இலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…?

….
….

….

இணையத்திலிருந்து இலவசமாக
சில ஆலோசனைகள் கிடைத்தன…!!!

சுவாரஸ்யமானவை தான்.

இதில் என்னால், எதெதை கடைபிடிக்க முடியும்….?
(யோசித்துப் பார்த்தேன் …அடைப்புக் குறிக்குள் தந்திருக்கிறேன்…)

உங்களுக்கும் அவை உதவக்கூடும்.
எனவே அவற்றை கீழே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

(நீங்களும் யோசியுங்களேன்…உங்களால் எதெதை செய்ய முடியும்…
உங்களுக்குள் மாற்றம் எதாவது தேவைப்படுகிறதா…? முடியுமா…? )

———————————–

– ஒவ்வொரு நாளும் குறைந்தது
மூன்று பேரையாவது பாராட்டு…

( இதில் கஞ்சத்தனமே எனக்கு கிடையாது;
பொதுவாகவே தாராளமாகப் பாராட்டும் வழக்கம் உண்டு.
கொரோனா காலம்; வெளி மனிதர்களை சந்திக்க முடிவதில்லை;
தொலைபேசியில் உண்டு…!)

– மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

( வாய்ப்பு கிடைப்பதில்லை…
இரவு 2 மணிக்கு மேல் தான் படுக்கிறேன்.
எனவே, எழுந்திருக்க 7 மணி ஆகி விடுகிறது…
சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுந்திருக்க
முயற்சி செய்ய வேண்டும்…!!! )

– ‘நன்றி’, ‘தயவுசெய்து ‘- இந்த வார்த்தைகளை
முடிந்தவரை அதிகம் உபயோகி.

( நிச்சயமாகச் செய்து கொண்டிருக்கிறேன்…
எல்லாரிடத்தும்… எப்போதும்….
மனைவியிடத்தில் குறைந்த பட்சம்
ஒரு நாளைக்கு 10 தடவையாவது….!!! )

– உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

(கரெக்ட்… மிக எளிமையான வாழ்க்கை தான் வாழ்கிறேன்..)

– உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று
விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

(இதையும் எப்போதுமே செய்துகொண்டிருக்கிறேன்…)

– ரகசியங்களைக் காப்பாற்று.

( முடிந்தவரை – என்னிடம் ரகசியங்களே
வேண்டாமென்று நினைக்கிறேன். என்னிடம் தங்கிவிட்ட
மற்றவர்களின் ரகசியத்தை அவசியம் காப்பாற்றுகிறேன்…)

– நல்ல நண்பர்களைத் தேடிக்கொள்:
பழைய நல்ல நண்பர்களை மறந்துவிடாதே.

( அவசியம் செய்கிறேன்.. ஆனால், புதிய நண்பர்கள்
கிடைப்பது அரிதாக இருக்கிறது…!!!)

– உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
(அவசியம் செய்கிறேன்…)

– தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க
முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி..

(ஊஹூம்… இது முடியாது; என்னால் நடிக்க முடியாது;
இயல்பாகவே இருப்பேன்… அநேகமாக தைரியமாக…!!! )

– ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே.

( இல்லை; ஏமாற்றுவதில்லை…!)

– கவனிக்கக் கற்றுக்கொள்.
சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

(புரிகிறது…)

– கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
(இது எப்போதும் சாத்தியமில்லை….பழக வேண்டும்…! )

– உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
(ஊஹூம் – இயற்கையாகத் தான் இருப்பேன்…
என்னை பார்ப்பவர்கள் என் நிஜத்தை புரிந்துகொள்ளட்டும்…)

– மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ
சந்திக்க செல்லும்போது காரணத்துடனும்
நம்பிக்கையுடனும் செல்.

