சீனா’வுக்கு இந்தியா கொடுத்த பதில் சீர் வரிசை…!!!

….
….

….

சீனாவின் வுகான் நகரில் தோன்றி (உருவாக்கப்பட்டு…??? )
சீனாவால் உலக நாடுகள் அனைத்திற்கும் “பார்சல்” செய்யப்பட்ட “கொரோனா வைரஸ்”
உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி, லட்சக்கணக்கான
உயிர்களை பலி வாங்கி வருகிறது … இந்திய மக்களுக்கும்
இதனால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் சொல்லி மாளாது.

தற்போது சீனாவில் கொரோனா பரவல் முழுவதுமாக
கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனா அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு
சீனா சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து
சீனாவில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வரவும், இந்தியாவில்
உள்ளவர்கள் சீனாவுக்கு செல்லவும் வந்தே பாரத் திட்டத்தின்
கீழ் விமான போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா விமானம்
சீனாவின் “வுகான்” நகரத்திற்கு சென்றது. இந்த விமானத்தில்
மொத்தம் 277 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

சீனா சென்றதும், தரையிறங்கியவர்களை பரிசோதித்தபோது,
பயணிகளில் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 39 பேர் கொரோனா
கொரோனா நோய் அறிகுறிகளுடன் உள்ளனர் என்றும்
சீனா அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து விளக்கமளித்த ஏர்-இந்தியா நிர்வாகம், டெல்லியில்
இருந்து அனுப்பி வைக்கும் போது எல்லாருக்குமே
‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது…

இப்போது வூஹான் நகரில் தரையிறங்கும்போது
தொற்று இருக்கிறது என்று சொல்வது ஆச்சரியமாக
இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

நமக்கு யாராவது பரிசு அளித்தால்,
வட்டியும் முதலுமாகச் சேர்த்து ரிடர்ன் கிஃப்ட் (return gift )
கொடுப்பது தானே பண்பாடு…!!!

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சீனா’வுக்கு இந்தியா கொடுத்த பதில் சீர் வரிசை…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்…. தளத்தைப் படிக்கும் நம்ம ஊர்க்காரங்க (தமிழர்கள், இந்தியாவில் வசிப்பவர்கள்) இந்த கோவிட் பிரச்சனையால் என்ன என்ன துன்பங்கள் அனுபவித்தார்கள்/க்கிறார்கள் என்று எழுதச் சொல்லலாம். என்னைப் பொருத்த வரையில் மிகப் பெரும் துன்பம் என்றால், பசங்க படிப்பு/எக்ஸாம்லாம் பாழாவதுதான். மற்ற எல்லாமே மேனேஜ் பண்ணக்கூடியதுதான் என்று நினைக்கிறேன்.

  எல்லோருக்கும் துன்பம் கிடையாது. மருத்துவமனைகள் மற்றும் சில வியாபாரத் தலங்கள் மிக அதிகமான லாபம் ஈட்டியதும் இந்தச் சமயத்தில்தான்.

  சைனாவால் பரப்பப்பட்ட (எல்லா ஊடகங்களும் இப்படித்தான் எழுதுகின்றன) இந்த வைரஸ் மற்ற தேசங்கள் எல்லாவற்றிர்க்கும் பெரிய படிப்பினையை உண்டாக்கிவிட்டது. இதனை பயோ வார் என்று வளர்ந்த நாடுகள் அறிவிக்குமா, சீனாவிற்கு எதிராக நடவடிக்கைகளைத் துவங்குமா என்று யோசிக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   முக்கிய நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து
   பொருளாதார ரீதியாக சீனாவுக்கு எதிரான
   தடைகளை ஏற்படுத்துவது இன்று
   மிக மிக அவசியம்.

   இதைச் செய்யத் தவறினால்,
   வடகொரியா, பாகிஸ்தான், இலங்கை
   போன்ற நாடுகளை தன்னுடன் கூட்டு
   சேர்த்துக் கொண்டு,
   சீனா ஒரு பெரிய “ரவுடி நாடாக ”
   ( ROGUE NATION…? ) வளர்ந்து விடும்.

   முற்றுவதற்கு முன்னரே விழித்துக்
   கொள்வது அவசியம்… (ஏற்கெனவே
   நேரம் கடந்து விட்டது என்றும்
   தோன்றுகிறது…)

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    சீனா எப்போதுமே மாரல் இல்லாத தேசம். அதற்கென்று எந்த விழுமியங்களும் கிடையாது. இதைப்பற்றி நிறைய செய்திகளை நான் அறிந்திருக்கிறேன் (உதாரணமா, அரசு ஏதேனும் தடையோ அல்லது சட்டமோ போட்டால், அது சீனாவை பாதிக்கும் என்றால், அவங்க நம்ம தொழிலதிபர்களுக்கு நிறைய காசு கொடுத்து விலையைப் பற்றிக் கவலைப்படாமல் நல்ல வக்கீல் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் வாதாடச் சொல்லி அந்தத் தடையை/இடைஞ்சலை நீக்கறாங்க. நம்ம எம்பிக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தமிழ்நாட்டுலேர்ந்து போன எம்.பிக்கள் சம்பந்தமில்லாத கேள்விகளெல்லாம் பாராளுமன்றத்துல பிற்ர் சார்புல கேட்கறாங்க.

    சீனாவின் பிடியில் நேபாள், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஏற்கனவே சிக்கிக்கொண்டுவிட்டன. இந்தியாவின் பகுதிகளை சீனாவின் கட்டளையால், தங்களுடையது என்று மேப் போட்டுக்கொண்டு அவர்கள் பாராளுமன்றத்தில் நேபாள் சட்டமியற்றியவுடன், நேபாள் பகுதிகளை சீனா தன் வரைபடத்தில் சேர்த்துக்கொண்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள். சீனா நம்பிக்கைக்குரிய நாடு இல்லை.

    சீனா, உலக நாடுகள் இப்போது எந்தத் திசையில் பயணிக்கும் என்பதை உணர்ந்து, உள்ளூர் consumersக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைகிறது. நாம் இப்போது அணி சேரா நிலையிலிருந்து மாறி, அமெரிக்க சார்பு நிலை எடுத்திருந்தாலும் அது ஓரளவுக்கு நமக்கு நல்லதைச் செய்யும் என நினைக்கிறேன். இந்திய அரசு சரியான நிலையை எடுக்கிறது என நான் நம்புகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.