ஸ்டாலின் அவர்களே கமலா ஹாரிஸ் ஆரியரா ?திராவிடரா…? தமிழரா…?

….
….

….

அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள
கமலா ஹாரிஸ்-க்கு தமது கைப்பட தமிழில் வாழ்த்துக்
கடிதம் அனுப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கீழே –

அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளவை –

அன்புமிக்க திருமதி. கமலா ஹாரிஸ் அவர்கட்கு,
அமெரிக்க நாட்டின் மாட்சிமை தங்கிய துணை அதிபராகப்
பொறுப்பேற்க இருக்கும் திருமதி. கமலா ஹாரிஸ்
அவர்களுக்கு வணக்கம்; வாழ்த்துகள்!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு,
நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பது, தமிழக மக்கள்

அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற உன்னத நோக்கத்துக்காக
உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். மனிதர்களுக்குள்
பேதம் இல்லை என்பதைப் போலவே, ஆண்களுக்கு சரிநிகராகப்
பெண்கள் அனைத்து நிலைகளிலும் மிக உன்னதமான
இடத்தை அடைய வேண்டும் என்பதை இலட்சியமாகக்
கொண்டு, அதற்கான திட்டங்களைத் தீட்டிய இயக்கம்.

அத்தகைய இயக்கத்துக்கு, உங்களது வெற்றி, மாபெரும்
நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

– ஒரு தமிழ்ப்பெண், –

அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை,
உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக்
காட்டியிருக்கிறது. உங்களது ஆட்சிக் காலம், அமெரிக்காவுக்கு
மேலும் புகழ் சேர்த்து,

– தமிழர் தம் பாரம்பரியப் பெருமையை –

உலகுக்குப் பறை சாற்றுவதாக அமையட்டும்.
தங்களது வருகையைத் தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

—————————————————–

தினமும் எதாவது பரபரப்பாகச் செய்து மீடியாவில் பெயரை
வரவழைத்துவிட வேண்டும் என்கிற அளவில்
இன்றைய பணி முடிந்தது… அதுவரை சரி தான்..

ஆனால், இந்த கடிதம் குறித்து நமக்கு சில கேள்விகள்
இருக்கின்றனவே… அவற்றிற்கு உங்களிடமிருந்து
விளக்கம் வேண்டுமே…?

1) மேலே – கமலா ஹாரிஸ் ஒரு தமிழ்ப்பெண் என்று
சொல்லி இருக்கிறீர்கள்…

கமலா ஹாரிஸின் தாய் கோமளா, தமிழ்நாட்டில் உள்ள
துளசீந்திரபுரம் என்கிற ஊரைச் சேர்ந்த –
கோபாலன் என்கிற பிராம்மணரின் பெண்.

அந்த கோமளா என்கிற பிராம்மணப் பெண்மணி,
ஜமைக்காவைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவரை மணந்து
அவர்களுக்குப் பிறந்த பெண் தான் கமலா ஹாரிஸ்…

இப்போது சொல்லுங்கள் உங்கள் கொள்கைப்படி –

கமலா ஹாரிஸ் – தமிழரா…?
திராவிடரா…?
ஆரியரா…?
அல்லது அமெரிக்கரா…?

( மேடைதோறும், நீங்களும் மானமிகு வீரமணி அவர்களும்
பிராம்மணர்கள் திராவிடர்கள் அல்ல;
அவர்கள் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள்
என்று முழங்கி வந்ததை நினைவில் வைத்துக்கொண்டு
இதற்கான விளக்கத்தை கொடுங்கள்…)

2) தமிழர் தம் பாரம்பரிய பெருமையை …..

அப்படியானால்,
அவர் தமிழர் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா…?
பிராம்மணர்களும் தமிழர்கள் தான் என்பதை
(திருவாளர் வீரமணியார் அறிய)
உங்களால் வெளிப்படையாக பறைசாற்ற முடியுமா…?

ஆரியர்-திராவிடர் என்று இதுவரை
திராவிட இயக்கங்கள் பிரித்துப் பேசி வந்தது –

1) அறியாமை அல்லது –
2) தெரிந்தே சொன்ன பொய் அல்லது –
3) முழுக்க முழுக்க அரசியல் ஏமாற்று வேலை –

-என்பதை இப்போதாவது ஊரறிய ஏற்றுக்கொள்வீர்களா …?

.
—————————————————————————————————————–

பின் சேர்க்கை –

இந்த இடுகையுடன், பிராம்மணர்கள்
பற்றி, ஜெயகாந்தன் அவர்கள்,
பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் முன்னிலையிலேயே
திருச்சி மாநாட்டில் பேசிய பேச்சிலிருந்து
சில பகுதிகளை சேர்த்துப் படித்தல்
தெளிவைத் தரும் என்று நினைக்கிறேன்.

