அசிங்கத்திலிருந்து தப்பிய அமெரிக்கா….!!!

….
….


….

பல நிம்மதியற்ற நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மக்களுக்கும்,
கூடவே உலக மக்களுக்கும் –
ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

அசிங்கத்திலிருந்து அமெரிக்கா தப்பி விட்டது.

அமெரிக்காவோடு நிற்காமல் இங்கேயும் வந்து ஆட்டம் போட்ட
ஒரு வெறிபிடித்த குரங்கிடமிருந்து அமெரிக்கா தப்பியது மகிழ்ச்சியளிக்கிறது… மீண்டும் அந்தக் குரங்கை
இங்கே அஹமதாபாதிலோ, டெல்லியிலோ பார்க்க மாட்டோம்
என்கிற நினைப்பே நிம்மதி தருகிறது…

ஜென்டில்மேன் ஜனாதிபதி ஜோ பிடன் …

….


….

பெயரிலும், ரத்தத்திலும் தமிழ் கலந்திருக்கும் –
தமிழரின் தன்னம்பிக்கையை அமெரிக்காவிலும் பறைசாற்றும்
துணை ஜனாதிபதி கமலா (ஹாரிஸ்) ….

….


….

தனது “அம்மா” கோமளா மற்றும்
சித்தீ’யுடன் கமலா…

….

“தாத்தா” கோபாலன்
மற்றும் ” பாட்டி” ராஜம் ஆகியோருடன்
சென்னையில் கமலா….

….

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் புதிய கண்ணோட்டத்தோடு
செயல்பட அமெரிக்கர்களோடு நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.

.
—————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to அசிங்கத்திலிருந்து தப்பிய அமெரிக்கா….!!!

 1. R KARTHIK சொல்கிறார்:

  Its not always black and white in a world full of shades of grey.

 2. Vivek சொல்கிறார்:

  // மீண்டும் அந்தக் குரங்கை
  இங்கே அஹமதாபாதிலோ,
  டெல்லியிலோ பார்க்க மாட்டோம்
  என்கிற நினைப்பே நிம்மதி தருகிறது…//

  Super Punch Sir.

 3. PK சொல்கிறார்:

  Welcome change!

 4. புதியவன் சொல்கிறார்:

  துக்ளக் ஆட்சி மாதிரி, நினைத்த போதெல்லாம் ஏதேனும் மாற்றம், சட்டம், பேச்சு என்று நடத்திக்கொண்டிருந்த டிரம்ப், கொஞ்சம் ஆச்சர்யம் அளித்த அமெரிக்க அதிபர். கொரோனா பிரச்சனைக்கு எதுவும் செய்யாதது, அதைப்பற்றி முன்னெச்சிரிக்கை கிடைத்தும் செயல்படாதது, அவரது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது.

  ஜோ பிடன், கமலா இவர்கள் மீது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. இருந்தாலும் இந்தியாவிற்கு, இந்தியாவின் நலனுக்கு எதிராக எதையும் செய்யாமல் இருந்தால் போதும். புதியவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி :

  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேரடியாக இல்லை .
  மக்கள் அனைவரும் ஒட்டு போடுவார்கள் .
  மாகாணப்படி ஓட்டுகள் எண்ணப்படும் .
  அந்த மாகாணத்தில் முதலில் வருபவர் வெற்றி
  பெற்றதாக அறிவிக்கப்படுவார் .

  இப்போது நெவாடா மாகாணத்திற்கு ஆறு
  வாக்குகள் உண்டு . இது போல் ஒவ்வொரு
  மாகாணத்திற்கும் ;
  உ-ம் டெக்சாஸ் 38 ;ப்ளோரிடா 29;
  மாகாணவாரியாக வரும் ஓட்டுகள் மொத்தம் 538
  270 ஓட்டுகள் பெற்றவர் வெற்றி பெறுவார் .

  தேர்தல் அதிகாரி அறிவித்த பிறகுதான் வெற்றி !
  அதுவரை வேட்பாளர் முன்னிலை – அவ்வளவே !

  நம் ஊரில் கலெக்டர் அறிவித்தால்தான் M L A
  என்பது போலத்தான் .இதுவரை அதுபோல்
  அறிவிப்பு வெளியாகவில்லை .

  அங்கு தபால் ஒட்டு உண்டு . வெளிநாட்டில் வேலை
  பார்ப்பவர்கள் , ராணுவம் ஆகியோர் ஒட்டு
  போடுவதற்காக இந்த ஏற்பாடு .

