….
….
….
புட்டபர்த்தி சத்ய சாயிபாபா அவர்கள் நிகழ்த்தும் சில
அற்புதக் காட்சிகள் அடங்கிய இரண்டு குறு காணொலிகள் கீழே –
இவை பற்றி அவர் வாழ்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இதைப்பற்றி –
தான் இந்த சித்து விளையாட்டுகளை நிகழ்த்துவது பற்றி –
ஏன், எப்படி என்று –
அவரே எங்கேயாவது பேசி இருக்கிறாரா…?
அப்படிப் பேசி இருந்தால், என்ன சொன்னார்…?
– பாபா பக்தர்கள் யாருக்காவது இது பற்றி தெரிந்திருந்தால்
சொல்லலாம்.
நான் நம்பிக்கையாளர்களிடமிருந்து மட்டுமே விளக்கம்
பெற விரும்புகிறேன்… இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள்
தயவுசெய்து இதைக் கடந்து போய் விடலாம்.
……….
……….
……….
.
————————————————————————————————————————-
கா.மை.சார்…. இரண்டு தடவை என் கனவில் வந்து புட்டபர்த்தி சாய்பாபா என்னுடன் பேசியிருக்கிறார். இரண்டு தடவையும் என்ன நடக்கப்போகிறது என்று சொல்லி அவை பலிதமாயிருக்கின்றன. இன்னொரு தடவை, நாலைந்து முறை ஒரு தேதியை அழித்து வேறு தேதி எழுதி… நாம் சந்திப்போம் என்று எழுதினார். அது நடக்கவில்லை. இன்னொரு முறை காரில் அவர் போகிறார், என்னைப் பார்த்து கையை ஆட்டிச் சிரித்தவாறே bye bye சொல்வதுபோலச் சொல்லிச் சென்றார். அதற்குப் பின் என் கனவில் அவர் வந்ததில்லை.
என்னுடைய Boss (இந்தியாவில் நான் கணிணி கற்கக் காரணமான ஆசான்) அவர்களை புட்டபர்த்தியில் சந்தித்து, தனியாக அவரைக் கூப்பிட்டு தன் அறையில் அவருக்கு ஒரு மோதிரம் வரவழைத்துக்கொடுத்தார். அவருடைய உறவினருக்கு (பெரிய பணக்கார, 50 கள்ல இருப்பவர்) புட்டபர்த்தியில் சேவை செய்வதற்காகச் சென்றபோது, அங்கிருந்த டார்மிட்டரியில் தரையில் படுக்க அவரால் இயலவில்லை. மனதுக்குள் கஷ்டமாக இருக்கிறது, நல்ல படுக்கை கொடுத்தால் பரவாயில்லை என்று நினைத்தாராம், மறுநாள் காலை அங்கு வேலை பார்ப்பவர், உங்களுக்கு நல்ல படுக்கை கொடுக்கணும்னு பாபா உத்தரவு என்று சொல்லி படுக்கை கொடுத்தாராம்.
ஷீரடி சாய்பாபாவின் வரலாறை 7 நாட்களில் படித்து முடித்தால் நாம் வேண்டிக்கொண்ட காரியம் நடக்கும் என்பது பலர் சொல்வது. ஒரு தடவை துபாயில் அப்படிச் செய்தபோது நான் கேட்டது கிடைத்தது, ஆனால் அது எனக்கு வாய்க்கவில்லை. பலப்பல வருடங்களுக்குப் பிறகு இன்னொரு முறை ஒரு வேண்டுதலுக்கு அதைச் செய்தபோது எனக்கு பலிதமாகவில்லை. நமக்கு பலிதமாகும் விதி இருந்தால்தான் அவை நடக்கும் என்பதும் என் நம்பிக்கை. நம் விதிப்படி ஒன்று கிடைக்கக்கூடாது, நடக்கக்கூடாது என்று இருந்தால், குலதெய்வத்திடமோ இல்லை வேறு எந்தத் தெய்வத்திடமோ வேண்டிக்கொண்டாலும் பரிகாரங்கள் செய்தாலும் நடக்கவே நடக்காது.
