ஒரு அசுர சாதனை…..!!!

….
….

….

….


….

தமிழ் இலக்கியத்தில் இது ஒரு அசுர சாதனை…

இதுவரை யாருமே செய்யாத ஒன்று;
செய்ய முடியும் என்றுகூட யாரும் நினைத்துப்பார்க்காத
ஒரு விஷயம்.

சுமார் 25,000 பக்கங்கள் கொண்ட ஒரு நாவல்.
உலகில் இதுவரை வெளிவந்தவற்றிலேயே பெரிய நாவல்.
அதுவும் அற்புதமான, முற்றிலும் மாறுபட்ட ஒரு
தமிழ் நடையைக் கொண்ட ஒரு தொடர் நாவல்.

தினம் ஒரு அத்தியாயமாக 2013-ல் துவங்கி,
2019-வரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் தொடர்ந்து
எழுதி முடித்து இறுதியில் 26 புத்தகங்களாக
வெளியிட்டிருப்பது எப்பேற்பட்ட சாதனை…!

திரு.ஜெயமோகன் அவர்களின் அற்புதப் படைப்பான
“வெண் முரசு” நாவலைத்தான் சொல்கிறேன் என்பதை
புரிந்து கொண்டிருப்பீர்கள்… முழுவதும் முடியாவிட்டாலும்,
பாதியாவது படித்துவிட்டு, இந்த தளத்தில் அதைப்பற்றி
எழுத வேண்டுமென நினைத்திருந்தேன்.

ஆனால்…. முடியவில்லை; புதிய நடையில் இருப்பதால்,
அந்த தமிழை ரசித்துப்படிக்க அதிக நேரம் பிடிக்கிறது.
படித்து விட்டுத்தான் எழுதுவது என்று வைத்துக்கொண்டால்,
இதைப்பற்றி எழுத அதிக காலம் பிடிக்கும் என்பதால்
இப்போதே எழுதி விடுகிறேன். இந்த நாவலை
என்வாழ்நாளில் முழுவதுமாக படித்து முடிக்க முடியுமா
என்று தெரியவில்லை; படிக்கவே இவ்வளவு நேரம் பிடிக்கும்
இதைப்படைக்க ஜெயமோகன் எவ்வளவு நேரம்
சிந்தித்திருக்க வேண்டும்…. தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும்..!

இத்தனைக்கும், இதே காலகட்டத்தில், இதைத்தவிர
வேறு பல செயல்களிலும் ஈடுபட்டிருந்தார் ஜெயமோகன்.
வழக்கம்போல் தனது வலைத்தளத்தில் எழுதுவது,
இடையில் கொஞ்சம் சினிமா -கதை,வசனம்.., சுற்றுப்பயணம்,
இலக்கிய மேடைகளில் பேச்சு என்று….

மஹாபாரதத்தை புதிய கோணத்தில் அணுகி,
“வெண்முரசு” தமிழ் நாவலாகப் படைத்திருக்கும்
ஜெயமோகன் அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின் சார்பாக
உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும்
தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த தருணத்தில், வெண்முரசு நாவல் தொகுப்பின்,
முதல் பகுதி வெளியீட்டு விழாவில்- 2014-ல்
கமல்ஹாசன், ஜெயமோகன், இளையராஜா ஆகியோர்
உரையாற்றும் ஒரு காணொலியையும் இங்கு
பதிவிடுவது பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறேன்.

…………

………….

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஒரு அசுர சாதனை…..!!!

  1. Kamalan சொல்கிறார்:

    Great effort. Please introduce the discussion forum as well. It gives the readers different perspectives and give a feel like group reading.

    http://venmurasudiscussions.blogspot.com

  2. புதியவன் சொல்கிறார்:

    இதைப் படித்த பிறகு வெண்முரசு சில பல அத்தியாயங்கள் படித்தேன். நல்லா எழுதியிருக்கார். மனுஷன் எவ்வளவு எழுதிக் குமித்திருக்கிறார். எழுத்துக்குச் சிந்தனை வேண்டும். சிந்தித்து எழுதினால் ஒரு நாளைக்கு சில பக்கங்கள் எழுதலாம். இவ்வளவு பெரிய நாவலா? அதைத் தவிர நிறைய எழுத்துக்கள். நினைத்துப்பார்க்கவே இயலவில்லை.

    பத்மஸ்ரீ பட்டத்தை மறுத்திருக்கக்கூடாது. அதற்கு மேலும் அவருக்கு விருதுகள் கிடைக்கணும். காலம், மறுத்ததை நினைவில் வைத்திராது. தகுதியில்லாதவர்களெல்லாம் விருதுகளை சிரித்துக்கொண்டே வாங்கிக்கொள்ளும்போது தகுதியுள்ள ஜெயமோகன் அவர்கள் எந்த விருதையும் மறுக்கக்கூடாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.