  இந்த ஓட்டுகள் எண்ணி முடித்தால்தான் அறிவிப்பு
  வெளியிட முடியும் .இது போல் அறிவிப்பு
  வெளியாகும் முன்பே தோற்றவர் தோல்வியை
  ஒப்புக்கொண்டு வென்றவர்க்கு வாழ்த்து
  சொல்வது வழக்கம் .

  டிரம்ப் இது வரை ஒப்புக்கொள்ளவில்லை .
  எல்லாம் பித்தலாட்டம் என்று சொல்கிறார் .

  பத்திரிக்கைகள் , குறிப்பாக AP சொல்லி விட்டது .
  மற்ற செய்தி நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன .

  டிசம்பர் 14 வரை இந்த அறிவிப்பு வெளியாக
  அவகாசம் உண்டு .

  டிரம்ப் அதுவரை இழுத்தடிக்க உரிமை உண்டு .

  அப்புறம் ஜனவரி 20 , 2021 வரை டிரம்ப்தான் அதிபர் !
  And Joe Biden is merely President – elect even if he wins !

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மெய்ப்பொருள்,

   எனக்கென்னவோ அமெரிக்க தேர்தல் முறை
   சரியானதாகத் தெரியவில்லை;
   ஏகப்பட்ட குறைபாடுகள்.

   எதற்காக அவ்வளவு நாட்கள் முன்னதாகவே
   ஓட்டுப்பதிவை துவக்க வேண்டும்.
   ஓட்டுப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போதே
   பிரச்சாரங்களும் தொடர்கின்றன.
   மக்களுக்கும், அதிபருக்கும் இடையே
   எதற்காக அந்த எலெக்டொரல் காலேஜ்.
   மக்களே நேரடியாக ஓட்டுப்போட்டு
   ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் என்ன சிக்கல்…?

   தேர்தல் முடிந்து முடிவுகள் தெரிவதில்
   ஏன் இவ்வளவு தாமதம்.
   ஓட்டுகள் எண்ணப்படுவதில்
   ஏன் இவ்வளவு கால தாமதம்…?
   தேர்தல் முடிந்து புதிய ஜனாதிபதி
   பதவி ஏற்பதற்கு ஏன் 2 மாத இடைவெளி…?
   தோற்றவர் பதவியில் இருக்கும்
   அந்த 2 மாதங்களுக்கு அவரை
   யார் மதிப்பர்…?

   ஜெயித்தவர் பதவியேற்க ஏன் 2 மாதம்
   காத்திருக்க வேண்டும்..?

   அமெரிக்கர்கள் தங்கள் தேர்தல் முறையை
   சீரமைக்க வேண்டும் என்கிற
   அக்கறையே இல்லாமல் இருப்பது
   ஆச்சரியம் அளிக்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  அமெரிக்கா மிக பெரிய நாடு .இவ்வாறு தேர்ந்து
  எடுக்கும் முறை இருநூறு ஆண்டுகளுக்கு மேல்
  தொடர்ந்து வந்து இருக்கின்றது .

  அந்த காலத்தில் மக்கள் குதிரையிலோ ,
  குதிரை வண்டியிலோ (Stage Coach )
  பயணம் செய்தார்கள் .

  தேர்தல் மாகாண வாரியாக நடத்தி , அதன்
  பிறகு அனைவரும் வந்து சேர இரண்டு
  மாதங்கள் நேரம் பிடிக்கும் .

  கடந்த நூறு ஆண்டுகளாக ரயிலில் பயணம் !
  இப்போது விமான மூலம் சென்றாலும்
  ஒரு சில மணி நேரம் தேவைப்படும் .

  அதே போல் அதிபர் தேர்தல் நடத்த வேட்பாளர்கள்
  ஒரு ஆண்டு முன் ஆரம்பித்து விடுவார்கள் .

  1776 முதல் இருந்து வரும் பழக்கம் – மாற்ற முடியாது .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மெய்ப்பொருள்,

   // 1776 முதல் இருந்து வரும் பழக்கம் –
   மாற்ற முடியாது .//

   இதைத்தான் நானும் கேட்கிறேன்.
   250 வருட பழைய முறையை
   மாற்றி நவீனப்படுத்த,
   நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க
   ஏன் முயற்சிக்கவில்லை என்று தான்
   கேட்கிறேன்.

