….
….
….
ஒரு சூப்பர் காமெடி காட்சி கீழே –
மேடையில் தலைவர் ம.பி.முதலமைச்சர்
திருவாளர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள்…
விழுவது, எழுவது யாரென்று தெரியவில்லை;
‘மைக் டயாசு’க்கு பின்னால் விழுந்ததை
எல்லாரும் பார்க்க முடியவில்லையாம்…
சரியாக வீடியோவில் பதிவாகவில்லையாம்…!!!
கிடைக்கும் மரியாதை எல்லாருக்கும்
தெரியவேண்டாமா …. ?
எனவே, பப்ளிக் முன்னால் மீண்டும்
ஒரு தடவை விழுந்து எழு – என்கிறார்கள்.
நம்மிடையே மட்டும் இல்லையா என்று கேட்கலாம்…
நிச்சயம் இங்கேயும் உண்டு தான்..
உலகிற்கே கற்றுக்கொடுக்கும் இனம் ஆயிற்றே தமிழ் இனம்…!!!
ஆனால்,
“எல்லாரும் பார்க்கல்லையாம் –
மேடைல வந்து இன்னொரு தடவை விழு” –
– என்று சொல்கிற அளவிற்குப் போகவில்லை தானே …???
…..
…..
.
——————————————————————————————————————————
எனக்கு இதைப் பார்க்கும்போது ஜெ. செய்தது நினைவுக்கு வருது. கேகேஎஸ் எஸ் ஆர், ஜெ. வீட்டிற்குச் சென்று அவர் காலில் விழுந்ததை, ஜெ. புகைப்படம் எடுக்க வைத்து, அன்று மாலையே (அதாவது ஓரிரு மணி நேரங்களுக்குள்) மாலைப் பத்திரிகையில் வெளிவரச் செய்தார். தன்னை எதிர்த்து அரசியல் செய்தவர், தன் காலில் விழுந்தார் என்பதைப் பதிவு செய்தார். அதன் பிறகு கேகே எஸ் எஸ் ஆர் அரசியலில் ஜெ வுக்கு எதிராக எதைச் செய்தாலும் அவரது கிரெடிபிலிட்டி போய்விடும் என்ற காரணத்துக்காக.
இங்கே சவுகானும் அதைனையே செய்திருப்பாரோ என்னவோ.
ஒருவரை காலில் விழச் சொல்வது போன்ற இழி செயல் (அதிலும் அவர் நல்ல துறவியாக இல்லாதபோது) கிடையவே கிடையாது.