கடவுளை எந்த மொழியில் வழிபடுவது …?

….
….


….

—————————

ஜப்பானிலும், ஜெரூசலத்திலும், ரஷ்யாவிலும் – தமிழ்….!!!

…..

…..

கடவுளிடம் நெருங்க தாய்மொழி தான்
சரியான சாதனம் என்பதை முதலில் உணர்த்தியவர்
ராமானுஜர் தான்….

…..

…..

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to கடவுளை எந்த மொழியில் வழிபடுவது …?

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தாய்மொழியில் வழிபட வேண்டும் என ராமானுஜர்
  சொல்லியுள்ளார் . ஆனால் அதற்கு முன்னே அப்பர் ,
  சம்பந்தர் ,மாணிக்கவாசகர் போன்றவர்கள் தமிழ்
  மொழியிலேயே வழிபட்டார்கள் .

  புத்தர் மக்களுக்கு புரியும் மொழியில் பேச வேண்டும்
  என்று பாலி மற்றும் பிராகிருத மொழிகளை பயன்படுத்தினார் .

  மதம் என்று ஆனபிறகு ‘தேவபாஷையில் ‘ வழிபாடு
  என உருவெடுத்தது .லத்தீன் , கிரீக் ,வடமொழி போன்றவை
  இன்றும் புழக்கத்தில் உள்ளன . இவை இறந்த மொழிகள்
  என்பதால் காலகாலமாக பொருள் மாறாது வரும் .

  ஒரு சிலர் ஆகமம் வேதத்தை சார்ந்தது என சொல்கின்றார் .
  வேதத்தில் உருவ வழிபாடு இல்லை .யாகம் ஒன்றுதான் .

  பூ வைத்து வழிபடுவது பூசை – இது தமிழ் சொல் .
  வடமொழியில் பூஜா என்றாயிற்று .

  தமிழில் வடமொழிச் சொற்கள் வருகின்றன .
  இலக்கண நூற்களில் மேற்கோளும் காட்டுகிறார்கள் .

  வடமொழியில் அது போல காட்டுவதில்லை .
  எல்லா சொற்களும் முதன்மொழியாம் வடமொழியில்
  இருந்தே வந்தன என பிழையாக சொல்கின்றார் .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மெய்ப்பொருள்,

   // தமிழில் வடமொழிச் சொற்கள் வருகின்றன .
   இலக்கண நூற்களில் மேற்கோளும் காட்டுகிறார்கள் .

   வடமொழியில் அது போல காட்டுவதில்லை .
   எல்லா சொற்களும் முதன்மொழியாம் வடமொழியில்
   இருந்தே வந்தன என பிழையாக சொல்கின்றார் .//

   நாம் தமிழை ஓரளவு நன்றாகவே அறிவோம்…
   எனவே தமிழில் சொல்லப்படுவதை நாம் அறிகிறோம்..

   ————

   வடமொழியில் இவ்வாறு இந்தச் சொல்லின்
   மூலம் தமிழிலிருந்து வந்தது என்று எங்கேயாவது
   சொல்லி இருக்கிறார்களா இல்லையா என்பதே
   நமக்குத் தெரியாதே…

   இங்கே வடமொழி வல்லுநர்களாக பாவலா
   காட்டிக்கொண்டிருப்பவர்கள் யாரும் முழுமையாக
   வடமொழி அறிந்தவர்களில்லை;

   அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையில்லை;
   தாங்கள் நினைப்பதை சொல்கிறார்கள் அவ்வளவே…

