மர்மங்கள் நிறைந்த – வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் …!!!

….
….


….

….


….

ஸ்ரீபுரம் பொற்கோயில்- என்று அழைக்கப்படும்
வேலூர் ஸ்ரீ லட்சுமி நாராயணி அம்மன் பொற்கோவில்
பற்றி நிறைய விவரங்களைத் தரும் ஒரு செய்தி
காணொலி கீழே –

– ஆசியாவின் மிகப்பெரிய பொற்கோயில் …

– கோவிலை நிர்மாணிக்க 1500 கிலோ தங்கம்
பயன்படுத்தப்பட்டுள்ளது …

– 100 ஏக்கர் நிலத்தில், 55,000 சதுர அடி பரப்பளவில்
அமைக்கப்பட்டுள்ளது …

ஆனால், இந்த காணொலி நமக்கு வேண்டிய
சில முக்கிய விவரங்களைத் தரவில்லை;
அந்த விவரங்கள் வேறு எங்காவது கிடைக்குமா
என்று தேடியும் பார்த்தேன்… எவ்வளவு தேடியும்
என் பார்வைக்கு கிடைக்கவில்லை.

1) இந்த கோவிலை கட்டுவதற்கு தோராயமாக
எவ்வளவு செலவு ஆகி இருக்கும்….?

2) இத்தனை பொருட்செலவில் இந்தக் கோவிலை
கட்டிய மூலகர்த்தா யார் ..?

3) அத்தனை பணம், இதனை கட்டியவர்களுக்கு
எப்படி கிடைத்தது…?

(தற்போது நிறைய வகைகளில் வசூல் செய்கிறார்கள்…
நான் அதைச் சொல்லவில்லை; துவக்கத்தில் கோவிலை
கட்டுவதற்கு தேவைப்பட்ட பணத்தைச் சொல்கிறேன்…)

4) இதனை நிர்வகிப்பவர்களின் பெயர்கள் ஏன் வெளியில்
தெரிவதில்லை …?

5) அரசியல்வாதிகள் யாராவது இதன் பின்னணியில்
இருக்கிறார்களா…? தொழிலதிபர்கள்…?

6) மேற்கண்ட விவரங்கள் எதுவும் வெளிப்படையாக
தெரிவிக்கப்படாததன் காரணம் என்ன…?

7) இதைப்பற்றி யாரும், செய்தியாளர்களும் சரி,
அரசியல்வாதிகளும் சரி, தொலைக்காட்சி மீடியாக்களும் சரி –
எதுவுமே கேட்பதில்லையே ஏன்…?

8) மேற்கண்ட விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவதில்
யாருக்காவது பிரச்சினை இருக்கிறதா…?

இந்த இடுகையைப் பார்வையிடும் நண்பர்கள் யாருக்காவது
இந்த விவரங்கள் குறித்து எதாவது தெரிந்திருந்தால் பின்னூட்டம்
மூலம் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

….

….

.
————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மர்மங்கள் நிறைந்த – வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் …!!!

 1. M.Subramanian சொல்கிறார்:

  You are right Sir.
  Why nobody asks/talks about these ?
  Why these information should be suppressed / hidden ?
  Who is behind all these ?

 2. R KARTHIK சொல்கிறார்:

  Been there to this place. They make people wait for long hours with no reason, group people into batches and send. I didnt get a feel that it is a temple.
  Sort of same feeling as Isha…

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கோவிலை கட்டியது சக்தி அம்மா என்றும் ,
  நாராயணி அம்மா என்றும் அழைக்கப்படும்
  1976 ல் பிறந்த ஒருவர் .
  16 வயதில் அவருக்கு தெய்வ அருள் கிடைத்தது .
  கோவிலை கட்ட கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆனது .

  2007 ல் திறக்கப்பட்டது . 1500 கிலோவில் தங்கக்கூரை .
  செலவானது – கிட்டத்தட்ட ரூ 300 கோடியிலிருந்து
  600 கோடி வரை சொல்லுகிறார்கள் .