பொதுவாக ஆன்மீக அனுபவம் என்பது அவரவர் அனுபவிக்கும்போதுதான் உண்மைத்தன்மை தெரியும். எனக்கு நிகழ்ந்த இரு அனுபவங்களை நான் என் பசங்கள்ட விவரித்தபோது, அவங்க சிரித்தாங்க, நம்பவில்லை. ஆன்மீக அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. பொதுவா வெளில சொல்லிக்க மாட்டாங்க.
புதியவன்,
நீங்கள் சொல்வது,
உங்கள் அனுபவங்கள் எனக்கு புரிகின்றன.
ஆன்மிகம் என்பது ஒவ்வொருவருக்கும்
தனித்துவமானது என்பதை நானும் ஏற்கிறேன்.
நான் தனிப்பட்ட முறையில் பாபா பக்தர்களில்
ஒருவன் அல்ல. அந்த அமைப்புகளில் நான்
இல்லை; வழக்கமாக அவர்கள் நடத்தும்
பிரார்த்தனை கூட்டங்களில் எல்லாம் கலந்துகொள்ளும்
வழக்கமும் இல்லை;
சில கேள்விகள் –
நீங்கள் புட்டபர்த்திக்கு போயிருக்கிறீர்களா…?
அல்லது வேறு எங்கேயாவது பாபாவை
நேரில் தரிசித்திருக்கிறீர்களா…?
அந்த சமயத்தில் வித்தியாசமாக எதாவது
உணர்ந்தீர்களா…?
பாபாவை முடிந்த அளவு உணர வேண்டும்
என்கிற ஆர்வத்தில் –
நான் ஒரே ஒரு தடவை புட்டபர்த்திக்கு
நேரில் சென்று, பக்தர்களோடு
உட்கார்ந்துகொண்டு கூட்டத்தில் ஒருவனாக
அவரை தரிசித்திருக்கிறேன்/கவனித்திருக்கிறேன்.
அங்கு வந்திருந்த பல வெளிநாட்டவர்களுடன்
பேசி இருக்கிறேன்.. அநேகமாக அவர்களில்
பலர் கிறிஸ்தவர்கள்/பௌத்தர்கள்;
மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் ஜப்பான்
நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள்
பாபாவின் மீது வைத்திருந்த மரியாதையும்,
நம்பிக்கையும் என்ன வியக்க வைத்தன.
எது அவர்களை இத்தனை தூரம்
அழைத்து வந்தது என்று வியந்து போனேன்.
ஆன்மிகம் ஒரு புறம் இருக்கட்டும்.
அவர் செய்துள்ள அளப்பரிய சமூகப் பணிகளை
நான் அறிவேன். அவை என்னை வியக்க
வைக்கின்றன…அதற்காகவே அவரை
மிகவும் மதிக்கிறேன்.
அவரது miracle கள் பற்றிய நேரடி அனுபவம்
எதுவும் எனக்கு இல்லை; ஆனால், அவை
உண்மை என்று நம்புகிறேன்….
அதைப்பற்றி பாபா, தன் வாழ்நாளில் எங்கேயாவது
பேசி இருக்கிறாரா எதாவது சொல்லி இருக்கிறாரா
என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.
அதன் விளைவே இந்த இடுகை.
இதற்கு மேற்பட்ட விவரங்கள் தெரிந்த நண்பர்கள்
யார் சொன்னாலும் வரவேற்கிறேன்.
நான் இவை குறித்து மேலும் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை.சார்… முதல் நிகழ்ச்சி (கனவு) நான் துபாயில் இருந்தேன் (94). இரண்டாவது கனவு நவம்பர் 95. நான் விடுமுறைக்கு இந்தியா வரும்போதுதான், போனால் போயிருக்கலாம். அதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. பிறகு மனம் நினைக்கும், அவர் ஒவ்வொரு தேதி எழுதி பிறகு அதை அழித்ததற்கும் அர்த்தம் இருந்திருக்குமோ என்று. நான் அவரது மிரக்கிள்களை முழுவதுமாக நம்புகிறேன்.
அவரது ஏகப்பட்ட மிரகிள்களை நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் அவைகளைப் படித்து பிறர் பிரமிக்கலாம் அல்லது அதீதமாக எழுதியிருப்பதாகவும் நினைக்கலாம். ஆன்மீக அனுபவம் என்பது தனக்கு நிகழும்போதுதான் அந்த மாற்றம் நிகழும் என்பது என் எண்ணம். அவரைப்பற்றிப் படித்ததில் ஒன்று எழுதலாம் என நினைக்கிறேன் (அவரைப் பற்றிய பலவற்றை நான் புத்தகங்களில் படித்துள்ளேன்).
