….
….
….
பிரிட்டனின், கார்ன்வாலைச் சேர்ந்த சேர்ந்த ரிச்சர்டு த்ரவிதிக்
Richard Trevithick (1771 – 1833) என்கிற சுரங்க எஞ்சினியர்
தான் முதல் முதலாக தரையிலும், தண்டவாளத்திலும்
ஓடக்கூடிய நீராவி எஞ்ஜினை கண்டு பிடித்தவர். பள்ளிப்படிப்பை
கூட ஒழுங்காக முடிக்காத அவருக்கு தொழில் நுட்பத்தில்
இருந்த ஆர்வமே இந்த கண்டுபிடிப்பிற்கு காரணமானது….
பெயரிடப்படாத, உலகின் முதல் நீராவி என்ஜின்
இங்கிலாந்தின் வேல்ஸ்’ல் ட்ராம் பாதையில் ஓடும் காட்சி
அரங்கேறிய நாள் – (இன்றைக்கு 216 ஆண்டுகளுக்கு முன்)
1804-ஆம் ஆண்டு…பிப்ரவரி, 21-ந்தேதி.
அந்த எஞ்ஜினை நாம் காண வேண்டாமா…?
அதன் ஒரே ஒரு மாடல், தற்போது விக்டோரியா டவுனில்
காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
…..
…..
நீராவி எஞ்ஜின் எப்படி இயங்குகிறது…? ரொம்ப சிம்பிள்..
( கண்டுபிடித்த பின் எல்லாமே சிம்பிள் தானே…!!! )
நீராவி என்ஜினின் அடிப்படைத் தத்துவத்தை
சுலபமாக புரிந்துகொள்ள ஒரு மாடல் –
……
……
இதற்குப் பின் 1829-ல் ஸ்டீபன்சன் என்பவர் உருவாக்கிய
ஒரு புகையிரதத்தை கிண்டல் செய்து, 1923-ல்
வெளியான “Our Hospitality என்கிற காமெடியான
ஒரு பேசாத (மவுன) திரைப்படக் காட்சி கீழே …
பேசாப்பட காலத்திலேயே காமிரா புகுந்து விளையாடி
இருக்கிறது பாருங்கள்…!!!
…..
…..
.
—————————————————————————————————————————-