சாதிகள் (இல்லவே)இல்லையடி பாப்பா…!!!

….
….

….

இது செய்தி மட்டுமே….

——————–

நெல்லை கிழக்கு மாவட்ட திமுகவை இரண்டு தொகுதிகள்
ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் பிரிக்க தலைமை
திட்டமிட்டதை எதிர்த்து, நெல்லை வந்த திமுக முதன்மைச்
செயலாளர் கே.என். நேருவிடம், மாசெ ஆவுடையப்பன்
தலைமையில் பல நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நெல்லை வந்த நேரு தென்காசி மாவட்டப் பிரச்சினை பற்றியும்
அம்மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர்,
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத்
தொகுதிகள் இப்போது இருக்கின்றன. தென்காசி வருவாய்

மாவட்டத்துக்குள் ஆலங்குளம் தொகுதியும் சேர்க்கப்பட்டுள்ளதால்,
தற்போது நெல்லை கிழக்கு மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குளம்
தென்காசி மாவட்டத்துக்கு வந்துவிடும். ஆக ஐந்து தொகுதிகளைக்
கொண்டதாக தென்காசி மாவட்டம் இருக்கும்.

நான்கு தொகுதிகளைக் கொண்ட தென்காசி மாவட்டத்தின்
இப்போதைய பொறுப்பாளராக சிவ. பத்மநாபன் இருக்கும்
நிலையில் இரு தொகுதிகளைப் பிரித்து இன்னொரு
மாவட்டமாக்கி அதற்கு புதிய பொறுப்பாளரை நியமிக்கத்
திட்டமிட்டிருக்கிறது திமுக தலைமை.

தென்காசி மாவட்டத்தில் அதாவது நெல்லை மேற்கு
மாவட்டத்தில் ஒரு ஒன்றிய செயலாளர், ‘தலைவர் எங்கள்
மாவட்டத்தை இரு தொகுதி ஒரு மாவட்டம் என்ற
அடிப்படையில் பிரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
“தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர் சிவ. பத்மநாபன்
நாடார் சமூதாயத்தைச் சேர்ந்தவர்.

தென்காசி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அதில்
ஒரு மாவட்டத்துக்கு தானோ தனது ஆதரவாளரோ மாவட்டப்
பொறுப்பாளராக வரவேண்டும் என்று மாநில வர்த்தக அணி
துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் கடுமையாக
முயற்சித்து வருகிறார்.

அவர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதற்காகவே
பிரம்மாண்டமாக பல விழாக்களை நடத்தியிருக்கிறார்.

தென்காசியில் நாடார் சமூகத்துக்கு பிரதிநித்துவம்
கொடுத்ததைப் போல முக்குலத்து சமுதாயத்துக்கும்
பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அய்யாதுரை
பாண்டியன் முயற்சிக்கிறார்.

இதுபற்றி ஸ்டாலின் ஐபேக் குழுவினரிடமும்
ஆலோசித்திருக்கிறார். அவர்கள் ஆய்வு செய்து, ‘தென்காசி
மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு நிறைய
இருக்கிறது. அம்மக்களும் திமுகவையே ஆதரித்து
வந்திருக்கிறார்கள்.

எனவே தென்காசியை இரு மாவட்டமாக பிரித்தால்
அதில் ஒன்றை தேவேந்திர குல வேளாளருக்குக் கொடுக்க
வேண்டும். ஏற்கனவே நெல்லை கிழக்கு மாவட்டப்
பொறுப்பாளர் ஆவுடையப்பன் முக்குலத்தோராக இருக்கும்
நிலையில் தென் காசி மாவட்டத்திலும் முக்குலத்தோர்
சமூகத்துக்கு தரவேண்டியதில்லை’ என்று ஸ்டாலினுக்குப்
பரிந்துரைத்திருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் தென்காசி, வாசுதேவநல்லூர் (தனி)
ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு
சிவ. பத்மநாபனை பொறுப்பாளராகவும், கடையநல்லூர்,
சங்கரன்கோவில் (தனி) ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய
மாவட்டத்துக்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச்
சேர்ந்த ஒருவரை மாவட்டப் பொறுப்பாளராக நியமிப்பது
என்றும் முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார்கள்.

