இனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… !!!

….
….

….

பிரதமர் பேசுவதைக் கேட்க தமிழ்நாட்டு மக்கள் எப்போதும்
ஆவலுடன் கூடுகிறார்கள். ஆனால்
பிரதமர் ஹிந்தியிலேயே உரையாற்றுவதால் – அவர் பேசுவதை
நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே
என்று கவலைப்பட்ட தமிழ் மக்களின் குறை இப்போது
தீர்ந்து விட்டது.

பிரதமர் நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு விட்டார் – என்று தெரிகிறது.

தொலைக்காட்சியிலேயே இன்று காட்டினார்கள்…தமிழ்நாட்டில்,
தூத்துக்குடியில் முடித்திருத்தும் நிலையம் நடத்தி வரும் பொன்
மாரியப்பன் என்பவரிடம் –

அவர் தமிழிலேயே கேள்விகள் கேட்டார். சலூன் கடைக்காரர்
சொன்னதை புரிந்துகொண்டு, மேற்கொண்டும் தமிழிலேயே
தொடர்ந்து உரையாடினார் ….. இந்நாள் வரை, அவர் பேச்சை
கேட்க ஆவலுடன் காத்திருந்து, புரியாமல் தவித்த தமிழ் மக்களின்
மிகப்பெரிய கவலை தீர்ந்தது..

இனி தமிழ்நாட்டுக்கு வரும்போது ஹிந்தியில் பேச மாட்டார்…
தமிழிலேயே பேசுவார்….மகிழ்ச்சியான செய்தி….!!!

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… !!!

 1. கார்த்திகேயன் சொல்கிறார்:

  வஞ்சபுகழ்ச்சியணி மாதிரி தெரியுதே

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அது என்ன அணி கார்த்திகேயன்…???
   நான் எந்த அணியிலும் இல்லையே…!!!

   உங்களுக்கு வேறு மாதிரி தோன்றுகிறதா என்ன…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  மொழியை விடுங்கள். நம்ம ஸ்டாலினும்தான் தமிழில் பேசிகிறார், திருமா தமிழில் ஏசுகிறார். இதனாலெல்லாம் தமிழக மக்களுக்கு என்றேனும் பயன் கிடைத்ததா? இந்தச் செய்திகளெல்லாம் என்னைக் கவர்வதில்லை.

  சமீபத்தில் ஒரு சர்வே பாஜக ஆதரவாளர்களால் வலம் வருகிறது. அடுத்த ஆட்சி (தமிழகத்தில்) யாருடையதாக இருக்கவேண்டும் என்பதற்கு தமிழக மக்கள் வாக்களித்தார்களாம் (ஆன்லைனில்). திமுக 43000 வாக்குகள் பெற்று 36 சதவிகிதம், பாஜக 18,000 வாக்குகள் பெற்று 15 சதவிகிதம், அதிமுக 15,000 வாக்குகள் பெற்று 13 சதவிகிதம், நாம் தமிழர் 12,000 பெற்று 10 சதவிகிதம் என்றெல்லாம் போட்டிருந்தது. பக்கத்தில் எங்க இரும்புத் தூண் இருக்கு, முட்டிக்கலாம் என்று தோன்றியது. நான் அதிமுக 30-40 சீட்டுகளாவது பிடிக்கும் என்று நினைத்தேன். இப்போ பார்த்தால் பாஜக 50-60 சீட்டுகள் பிடிக்கும் (அதிமுகவை விட அதிகமாக) அப்படீன்னு பாஜக கட்சியே சொல்றாங்க போலிருக்கு. பாவம் ஸ்டாலின்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இப்படி ஆன்லைன் சர்வே எடுத்து
   பஜனை பாடுவதை விடுத்து விட்டு –

   வருகின்ற தேர்தலில் பாஜக தனியாக
   நின்று, தனக்கு எத்தனை பர்சென்டேஜ்
   ஓட்டு விழுகிறது என்பதை தெரிந்து
   கொள்வது – அவர்களுக்கும் நல்லது,
   தமிழக மக்களுக்கும் நல்லது…!!!

   திருவாளர் ஸ்டாலின் – நாளுக்கு நாள்,
   மணிக்கு மணி – பேசுவதைப் பார்த்தால்,
   மே மாதம் வரை எல்லாம் அவரால்
   காத்திருக்க முடியாது என்று தோன்றுகிறது.

