ஒத்த செருப்பால் (அ)(க)-டி’பட்ட திமுக தலை ….

….
….

ஒத்தைச்செருப்பால் கடி’பட்ட அரைகுறை ……

….

நடிகர், கதை,வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர்
என பல பொறுப்புகளைச் சுமந்து திறம்பட இயங்கி வருபவர்
பார்த்திபன். தன் கற்பனைத் திறனால், வித்தியாசமான
வார்த்தை விளையாட்டுகளால், செயல்களால், பல சமயங்களில்
மற்றவர்களை திகைப்புக்கு உள்ளாக்கக்கூடிய
வித்தியாசமான கலைஞர்…( சில சமயங்களில் அவை
பொறுமையை சோதித்தாலும் கூட … !!! )

அவரது அண்மைய படங்களில் ஒன்றான “ஒத்த செருப்பு”-
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பார்த்திபனை
அறிந்தவர்களுக்கு நிச்சயம் அவரது திறமைகள் தெரிந்திருக்கும்.
எனவே, இந்த விருதுக்கு அவர் நிச்சயம் தகுதியானவர்
என்பதில் அவர்களுக்கு எந்தவித ஐயமும் இருக்காது….

( பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம்
2019-ல் வெளியானது. அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்த
இந்தப் படத்தை பார்த்திபனே எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார்.
ஒருவர் மட்டுமே படம் முழுக்க நடித்திருந்த
ஒரு வித்தியாசமான முயற்சி என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தப்படம் ஏற்கெனவே உலக அளவில் பல திரைப்பட
விழாக்களில் விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது …)

ஆனால், எதையாவது வித்தியாசமாக செய்து
கட்சித்தலைமையின் கவனத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று
அலைந்து கொண்டிருக்கும், பக்குவமற்ற சில
“அரைகுறை”கள் – “தங்கள் தலை”-யை திருப்தி செய்ய
எந்தவித கேவலமான செயல்களை செய்வதற்கும் தயாராக
இருக்கின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பாஜகவில் சேர்வது
அண்மையில் ஒரு வழக்கமாகி வருகிறது… பாஜகவும் இதற்காக
பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், இதற்கு சம்பந்தமே இல்லாமல் –
தன்னை தலைமையிடம் முன்னிலைப்படுத்திக்
கொள்ள வேண்டும் என்பதற்காக,
மலிவான விளம்பரத்தில் இறங்கி –

பார்த்திபன் விருது பெற்றதை கொச்சைப்படுத்தி,
அவர் பாஜக-வில் சேர்வதற்காக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
பரிசு இது என்று கேவலமாக ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார்
திமுக அரை-குறை ஒருவர்…

…..

……

இவருக்கு பார்த்திபன் கொடுத்திருக்கும் பதிலைப் பார்த்தேன்.

உண்மையிலேயே என்னை வியப்பிற்கும்,
அடக்கமுடியாத சிரிப்புக்கும் உள்ளாக்கி விட்டது
அவரது பதில் …

நல்ல கற்பனைத்திறன்…
நல்ல வார்த்தை ஜாலம்…
ஒவ்வொரு வார்த்தையும் சிரித்துக்கொண்டே
கொடுக்கும் ஒரு செருப்படி…

“ஒத்த செருப்”பால் அடித்திருந்தால் கூட
இந்த அளவு effect இருந்திருக்காது
என்று தோன்றுகிறது…!!!

பார்த்திபன் கொடுத்த அந்த அழகான திருப்பி-அடியை –
நண்பர்களும் பார்த்து ரசிக்க கீழே தந்திருக்கிறேன்….

————————

பார்த்திபன் தமது ட்விட்டர் பக்கத்தில்
அளித்துள்ள பதில்:

———–

‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு
திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,

“வேறெந்த கட்சிக்குள்ளும்
காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!”

