அதானே … அர்னாப் கைதுக்கு எதிராக ஏன் யாரும் பொங்கவில்லை…?

….
….

….

இது தமிழ் இந்து-வில் வெளிவந்துள்ள செய்தி ….
https://www.hindutamil.in/news/india/598193-union-minister-smriti-irani-slams-%20arrest-of-arnab-goswami-1.html

————————-

அர்னாப் கோஸ்வாமியை நீங்கள் வெறுக்கலாம்,
ஆனால் கைது பற்றி மவுனம் காத்தால் பாசிசத்துக்குத்
துணை போவீர்கள்: ஸ்மிருதி இரானி ஆவேசம்
—————–

ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை
போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றே கைது செய்தனர்.

இதனையடுத்து கடும் சர்ச்சைகள் மூண்டுள்ளது,
அவர் தன்னை வீட்டில் போலீசார் தாக்கியதாகவும் தன்
குடும்பத்தினரைத் தாக்கியதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆளும் பாஜக தரப்பில் அர்னாப் கோஸ்வாமி
கைதுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கட்டிட
உள்வடிவமைப்பாளர் ஒருவர் 2018ம் ஆண்டு தற்கொலை
செய்து கொண்டதற்கு இவர்தான் காரணம் என்று தற்கொலை
செய்து கொண்டவரின் மகள் அளித்த புகார்களை அடுத்து
அர்னாப் கைது செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன் கண்டனங்களை
தெரிவிக்கும் போது, “பத்திரிகைச் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள்
இன்று அர்னாப் கைதுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும்.
அப்படி நிற்கவில்லை எனில் நீங்கள் தந்திரோபாயமாக
பாசிசத்தை ஆதரிப்பவர்களே.

உங்களுக்கு அர்னாபை பிடிக்காமல் இருக்கலாம்,

அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்,

அவரது இருப்பையே நீங்கள் அருவருப்பாக உணரலாம்

– ஆனால் அமைதி காத்தீர்கள் என்றால் அடக்கு முறைக்குத்
துணை போகிறீர்கள் என்றே அர்த்தம்.

உங்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,
அடுத்து நீங்களாக இருந்தால் உங்களுக்காக
யார் பேசுவார்கள்?” என்று ஸ்மிருதி இரானி ஆவேசமாகப்
பேசியுள்ளார்.

———————————————

ஒரே ஒரு சந்தேகம் எழுகிறது…
அதைத் தீர்த்து வைத்து விட்டால் – அர்னாப் கைதுக்கு
எதிராக நாம் எல்லாருமே சேர்ந்து பொங்கலாம்….

“உங்களுக்கு அர்னாபை பிடிக்காமல் இருக்கலாம்,”

“அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்,”

“அவரது இருப்பையே நீங்கள் அருவருப்பாக உணரலாம்”
-என்று மேடம் சொல்கிறார் …!!!

-ஆமாம்…இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது…?
அப்படி எல்லாருக்கும் வெறுப்பும், அருவருப்பும் ஏற்படுகிற
மாதிரி அர்னாப் என்ன செய்தார்…செய்கிறார்….?
அதையும் அவரே சொல்லி விட்டால், எல்லாருமே சேர்ந்து
பொங்கி விடலாமே…!

….

….

….

( என்ன…
ஒரு தற்கொலையை,
சதி செய்து செய்யப்பட்ட கொலை
என்று மாற்றிக் காட்ட,

ஒரு பாவமும் செய்யாத சிலரை அவமானப்படுத்த,

ப்ளாக் மெயில் செய்ய,

தனது டிவியை பயன்படுத்திக் கொண்டார்…
அவ்வளவு தானே…? வேறென்ன செய்தார்….? )

…………….

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அதானே … அர்னாப் கைதுக்கு எதிராக ஏன் யாரும் பொங்கவில்லை…?

 1. புதியவன் சொல்கிறார்:

  அர்னாப், ரொம்ப பெர்சனலா அரசியல் கட்சிகளைத் தாக்குகிறார், அதிலும் காங்கிரஸை. முழுமையான பாஜக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அதனால்தான் அவருக்கு இந்த நிலைமை. அர்னாபின் மீதான குற்றச்சாட்டுக்கு இந்தக் கைது என்றால், நாட்டில் எந்தப் பத்திரிகையாளரும், தொலைக்காட்சியாளரும் இந்தத் தண்டனையிலிருந்து தப்ப முடியாது, அதிலும் கேடி பிரதர்ஸ், இன்னும் பல தொலைக்காட்சி சேனல்கள்.

