தோற்கடிக்கணும் என்று நினைத்த கம்யூனிஸ்ட் கட்சியினர் முதற்கொண்டு பாஜகவுக்கு வாக்களித்ததால் பாஜக நல்ல வாக்கு சதவிகிதம் வாங்க முடிந்தது)

  அரசியலில் பழைய பகைமை எப்போதுமே இருக்கும். காலம் வரும்போது நேரடியாக இல்லாவிடினும், கண்டுகொள்ளாமல் இருந்து பழிவாங்குவர். மோடி அரசு அதற்கு விதிவிலக்கில்லை. (பாமகவை ஒரு சில காரணங்களால் திமுக தற்போது அவமானப்படுத்தி கதவைச் சாத்தியது போல, இதற்கு முன்பு மதிமுகவுக்கு திமுக, கம்யூனிஸ்டுகளுக்கு அதிமுக கடைசி நேரத்தில் கதவை அடைத்தது போல. இது அரசியல் காரணங்களாகவும் இருக்கும், பழைய பகைமையை மனதில் வைத்தும் இருக்கும்)

 3. GOPI சொல்கிறார்:

  பாஜக செய்யும் எல்லாமே கரெக்ட் -நியாயம்.
  மோடிஜி தப்பு செய்வாரா என்ன?
  இப்போது கூட்டணியில், நண்பராக இருந்தாலும்,
  சமயம் கிடைக்கும்போது பழைய விஷயத்திற்காக
  பழி வாங்குவதில் என்ன தப்பு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.