“நாளையே மழை வரலாம்,
வரும்வேளை குடை மலரலாம்.
அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே
ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த
வேண்டிய அவசியமில்லை! ”

” மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால்
தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம்.
அது ஒரு கொக்கி வார்த்தை-”

பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr S செந்தில்குமார்
அவர்கள் –

“அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்”என்று
sweet-ஆக tweet-ட்டிருக்கிறார். செகு அண்ணனுக்கு
நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது
comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்!”

“தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில்
கீழ்தரமான comment போட்டதால்,நெட்டிசன்கள்
மீம்போட்டு – மேம்பாட்டு பணியில்
அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. ”

“அதனாலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு
பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம். நாமும் அப்படி
கீழிறங்கக்கூடாது. (sorry for that) ”

“அவர் படம் பார்க்கவில்லை என்றால்
Netflix-ல் பார்க்கலாம்.
அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம் !—-

___________________________________________ திருச்சி பேச
வேண்டிய அவசியம் எனக்கில்லை.”

“இவன் ‘ படத்தில் –
“seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,
” Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என
இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன்.”

சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand
செய்ய வேண்டும் என்பதால்
வேறு எங்கும் நிற்பதில்லை -எதிலும் சேர்வதில்லை.

மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு
ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா ?
– என அறியாதவன் அடியேன்!

(சிறந்த செருப்படி கீழே இருப்பது தான்…)
“உண்மையான
நேர்மையான
சுய சிந்தனையிலும்
சுய வருமானத்திலும்
கடுமையான உழைப்பிலும் உருவான’
ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில்
மட்டுமே கிடைக்கும் விருதினைக்
கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்!’

உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி
எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,
அதைத் “தா” இதைத் “தா” வென மரை’முகமாக
என் முகம் மலரமாட்டேன்!

அரசியலில் மோதிப் பார்க்கலாம் என
முடிவெடுத்து விட்டால்
அதை பேராண்மையுடன் செய்வேன்.
உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!

கடைசியாக செய்தி – சூரியன் உதிக்குமுன்
கண் விழித்த எனக்கு …..( … !!!) –

உடன்பிறப்புகளின் எதிர்கால
நம்பிக்கையான (…? ) நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு
ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன்….!!!

அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப
வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்.”

.
————————————————————————–

பார்த்திபன் எதிர்காலத்தில் பாஜகவில் சேரட்டும்…
சேராமல் போகட்டும்… அது வேறு விஷயம்..
ஆனால், அவரது திறமைக்கு கிடைக்கும்
நியாயமான பாராட்டை கொச்சைப்படுத்தியது
மிக மிக அநாகரிகம்..

—————-

பார்த்திபனை இரண்டு விஷயங்களுக்காக பாராட்ட வேண்டும்….

ஒன்று – சிறப்பாக இயங்கி, உலக அளவில்
பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும்,
விருதுகளையும் பெற்று, தற்போது மத்திய அரசின்
விருதையும் பெறுவதற்கு –

இரண்டாவது – அவர் தற்போது அந்த “அரை-குறை”க்கு
கொடுத்திருக்கும் இந்த புத்திசாலித்தனமான
திருப்பியடி’க்கு…

வாழ்த்துகள் பார்த்திபன்…!!!

.
————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஒத்த செருப்பால் (அ)(க)-டி’பட்ட திமுக தலை ….

  1. புதியவன் சொல்கிறார்:

    செந்தில்குமார் வகையறாக்களுக்கு இப்படித்தான் திமுகவில் சீட் கிடைத்திருக்கிறது போலிருக்கு. இல்லை ஒருவேளை…புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு ஸ்டாலில் சீட் வழங்குவதை மறைமுகமாகக் கண்டிக்கிறாரோ?

    இதுபோலத்தான் ஒரு தமிழன் பிரசன்னா என்ற தெலுங்கு பேசுபவர், காவேரி ஹாஸ்பிடல் வாசலில் ஓவர் ஆக்டிங் செய்ததற்காக முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று ஸ்டாலினால் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.