   —————
   தமிழ், சம்ஸ்கிருதத்தை விட மூத்த மொழி
   என்பதை பெரும்பாலானோர் ஏற்கின்றனர் –
   அது போதுமே…!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   மெய்ப்பொருள்… தாய் மொழியில் வழிபட வேண்டும் என இராமானுசர் சொல்லவில்லை. தமிழ் ப்ரபந்தங்கள், எங்கள் நம்பிக்கையின் பிரகாரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அதில் கடைசியாக 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபந்தங்களும் உண்டு. இராமானுசரின் கடைசி காலத்தில் அவர்மீதான 108 பாசுரங்களைக் கொண்ட இராமானுச நூற்றந்தாதியையும் உள்ளடக்கி 4000 என பிரிவுபடுத்தி வைத்தனர். திருமங்கை மன்னன் (7ம் நூற்றாண்டு) பிரபந்தங்களைப் பாடுவதற்கு வருடத்தில் கிட்டத்தட்ட இருபது நாட்கள் பகல் பத்து இராப்பத்து என்ற வகையில் பிரித்தார் (இவர் சேர மன்னர், வைணவத்தில் ஆழ்வார்). இராமானுசர் காலத்தில் க்ஷஈணமுற்றிருந்த வழிபாட்டை திருவரங்கத்தில் அவர் செம்மைப்படுத்தி வைத்தார்.

   தமிழில் சைவம், வைணவம் இரண்டும் தழைத்தோங்கின. அறு மதங்கள் அப்போது இருந்தன. ஆட்சி செய்யும் அரசன் எந்த மத்த்தைச் சார்ந்தவரோ அதன்படி அந்த மதம் தழைத்தோங்கியது. சில மன்னர்கள் மட்டும் மாற்று மத்த்தை ஒடுக்கினர். (மத்த்தை ஒட்டின வெறுப்புகளும் சண்டைகளும் அப்போதும் இருந்தன) இது பெரிய சப்ஜெக்ட் என்பதால் முழுமையில்லாத சுருக்கமா எழுதியிருக்கிறேன்.

 2. புதியவன் சொல்கிறார்:

  இதில் சொல்லப்பட்டிருப்பவை சரிதான். கடவுளிடம் நம் தாய்மொழியில் நெருங்குவது மனதுக்கு இன்னமும் நெருக்கமாகத்தான் இருக்கும். ஆனால் இந்தப் பேச்சாளர்கள், சுவாரசியத்துக்காக, உண்மையை விட்டு விலகி கருத்துகள் சொல்றாங்க.

  /கடவுளிடம் நெருங்க தாய்மொழி தான் சரியான சாதனம் என்பதை முதலில் உணர்த்தியவர் ராமானுஜர் தான்….// – இதை எதில் கண்டுபிடித்தார்? என்ன ஆதாரம்? வைணவ நூலான நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தைத் தொகுக்கவே, அதைத் தொகுத்தவர் கோவிலில் கேட்ட தமிழ்ப்பாடல்கள்தாம் (ப்ரபந்தத்திலிருந்து பாடப்பட்ட பத்துப் பாடல்கள்). திருவரங்கக் கோவிலின் வழிபாட்டு முறைகளை செப்பம் செய்தவர் ராமானுசர். அதே சமயம், ப்ரபந்தத்தை (தமிழில் பாடப்பட்ட வைணவ பக்திப்பாடல்கள்) தொடர்ந்து கோவில்களில் சொல்லும் முறை அவர் காலத்திற்கு முன்பே உண்டு (அவருக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே, ராமானுசரின் ஒரு குருவின் – ஆளவந்தார்/யாமுனாச்சார்யார் தாத்தாவான நாதமுனிகள் காலத்தில்). அதற்கும் முன்பாகவே (நாதமுனிகள் காலத்திற்கு முன்பே) இருந்து இடையில் தொடராமல் அல்லது செவ்வனே தொடராமல் இருந்திருக்கவேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   தமிழிலும் பாடினார்கள் என்பது வேறு.

   தமிழில் தான் பாடப்பட வேண்டும் என்று
   விதி செய்வது வேறு அல்லவா…?

   ராமானுஜருக்கு முன்னர், தமிழி- லும்
   பாடக்கூடிய நிலை இருந்தது.

   ராமானுஜர், இந்த இந்த காலங்களில்
   தமிழில் தான் ஓத வேண்டும் என்று
   முறைப்படுத்தினார்.

   இது தானே சரியான நிலை…?