என் கருத்துகள் ஜெயகாந்தனின்
கருத்துகளின் அடிப்படையிலானவை…
——————————————————-
ஜெயகாந்தன் உரையிலிருந்து சில பகுதிகள் –
…..

ஆன்மீகத்தால் இந்தியக் கலாசாரமும்
இந்திய சமுதாயமும் நாகரிகச் செழிப்புற்று
விளங்கியது. அந்நியர் வருகையாலும்,
அடிமை வாழ்க்கையாலுமே நமது அவலங்கள்
உருவாயின.

இந்தியாவின் பெருமையையும்,
தமிழனின் சிறப்பையும் பேசுகிறபொழுது
நமக்குள்ளே பகைமை வளர்த்துக் கொள்கிற
வகுப்புவாதியைப் போலவும்
பிரிவினைவாதியைப் போலவும்
நான் பேசவில்லை. பெரியார் அவர்கள்
பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்கிறார்.
இதை ஏற்றுக் கொள்ள எனக்கு
எந்த வித முகாந்திரமுமில்லை.

வடக்கே வாழ்கிறவர்கள் எல்லாரும்
பிராமணர்கள் அல்ல;
பிராமணர்கள் நமது சமூகத்தின்
பிரிவினரேயல்லாமல்
அவர்களே ஒரு சமுதாயம் அல்ல.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட
பிராமணர்கள் ஆந்திரர்களாக
அங்கீகரிக்கப்படுகிற பொழுது,
வங்காளப் பிராமணர்கள் வங்காளிகளாக
அங்கீகரிக்கப்படுகிற பொழுது,
தமிழைத் தாய்மொழியாகக்
கொண்ட பிராமணர்கள் மட்டும்
தமிழர்கள் ஆகாதிருப்பது எங்ஙனம்?

அவர்கள் ஸ்ம்ஸ்கிருத மொழியோடு
அதிகம் தொடர்பும் பற்றும்
கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழர்
நலனுக்கு விரோதமான பண்பு என்று
நான் குற்றம் சொல்லத் தயாராயில்லை.
ஏனெனில், ஸ்ம்ஸ்கிருதம் என்பது
இந்தியாவின் பொதுச் செல்வமே தவிர,
அது எந்தப் பிரிவினருக்கும் சொந்தமான
ஏகபோக மொழியல்ல.
ஸம்ஸ்கிருத மொழிக்கென்று ஓர்
இனமோ, ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்போ
இந்தியாவில் தனியாக ஒன்றுமில்லை.
அது ஓர் ஆதிக்க மொழி அன்று.
….
எல்லாக் காலங்களிலும் தோன்றிய
ஹிந்துமத மகான்கள்
அனைவரும் தீண்டாமையை
எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
….
லிங்க் – ஈவேரா பெரியாரை அவர்
எதிரிலேயே -எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….
https://vimarisanam.com/2020/10/17/%e0%ae%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஸ்டாலின் அவர்களே கமலா ஹாரிஸ் ஆரியரா ?திராவிடரா…? தமிழரா…?

 1. M.Subramanian சொல்கிறார்:

  ஸ்டாலின் அவர்களுக்கு
  என் சார்பில் 2 கேள்விகள்;

  1) ஜெயலலிதா முதலமைச்சராக
  இருந்தபோது பிராம்மணர்
  என்பதற்காக அவரை நீங்கள்
  என்னவெல்லாம் சொல்லி ஏசினீர்கள்
  என்பது நினைவில் இருக்கிறதா…?

  2) தமிழகத்தில் ஒரு பிராம்மணர் அரசியலுக்கு
  வந்தால் ஜாதியைச் சொல்லி அவரை ஏசுவீர்கள்….
  ஆனால், அமெரிக்காவில் பதவிக்கு வந்தால்
  வரவேற்பு கூறி வாழ்த்துவீர்கள்…
  ஏனென்றால் அவர் உங்களுக்கு போட்டியாக
  இல்லை….சரி தானே…?

 2. புதியவன் சொல்கிறார்:

  அவருக்கு அமெரிக்காவில் என்ன பிஸினெஸோ இல்லை என்ன என்ன காரியங்கள் ஆகவேண்டியிருக்கிறதோ… பாவம்..இன்னொருத்தர் சொல்படி ஆடும் பொம்மையை ரொம்பவே நீங்கள் கேள்வி கேட்டு வருத்தப்பட வைக்கலாமா? (இல்லை ஒருவேளை ஆரியர் பி.கே. சொன்னபடி ஆடும் பொம்மையோ? ஹாஹா)

  இவங்க திராவிடர் என்று சொல்வதே…தங்களின் ஆரிஜினான தெலுங்கை யாரும் குறை சொல்லிடக்கூடாதே என்றுதான். தமிழ்நாட்டுத் தமிழர் என்றால் அதில் ஸ்டாலின் வகையறாக்களுக்கு எங்கு இடம் உண்டு? பெரியார் ஈ.வெ.ராவும்தான். அதனால்தானே திராவிடர்கள் என்று சேர்த்துக்கொண்டனர்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த இடுகையுடன், பிராம்மணர்கள்
  பற்றி, ஜெயகாந்தன் அவர்கள்,
  பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் முன்னிலையிலேயே
  திருச்சி மாநாட்டில் பேசிய பேச்சிலிருந்து
  சில பகுதிகளை சேர்த்துப் படித்தல்
  தெளிவைத் தரும் என்று நினைக்கிறேன்.