வெளிநாட்டில் இருக்கும் ஒரு பெண்மணி- பாபா பக்தை (பணக்காரர், இந்தியப் பெண்மணி என்று நினைவு), தன் கால் சுரணை இன்றி, சக்கர நாற்காலியில் பிறர் தயவிலேயே வாழ வேண்டியிருக்கிறதே.. பாபா..நீங்கள் இதனை குணப்படுத்தக்கூடாதா என்று கேட்டாராம். அதற்கு பாபா, ‘அம்மா இது உன் முன் வினைப்பயன். இதனை நான் குணப்படுத்திடலாம். இது கர்ம வினை என்பதால், அடுத்த ஜென்மாவில் இதனை அனுபவித்துத்தான் அதனைப் போக்கணும். இப்போது உன்னைப் பார்த்துக்கொள்ள எல்லோரும் இருக்கின்றனர், நல்ல வசதியும் இருக்கிறது, அதனால் இந்த ஜென்மத்திலேயே இதனைக் கழித்துவிடு, இல்லை குணப்படுத்த வேணும் என்றால் செய்கிறேன் என்றாராம்.
இது எனக்கு ஒன்றைப் புரியவைத்தது. கர்ம வினை என்பதை நாம்தான் அனுபவித்துக் கழிக்கவேண்டும். அந்த வினைச் சக்கரத்தில் இறைவனும் நுழைந்து மாற்ற நினைக்கமாட்டான். நாம் அதனைப் பொறுத்துக்கொண்டு கடக்கும் நிலையை மட்டும்தான் அவனால் தரமுடியும் என்பதே.
KM சார்,
சாயிபாபா அவர்கள் உயிருடன் இருந்த பொழுது இரண்டு முறையும், அதன் பிறகு இரண்டு முறையும் நான் புட்டபர்த்திக்கு சென்றிருக்கிறேன். இருட்டு முறையுமே அவர்களை பத்து அடி தூரத்திலேயே தரிசனம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தொடர்ந்து விபூதி வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார். நான் பொதுவாக எந்த
கோவிலுக்கு போய் சாமி தரிசனம் பண்ணினாலும், சாமியிடம் எனக்கு அதை கொடு இதை கொடு என்று கேட்டதே இல்லை . ஆகையால் சாயிபாபா அவர்கள் எனது கோரிக்கையை நிறைவேற்றினாரா என்று சொல்ல தெரிய வில்லை . அனால் ஒருவித அமைதி கிடைத்தது. இப்பொழுதும் புட்டபர்த்தி செல்ல மனது விரும்புகிறது அனால் ஒருவித சோம்பலால் செல்ல முடியவில்லை.
//சாமியிடம் எனக்கு அதை கொடு இதை கொடு என்று கேட்டதே இல்லை // – எங்களுக்கும் இதனைச் சொல்லியே வளர்த்திருக்கிறார்கள். அதாவது, கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கும்போது, தனக்கு இது வேணும் அது வேணும் என்று எப்போதுமே கேட்கக்கூடாது. அவனுக்குத் தெரியும் நமக்கு என்ன தரணும் என்று. குழந்தைத்தனமாய் இதைத் தா, அதைத் தா என்று கேட்டு ஏமாறக்கூடாது, சின்னக் குழந்தை, அல்வா வேணும் என்று கேட்டாலும் தாய் குழந்தை கேட்பதைக் கொடுக்கமாட்டாள், அதனுடைய நலத்தை மட்டுமே முக்கியமாக நினைப்பாள் என்பதைப் போல.
எனக்கு இது நன்றாகப் புரிகிறது.. ஆனால் அஞ்ஞானத்தால் பல சமயம் கேட்கிறேன். (முக்கியமாக உள்ளதை, சிறிய வேண்டுதல்கள் மட்டும் உடனே நிறைவேற்றுவதை நான் அனுபவித்திருக்கிறேன். இரண்டு நிகழ்ச்சிகளை எழுத நினைக்கிறேன்… சரி வேண்டாம் என மனது சொல்வதால் எழுதலை. தனிப்பட்ட முறையில் எழுதறேன்.
நன்றி jksmraja.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்