   ———-
   உங்களுக்கு ராமானுஜர் மீது கோபம் போலும்..!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    ஹா ஹா… சுகி சிவத்துக்கு வைணவ வரலாறு தெரியாது. குரு பரம்பரைப் பிரபாவம் தெரியாது. நான் எழுதியது facts. இராமானுசர் எங்கள் ஆச்சாரியார்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     புதியவன்,

     ராமானுஜர் உங்கள் ஆச்சாரியர்
     என்பது எனக்குத் தெரிகிறது . ஆனாலும்,
     அவர் மீது நிறைய வைணவர்களுக்கு
     கோபம் உண்டு என்பதும் தெரியும்…!!!
     (காரணம் உங்கள் உள் மனம் அறியும்…)

     நான் சொன்ன நியாயத்தை நீங்கள்
     மறுக்கவில்லையே…! எனவே சுகிசிவம்
     சொன்னது சரியென்று தானே ஆகிறது…!!!

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      இது என்ன புதுக்கதை கா.மை. சார். வைணவம் தெரிந்த ஒருவனிடம் நீங்க வைணவத்தைப் பற்றிச் சொல்வது ஆச்சர்யமா இருக்கு. நீங்க சொல்வதும் சரியல்ல. எல்லா வைணவர்களுக்கும் இராமானுசர் ஒருவரே ஆச்சார்யர். நீங்க எந்த நியாயம் சொன்னீங்கன்னே தெரியலை. இராமானுசர் வரலாறு, அதற்கு முந்தைய குருபரம்பரை வரலாறு எல்லாமே எழுத்தில் இருக்கின்றன.

      //அவர் மீது நிறைய வைணவர்களுக்கு கோபம் உண்டு என்பதும் தெரியும்…(காரணம் உங்கள் உள் மனம் அறியும்…)!!!// Sorry.. This is an absurd statement. எந்த வைணவருக்கும் இராமானுசர்தான் ஆச்சார்யர். இதுல எந்த வைணவருக்கும் சந்தேகம் கிடையாது. எந்த வைணவரும், தாங்கள் ‘அடியேன் இராமானுஜ தாசன்’ என்றுதான் மற்ற வைணவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். நீங்க சொல்வது, இராமானுசர் காலத்துக்கு 200-300 வருடங்களுக்குப் பிறகானது. அதை இருவேறு school of thought என்றுதான் நாங்கள் இப்போதும் நினைக்கிறோம். அதனால் கடந்த 200 வருடங்களுக்கு உள்ளாக விளைந்த அனர்த்தங்கள் வேறு.

      //தமிழில்தான் பாடப்படவேண்டும் என்ற விதி// – இதுவும் முற்றிலும் தவறானது. உங்களுக்குத் தெரியணும் என்பதற்காகச் சொல்லுகிறேன். வைணவ சம்பந்தமாக இராமானுசர் தமிழில் எந்த க்ரந்தமும் எழுதவில்லை. வடமொழியில்தான் எழுதினார். ஆனால் ப்ரபந்தங்களின் அர்த்தங்களை தன் சீடர்களை விட்டு எழுதச்சொன்னார். ஆகமம் என்பது வேறு, ப்ரபந்தங்கள் என்பது வேறு. இது ஒரு பெரிய சப்ஜெக்ட்.

      வைணவத்தில், அதன் ஆச்சார்யர்களில் உங்களுக்கு எந்தச் சந்தேகம் இருந்தாலும் கேளுங்க. தெளிவுபடுத்துகிறேன்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      உங்கள் அளவிற்கு நான் (வைணவ)சமய
      சம்பிரதாயங்கள் பற்றி தெரிந்தவன் அல்ல.

      பொதுவாகவே எனக்கு சமய சடங்குகளில்
      ஆர்வமும் இல்லை… சமயங்கள் பற்றிய
      என் பார்வை -வேறு.

      நீங்கள் சுகி-சிவம் உரையைப்பற்றி
      குறை சொன்னதால் நான் இதை
      எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
      நீங்கள் வைணவத்தில் எல்லாம்
      அறிந்தவராக இருக்கலாம். அது உங்கள்
      ஆர்வம்.

