….
….
….
” 7 பேர் விடுதலைக்கு அழுத்தம் கொடுப்பது –
கேடு விளைவித்த குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதாகும்.
இது தமிழர் பண்பாடு ஆகாது…..”
” அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது
ஏற்புடையது அல்ல….”
– என்று சொல்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின்
தலைவர் கே.எஸ்.அழகிரி.
7 பேர் விடுதலைக்காக தீவிரமாக வாதாடி வரும்
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும், விசிக தலைவர்
தொல்.திருமாவளவன் அவர்களும், அழகிரி சொல்லும்
இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா…?
இல்லையென்றால் – இன்னுமேன் எதிர்வினை ஆற்றாமல்,
சூடாக பதிலேதும் சொல்லாமல்,
( எருமை மாட்டின் மீது எண்ணை மழை
பெய்தது போல் …?) சொரணையற்று இருக்கிறார்கள்…?
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
வெளியிட்ட அறிக்கை கீழே –
————————————
‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை
விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய
வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில்
25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்துத்
தமிழ் கொலைக் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய
வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால்
ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர்
அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல.
கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான்
கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று
அழைப்பது சரியல்ல.
கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று
ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல்
நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம்,
சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது
பொருளாகும்.
எனவே, முன்னாள் பிரதமரைப் படுகொலை செய்து,
இந்தியாவிற்குக் கேடு விளைவித்த குற்றவாளிகளுக்குப்
பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது’.
—————————————–
அது சரி தனது இந்த கருத்துக்கு எத்தகைய எதிர்வினை
உண்டாகும் என்பது அழகிரி அவர்களுக்கு தெரியாதா…?
ஏன் இப்போது இந்த வீண் வம்பை கிளப்புகிறார்…?
உள்நோக்கம்….????????
.
——————————————————————————————————————————-
கூட்டணியில் இருந்தால் திமுக சொல்வதை எல்லாம் ஏற்று கொள்ள வேண்டிய
அவசியம் இல்லை என்கிறாரா திரு அழகிரி அல்லது கலைஞர் இருந்த போது
கிடைத்த தொகுதிகள் 63 இப்போது நிச்சயம் கிடையாது அல்லது கிடைக்காது என்ற விரக்தியில்
கூட்டணி முறிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று பேசுகிறாரா? இந்த தடவை
காங்கிரஸின் தொகுதி உடன்பாடு பொறுத்துதான் கூட்டணி நிலைக்கும் .
இதயத்தில் இடம் உண்டு ஆனால் தொகுதி இடம் இல்லை என்ற பாச்சா பலிக்காது .
இன்றைக்குக் காலையில் அழகிரியின் ஸ்டேட்மெண்டைப் பார்த்து, அட பரவாயில்லையே…இவருக்கு இன்னும் முதுகெலும்பு மாவு தோசை போல இல்லாமல் கொஞ்சம் ஸ்டிராங்காகவே இருக்கிறதே என்று நினைத்தேன்.
தேர்தலுக்காக (தமிழக), இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, நிருபர்கள் கேள்வி கேட்டால், சுப்ரீம் கோர்ட் என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று வழ வழ கொழ கொழவெனப் பேசுவது என்பதைத்தான் காங்கிரஸ் தலைமையிடம் பார்த்திருக்கிறோம்.
அழகிரியின் நிலைப்பாடை (அது தற்போதைய அரசியல் காரணங்களுக்காகவா இல்லை பாஜக, 7 பேரை விடுதலை செய்தால் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி இருந்துவிடக்கூடாதே என்பதற்காகவா என்று இனிமேல்தான் தெரியும்) நான் வரவேற்கிறேன்.
கோர்ட் முடிவு செய்து இவர்களைச் சிறையில் அடைத்திருக்கிறது (ஏகப்பட்ட விசாரணைகள், நீதிமன்றங்கள் போன்ற ப்ராசஸிற்குப் பிறகு). கருணாநிதியே காங்கிரஸை பகைத்துக்கொள்ள அஞ்சி, சிகிச்சை பெற வந்த பிரபாகரனின் தாயாரை தமிழகத்தில் இறங்கவே விடாமல் திருப்பி அனுப்பினார் (அதை பெரிய விஷயமாக்கி விஷம் கக்கிய வை.கோ, தன் விஷத்தை இழந்து ஸ்டாலினுக்கு தன் வாலை ஆட்டிக்கொண்டு இப்போது இருக்கிறார் என்பது வேறு விஷயம்).
