….
….
….
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்
அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை….
——————–
அன்பிற்கினிய நண்பர்களுக்கு….
வணங்கி மகிழ்கிறேன்.
ஒருவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானால் அதைப் பற்றி
அடுத்த கணமே அழுக்கு வார்த்தைகளால் அருவருப்பான
நடையில் விமர்சனம் செய்து தங்கள் மன வக்கிரத்தை
வெளிப்படுத்தும் ஒரு கூட்டம் சமூக ஊடகங்களைத்
தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
இதற்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் இருப்பது
மிகுந்த கவலை அளிக்கிறது. எதையாவது ஒரு கருத்தை
ஊடகங்களில் வெளிப்படுத்தும் போது விருப்பு வெறுப்பின்றி
அக்கருத்து அமைவதுதான் நலன் பயக்கும். உடனே
ஒரு செய்திக்கு எதிர்வினை ஆற்றியே ஆகவேண்டும்
என்ற கட்டாயமில்லை.
திரு ரஜினி அவர்களைப் பற்றிய செய்தி எதுவாயினும்
ஆழ்ந்த வெறுப்புணர்வுடன் தமிழ்ப் பற்றாளர்களும்(!)
இனப் போராளிகளும்(!) தரக்குறைவான மொழியில்
விமர்சிப்பதையே தங்கள் வாழ்க்கை முறையாக வகுத்துக்
கொண்டனர்.
இந்த மொழி, இனப் பற்றாளர்களில் பலருக்கு
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களின் பெயர்களைக்கூடச் சொல்லத் தெரியாது
என்பதுதான் பரிதாபத்திற்கு உரியது.
திரு. ரஜினி கடந்த ஆறு மாதங்களாகச் செயற்படாத
தன்னுடைய திருமண மண்டபத்திற்கு 6.50 இலட்சம் வரி
விதித்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்ற செய்தியைக்
கொச்சைப்படுத்தி, இவர்தான் அடுத்த முதல்வரா?
என்று மொழிப்பற்றாளர்களும் இனப் போராளிகளும்
போர்க்கோலம் பூண்டுப் பொங்கியெழுந்துவிட்டனர்.
ரஜினி தன் உழைப்பில் உருவாக்கிய சொத்து குறித்த
பிரச்சினை அது.
ஊர் சொத்தை ரஜினி கொள்ளையடிக்கவில்லை.
மக்களுடைய பொதுச் சொத்தைச் சூறையாடி தன்
குடும்பத்திற்கு அவர் சேர்த்து வைக்கவில்லை. கடந்த
ஐம்பதாண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகளின்
தலைவர்களும் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின்
பொதுச்சொத்துகளைச் சூறையாடி மாபெரும்
கோடீஸ்வரர்களாகப் பவனி வருவதை இந்தச் சமூகம்
செயலற்றுப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது.
அரசியலில் அடியெடுத்து வைத்தபோது அடுத்த வேளை
உணவுக்கு வழியின்றி வாடியவர்கள் இன்று பங்களாக்களும்,
பண்ணை வீடுகளும், ஆடி கார்களுமாக நம் கண்முன்பு
எந்தச் சமூகக் கூச்சமுமின்றி வலம் வருவதை நாம் மவுனப்
பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டுதானே
இருக்கிறோம்.
இரண்டு திராவிட கட்சித் தலைவர்களில் ஒருவராவது
அறவழியில் பொருள் சேர்த்ததுண்டா? இவர்களை அரசியல்
களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியது நம் முதல்
சமூகக் கடமை இல்லையா? இதை யாரால் செய்ய முடியும்?
பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இரண்டு மூன்று விழுக்காடு
வாக்குகளை வைத்திருக்கும் தமிழ்த் தேசியர்களால் இது
இயலுமா? சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு இரண்டு
திராவிட கட்சிகளுடன் கூட்டணியமைத்துத் தங்கள்
சொந்த நலனைப் பெருக்கிக்கொள்ளும் கட்சித் தலைவர்களால்
இதைச் சாதிக்கக்கூடுமா?
இதற்குத்தான் ரஜினி நமக்குத் தேவைப்படுகிறார்.
இன்று ரஜினியளவுக்கு மக்களிடையே பேராதரவு
பெற்ற மனிதர் ஒருவருமில்லை. அவருடைய
அபரிமிதமான மக்கள் செல்வாக்கை மாற்று அரசியல்
அரங்கேறப் பயன் படுத்திக்கொள்வதே விவேகமானது.
இதுதான் என் நிலை.
இன்று இரண்டு திராவிட கட்சித் தலைவர்களும் எதைச்
செய்தாவது ரஜினியின் அரசியல் பிரவேசத்தைத்
தடுத்துவிட முயல்கின்றனர். அவர் ஒருவர்தான் இவர்களுடைய
கனவுகளைக் கலைப்பவராக இருக்கிறார்.