      ஆனால், சுகி-சிவத்திற்கு உள்ள தெளிவில்
      பத்தில் ஒரு பங்கு நமக்கெல்லாம்
      இருந்தால் அதுவே அதிசயம் தான்.
      அவர் கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலென்ன…?
      ( அர்ச்சனை சீட்டிற்கு ஆகம விதிகளில்
      இடமுண்டா…? நினைத்த நேரங்களிலெல்லாம்
      அர்ச்சனை செய்ய முடியுமா…? )

      சரி – விஷயத்திற்கு வருவோம்.
      ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு “கோயிலொழுகு”
      ஏற்படுத்தியவர் யார்…?

      அந்த கோயிலொழுகு தானே
      பிரபந்தப்பாடல்களை முறையாக
      எந்தெந்த சந்தர்ப்பங்களில், எப்படிப்பாட
      வேண்டும் என்பதை நிர்ணயித்தது…?
      அது தானே இன்றுவரை தொடர்கிறது…?

      நாராயண சேவைக்கு என்று 75 பேரை
      நியமித்தது யார்…?

      ராமானுஜர் தான் இவற்றையெல்லாம்
      முறைப்படுத்தினாரென்று சுகி சிவம்
      சொன்னதில் என்ன தவறு…?

      ————————
      அது சரி –
      // வைணவ சம்பந்தமாக இராமானுசர்
      தமிழில் எந்த க்ரந்தமும் எழுதவில்லை.
      வடமொழியில்தான் எழுதினார்.//

      – என்று தேவையில்லாமல் இங்கே ஒரு
      விஷயத்தை எழுப்புகிறீர்களே.
      ராமானுஜர் தமிழில் எழுதினார் என்று
      சிவம் சொன்னாரா….இல்லை நான் தான்
      சொன்னேனா…? இங்கே இந்த வார்த்தை
      எதற்கு…?
      ————————

      ராமானுஜர் அனைத்து ஜாதியினரையும்
      அனுமதித்ததை இன்றும் ஏற்றுக்கொள்ளாத
      வைணவர்கள் இருப்பதை நீங்கள்
      அறிய மாட்டீர்களா…?

      ராமானுஜ தாசன் என்று
      சொல்லிக்கொண்டால் போதுமா…?
      ராமானுஜரை குருவாக/ஆச்சாரியராக
      ஏற்றுக்கொண்டவர்கள், அவரது
      கொள்கைகளையும்-லட்சியங்களையும்,
      பார்வையையும் அப்படியே
      ஏற்றுக்கொள்கிறார்களா…?
      கடைபிடிக்கிறார்களா…?

      ராமானுஜருக்குப் பிறகு வந்தவர்கள்,
      பிற ஜாதியினரை ஏற்றுக்கொண்டனரா…?

      இன்றைய தினம், ஸ்ரீரங்கத்தின் எந்த
      மடத்திலாவது (வைஷ்ணவ) பிராம்மணர்களைத்
      தவிர வேறு யாருக்கேனும் இடமுண்டா…?

      கோவில் கைங்கரியங்களில்,
      வைஷ்ணவ பிராம்மணர்களைத் தவிர,
      வேறு யாருக்காவது –
      (அவர்கள் வைஷ்ணவர்களாகவே
      இருந்தாலும் கூட ) –
      இடம் உண்டா… ?

      குறுகிய மதப்பற்று, விசாலமாக
      விரியவேண்டிய பார்வையையும்,
      எண்ணங்களையும், பல சமயங்களில்
      குறுக்கி விடுகிறது…

      கல்கி’யின் ஆழ்வார்க்கடியார்களை
      இன்றும் கூட நான் ஸ்ரீரங்கத்தில்
      மட்டுமல்லாமல், வெளியிலும்
      பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் …!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      .

     • புதியவன் சொல்கிறார்:

      You haven’t understood the point கா.மை. சார். சுகி சிவம் இதைப்பற்றிச் சொன்ன அந்த வரி தவறுதான். //கடவுளிடம் நெருங்க தாய்மொழி தான்
      சரியான சாதனம் என்பதை முதலில் உணர்த்தியவர்
      ராமானுஜர் தான்…// – This is absurd.

