“ரஜினி’யின் திட்டங்கள் ” – அமெரிக்கா வாழ் தமிழர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ ….


….
….

( Sundar -Seattle )

….

ரஜினி அரசியலுக்கு வந்து ஆட்சி மாற்றத்தைத் தருவதற்காக
அமெரிக்காவில் வசிக்கும் என்.ஆர்.ஐ. இந்தியர்கள் நூற்றுக்கும்
மேற்பட்டோர் , ‘வி சப்போர்ட் ரஜினி’என்ற குடையின் கீழ் –

பல திட்டங்களோடு தயாராக இருக்கிறார்கள். திமுகவுக்கு
பிரசாந்த் கிஷோர் செய்வதை விட பல மடங்கு அதிகமாக
ரஜினிக்காக சமூக தளங்களிலும், தமிழகக் களத்திலும்
பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர்கள் ரஜினிக்கு
தெரிவித்துள்ளனர்.

இந்த அமைப்பில் ஒருவரான அமெரிக்க வாழ் தமிழர்
சுந்தர் கூறியிருப்பது –

“நான் தூத்துக்குடியைச் சேர்ந்தவன். இங்கே அமெரிக்காவில்
seattle நகரத்தில் வசிக்கிறேன். நாங்கள் இங்கே அமெரிக்காவில்
பெரிய டீம் ரஜினி சாருக்காக இருக்கிறோம். வி சப்போர்ட் ரஜினி
என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாளை
தலைவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பயனுள்ள
வகையில் என்னென்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்
என்ற எண்ணத்தில் தமிழகத்தின் நன்மைக்காக நாங்கள் பல
முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் மாவட்ட ரீதியாக ஐடி துறை தவிர்த்து மற்ற
அனைத்து துறை வேலைவாய்ப்புகள் பற்றிய தளம்
( job portal) தயார் செய்திருக்கிறோம். அதன் பிறகு கல்லூரி
மாணவர்களுக்கு, தொழிலாளர்களுக்கு,விவசாயிகளுக்கு,
நெசவாளர்களுக்கு என பல தரப்பட்ட பிரிவினருக்கும்
என்னென்ன வகையில் நன்மை செய்யலாம் என்ற திட்டத்தை
தலைவருக்காக வகுத்திருக்கிறோம்.

அதன் ஒரு பிரதிபலிப்பாகத்தான் எங்கள் எண்ணத்தை,
எங்கள் ஆதரவை தலைவருக்குக் காட்டும் விதமாக ஒரு
காட்சித் தொகுப்பை நாங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக
தளங்களில் வெளியிட்டிருக்கிறோம்” …

….

….

.
——————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to “ரஜினி’யின் திட்டங்கள் ” – அமெரிக்கா வாழ் தமிழர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ ….

 1. PK சொல்கிறார்:

  Great start… hope Rajni is able to change the whole gamut of TN politics !!
  Thank you for sharing the exciting news!

 2. புவியரசு சொல்கிறார்:

  ரஜினி அவசியம் வருவார் என்கிற நம்பிக்கையை
  இவை உறுதிப்படுத்துகின்றன.

 3. shiva சொல்கிறார்:

  Encouraging to see the support.
  However it’s not the partymen alone, it’s the bureaucracy that’s a big stumbling block.
  Please see Nitin Gadkari’s video in youtube on his reaction for 10 years taken for building a HO for NHAI and Shekar Gupta’s video (also in Youtube) explaining the same – including clarifying important Hindi words used.

 4. புதியவன் சொல்கிறார்:

  சார்…. ரொம்பவே எல்லோரையும் உசுப்பேத்த வைக்கிறார் ரஜினி அவர்கள். அவர் நிச்சயமாக ஆக்டிவ் பாலிடிக்ஸுக்கு வர முடியாது, இயலவே இயலாது, காலம் கடந்து பலப் பல வருடங்களாயிற்று. நல்லவர், ஓரளவு வல்லவர், நல்லதையே நினைக்கிறார், குறிப்பாக வெளிப்படையாக மனதில் எண்ணுவதைப் பேசுகிறார். மிகச் சிறந்த தலைவராக (அதாவது பொதுமக்கள் விரும்பும்) உருவாகியிருக்கலாம். கிடைத்த ஞானப் பழத்தை மூப்பனாருக்கு 96ல் கொடுத்துவிட்டு இப்போது புதிதாக என்ன செய்தும் பிரயோசனமில்லை. வருத்தம்தான்… என்ன செய்வது? விஜயகாந்தும் தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை சரியாக முன்னெடுத்துச் செல்லவில்லை, உடல் நலமும் சீர் கெட்டது. இரண்டு நல்ல ஆளுமைகள்.

