….
….
….
நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் எம்.என்.நம்பியார்
அவர்களைப் பார்த்திருக்கிறோம்… பெரும்பாலும் வில்லனாக…
(அபூர்வமாக ஒன்றிரண்டு படங்களில் நல்லவராக..)
உண்மையில், நிஜ வாழ்க்கையில் எம்.என். நம்பியார் எப்படி…?
திரைப்பட பாத்திரங்களுக்கு நேரெதிர்…
மூத்த குடிமக்கள் சிலருக்கு தெரிந்திருக்கும்…
மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கும்…
மனிதநேயம் மிகுந்த ஒரு நல்ல மனிதர்.
எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்..
மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்ந்த குடும்பஸ்தர்…
சபரிமலை ஐயப்பனின் அதிதீவிர பக்தர்.
திரையுலகில் அனைவருக்கும் “குருசாமி”
ஹெச்.ராமகிருஷ்ணன்(தூர்தர்ஷன்) – எம்.என்.நம்பியாருடன்
90-களில் நடத்திய பேட்டி ஒன்று –
……………….
……………….
.
—————————————————————————————————————————
இந்தப் பேட்டியை இப்போதுதான் கேட்டேன். எனக்கு ரொம்பவே ஆச்சர்யம். ஒரு மனிதன் இப்படி பட்டவர்த்தனமாக உண்மை பேசுவாரா என்று. ஏற்கனவே அவர் நல்லவர் என்றுதான் என் மனதில் பிம்பம். அவர் பேசும் ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக்கொண்டால் அதில் உண்மை மிளிர்கிறது. கோவிலில் என்ன சக்தி இருக்கு, கடவுள் உண்மையிலேயே இருக்காரா என்று பல்வேறுபட்ட சப்ஜெக்டை தன் மனதில் தான் நினைப்பதை அப்படியே சொல்லியிருக்கிறார். தன் மனைவி பற்றியும் அதில் தன் சுயநலத்தையும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். தான் கடைசி கட்டத்தில் சந்தோஷமாக எண்ணும்படியான வாழ்வை அவர் வாழ்ந்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். நல்ல பகிர்வு. (கடந்த சில நாட்கள் ரொம்பவே பிஸி என்பதால் இப்போதுதான் எழுதுகிறேன்)