7 பேர் விடுதலை செய்யவேணும் என்று போராட நினைப்பதே தேசத் துரோகம். தங்கள் வாக்குகளுக்காக இந்தக் குற்றவாளிகள் (என்று கோர்ட்டில் நிரூபணம் செய்யப்பட்டவர்கள்) விடுதலை செய்யப்பட வேண்டும் என்றால், நாட்டில் வக்கீல்கள், கோர்ட், சட்டம், நீதிபதிகள் தேவையில்லையே.
//நோக்கம்// – காங்கிரஸுக்குத் தகவல் வந்திருக்கும் அல்லது சந்தேகம் வந்திருக்கும் பாஜக, கவர்னர் இவர்களை விடுதலை செய்துவிடுவாரோ என்று. அதனால்தான் பாஜகவை எதிர்க்க ஒரு காரணம் வேண்டும் என்று இந்தக் கச்சேரியை அழகிரி ஆரம்பித்திருக்கிறார், அல்லது ராகுல் அனுப்பிய நோட் பிரகாரம் இதனை ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கிறேன். (பின்னால, ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, நிலைப்பாடு உண்டு, தேர்தல் கூட்டணி வேறு, நாங்கள் திமுகவோடு ஒற்றுமையாக இருக்கிறோம்… என்றெல்லாம் பஞ்சப் பாட்டு பாடுவார்கள், அல்லது 40 சீட்டுகளையாவது பெற்றுவிட இதனை ஆரம்பித்திருப்பார்கள்)
புதியவன்,
//7 பேர் விடுதலை செய்யவேணும் என்று
போராட நினைப்பதே தேசத் துரோகம்.//
என்ன பாஜக பாடும் “தேசத்துரோக” பாட்டை
நீங்கள் பாட ஆரம்பித்து விட்டீர்கள்.
நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்றால்,
நீங்கள் நினைத்து விட்டீர்கள் என்றால்
எதை வேண்டுமானாலும் தேசத்துரோகம்
என்று வகைப்படுத்தி – classify பண்ணி
விடுவீர்களா…?
30 ஆண்டுகள் சிறையில் தண்டனை
அனுபவித்து விட்டவர்களை போதும்
கருணை காட்டி விட்டு இனியேனும்
விடுதலை செய்து விடலாம் என்பது
உங்கள் பார்வையில் தேசத்துரோகம்
ஆகி விட்டதா…?
இதில் தேசத்துரோகம் என்கிற
வார்த்தையை இங்கே எப்படி நீங்கள்
பயன்படுத்தலாம்…?
தமிழக அரசு முடிவு செய்தால்
விடுதலை செய்வதில் ஆட்சேபம் இல்லை
என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லி விட்ட பிறகும் –
தமிழக சட்டமன்றம் ஒருமனதாக
விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய
பிறகும்,
இன்னும் அதை நிறைவேற்றாமல் இருப்பது தான்
தேசத்துரோகம்.
பாஜக கண்ணாடியை முதலில் கழட்டுங்கள்.
சகிக்கவில்லை;
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உங்கள் பார்வையில், அவர்களுக்காக
நீதிமன்றங்களில் வழக்காடிய
வழக்கறிஞர்களும், சில இடங்களில்
சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளும் கூட
தேசத்துரோகிகளோ ..?
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய
அத்தனை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களும்
தேசத்துரோகிகளா…?
தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பிய
தமிழக அரசு சட்டமன்ற செயலாளரும்
தேசத்துரோகியா…?
எங்கே எத்தகைய வார்த்தைகளை
பயன்படுத்துவது என்பதில் ஒரு
வரைமுறை வேண்டாமா…?
தங்களை எதிர்க்கும் எல்லாரையும்
தேசத்துரோகிகள் என்று
குற்றம் சாட்டும் நோய் பாஜகவுடன்
போகட்டும்.