   ஒரு நாள் திடீரென்று கோட்டைக்குள் புகுந்து,
   எடப்பாடி சார் வருவதற்கு முன்பாக போய்,
   அவர் சீட்’டில் உட்கார்ந்துகொண்டு,
   நகர மாட்டேனென்று சொன்னாலும் சொல்லலாம்.

   எனவே, இது முற்றுவதற்கு முன்னர் –
   எடப்பாடி அவர்கள் இப்போதே,
   தானாகவே முன்வந்து,
   ஸ்டாலின் அவர்களை தன் சீட்டில்
   உட்கார வைத்து அழகு பார்த்து விட்டு,

   அவர் பக்கத்து அறையில் அமர்ந்து,
   ஆட்சி/நிர்வாகத்தை கவனிக்கலாம்.
   வெய்யில் காலம் வரும் முன்பே
   அவர் தீவிரமாக இது குறித்து
   யோசித்து முடிவெடுப்பது நல்லது…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    பாஜக தனியாக நிற்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவங்களும் மூழ்கி (எப்படியும் மூழ்குவாங்க), அதிமுகவையும் ஏன் மூழ்கடிக்க வேண்டும்? இல்லை… தமிழர்களுக்கு நன்மை செய்யணும்னா, அவங்க திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவேண்டும். அப்போ இந்த ‘அதாவது.. அதாவது… வந்து… அதாவது’ முதலமைச்சர் இல்லாம நாமளாவது நிம்மதியா இருக்கலாம்.

    எவ்வளவுதான் களம் சாதகமாக இருந்தாலும், கிடைக்காது என்பது எவ்வளவு முயன்றாலும் கிடைக்காது. கிடைக்கும் என்பதற்கு 360 கோடி செலவழித்து (பி.கே டீமுக்கு) முயன்று கிடைத்தாலும் அதில் என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? ரேஷன் கடையிலெல்லாம் முற்றுகையிட்டு திமுகவுக்கு ஆட்கள் சேர்ப்பதனால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது?

    ஸ்டாலின் இதுவரை பேசியது ஒரே ஒரு கருத்துத்தான். தமிழக மக்கள் எப்படா எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது என்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தையே மூணு வருஷமா தினமும் சொல்லிக்கிட்டிருக்கார். ஆனா இடைத்தேர்தல்லதான் அப்படி தவித்துக்கொண்டிருக்கிற ஜனங்கள் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்துக்கு விடுமுறைக்காக தேர்தல் நடக்கும் சமயத்தில் போயிருக்காங்க என்பது தெரிகிறது.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தமிழகத்தில் பா ஜ க வருவது இயலாது என்று தோன்றுகின்றது .
  காரணம் – நுணலும் தன வாயால் கெடும் .
  பா ஜ க என்று சொல்லிக்கொண்டு ஊடகங்களில்
  வருபவர்களின் ஆணவப் பேச்சு .

  இன்று வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது இல்லை .
  67 க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி இங்கு கிடையாது .
  தேசிய கட்சி என்று ஒரு மரியாதை பா ஜ க இழந்து விட்டது .

  இன்று ஜெயா , மு .க போன்றவர்கள் இல்லை .
  அதனால் தமிழ்நாட்டில் வெற்றிடம் என்று சொல்ல முடியாது .

  சமூகநீதி – தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்
  இடஒதுக்கீடு !
  வேறு கொள்கை எதுவும் கிடையாது .

  அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது , காசு கொடுத்து
  அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துதல் ,
  நில ஆக்கிரமிப்பு போன்றவை இங்கு யாரும்
  தவறு என்று சொல்வதில்லை .

  அதே போல் கந்து வட்டி வாங்குவது , அப்புறம்
  சொத்தை அடித்து பிடுங்குவது இன்று சாதாரணம்

  குறுக்கு வழியில் அறிக்கை விட்டு வர முடியாது .
  நீண்ட கால திட்டம் தேவை !
  தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு என்ற ஆயுதத்தை
  பா ஜ க கையில் எடுத்தால் பதவிக்கு வர இயலும் .
  ஊழலற்ற நல்லாட்சி என்பது நன்றாக எடுபடும் .

  இந்தி திணிப்பு என்பதை கை விட வேணும் .

