திமுக-பாமக மோதல் …ஒரு கூட்டணி வதந்தி முடிவிற்கு வந்தது –

….
….

….

வருகிற சட்டமன்ற தேர்தலில் டாக்டர் ராமதாஸ்,
அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக-வுடன்
கூட்டணியில் சேருவார் என்று ஒரு பலமான வதந்தி
தமிழக அரசியலில் அண்மைக்காலங்களில் உருவாகி
வளர்ந்து வந்தது.

இது, திருமாவளவனையே கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
பாமக உள்ளே நுழைந்தால், திமுக கூட்டணியிலிருந்து
விசிக வெளியேறி விடும் என்று கூட திருமாவை சொல்ல
வைத்தது.

கடந்த 2-3 நாட்களில் நடந்துள்ளவை இந்த வதந்திகளை
முடிவிற்கு கொண்டு வந்து விட்டன. இப்போது திமுக,
வெளிப்படையாகவே டாக்டர் ராமதாசையும், பாமக-வையும்
விமரிசித்து, தங்களுக்கு இத்தகைய கூட்டணி யோசனையில்
விருப்பமில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்திருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ
நாளிதழில், பா.ம.க.,வை கடுமையாக விமர்சித்து,
கேலி சித்திரமும், கட்டுரையும் வெளியிடப்பட்டு வருகிறது.

‘வன்னியர்கள் ஒன்றுபட்டால், தமிழகத்தில் ஆட்சியை
பிடிக்கலாம்’ என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி,
தொண்டர் ஒருவரின் முதுகில் அமர்ந்து கூறுகிறார். அதற்கு,
அந்த தொண்டர்,

‘இத்தனை வருஷமாக, அதைத் தானய்யா செய்துக்
கிட்டிருக்கோம். எங்களுக்கு முதுகு வலி தான் மிச்சம்’ என்கிறார்.
….

….

‘மறந்து போச்சா மருத்துவரே’ என்ற தலைப்பில்,
தொண்டர்களுக்கு ராமதாஸ் செய்து கொடுத்த, ஐந்து
சத்தியங்கள் காற்றில் பறக்க விட்டது பற்றி குறிப்பிட்டு,
அது தொடர்பாக கேள்விகளும் கேட்கப்பட்டு, பா.ம.க.,வை
கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதற்கு மேலும் திமுக+பாமக கூட்டணி பற்றிய
வதந்திக்கு வழி ஏது…?

திமுக புத்திசாலித்தனமாக இயங்கி, டாக்டர் ராமதாசின்
பேரம் பேசக்கூடிய வலுவை துவக்கத்திலேயே குறைத்து
விட்டதாக நினைத்து இதைச் செய்திருக்கலாம்… ஆனால்
அதுவே அவர்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடும்.

தமிழகத்திலேயே மூத்த, அனுபவமுள்ள அரசியல்வாதியாகிய
டாக்டர் ராமதாஸ், திமுக-வின் இந்த அவமதிப்பை அவ்வளவு
சுலபமாக ஏற்றுக்கொண்டு விட மாட்டார். எனவே, பலமான
எதிர்வினைகள் நிச்சயம் உருவாகும்.

பார்ப்போம்… டாக்டர் அய்யா என்ன முடிவெடுக்கிறாரென்று…!!!

ஆனால், இனி அவர் எடுக்கக்கூடிய எந்த முடிவும்,
திமுக-வை எப்படியாவது தோற்கடிக்க வைக்க வேண்டும்
என்பதையே மையமான குறிக்கோளாக கொண்டிருக்கும்…

எனவே, பாமக தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள்
அநேகமாக இல்லையென்றே சொல்லலாம்.

.
—————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to திமுக-பாமக மோதல் …ஒரு கூட்டணி வதந்தி முடிவிற்கு வந்தது –

  1. புதியவன் சொல்கிறார்:

    பாமக வுக்கு 6 சதவிகித வாக்குகள், விசிகவுக்கு 3 சதவிகித வாக்குகள், விசிக வை, தான் பொம்மை போல ஆடச் செய்யலாம், பாதி சீட்டுகள்-விட்டா முழு சீட்டுகளும் எங்க சின்னத்துலதான் நிற்கணும் என்று சொன்னால், அடிமைக்கு வேறு என்ன வழி? ஆனால் பாமகவுக்கு 25 சீட்டுகளாவது ஒதுக்கவேண்டியிருக்கும், ஒரு ராஜ்ஜியசபா உட்பட, அதில் 20, பாமக வலுவான ஏரியாவுல ஒதுக்கணும், பாமக எந்தப் பக்கம் தேர்தலுக்குப் பிறகு தாவுவார்னு சொல்ல முடியாது, ஆனா விசிகவுக்கு 10 ஒதுக்கி அதில் 10மேயோ அல்லது 5ஐயோ தங்கள் கட்சி சின்னத்துலயே நிற்கச் சொல்லி திருமாவுக்கு மூக்கணாங்கயிறு போட முடியும். காங்கிரஸுக்கு 35, விசிகவுக்கு 6-8, கம்யூனிஸ்டுகளுக்கு 10-12, Misc கட்சிகளுக்கு 5 என்று ஒதுக்கி 170 இடங்களிலாவது திமுக போட்டியிடணும் என்று இருக்கும்போது எதை ஸ்டாலின் விரும்புவார்? அவருக்கு ஏற்கனவே ‘ஆரியர்’ பி.கே., திமுக சுலபமா 150 சீட்டுகள் வெற்றி பெறலாம், அதை 180க்கு மேல் கொண்டு செல்லத்தான் நிறைய யோசனை சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

    கொஞ்சம் விட்டால் அன்புமணிக்கு துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர் என்று ஓசியில் துண்டை விரிக்கும் டாக்டர் இராமதாஸ் அவர்களின் போக்கும் அவருடைய சமூகத்துக்குப் புரியாமலா இருக்கும்? வன்னியருக்கு இட ஒதுக்கீடு என்ற பஜனை ஆரம்பித்தால், அதற்காக போராடினால், அதன் விளைவு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் இந்தத் தடவை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.