      இதைப்பற்றி விவரமாக அறியாமல், குறுகிய விவாதப் பொருளாக நீங்கள் எடுத்துக்கொள்வதால் இதனை விரிவாக எழுதுவது வீணாகிவிடும்.

      இராமானுசர் வைணவ அடியார்கள் என்ற விதத்தில் அனைவரையும் (சாதி பேதமின்றி) ஒருங்கிணைத்தார். அதை ஒருங்கிணைக்க, அவரே மிகவும் கஷ்டப்படவேண்டியிருந்தது. திருவரங்கத்தில் கோயில் வழிபாட்டு அர்ச்சகருக்கே, வழிபாடுகளை முறைப்படுத்துவதில் இஷ்டமில்லை. திருவரங்கத்தில், இராமானுசருக்கு உணவில் விஷம் கலக்கப்பட்டது. இது எல்லாம், சமூக வழக்கத்தில் தர்மத்தை நிலைநாட்ட முற்றிலும் புதிய பார்வை கொண்ட (என்னைப் பொருத்தவரையில் இறையருள் மிகக் கொண்ட) ஒருவர் முயலும்போது, அதனால் பாதிக்கப்படுகிறோமோ என பழையவழக்கங்களிலேயே இருப்பவர்கள் நினைப்பது இயல்பு. (In history you can see various examples). உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். ப்ரபந்தம் படைத்தவர்கள் ஆழ்வார்கள், சைவத் திருமுறைகள் படைத்தவர்கள் நாயன்மார்கள். இருவரிலும் பல சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். ஆழ்வார் என்று மட்டும் குறிப்பிட்டால் அது நம்மாழ்வாரை மட்டுமே குறிக்கும். அவர் வேளாளர் சாதி. அரங்கனை மட்டுமே பாடியவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் (விப்ரநாராயணர், சோழிய பிராமணர்). அவர் எழுதிய திருமாலையில்,

      அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி
      தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும்
      நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே
      அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே

      என்கிறார். வைணவ அடியார்களிடத்தில் சாதி பேதம் இருக்கவே கூடாது என்கிறார். இராமானுசர் செய்தது மிக மிகப் பெரிய சமூக மாற்றம் (வைணவத்திற்கு). அதை நினைத்தே பார்க்க இயலாது. இராமானுசரை தங்கள் குருவாக ஏற்றுக்கொள்ளும் அனைத்து வைணவர்களும் அவர் சொன்னதை அப்படியே மனதில் கொண்டு ஒழுகுகிறார்களா என்றால் இல்லை. கடவுளைக் கும்பிடுகிறவர் எல்லோரும் மற்ற எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்கிறார்களா என்று கேட்பதைப் போன்றது இது.

      கோயிலொழுகு என்பது பற்பல சரித்திரங்களையும், கோவிலில் நடைபெறும் நடைமுறைகளையும் over a period of time தொகுத்தது. இது 6ம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே வருவது என்பது என் எண்ணம்.

      //அர்ச்சனை சீட்டிற்கு ஆகம விதிகளில் இடமுண்டா…? நினைத்த நேரங்களிலெல்லாம் அர்ச்சனை செய்ய முடியுமா…? // – இது புதிதாக நீங்கள் எழுப்பும் கேள்வி. ஆகம் விதிகளில் இல்லாத பலப் பல நடைமுறைகள் அனேகக் கோவில்களில் நடைபெறுகின்றன. கோவில்கள் commercial ஆகிவிட்டது. அரசியலும் கடுமையான அளவில் கோவில்களில் நுழைந்துவிட்டன. நான் (பல பக்தர்களும்தான்) இதில் எல்லாம் கவனத்தைச் செலுத்தாமல், இறைவனை வணங்கிவிட்டு வருவதோடு சரி.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      .