உங்களுக்கும் அந்த தொற்று நோய்
வர வேண்டாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//தேசத்துரோகம்//- இதை தேச நலனுக்கு எதிரானது, நாட்டின் மீது அக்கறை இல்லாத செயல் என்று மாற்றிக் கொள்கிறேன். இந்த வார்த்தையில் உங்கள் பாயின்ட் சரிதான்.
ஆனால் வழக்கறிஞர்கள் விஷயம் வேறு. அவர்கள் தங்கள் கடமையைத்தான் இந்த விஷயத்தில் (பெரும்பாலும்) செய்தார்கள். கொலையைச் செய்த ஒருவனுக்கும் கடைசிவரை அவன் பக்க நீதியை எடுத்துச் சொல்வர். நீதிபதிகள் அவர்களுக்கு முன் உள்ள எவிடென்ஸை மட்டும் ஆராய்வர்.
அரசியல் அழுத்தங்களுக்கோ இல்லை லாபங்களுக்கோ செய்யும் செயலை எல்லோரும் ஆதரிக்க முடியாது. எம் எல் ஏக்கள் ஆதரித்தார்கள், சட்டமன்றம் பெரும்பான்மையாக ஆதரித்தது என்பதால் அதில் நியாயம் உண்டு என நீங்கள் கருதினால் பாஜக போட்ட சட்டங்கள் எல்லாவற்றையும் ஆதரிக்க வேண்டியதுதான்.
38 வருடங்களோ 380 வருடங்களோ செய்த இறையாண்மை தவறுகளுக்குப் பரிகாரம் கிடையாது என்பது என் எண்ணம். பிரபாகரன் விஷயத்தில் காங்கிரஸ் அரசும் கருணாநிதியும் நடந்துகொண்டதையும், அதனால் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மடிந்ததையும் நினைவுபடுத்துகிறேன். 7 பேரின் விடுதலை எனக் கோருவது பொலிடிகல் ஸ்டன்ட். இந்த 7 பேர் மீது பரிதாபம், லட்சக்கணக்கான தமிழர்கள் அழிவது சிறு தூறல் போல என்பது திமுகவின் நிலை. அதை “பச்சாதாபம்”, “திமுக கண்ணாடி”, “அரசியல் லாபம்” என்ற லேபிளில் எதற்கு ஆதரிக்கணும்? எந்த ஒரு குற்றச் செயலையுமே முழுவதும் கேள்விகளுக்கு இடமின்றி நிரூபிக்க முடியாது. இதனை அரசியலாக்குவது, அரசியல் பழிவாங்கல்.
புதியவன்,
// அதை “பச்சாதாபம்”, “திமுக கண்ணாடி”, “அரசியல் லாபம்”
என்ற லேபிளில் எதற்கு ஆதரிக்கணும்?//
இவர்களை விடுதலை செய்யும் தீர்மானம் அதிமுக அரசால்
சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது
என்பதை ஏன் மறைக்கிறீர்கள் ?
நான் இதனை மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. 7 பேர் விடுதலை என்பது அரசியலாக்கப்பட்டுவிட்டது. அதனால் அரசியல் கட்சிகள் செய்ததில், செய்வதில் அர்த்தம் ஒன்றும் இல்லை. I do not like terming this as 7 தமிழர்கள் விடுதலை. (கசாபை, முஸ்லீம் என்பதால் விடுதலை செய்யணும் என்று போராடுவாங்க – அவன் உயிரோடு இருந்திருந்தால், இந்த அரசியல் கட்சிகள்) இந்தச் சதிச் செயல்களைப் பற்றி மூன்று புத்தகங்கள் வந்துள்ளன (கார்த்திகேயன், ரகோத்தமன் புத்தகங்களும் அதில் அடங்கும்). இதைப் படிக்கும்போது 7 பேரின் involvement நன்கு புலப்படும். அரசியல் கொலை வழக்குகளில் பொதுமக்களின் சிலரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.