இவர்கள் ஊதிப் பெரிதாக்கும் எந்த அவதூறும் அவரைப்
பாதிப்பதில்லை. சொத்து வரி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின்
பரிந்துரைக்குத் தலை வணங்கி 6.5 இலட்சம் ரூபாயை
மாநகராட்சிக்குச் செலுத்தியதுடன், ‘தவறைத் தவிர்த்திருக்கலாம்.
அனுபவமே பாடம்’ என்று வெளிப்படையாகப் பதிவிட்டிருக்கிறார்.
தவறு செய்வதும், செய்தபின் அதைத் தவிர்த்திருக்கலாம்
என்று எண்ணுவதும் மனித இயல்பு. ஆனால், அதை
வெளிப்படையாக அறிவித்ததுடன், அனுபவமே பாடம் என்று
பதிவிட்டிருப்பதில்தான் அவருடைய உயர்பண்பு புலப்படுகிறது.
மீண்டும் சொல்கிறேன், இழிந்த அரசியல்வாதிகளைப் போல்
அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை.
மூடப்பட்ட மண்டபத்திற்கு வரியும் அபராதமும் விதிக்கப்
படுவதற்கு எதிராக நிவாரணம் தேடுவதில் எந்த நியாயக்
குறைவும் இல்லை. இந்த நல்ல மனிதரின் வரவைத்தான்
ஆரோக்கிய அரசியலை விரும்புவோர் ஆவலுடன்
எதிர்பார்க்கின்றனர்.
— தமிழருவி மணியன்
—————————————————————-
ரஜினி வரவேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க – வர முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்படுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
சூழ்நிலையைப் பார்க்கும்போது –
ரஜினி வரக்கூடிய நிலையில் இல்லையோ என்று தோன்றுகிறது.
ஆனால், ரஜினி கடைசியாகப் பேசிய கூட்டத்தில்,
சந்திரகுப்த மௌரியனைப் பற்றி பேசியதை நினைக்கும்போது,
இன்னமும் கூட அவர் வர
வாய்ப்பிருக்கிறது என்றும் தோன்றுகிறது….!!!
.
——————————————————————————————————————————–
தலைவர் கண்டிப்பாக வாரார் 🤘🏽
வர்றார் என்கிறீர்களா ?
வரார் என்கிறீர்களா ?
வருகிறார் 🤘🏽
நன்றி கார்த்திகேயன் சார்.
நானும் அதையே தான் நினைக்கிறேன்.
ரஜினியால் தீவிரமாக செயல்பட அவரது
வயதும், உடல்நிலையும்
இடம் கொடுக்காவிட்டாலும் கூட,
அவர் தலைமை ஏற்கிறார் என்கிற ஒரு எண்ணமே
ஒரு பாசிடிவ் எனெர்ஜி உருவாக உதவும்.
ரஜினியால் நிச்சயம் ஒரு நல்ல டீம்’ ஐ
உருவாக்க முடியும். அறிஞர்களையும்,
நிபுணர்களையும் கொண்ட குழுக்களை
உருவாக்கி சிறந்த ஒரு நிர்வாக கட்டமைப்பை
அவரால் உருவாக்க முடியும்.
சுயநலம் இல்லாமல்,
காசு சம்பாதிக்க நினைக்காமல்,
செயல்படக்கூடிய ஒரு நிர்வாகக்குழுவை
அவரால் உருவாக்க முடியும். அது போதும்.
ரஜினி சார் அவசியம் வர வேண்டும்.
தமிழருவி மணியனை போன்ற அறிவாளிகளை காண்பது மிகவும் அரிது. அவரது அறிவை கண்டு மெய் சிலிர்க்கிறது. அவர் தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும், வருமான வரிக்கும், சொத்து வரிக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத, படிக்காத, பட்டிக்காட்டு கூமுட்டைகள் என்று நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்.
ரஜினியும் சரி, அவரது ஆடிட்டர்களும் சரி வருமான வரிக்கும், சொத்து வரிக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா என்ன ? கண்டிப்பாக நீதிமன்றம் செல்வதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி இருப்பார்கள். அவர்கள் சம்மதிக்காதலால் தான் நீதிமன்றம் சென்று இருப்பார்கள். தனது புகழ் வெளிச்சத்தை வைத்து ஒரு முறை விலக்கு வாங்கிவிட்டால் பின்பு எதோ காரணம் சொல்லி எதிகாலத்திலும் விலக்கு வாங்கலாம் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்திருக்கலாம்.