  கோவிலுக்குள் நேராக போக முடியாது .ஸ்டார்
  வடிவில் உள்ள பாதையில் சுற்றி வந்து
  கிட்டத்தட்ட 2 கி மி நடந்து போகணும் .

  ஜக்கி வாசுதேவ் ,கல்கி சாமியார் , நித்தியானந்தா
  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்கள் மார்க்கெட்டிங் மூலம்
  முன் வந்து இன்று கார்ப்பரேட் சாமியார் ஆக உள்ளனர் .
  இன்று கூட்டம் சேர்ந்து என் ஆர் ஐ , வெளிநாட்டு பக்தர்
  சகிதமாக உள்ளனர் .

  இப்ப அம்மா மூன்று பேர் இருக்கிறார்கள் .
  முதலில் வந்த அம்மா – திரு பங்காரு அடிகள் .
  அடுத்து அம்மா -அம்ரிதானந்தமாயி
  அப்புறம் இவர் .
  No idea as to how they came up so high!
  நதி மூலம் , ரிஷி மூலம் பார்க்க கூடாது .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மெய்ப்பொருள்,

   // நதி மூலம் , ரிஷி மூலம் பார்க்க கூடாது //

   அது நதிகளுக்கும், ரிஷிகளுக்கும் பொருந்தலாம்.
   அரசியல்வாதிகளுக்கும், சமூகக் கொள்ளையர்களுக்கும்
   பொருந்தாதே…!!!

   இரண்டு கண்களையும் அகலத்திறந்துவைத்துக்
   கொண்டிருக்கும்போதே, ஏமாற்றி விட்டு
   போய் விடுபவர்கள் ஆயிற்றே இவர்கள்…

   நீங்களே சொல்கிறீர்கள் 300 முதல் 600 கோடி வரை
   ஆகி இருக்கலாமென்று. எங்கிருந்து வந்தது
   இவர்களுக்கு இவ்வளவு பணம் .. ?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  இந்தக் கோவிலை தரிசனம் செய்யச் சென்ற ஒரே வி ஐ பி. பிரியங்கா காந்தி. எனக்கும் யார் இந்தக் கோவிலை நிர்மாணித்திருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது. இருக்கும் கோவிலைச் செம்மைப்படுத்துவதைவிட புதிய பிரம்மாண்டமான கோவில்களை ஏன் கட்டுகிறார்கள் எனவும் நான் ஆச்சர்யப்பட்டிருக்கேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   தரிசனம் செய்யச் சென்றவர்கள்
   பற்றிய உங்கள் தகவல் சரியானதல்ல…
   மற்றவர்கள் “வந்ததும்-போனதும்”
   உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்…!!!
   “முதல்”போட்டவர்கள் வராமலா
   இருப்பார்கள்….!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   பிரியங்கா காந்தி, அரசு அனுமதி பெறாமல், ஆனால் கருணாநிதியின் அனுமதியுடன் சிறையில் நளினியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இது சிறை விதிமுறைப்படி தவறு என்று வெளியில் செய்தி பரவியதும் திமுக அரசு அந்தச் செய்தியை அமுக்கியது. பிரியங்கா காந்தி அதற்குப் பிறகு வேலூர் தங்கக்கோவிலை தரிசனம் (?) செய்யச் சென்றார். அதற்காகத்தான் அவர் சென்னைக்கு வந்தார் எனவும் செய்தி பரப்பப்பட்டது. அதனால்தான் எனக்கு இது நினைவில் இருந்தது.

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பிரியங்கா காந்தி மட்டுமல்ல கோவிலுக்கு வந்தது .

  மற்ற சிலர்
  ஜக்கி வாசுதேவ்
  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
  திரு ராம்நாத் கோவிந்த் ( பீகார் கவர்னராக )
  திரு நரேந்திர மோடி
  பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பல பா ஜ க தலைவர்கள் .

  முக்கியமான ஒருவர் –
  மு க – அப்போது அவர் முதல்வராக இருந்தார் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.