 5. jksmraja சொல்கிறார்:

  நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புபவர்களை ஆறு வகையாக பிரிக்கலாம்.

  1. பாரதிய ஜனதா கட்சியின் தலைமை
  2. காயலாங்கடைக்கு போய்விட்ட அரசியல்வாதிகள்
  3. மீடியாக்கள்
  4. அவரது குடும்ப உறுப்பினர்கள்
  5. விவரம் தெரியாத அவரது ரசிகர்கள்
  6. படித்த விவரம் தெரிந்த அவரது ரசிகர்கள்

  இதில் முதல் நான்கு வகையினர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதற்கு காரணம் நூறு சதவிகிதம் அவர்களின் சுயநலனேதான்.
  .
  ஐந்தாவது வகையினர் அரசியல் நகர்வு பற்றிய அடிப்படை விவரம் தெரியாததால் அவர்கள் விரும்புவது இயற்கையே.
  .
  இந்த ஆறாவது வகையினர்தான் மிகவும் அபாயகரமானவர்கள்.
  இவர்கள் தங்கள் வீட்டில் உள்ள, அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை எதற்கும் பயன்பட மாட்டார்கள் என்று கருதி முதியவர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, எழுபது வயது முதியவரான ரஜினி மட்டும் நமக்காக ஓடியாடிஉழைப்பார் என்று மற்றவர்களை நம்பவைக்க முயற்சிப்பவர்கள். இவர்களுக்கு பிஜேபி தான் ரஜினியை மிரட்டி பேரமும் பேசி அரசியலில் தள்ளுகிறது என்பது தெரிந்திருந்தும், ரஜினி தனது சுய விருப்பத்தில் தான் அரசியலுக்கு வருகிறார் என்று போதிப்பவர்கள். எழுபது வயது முதியவரான ரஜினி தனது உடல் நிலையை விளக்கி தனது உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்று அறிக்கை விட்ட பின்பும் ரஜினியாகிய உங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்று பிஜேபி நெருக்குவதை போல தனது சுய அரிப்பை போக்கிக்கொள்ள நெருக்குபவர்கள்.

  ரஜினி மிகவும் புத்திசாலி அவருக்கு கள நிலவரம் மிகவும் நன்றாகவே தெரியும்.

 6. jksmraja சொல்கிறார்:

  நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதற்கு தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் வாய்ப்புஇல்லை. மீதி உள்ள ஒரு சதவிகிதம் கீழே உள்ளவற்றை பொறுத்தது.

  1. அவர் சேர்த்து வைத்திருக்கும் கருப்பு பணம் எவ்வளவு
  2. அந்த கருப்பு பணத்தை பற்றிய விவரங்களை பிஜேபி அரசு எவ்வளவு
  தெரிந்து வைத்திருக்கிறது
  3. அதை வைத்து எந்த அளவிற்கு மிரட்ட படுகிறார்
  4. பேரத்தின் அளவு எவ்வளவு பேச படுகிறது
  5. ரஜினி எந்த அளவிற்கு மிரட்டலுக்கு பயப்படுகிறார்
  6. ரஜினி எந்த அளவிற்கு பேரம் பேச விரும்புகிறார்

  இதை எல்லாம் பொறுத்துதான் ரஜினியின் அரசியல் வருகை இருக்கும்.

 7. GOPI சொல்கிறார்:

  jksmraja

  அறிவுக்கொழுந்து;
  அம்மா கிட்ட சொல்லி சுத்திப்போடச்சொல்லு கண்ணா;

 8. mekaviraj சொல்கிறார்:

  (அதன் பிறகு கல்லூரி
  மாணவர்களுக்கு, தொழிலாளர்களுக்கு,விவசாயிகளுக்கு,
  நெசவாளர்களுக்கு என பல தரப்பட்ட பிரிவினருக்கும்
  என்னென்ன வகையில் நன்மை செய்யலாம் என்ற திட்டத்தை
  தலைவருக்காக வகுத்திருக்கிறோம்.)