நெல்லை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட
பஞ்சாயத்தோடு தென்காசி மாவட்ட பஞ்சாயத்தையும்
பேசியிருக்கிறார் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு.

அப்போது அய்யாத்துரை பாண்டியனின் தீவிர ஆதரவாளராக
அறியப்படும் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர்,
“தென்காசி மாவட்டத்தை ரெண்டாப் பிரிச்சு
ஒரு மாவட்டத்துக்கு தேவமாரை பொறுப்பாளராக போடுங்க.
அதுதான் முறை. இல்லேன்னா கட்சிக்குள்ள சாதிப்
பிரச்சினையாயிடும் பாத்துக்கங்க” என்று நேருவிடமே
கூறியிருக்கிறார்.

(நன்றி – மின்னம்பலம் செய்தித்தளம்)

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சாதிகள் (இல்லவே)இல்லையடி பாப்பா…!!!

 1. GOPI சொல்கிறார்:

  இது ஜஸ்ட் ஒரு சாம்பிள் தான்.
  உள்ளே ஊர் ஊரா பூந்து பாத்தீங்கன்னா நாறும்;

 2. புதியவன் சொல்கிறார்:

  //அம்மக்களும் திமுகவையே ஆதரித்து வந்திருக்கிறார்கள்.// – புதுவிதத் தகவலாக இருக்கிறதே. தென்காசி எப்போதுமே காங்கிரஸ் தொகுதி சில தேர்தல்களில்தான் அதிமுக வெற்றிபெற்றிருக்கிறது.

  //மாவட்டப் பிரிப்பில் விளையாடும் சாதி// – இது ஒரு பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. எல்லா சாதிகளையும் சேர்த்துத்தான் ஒரு கட்சி செயல்பட முடியும். சில சமயங்களில், சில வலுவான சாதிகளை விட்டுக்கொடுக்க முடியாமல் கொஞ்சம் சப்பையான ஒப்புக்குச் சப்பாணியான ஆட்களும் பதவிகளைப் பெறுவர், ஆனால் அதிகாரம் பெற இயலாமல் புழுங்குவர். இந்தப் பிரச்சனை வலுவான கட்சிகளில் உண்டு.

  தன் மக்களை சமுதாயத்தை represent செய்யும் விதமாக, தமிழக மக்களின் சாதி உணர்வை (தாங்கள் உருவாக்கிய அந்த உணர்வை) புரிந்துகொண்டு கருணாநிதி எப்போதும் கனிமொழியை நாடார் சமூகம் உள்ள இடமாக பிரச்சாரத்திற்கு அனுப்புவார், போட்டியிடச் செய்வார்.

  இதைப்பற்றி எழுதும்போது, கருணாநிதி, வாணியம்பாடி இடைத்தேர்தலில், பாவப்பட்ட நாகூர் ஹனீபாவை நிறுத்தி பலிகடா ஆக்கியது நினைவுக்கு வருகிறது. நம்பியவர்களை நட்டாற்றில் விடுவதில் கருணாநிதி சமர்த்தர். (வாணியம்பாடியில் உருது பேசும் முஸ்லீம்கள் அதிகம். அவங்க, தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத, தமிழ் பேசும் முஸ்லீம் என்பதால் ஹனீபாவுக்கு வாக்களிக்கவில்லை என்ற பேச்சு அப்போது இருந்தது). சாதி என்பது தேர்தலில் மிக முக்கியமான ஒன்று. அதனால்தான் அரசியல் கட்சிகள் வலுவான சாதிகளை represent செய்யும் விதமாக ஏதாவது பதவி கொடுத்துவிடுவார்கள்.

  ஸ்டாலின் அதைச் செய்ய முற்பட்டது தவறில்லை என நான் நினைக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.