கலைஞர் உல்டா செய்து ‘ஹிட்’ ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்….!!!

….
….


….

….

1950-ஆம் ஆண்டு வெளியாகி மகத்தான வெற்றியைப் பெற்ற
தமிழ்ப்படம் மந்திரிகுமாரி… தமிழகமெங்கும் 100 நாட்கள்…
சென்னையில் 150 நாட்கள்…

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தின்
வெற்றிக்கு முக்கிய காரணமாகியவர்கள் அதன்
கதை, வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியும்,
இசையமைப்பாளராகிய ஜி.ராமநாதனும் தான்.

தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்லப்படுபவற்றில்
ஒன்றான குண்டலகேசியை திரைப்படத்திற்கு ஏற்றாப்போல்
“மந்திரிகுமாரி”யாக உருமாற்றி, ஒப்பனை செய்து, தனது
அற்புதமான வசனங்களினால் மெருகூட்டினார் கருணாநிதி.

படம் வெளியான சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டன
கருணாநிதியின் சூடான, சுவையான வசனங்கள்…!

மந்திரிகுமாரி கதையின் கரு …

பகலில் அரசவையில் பணியும்,
இரவில் கொள்ளைக்காரனுமாகவும் இருக்கும் ஒருவனை
காதலித்து மணம் செய்துகொள்கிறாள் ஒரு மந்திரிகுமாரி…

அவனை மாற்றவும், திருத்தவும் அவள் எத்தனையோ
முயற்சிகள் செய்கிறாள்… கடைசியில், அவள் காதலித்து
மணந்த கணவன், அவளையே கொலை செய்யத் துணிந்ததை
தெரிந்துகொண்டவுடன், அவனை ஆசை வார்த்தைகள் கூறி
மலையுச்சிக்கு அழைத்துச் சென்று, ஏமாற்றி மலையுச்சியிலிருந்து
தள்ளி கொன்று விடுகிறாள்… பின்னர் புத்தமதத்தில் சேர்ந்து
துறவியாகி விடுகிறாள்.

இதில் சுவாரஸ்யத்திற்காக, கூடவே இன்னொரு ஜோடியாக,
ராஜகுமாரி, தளபதி கதை…

———————-
இனி கொஞ்சம் “குண்டலகேசி” யை பார்ப்போம்…
—————-

குண்டலகேசி – பௌத்த சமயம் சார்ந்த ஒரு நூல்.
10-ஆம் நூற்றாண்டில் இதனை இயற்றியவர் நாதகுத்தனார்
என்கிற பௌத்த மதத்தவர்….

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக இந்நூல்
குறிப்பிடப்படுகிறது.

கேசி என்பது பெண்ணின் கூந்தலால் (முடி) வந்த பெயர்.
சுருண்ட கூந்தல் காரணமாகக் குண்டலகேசி என இக்காப்பியத்
தலைவி பெயர் பெற்றாள். அவள் பெயரையே தலைப்பாகக்
கொண்டுள்ளது இந்நூல்.

நீலகேசி உரையே குண்டலகேசி வரலாற்றை அறிய உதவுகிறது.

குண்டலகேசியின் வாதத்தை மறுப்பதாகப் பல பாடல்களின்
முதற்குறிப்பைத் தருகிறது நீலகேசி. மறைந்து போன தமிழ்
நூல்கள் என்ற நூலில் ஏறத்தாழ 92 குண்டலகேசிப் பாடல்களின்
முதற்குறிப்பைத் தொகுத்துத் தந்துள்ளார் மயிலை. சீனி.
வேங்கடசாமி, அவர்கள்.

“தருக்கமாவன: ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன.
அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம்,
காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும், சாங்கியம் முதலிய
ஆறு தரிசனங்களுள்ளும் காண்க” என யாப்பருங்கலவிருத்தி
குறிப்பிடுவதால், இந்நூல் தருக்க வாதம் குறித்த ஒன்று என
அறிய முடிகிறது.

குண்டலகேசி காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார் எனும்
பௌத்தர் என்று நீலகேசி உரை (பாடல் 344) குறிப்பிடுகிறது.
நாதகுப்தனார் என்பதே மருவி நாதகுத்தனார் என வழங்கிற்று
என்றும் சொல்வர்….என்பர்.