  • புதியவன் சொல்கிறார்:

   //இந்தி திணிப்பு என்பதை கை விட வேணும் .// – இது தமிழகத்துக்கான செண்டிமெண்ட், மற்ற மாநிலங்களிலும் மாநில மொழி புறக்கணிக்கப்படுது என்ற கருத்து தோன்றினாலே ஆபத்தாகிவிடும்.

   நீங்க சொல்ல மறந்தது, இத்துப்போன நடிகைகள் (பொதுவாக மட்டமான குணங்கள் உடையவர்கள் என நாம் நினைப்பவர்கள்…உதாரணமா வனிதா போன்றவர்கள்) கட்சிக்குள் நுழைவதைத் தடை செய்யணும். இவங்களால பேர்தான் கெட்டுப்போகும். காயத்ரி, கெளதமி போன்றவர்களால பாஜகவுக்கு 1/2 வாக்குகள்கூட அதிகமாகக் கிடைக்காது.

   தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், இட ஒதுக்கீடு, மத சம்பந்தமான வெளிப்படையான காம்ப்ரமைஸ்கள், போன்றவைகளில் ஜாக்கிரதையாக இருக்கணும்.

   லஞ்ச ஒழிப்பு – இதை எடுத்தால் எந்த அரசு ஊழியரும் வாக்களிக்க மாட்டார். பெரும்பாலும் அவங்களுக்கு சம்பளம் என்பது போனஸ். ஊழலற்ற ஆட்சி – அதுக்கு கட்சில உள்ள பெருசுகள் நல்லவங்களா இருக்கணுமே..

 4. Rajs சொல்கிறார்:

  If BJP wants to gain in TN, it needs to do all the things the Dravidian parties have been doing except corruption and abuse of power.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   மெய்ப்பொருள்,
   புதியவன்,
   Rajs

   – ஆக மொத்தம் –
   எல்லாருமாகச் சேர்ந்து அடுத்து
   தமிழகத்தில் எப்படி பாஜக
   ஆட்சியை கொண்டு வருவது
   என்று யோசிக்க ஆரம்பித்து
   விட்டீர்கள்…!!!

   வாழ்த்துகள்…

   -காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    //Except corruption & Abuse of Power// – ஹாஹா… பாஜக ஆட்சிக்கு வரணும் ஆனால் அவங்க கட்சில வட்டம், மாவட்டம், செயலாளர், இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருக்கக்கூடாதா? இங்க கட்சி நடத்தணும்னா, எல்லா அஜால் குஜால் வேலைகளையும் கமுக்கமா பண்ணணும். இட ஒதுக்கீட்டை கண்டிப்பா பின்பற்றணும். ஹிந்தியை வெளிப்படையா (மட்டும்) எதிர்க்கணும். திமுகவைப் போல், மக்களைத் தொந்தரவு படுத்துவது, அவங்க இடத்தை ஆட்டையைப் போடுவது போன்ற மக்களை எரிச்சலடையச் செய்யும் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடக்கூடாது. அரசு அதிகாரிகள் எப்போதும் வாங்குவதைத் தவிர, திமுக கட்சிக்காரர்கள் லஞ்சம் வாங்கிப் படுத்துவதுதான் அதிகம் என்பதால், திமுகவை மக்கள் எப்போதுமே prefer செய்வதில்லை. சிறுபான்மை வாக்குகளுக்காக இந்து எதிர்ப்பு நடத்தும் காசுக்காக மட்டுமே கட்சி நடத்தும் திருமா போன்றவர்கள் அரசியலில் இல்லாமல் இருந்தால் நல்லது. இதற்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எவ்வளவோ லெவல் ஹெடட் மற்றும் அறிவுத்திறன் அதிகமானவர்.

    அது சரி… பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு இப்போ என்ன தேவை உள்ளது? திருமா, வைகோ போன்ற அல்லக்கைகள், பொது மக்களுக்குக் கெடுதல் செய்யும் திமுகவும், இப்போல்லாம் காசு வாங்கிக்கொண்டு கூட்டணி சேரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதனால் மட்டுமே பாஜக இங்கு வரணும் என்பது அவசியமில்லை. அவங்க வந்தால் எந்தவித மாறுதலும் இங்கு வந்துவிடாது, இருக்கும் நல்ல கட்சிகளை (comparitively) விரட்டியடித்ததைத் தவிர.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.