  எப்பா சாமி யாரு ஆட்சிக்கு வந்தாலும் அந்த திட்ட்ங்களை திறந்த மனதோடு கொஞ்சம் ஓபன் பண்ணி சொல்லுங்க – யார் ஆட்சி செய்தால் என்ன மக்கள் நன்மை அடையவேண்டும்

  இப்படித்தான் விஜயகாந்த் எனும் மொடக்குடிகாரர் ஒருத்தர் நான் ஒரு திடடம் வச்சிருக்கேன் அது மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும்.
  ஆனால் அதப்பத்தி சொல்ல மாட்டேன்னு சொன்னார் – சாத்தியமா எனக்கு புரியல, மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறீங்க – அத ஓப்பனா சொன்ன என்ன ?

  ரஜினி பத்தி பேசி ஏன் பொன்னான நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை.
  போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க

 9. Jksmraja சொல்கிறார்:

  கோபி அண்ணே,

  நாங்கள் எல்லாம் அரைகுறைகள்.
  நீங்கள்தான் முழுசு.

  எங்கள் சிற்றறிவுக்கு எட்டிய வரை, கருப்பு பணத்தின் இருப்பிடம்தான் சினிமாத்துறை. நீங்கள் இல்லை என்று நினைக்கிறீர்கள். சரிதானே.

  எங்கள் அறிவு விருத்திக்காக உங்களிடம் ஓர் கேள்வி. மொத்த சினிமா துறையுமே புனிதர்கள் நிரம்பிய இடமா ? அல்லது தான் நூறு கோடி ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும் என்பதிற்க்காக நூறு ரூபாய் டிக்கெட்டை ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பதை கண்டு கொள்ளாத ரஜினி மட்டுமே புனிதரா ?

 10. GOPI சொல்கிறார்:

  தம்பி Jksmraja

  அதான் ஏற்கெனவே சொன்னேனே
  அறிவுக்கொழுந்து
  திருஷ்டி பட்டுருக்கும்
  அம்மா கிட்ட சொல்லி
  சுத்திப் போடச் சொல்லு கண்ணா;

  பொறந்ததுலேந்து “அரசியல்” தவிர
  வேறூ எந்த “தொழி’லும் செய்யாத
  ஒங்க சேனைத் “தளபதி ”
  23 கோடி(அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது)
  சொத்து சேர்த்தது நியாயமான
  வழியில் தானே ?
  அவங்க அப்பாரு, அவங்க தங்கச்சி
  எல்லாரும் சேத்தது நியாயமான வழில தானே ?
  போய் அதைக் கொண்டாடு கண்ணா;

 11. jksmraja சொல்கிறார்:

  கோபி அண்ணே,

  நான் திமுக ஆதரவாளன் என்று யார் அண்ணே உங்களுக்கு சொன்னது. இந்த தளத்தில் உள்ள பழைய இடுக்கைகளையும் அதில் திமுகவிற்கு எதிராக என்னுடைய பின்னூட்டங்களையும் கொஞ்சம் படித்து பார்த்துவிட்டு வாருங்கள். நான் எல்லா அயோக்கியர்களையும் ஒரே தூரத்தில் வைத்து பார்க்க விரும்பும் ஒரு சாதாரணமானவன்.

  இது எல்லாம் சரி . என்னுடைய கேள்விக்கு பதிலே இல்லையே ஏன் அண்ணே. ஸ்டாலின் அயோக்கியன். ஆமாம் ஸ்டாலின் அயோக்கியந்தான். ஸ்டாலின் அயோக்கியனாக இருப்பதாலேயே ரஜினி புனிதராகிவிடமுடியுமா என்ன ?

 12. GOPI சொல்கிறார்:

  தம்பி Jksmraja

  முடியாது; நிச்சயம் முடியாது.
  ஒலகத்துலேயே
  அறிவுக்கொழுந்து ஒருத்தர் மட்டும் தான்
  புனிதரா இருக்க முடியும்.

  இப்ப திரும்ப திருஷ்டி பட்டுடப்போவுது.
  போங்க தம்பி; அம்மாட்ட சொல்லி
  சுத்திப் போடச்சொல்லுங்க.

 13. tamilmani சொல்கிறார்:

  கொள்ளை கூட்ட கும்பல் ஒன்று பெரும் பசியோடு
  தமிழக அரசை கைப்பற்ற காத்திருக்கிறது. அந்த கும்பலிடமிருந்து
  தமிழ்நாட்டை காப்பாற்றவாவது ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.