  காஷ்மீரில் நடப்பதெற்கெல்லாம் ‘ஜனநாயகம்’ என்ற பெயரால் கூவும் அரசியல் கட்சிகள், இதற்குப் பொங்கவில்லை என்பதே, அவர்களுக்கு ‘ஜனநாயகம்’ என்பதைவிட ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் செய்வது என்பது மட்டுமே முக்கியம் என்பதை இது தெளிவாக்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

 2. GOPI சொல்கிறார்:

  ஒரு பக்கம் அர்நாபுக்கு நடக்கும் அநீதியை
  பொறுக்க முடியாமல் நாடே திரண்டு
  நடுத்தெருவுக்கு போராட வந்து விட்டது
  என்று விடாமல் ரிபப்ளிக் டிவியில்
  அலறிக்கொண்டிருக்கிறார்கள்.
  இங்கே அம்மையாரோ ஏன் இன்னும்
  யாரும் பொங்கவில்லையென்று கேட்கிறார்.
  அப்படியானால் ரிபப்ளிக் டிவியில் சொல்வது பொய்
  தானே; இவரே உறுதி செய்கிறாரே.

 3. GOPI சொல்கிறார்:

  யாரும் தொடுவதற்கு முன்னாலேயே
  assaulting, my life is in threat ஆ ஓஓ என்றெல்லாம்
  ஓடும் வண்டியிலிருந்து, கம்பிகளின் இடுக்கிலிருந்து
  அர்னாப் கத்துவது சிரிப்பைத் தான் உண்டாக்குகிறது.

  நிஜமாகவே ரூமுக்குள் வைத்து ஊமை அடியாக
  மெடிகல் எக்சாமில் தெரியாதபடிக்கு
  கொஞ்சம் சாத்தினால் நல்லதென்றே
  தோன்றுகிறது/. சின்னப் பெண்ணை விடாது
  துரத்தி பொய்க்குற்றங்களையெல்லாம் சாட்டி
  சிறையிலில் தள்ளியதற்கு இவர்களுக்கெல்லாம்
  நீதிமன்றம் தண்டனை தரும் என்று நினைப்பது
  வேஸ்ட். கையில் கிடைக்கிறபோது கொடுத்துவிட
  வேண்டியது தான்.

  • புதியவன் சொல்கிறார்:

   //யாரும் தொடுவதற்கு முன்னாலேயே assaulting, my life is in threat ஆ ஓஓ என்றெல்லாம்// – டக் என்று படிக்க ஆரம்பித்ததும், கருணாநிதி போயே வருடங்கள் ஆச்சு…இன்னும் ‘கொல்றாங்களே..ஐயோ கொல்றாங்களே’ நாடகத்தைப் பற்றி ஏன் கோபி எழுதியிருக்கிறார் என்று யோசித்தேன்.

   நிற்க..இந்த தொலைக்காட்சி, அதிலும் உண்மையை அறிகிறோம், புலன் விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளைக் குற்றம் சாட்டி, இவங்களே தண்டனை கொடுத்துவிடுவது ரொம்பவே அதிகமாக இருக்கிறது. பேசாமல் தூர்தர்ஷன் தவிர மற்ற கட்சி சார்ந்த தொலைக்காட்சிகள், தந்தி உட்பட, அனைத்தையும் தடை செய்துவிடவேண்டியதுதான்.

 4. sekarsgz சொல்கிறார்:

  நடுநிலையாளர் என்கிற போர்வையில் ஒளிந்து BJP & Trump எதிராக பதிவிடும் காவிரிமைந்தன் அவர்களே , அர்னாப் BJP கட்சி ஆதரவாளராக இருக்கட்டும் அவரை கேள்வி கேட்கும் முன் Hindhu ராம் யாருடைய ஆதரவாளர் ஏன் நீங்கள் பேசுவதில்லை , திரு மோடி or BJP எதிராக பதிவிடும் உங்களால் திருமவளவனையோ எத்தனையோ நபர்கள் மோசமாக பேசுகிறார்கள் விமர்சனம் செய்கிறார்கள் அதை பற்றி பேசுவதில்லை ஏனோ

 5. sekarsgz சொல்கிறார்:

  இலங்கை தமிழர் பிரச்ச முதல் தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்க கூடாது என்று ராஜபக்ஷே ஆதரவாளரான hindhu ராம் பற்றி ஒரு கட்டுரை எழுதலாமே , AIADMK 800 கோடி ஊழல் பற்றி விவாதம் நடக்கிறது தமிழ்நாட்டில் அதை பற்றி பேசமாட்டீர்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   sekarsgz,

   திருமாவளவன் பற்றியும் ஹிண்டு ராம்
   பற்றியும் இங்கே நான் நிறைய எழுதி
   இருக்கிறேன்.

   கொஞ்சம் பின்னால் போய் பழைய
   இடுகைகளை பார்த்தீர்களென்றால் தெரியும்.

   ஏன் -முந்தாநாள் கூட திருமா பற்றி
   எழுதியிருக்கிறேனே…

   ( ஸ்டாலின், திருமா – சொரணையற்று இருப்பதேன்…?
   அழகிரி கூறுவதை ஏற்கிறார்களா…?
   Posted on நவம்பர் 7, 2020 by vimarisanam – kavirimainthan )

   கொஞ்சம் homework பண்ணி விட்டு
   வாருங்கள் நண்பரே.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.