      புதியவன்,

      —————–
      ” இராமானுசர் வைணவ அடியார்களிடத்தில்
      சாதி பேதம் இருக்கவே கூடாது என்கிறார்.

      இராமானுசரை தங்கள் குருவாக
      ஏற்றுக்கொள்ளும் அனைத்து வைணவர்களும்
      அவர் சொன்னதை அப்படியே மனதில்
      கொண்டு ஒழுகுகிறார்களா என்றால் இல்லை.”
      —————–
      நான் சொல்ல வந்தது இதையும் தான்…
      நீங்களே இப்போது ஒப்புக்கொள்கிறீர்கள்..


      ராமானுஜரின் அடிப்படைக் கொள்கையையே
      ஏற்காதவர்கள்,

      “நான் ராமானுஜ தாசன்; ராமானுஜர்
      தான் என் ஆசார்யர்”

      என்று பெருமை கொள்வது
      எந்த அளவிற்கு சரி …?

      – நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்…
      இந்த பின்னூட்டங்களை படிப்பவர்களும்
      சிந்திக்கட்டும்.
      ———————

      இத்துடன் இந்த பொருளில்
      விவாதம் போதும் என்பது என் கருத்து.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      .

    • புதியவன் சொல்கிறார்:

     உங்களுக்கு இன்னும் நான் சொல்லவந்தது புரியவில்லை. பட்டவர்த்தனமாக எழுதுகிறேன். உங்களைப் போல உள்ளவர்கள் சிந்தித்துக்கொள்ளட்டும். மறுமொழி தேவையில்லை.

     இறைவன், இத்தனை சாதிய முறைகளை வகுத்தானா? அவன், இந்த இந்தச் சாதி மோசமான சாதி, இந்தச் சாதியில் உள்ளவர்கள் இவர்களைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறானா? ஒவ்வொருவரும் சொத்து சேர்த்துக்கொள்ளணும் என்று சொல்லியிருக்கிறானா? இன்னும் என்ன என்ன மாதிரி நடந்துகொள்ளவேண்டும் என்று தன் அவதாரத்தின்போது சொல்லியிருக்கக்கூடும்.

     நான் கேட்பது… ‘நான் இறை நம்பிக்கை உள்ளவன்’ என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும், அந்த இறைவன் சொன்னதைச் செய்கிறார்களா? தங்கள் மகளுக்கு மகனுக்கு, சாதி பார்க்காமல் தாங்களே முன் வந்து சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் சாதியினரை அல்லது தங்களைப்போல் படித்த ஆனால் அடித்தளத்தில் அல்லது தங்கள் சாதி/சமூகம் இல்லாதவரை திருமணம் செய்துகொடுக்கத் தேடுகிறார்களா? சொத்து சேர்க்காமல் இருக்கிறார்களா?

     இப்படிச் செயல்படாமல், தாங்கள், ‘இறை நம்பிக்கை உள்ளவர்கள்’ என்று சொல்லிக்கொள்ள என்ன rights இருக்கு?

     இதைப் படிப்பவர்கள் இதனைப் பற்றிச் சிந்திக்கட்டும்.

     நான் personalஆக நினைப்பது, நம் இறை நம்பிக்கைகள், நம் சமூக/சாதி நம்பிக்கைகளைத் தொடாத வரை, strongஆக பெரும்பாலானோர்க்கு இருக்கிறது. எப்போது அது சாதி நம்பிக்கைகளைத் தொடுகிறதோ, அப்போது நாம் இறை நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டு, சாதி/சமூக நம்பிக்கைகளைக் கைக்கொள்ளுகிறோம். இது இயல்பாக நம்மிடம் (பெரும்பாலானவர்களிடம்) இருக்கு. சாதி மாற்றித் திருமணம் செய்துவைத்தவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வேறு வழியில்லாமல் செய்துவைத்திருக்கிறார்கள். சாதி பற்றிக் கவலை இல்லை என்று சாதி அடித்தளத்தில் மேற்பகுதியில் (சமூக அமைப்பின்படி) இருப்பவர்கள் சொல்வது மிக மிக அபூர்வம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.