( ஓய்வு – எனவே, மேலதிகாரிகள் பிரச்சினை இப்போது இல்லை…
பெரியவர்களை சந்திக்க காரணம் எதற்கு…?
அன்பும், மரியாதையும் போதுமே… )

– ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
( பல சமயங்களில் கொஞ்சமாவது முன்னதாகவே
கொடுத்து விடுவது தான் என் வழக்கம்…! )

– வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
(வதந்தி – இல்லை;
வம்பு – நானாகப் பேச மாட்டேன்;
பிறர் சொன்னால் சில சமயம் கேட்டுக்கொள்வேன்…)

– போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
(எனக்கு போரும் வேண்டாம் ; சண்டையும் வேண்டாம்…! )

– ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.
பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

(என்னிடம் யாராவது எதையாவது எதிர்பார்த்தால்,
என்னால் அதை மறுக்க இயலாது…)

– வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
(இத்தனை வயதுக்குப் பிறகும் இதை உணரவில்லை
என்றால் எப்படி…? )

– பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

(யெஸ்… இதில் நான் யோசிப்பதே இல்லை;
எப்போதுமே நம்பர் ஒன் தான்…
அரிசி, மளிகை, காய்கறி, காப்பிப்பொடி…etc… போன்றவற்றில்…

துணிமணி – எளிமையானதையே தேர்ந்தெடுப்பேன்.
ஆனால் – விலைஉயர்ந்த, எலெக்ட்ரானிக் பொருட்கள்
என்று வரும்போது, பட்ஜெட் தான் முடிவு செய்யும்…!!! )

– எனக்குத் தெரியாது’, மன்னிக்கவும்’,
என்பதை சொல்லத் தயங்காதே..!!

(யெஸ்… தெரியாத விஷயம் என்றால் – தெரியாது தான்.
தெரியாததையெல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்வது
அபத்தம் என்பது என் கருத்து. எல்லாருக்கும் எல்லாமும்
தெரிந்திருக்க முடியாது; அவசியமும் இல்லை…

-தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்க என்றும் தயக்கமில்லை…)

—————————

என்ன நண்பர்களே,
படிக்கத் துவங்கும்போதே, சுய ஆராய்ச்சியையும்
துவங்கி இருப்பீர்களே…!!!
சுய எடைபோடல் – சுவாரஸ்யமாக இருந்ததா…?

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…?

 1. M.Subramanian சொல்கிறார்:

  எல்லாமே சூப்பர் சார்
  ( நீங்கள் தேர்ந்தெடுத்து போட்டிருக்கும்
  சித்திரம் உட்பட ).

 2. புதியவன் சொல்கிறார்:

  பிறரை பாராட்டு – இந்த குணம் எனக்கு இல்லை. கடந்த ஓரிரு வருடங்களாகத்தான் மிகச் சிறிதாக மாறியிருக்கிறேன். எனக்கு இயல்பாக அமைந்த குணம் ‘தவறுகள்’ கண்ணில் படுவதுதான். நான் ஒன்றும் சொல்லாவிட்டால் அது பாராட்டு, ரெகக்னிஷன் என்று நான் தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

  வேலை செய்யுமுன் கூலி கொடுக்காதே – இதை அலுவலகத்திலும் மற்ற இடங்களிலும் கடைபிடித்தேன். இப்போதும் கடைபிடிக்கிறேன். கூலி முழுமையாகக் கொடுத்துவிட்டால் செய்கிறவர்கள் சரியாகச் செய்வதில்லை, அரைகுறையாக விட்டுவிட்டுப் போவதைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

  அது சரி…

  //யாராவது எதையாவது எதிர்பார்த்தால், என்னால் அதை மறுக்க இயலாது…// – நான் எதையும் உடனே சரி என்று சொல்வதில்லை. ரொம்பவே நேரம் எடுத்துக்கொள்வேன். அதுவும் பசங்க அதுவேணும் இது வேணும் என்று கேட்டால் உடனே பதில் சொல்ல மாட்டேன். பார்க்கலாம் என்பதோடு நிறுத்திக்கொள்வேன்.

  உங்களை சந்திக்க நினைத்தேன்… வாய்ப்பு கிடைக்கவில்லையே

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   ரொம்ப ஹானஸ்ட்’டாக –
   மிகவும் வெளிப்படையாக உங்களைப்பற்றிய
   சுய மதிப்பீட்டை வெளியிட்டிருக்கிறீர்கள்.
   பாராட்டுகிறேன்.

   // உங்களை சந்திக்க நினைத்தேன்…
   வாய்ப்பு கிடைக்கவில்லையே //

   அது அப்போதைக்கான தற்காலிக முடிவு தானே.
   எதிர்காலத்தில் என்ன நடக்குமோ –
   யார் கண்டது…!!! எதையுமே முடிவான முடிவு
   என்று நினைப்பதற்கு நமக்கேது அதிகாரம் ..!!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.