   மற்ற எல்லாவற்றிலும் மாற்றங்கள்
   வந்திருக்கும்போது, இதுவும் மாற வேண்டாமா ?

   உலகத்திலேயே பெரிய ஜனநாயகம் என்று
   சொல்லிக்கொண்டு, 2 மாதங்கள் யார்
   ஜெயித்தார்கள் என்று சண்டை போட்டுக்
   கொண்டிருப்பது அவர்களுக்கே
   அவமானமாக இல்லையா … ?

   இந்த கேலிக்கூத்துகளைப் பார்க்கவே
   எனக்கு அசிங்கமாக இருக்கிறது.

   250 வருட பழக்கம் இப்போதும்
   தொடரவேண்டும் என்பதில் எந்தவித
   justification -உம் இல்லை.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கா மை சார் சொல்வது :
  250 வருட பழைய முறையை மாற்றி நவீனப்படுத்த,
  நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க
  ஏன் முயற்சிக்கவில்லை ?

  மாற்றம் நடந்துள்ளது .
  1933 வரை தேர்தல் நவம்பரில் நடந்து , பதவி ஏற்பு
  அடுத்த ஆண்டு மார்ச் 4 தேதி நடைபெறும் .

  அப்புறம் 4 மாதங்கள் என்பதை குறைத்து ஜனவரி 20
  என மாற்றி உள்ளனர் .
  US 20th Amendment என கூகுளில் தேடினால் வருகிறது .

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மெய்ப்பொருள்,

  சரி….கடைசி மாற்றம் 1933-ல் நடந்திருக்கிறது.

  நான் கேட்பது ” பழைய முறையை மாற்றி நவீனப்படுத்த,
  நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க
  ஏன் முயற்சிக்கவில்லை ?”

  அதை கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ப –
  இன்றைக்கேற்ற மாதிரி, மாற்றியமைக்க வேண்டும்
  என்கிற உணர்வு கூட அவர்களுக்கு
  ஏற்படாதது ஏன்…?

  ரிசல்ட் வருவதற்குள்ளாக 3 நாட்கள் தொடர்ந்து
  தெருச்சண்டை போடுவது அசிங்கமாக இல்லை…?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 9. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  மாற்றியமைக்க ஏன் முயற்சிக்கவில்லை ?”

  ஒருவேளை அவர்களுக்கு பழகிவிட்டதாக இருக்கலாம் .
  பழக்கம் கொடிது பாறையிலும் கோழி கிறுக்கும்

  சாதரணமாக தேர்தல் முடிவுகள் வந்த உடன் தோற்றவர்
  வாழ்த்து தெரிவிப்பார் – டிரம்ப் அதை செய்யவில்லை .

  “நான் இந்த தேர்தல் முடிவை ஏற்கவில்லை ” என்கிறார் .
  தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக வெளியாகணும் .
  பத்திரிகை சொல்வதை நான் ஏன் ஏற்க வேண்டும் ?
  என்றும் சொல்கிறார் .

  டிரம்ப் ஏற்றாலும் சரி இல்லாவிடினும் சரி
  தேர்தல் முடிவுகளை அவர் தீர்மானிப்பதில்லை .

  சீனா ,ரஷ்யா போன்ற நாடுகளும் பிடெனுக்கு
  வாழ்த்து கூறவில்லை . முடிவு வரட்டும்
  என்று வேடிக்கை பார்க்கிறார்கள் .

  ரிசல்ட் வருவதற்குள்ளாக 3 நாட்கள் தொடர்ந்து
  தெருச்சண்டை போடுவது அசிங்கமாக டிரம்ப்க்கு
  தெரியவில்லை – அவ்வளவுதான் .

 10. Arasur TThiruvengadam சொல்கிறார்:

  The present Trump truculence is not a recent development.It has been growing from the date Obama was elected which made the whites feel that they are losing the power they had ever since the declaration of independanc I read some where the constitution and the electoral college were so drafted and organized to ensure the white power. When the constitution was drafted thre was no concern for the blacks and indigenous people.Lincoln freed the slaves so that they can provide labor to the industries but did not give them any political and other rights . They got voting and affirmation rights only in 1962.Post 2nd WW the country was inundated by Eurasians,Asians Chinese and others and their rise in all field created feelings of insecurity and fear In 2016 it mange stead in the emergence of Trump who exploited to his personal benefit and has divided the country in all fields.Hence this ridiculous truculence of Trump to fan the fires of racism violence andinstability

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.