  என் கருத்துகள் ஜெயகாந்தனின்
  கருத்துகளின் அடிப்படையிலானவை…
  ——————————————————-
  ஜெயகாந்தன் உரையிலிருந்து சில பகுதிகள் –
  …..

  ஆன்மீகத்தால் இந்தியக் கலாசாரமும்
  இந்திய சமுதாயமும் நாகரிகச் செழிப்புற்று
  விளங்கியது. அந்நியர் வருகையாலும்,
  அடிமை வாழ்க்கையாலுமே நமது அவலங்கள்
  உருவாயின.

  இந்தியாவின் பெருமையையும்,
  தமிழனின் சிறப்பையும் பேசுகிறபொழுது
  நமக்குள்ளே பகைமை வளர்த்துக் கொள்கிற
  வகுப்புவாதியைப் போலவும்
  பிரிவினைவாதியைப் போலவும்
  நான் பேசவில்லை. பெரியார் அவர்கள்
  பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்கிறார்.
  இதை ஏற்றுக் கொள்ள எனக்கு
  எந்த வித முகாந்திரமுமில்லை.

  வடக்கே வாழ்கிறவர்கள் எல்லாரும்
  பிராமணர்கள் அல்ல;
  பிராமணர்கள் நமது சமூகத்தின்
  பிரிவினரேயல்லாமல்
  அவர்களே ஒரு சமுதாயம் அல்ல.

  தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட
  பிராமணர்கள் ஆந்திரர்களாக
  அங்கீகரிக்கப்படுகிற பொழுது,
  வங்காளப் பிராமணர்கள் வங்காளிகளாக
  அங்கீகரிக்கப்படுகிற பொழுது,
  தமிழைத் தாய்மொழியாகக்
  கொண்ட பிராமணர்கள் மட்டும்
  தமிழர்கள் ஆகாதிருப்பது எங்ஙனம்?

  அவர்கள் ஸ்ம்ஸ்கிருத மொழியோடு
  அதிகம் தொடர்பும் பற்றும்
  கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழர்
  நலனுக்கு விரோதமான பண்பு என்று
  நான் குற்றம் சொல்லத் தயாராயில்லை.
  ஏனெனில், ஸ்ம்ஸ்கிருதம் என்பது
  இந்தியாவின் பொதுச் செல்வமே தவிர,
  அது எந்தப் பிரிவினருக்கும் சொந்தமான
  ஏகபோக மொழியல்ல.
  ஸம்ஸ்கிருத மொழிக்கென்று ஓர்
  இனமோ, ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்போ
  இந்தியாவில் தனியாக ஒன்றுமில்லை.
  அது ஓர் ஆதிக்க மொழி அன்று.
  ….
  எல்லாக் காலங்களிலும் தோன்றிய
  ஹிந்துமத மகான்கள்
  அனைவரும் தீண்டாமையை
  எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
  ….
  லிங்க் – ஈவேரா பெரியாரை அவர்
  எதிரிலேயே -எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….
  https://vimarisanam.com/2020/10/17/%e0%ae%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. tamilmani சொல்கிறார்:

  பிராம்மணர்கள் தமிழ்நாட்டை விட்டு அமெரிக்கா செல்வதன் காரணம்
  என்ன ?இட ஒதுக்கீடு என்ற பெயரில் அவர்களுக்கு வருகின்ற வாய்ப்புகளை
  மற்றவர்கள் எடுத்துக்கொள்வதால் அவர்கள் வேறு வழியின்றி நல்ல
  வருமானத்திற்க்காக அங்கு செல்கிறார்கள். வயதான பெற்றோர் தனியே இந்தியாவில்
  தவிக்கிறார்கள் . அமெரிக்கா ,கனடா கடுங்குளிரை சகித்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் 1967க்கு பிறகு வந்த திமுக அதிமுக ஆட்சிகளின்இட ஒதுக்கீடு கொள்கை .
  இன்ஜினியரிங் முடித்த பிராமண இளைஞர்களுக்கு குமாஸ்தா வேலை கூட இப்போது
  தமிழ்நாட்டில் கிடைக்காது. இப்போது கமலா ஹாரிஸ் தமிழர் என்பதால் வாழ்த்து
  சொல்கிறாராரம். இதே கமலா இங்கு தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அவருக்கான வாய்ப்புகள்
  மறுக்கப்பட்டு ப்ராஹ்மண குடும்ப தலைவி ஆகி இருப்பார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.