நீங்க கோட்சே, காந்தி விஷயத்தை இதுல ஒப்பிடக்கூடாது. இருவரும் இந்தியர்கள். ஆனால் இந்தியப் பிரதமராகப் போகிறவரை, முன்னாள் பிரதமரை, வெளிநாட்டுச் சதிச் செயலினால் கொன்ற, அவருடன் பல்வேறு குடும்பங்களையும் சேர்த்துக் கொலை செய்த சதிவழக்கில் இவர்கள் பங்கு பற்றி குற்றம் சாட்டப்பட்டு பல்வேறு கோர்ட் விசாரணைக்குப் பிறகு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்கள் இவர்கள். சிவராசனுக்கு உதவியவர்களில் இவர்களைத் தவிர இன்னும் பலருண்டு. அவர்கள் adequate தண்டனை பெறவில்லை என்பதும் என் எண்ணம். வைகோ, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தலுக்கு நின்ற காங்கிரஸ் அம்மையார், அவருடைய உறவினர்கள், சிவராசனை டாங்கர் லாரியில் பெங்களூருக்கு அனுப்பி தப்பிக்க வைத்தவர் என்று பலரும் போதுமான அளவு தண்டனை பெறாமல் தப்பிவிட்டனர்.
சம்பந்தமில்லாமல், கோட்சேவுக்கு மாலை போட்ட பாஜகவினர் என்றெல்லாம் இந்த விஷயத்தில் சொல்வது பொருத்தமற்றது. கோட்சேவுக்கு மாலை போட்ட பாஜகவினர், பின் லேடன் கொல்லப்பட்டதற்காக ஊர்வலம் சென்றவர்கள், Animal meatஐ சாப்பிடக் கூடாது என்று அப்பாவிகளை பயங்கரவாதத்தினால் கட்டுப்படுத்த நினைக்கும் பாஜக அனுதாபிகள்/கட்சியினர் எல்லோருமே சமூகச் சீர்கேடுகள். அதைத் தனி இடுகையில் பார்க்கலாம்.
உங்கள் பார்வையில் கோட்சே தேசபக்தன்;
அவன் படத்துக்கு மாலை போட்டு மரியாதை செய்யும்
பாஜக தலைவர்கள் தேசபக்தர்கள்; அப்படித்தானே ?
//கோட்சேவுக்கு மாலை போட்ட பாஜகவினர்,
பின் லேடன் கொல்லப்பட்டதற்காக ஊர்வலம்
சென்றவர்கள், Animal meatஐ சாப்பிடக் கூடாது
என்று அப்பாவிகளை பயங்கரவாதத்தினால்
கட்டுப்படுத்த நினைக்கும் பாஜக
அனுதாபிகள்/கட்சியினர் எல்லோருமே
சமூகச் சீர்கேடுகள்.//
ஆனால், இவர்களை ஆதரித்து ஓட்டு
போட்டவர் தானே நீங்களும் ?
நந்தி வனத்தில் ஓர் ஆண்டி அவன் நாடாளுமாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதைக் கூத்தாடி க் கூத்தாடி போட்டுடைத்தாண்டி (கூட்டணி). ஒரு வயதில் மூத்தவர், அரசியல் முதிர்ச்சி பெற்ற இவரே அவசரப்பட்டு பேசுவது அழகல்ல. அவர் அப்படி பேசுவது பிஜேபி க்கு த்தான் லாபமே தவிர காங்கிரசு க்கு அல்லவே. எழுவரா?, பிஜேபி யா ? பிஜேபி வந்தாலும் வரட்டும் ஆனால் எழுவர் வெளியே வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாரா என்ற வலுவான சந்தேகம் உள்ளது. பேசாமல் முருகனுக்கு பதில் அழகிரி பிஜேபி மாநில தலைவராகி விடலாம். இருபத்தைந்து வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டார்கள். அரசியல் சாணக்கியமும், சாதூர்யமாய் அழகிரி அவர்களுக்கு வேண்டும்.
அழகிரி முட்டாள் அல்ல.
அப்படி இருந்தால் அவர் இந்த நிலைக்கு
வந்திருக்க முடியாது. எனவே,
அவர் இப்போது இந்த பிரச்சினையை கிளறுவதில்
நிச்சயம் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.
முட்டாள் அல்ல என்று தான் சொன்னேன்…
குள்ளநரி யாக இருக்கலாமே.
ஸ்டாலின், திருமா மட்டுமல்ல.
இந்த 7 பேர்கள் விடுதலைக்காக
எப்போதும் குரல் கொடுக்கும்
வைகோ, சீமான், வேல்முருகன்,
அத்தனை பேரும் அழகிரியின்
உளரலை சகித்துக் கொண்டிருப்பதேன்?