வைரமுத்து வலையில்(வழியில்…?) திருமா…???

….
….

….

திருமாவையும் தன் வரிசையில்
சேர்க்கிறாரே “மீடூ” வைரமுத்து அவர்கள்…!!!

வை.மு.வின் இன்றைய ட்வீட் செய்தி –

“திருமா வளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே –
அவன் அரிமா போலே ஆர்த்த கருத்தும்
அரிவையர் வாழ்வதற்கே –
அதை அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது
அரசியல் செய்வதற்கே –

—————–

எந்தவித சந்தேகமுமின்றி –

திருமா செய்வதும் அரசியல் தான்…
அதை எதிர்ப்போர் செய்வதும் அரசியல் தான்…
இரண்டுமே அழிம்பு தான்…!

இவை எதுவுமே இன்றைய சூழ்நிலையில்
தேவையேயில்லாத வீண் வம்புகள்…

ஆனால் அரசியல்வாதிகளுக்கு –

தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் –
செலவில்லாமல் விளம்பரம் தேடும் முயற்சிகள்…!

தன் ட்விட்டர் செய்தியில் –
முதல் 4 வரிகளில் திருமாவுக்கு
ஆதரவு தெரிவிப்பது போல் எழுதிவிட்டு –

கடைசி வரியில் தன்னை தர்மபுத்திரன் வாரிசாக
தானே “ப்ரமோட்” செய்துகொள்கிறாரே அய்யா வை.மு.

——————–

“நாம் (..? ) நெறியின் (..? ) வழியே
நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே”

——————–

அரிவையர் வாழ்வதற்காக (……!!!! )

வைரமுத்து அவர்கள் நெறியின் வழியே நடக்கிறாராம்…
அதுவும் நீதி நிலைப்பதற்காக நீண்ண்ண்ண்ண்டு நடக்கிறாராம்…

அதே வழியில் தான் இப்போது திருமா-வும் நடக்கிறாராம்…!!!

வை.மு.வோடு “மீடூ” வழியில் சேர்ந்து விட்டதற்கு
திருமா-விற்கு வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டுமா……
அல்லது அய்யோ பாவம் சொல்ல வேண்டுமா…?

.
———————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to வைரமுத்து வலையில்(வழியில்…?) திருமா…???

  1. GOPI சொல்கிறார்:

    வை.முத்துவோடு சேர்த்து பேசப்படுவதே
    திருமாவுக்கு அசிங்கம்.

  2. புதியவன் சொல்கிறார்:

    வயிரமுத்துவுக்கு வேற வேலையில்லை. எப்படியாவது காசு கொடுத்து தனக்கு விளம்பரம் தேடிக்கொள்வதே வேலையாக வைத்துள்ளார். திருமா பேசியது தன் எஜமானர்களைத் திருப்திப்படுத்த. இதே வார்த்தைகளை மற்ற மதத்தை நோக்கிப் பேசினால் மறுநாளே அரிவாள் வெட்டு விழும், தன் ஆதரவுத்தளமும், பணம் கொடுப்பவர்களும் மறைந்துவிடுவர் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், சந்தடி சாக்குல, ஒண்ணாம் நம்பர் அயோக்கியர், தானும் நல்லவர் என்று வேடம் போட நினைப்பது வயிரமுத்துவுக்கே உரிய போக்கிரித்தனம்தான்.

    ‘தலைவர் அவர்கள் மிக நல்லவர். என்னைப் போலவே நேர்மையும் நீதியும் உடையவர்’ என்று சொன்னால், கூட்டத்தில் தலைவர் அடிக்கவா போறார் என்ற நெஞ்சுரம்தான் வயிரமுத்துவை இப்படிப் பேச வைக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.