குண்டலகேசி – கதைச் சுருக்கம்
( இது வடமொழிக்கதையை அடிப்படையாக கொண்டு
உருவானது… )

இராச கிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை.
அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது,
அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு
அழைத்துச் சென்றதைக் கண்டாள். அவனுடைய இளமையும்
அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல்

கொண்டாள். இதை அறிந்த அவளது தந்தை, கள்வனை
விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து
வைக்கிறான்.

இருவரின் அன்பு வாழ்க்கை, காதல் வாழ்க்கை இனிதே
நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை, ‘நீ கள்வன்
மகன் அல்லனோ’ என விளையாட்டாகச் சொல்ல, அது அவன்
உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன்,
அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக்
கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான்.

நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள்
போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம்
வரவேண்டும்’ என்கிறாள். பின் அவனை வலம் வருபவளைப்
போல, பின் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று
விடுகிறாள்.

பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய்,
பல இடங்களில் அலைந்து திரிந்து, பின் சமண சமயத்தவர்
வாழும் மடத்தை அடைந்து, சமணத் துறவியாகிறாள்.

அங்குச் சமணக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து, பின்
பிற சமயக் கருத்துகளை எல்லாம் முறைப்படி கற்றுத்
தேர்கிறாள். பின் சமயவாதம் செய்யப் புறப்பட்டு, நாவல்
கிளையை நட்டுச் சமய வாதம் செய்து வென்று, பலரைச்
சமண சமயம் சாரச் செய்கிறாள்.

ஒரு நாள், நாவல் நட்டு விட்டு ஊருக்குள் பிச்சை ஏற்கச்
செல்கிறாள். அப்போது கௌதம புத்தரின் மாணவர் சாரிபுத்தர்,
பத்திரை நட்டு வைத்த நாவலைப் பிடுங்கி எறிந்து விடுகிறார்.
இதனால் இருவருக்கும் இடையே சமய வாதம் நிகழ்கிறது.
வாதத்தில் பத்திரை தோற்க, சாரிபுத்தர் ஆணைப்படி
பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப்
(பத்திரை) பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல,
அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.

இங்குப் பத்திரை சமண சமயம் சார்ந்தபோது அவள்
தலைமயிர் மழிக்கப்பட, அது உடனடியாகச் சுருண்டு
வளர்கிறது. இதனால் சுருண்ட கேசம் உடையவள் என்கிற
பொருளில் “குண்டலகேசி” எனப் பெயர் பெறுகிறாள்.

———————-

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான
குண்டலகேசி காவியத்தைப்பற்றி சொல்லப்போகிறேன் –
என்றால் கலைஞரே ஆனாலும்,
எத்தனை பேர் இதை விரும்பி இருக்கப்போகிறார்கள்…?

மந்திரிகுமாரியாக மாறியதால்,
விரும்பிப் பார்க்கக்கூடிய/படிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது…!!!
-நம் மக்களுக்கு, எல்லாவற்றிற்கும்
மசாலா சேர்த்தாக வேண்டியிருக்கிறதே…!!!

———————

சரி – வந்ததற்கு சுவாரஸ்யமாக இன்னும்
எதாவது வேண்டாமா…?

டி.எம்.சௌந்திரராஜன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி –
பாடிய முதல் பாடல் – மந்திரிகுமாரியில் தான்…

“அன்னமிட்ட வீட்டிலே – கன்னக்கோல் சாட்டவே
எண்ணம் கொண்ட பாவிகாள் மண்ணாய்ப் போக நேருமே ….”

…..


…..

இந்தப் படத்தில் மிகவும் புகழ்பெற்ற 2 பாடல்கள்….

1) வாராய் நீ வாராய்….
….

….

2) உலவும் தென்றல் காற்றினிலே ….
….


….

.
————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கலைஞர் உல்டா செய்து ‘ஹிட்’ ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்….!!!

  1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    மு க எழுதிய முதல் பாடல் .

    இந்த பாடலில் ” நாற்பது ஆண்டு கால நண்பர் ” இருக்கிறார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s