….
….
….
விஜய்’யின் அப்பா திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு
இருக்கும் அரசியல் ஆசை நமக்கு தெரிந்தது தான்.
கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களின்போதும் அதை அவர்
வெவ்வேறு விதங்களில் வெளியிட முயன்றார்…
துவக்கத்தில், கலைஞர் காலத்தில் –
திமுக ஆதரவாளராக ,
மற்றொரு சமயம் ஜெயலலிதா அவர்களுடன்
கைகோத்து அதிமுக ஆதரவாளராக …
விஜய்’க்கு திரையுலகில் நல்ல மார்க்கெட் இருப்பதாலும்,
இன்னும் சில ஆண்டுகள் கதாநாயகனாக இயங்கலாம்
என்பதாலும், இவ்வளவு அவசரமாக தீவிர அரசியலில்
இறங்க அவருக்கு விருப்பமில்லை என்பது புரிகிறது …
ஆனால், விஜய் ரசிகர் மன்றங்களின் செல்வாக்கை
பயன்படுத்தி, அதன் விளைவாக குறைந்த பட்சம் தனக்கு
ஒரு எம்.பி.பதவியையாவது பெற்றுவிட வேண்டுமென்று
ஆசைப்பட்டார் அவரது அப்பா. ஆனால் துரதிருஷ்டவசமாக –
இதுவரை அவரது ஆசை கைகூடவில்லை…
இந்த தேர்தலை விட்டால், இன்னும் 4-5 வருடங்கள்
வாய்ப்பில்லை; தற்போது திரையுலகிலிருந்து பலர்
பாஜகவில் ஐக்கியமாகி பதவிகளைப் பெறும்போது,
தானும் தன் மகன் மூலம் பெற்றிருக்கும்
செல்வாக்கின் பலனை ஏன் அனுபவிக்கக்கூடாது என்கிற
எண்ணம் அவருக்கு இருப்பது அவரது அண்மைய
பேட்டிகளில் வெளிப்பட்டிருந்தது.
அதன் விளைவு தானோ – இன்று வெளியாகியிருக்கும்
இந்த “அப்பாவின் ஆசை” ….
…..
…..
ஆனால், அவருக்கு ஆர்வம் இருக்கிற அளவிற்கு
தமிழக பாஜக-வினருக்கு இதில் ஆர்வம் இல்லையென்று
தோன்றுகிறது….காரணம் ஹெச்.ராஜா போன்றவர்களாக
இருக்கலாம்…
இருந்தாலும், கட்சியை ஆரம்பித்து தூண்டிலைப்
போட்டு வைக்கலாம்… பின்னர், எந்த கட்சி கூப்பிட்டாலும் சரி –
பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது எஸ்.ஏ.சந்திரசேகரின்
எண்ணமாக இருக்கலாம்…
விஜய் இவ்வளவு வேகமாக மறுப்பு அறிக்கை
வெளியிடுவாரென்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டாரோ…?
அப்பா- செயலாளர்,
அம்மா – பொருளாளர் – என்று தன் பெயரில் ஒரு கட்சி
பதிவு செய்யப்படுவதை விஜய் எதிர்ப்பது இயற்கையே…
அவரது இமேஜ் பாதிக்கப்படாதா…?
தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக,
இப்படி தன் மகன் பெயரில், அவர் விருப்பம்/சம்மதம் இல்லாமல்
ஒரு கட்சியை உருவாக்கி தன் சொந்த மகனுக்கே இத்தகைய
சங்கடத்தை உண்டு பண்ணுவதற்கு பதிலாக –
எஸ்.ஏ.சந்திரசேகர் எதாவது ஒரு கட்சியில் நேரடியாக சேர்ந்து,
தன் செல்வாக்கின் பலத்தை சோதித்துப் பார்த்திருந்தால், அது
நேர்மையானதாக இருந்திருக்கும்.
.
——————————————————————————————————————
//எஸ்.ஏ.சந்திரசேகர் எதாவது ஒரு கட்சியில் நேரடியாக சேர்ந்து, தன் செல்வாக்கின் பலத்தை சோதித்துப் பார்த்திருந்தால்,//
விசிக, முன்னாள் மதிமுக, காங்கிரஸ், பாஜக, முஸ்லீம் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்புறம் இந்த தொத்தல் வத்தல் கட்சிகள், அதாவது லெட்டர்பேட் – பாரிவேந்தர், சண்முகம், கொங்கு மக்கள் கட்சி போன்றவர்கள் – நேரடியாக தனித்துப் போட்டியிட்டால் கட்சியை கலைக்க வேண்டிவரும்.
அது சரி.. எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தலில் போட்டியிட்டால், அவருடைய, அவர் மனைவியின் வாக்குகள் மட்டும்தான் கிடைக்கும் போலிருக்கு. விஜய் கடுமையாக எதிர்த்திருக்கிறார். இரண்டு வாக்குகள் கூடுவதால் சேரும் கட்சிக்கு டெபாசிட்டா கிடைக்கப் போகிறது?
ஆசை உள்ள அளவு முதிர்ச்சி இல்லை . என்ன செய்வது
அப்பாவும் பையனும் பேசமாட்டாங்களா 🤔
Karthikeyan
மேலே போட்டோவைப் பாருங்களேன் .