ரஜினி தனது மண்டபத்தை 250 சதுர அடியில் கட்டி இருப்பதாகவே மாநகராட்சியில் கணக்கு காட்டி இருப்பதாக ஒரு செய்தியும் உலா வந்து கொண்டிருக்கிறது.
சரி, இது ஒரு புறம் இருக்கட்டும்.
“ஊர் சொத்தை ரஜினி கொள்ளையடிக்கவில்லை.மக்களுடைய பொதுச் சொத்தைச் சூறையாடி தன்குடும்பத்திற்கு அவர் சேர்த்துவைக்கவில்லை”. ரெம்ப சரி
ஏன் சார் நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.
ரஜினி மட்டும் தான் ஊர் சொத்தை கொள்ளையடிக்கவில்லையா ?.
மக்களுடைய பொதுச் சொத்தைச் சூறையாடி தன்
குடும்பத்திற்கு சேர்த்து வைக்கவில்லையா என்ன ?.
ஊர் சொத்தை கொள்ளை அடிக்க, மக்களுடைய பொதுச் சொத்தைச் சூறையாடி தன் குடும்பத்திற்கு சேர்த்து வைக்கவேண்டும் என்றால்
ஓன்று அவர் அரசு அதிகாரியாக இருக்கவேண்டும்
அல்லது அரசியல் வாதியாக இருக்கவேண்டும்
அல்லது அரசியல் வாதியின் துணையுடைய ரவுடியாக இருக்கவேண்டும்.
மற்ற யாராலையும் செய்ய முடியாது. அதனால் தான் ரஜினியாலும் செய்ய முடியவில்லை.
வாடகை கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காதது, தனது பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்காதது எல்லாம் எந்த வகையில் வரும். யாராவது கொஞ்சம் விளக்குங்களேன்.
மக்களுடைய பொதுச் சொத்தைச் சூறையாடி தன்
குடும்பத்திற்கு சேர்த்து வைக்கவில்லையா என்ன ?. –
—-எங்கே? எப்போது யாருடைய சொத்தை கொள்ளை அடித்தார் ?
ஓன்று அவர் அரசு அதிகாரியாக இருக்கவேண்டும்
அல்லது அரசியல் வாதியாக இருக்கவேண்டும்
அல்லது அரசியல் வாதியின் துணையுடைய ரவுடியாக இருக்கவேண்டும்.
மற்ற யாராலையும் செய்ய முடியாது. அதனால் தான் ரஜினியாலும் செய்ய முடியவில்லை.
— ஒருவன் நல்லவனா இருந்தாலே போதும் சார் ..அவன் எந்த பதவியிலும் இருந்தாலும் கொள்ளை அடிக்க மாட்டான் சார். அப்போ காந்திஜி எந்த ஒரு அரசு அல்லது அரசு சார்ந்த பதவியிலும் இருந்ததில்லை ..அப்போ அவர் நல்லவரா? கெட்டவரா ? என்ன சார் உங்க லாஜிக்?
– வாடகை கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காதது, தனது பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்காதது எல்லாம் எந்த வகையில் வரும். யாராவது கொஞ்சம் விளக்குங்களேன்.
— இதை பற்றிய அதிகாரபூர்வமான குற்றசாட்டுகள் என்ன சார்? அந்த விளக்கங்களை தாருங்கள் சார் ..
ரஜினியும் சரி, அவரது ஆடிட்டர்களும் சரி வருமான வரிக்கும், சொத்து வரிக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா என்ன ? கண்டிப்பாக நீதிமன்றம் செல்வதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி இருப்பார்கள். அவர்கள் சம்மதிக்காதலால் தான் நீதிமன்றம் சென்று இருப்பார்கள். தனது புகழ் வெளிச்சத்தை வைத்து ஒரு முறை விலக்கு வாங்கிவிட்டால் பின்பு எதோ காரணம் சொல்லி எதிகாலத்திலும் விலக்கு வாங்கலாம் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்திருக்கலாம்.
— உங்கள் அறிவை கண்டு மெய் சிலிர்க்கிறது!! கல்யாண மண்டபங்களின் வருமானத்தை வைத்து தான் வரி விதிக்கப்படுகிறது .. அந்த அடிப்படியில் தான் தனது உரிமையை கேட்டுஇருக்கிறார் . அதற்கான கடிதம் எழுதி இருக்கிறார் ..பதில் இல்லையென்றதும் கோர்ட்டை அணுகியிருக்கிறராற. இதில் என்ன தவறு சார் ..
– இருப்பார்கள்.. இருந்திருக்கலாம்
.. எல்லாமே அனுமானமா சார் ?
jksmraja,
உங்கள் வாதங்கள் வியப்பைத் தருகின்றன.
ரஜினி அடிப்படையில் மிகச்சிறந்த மனிதர்.
அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
விஷயம் இது.
அவர் அரசியலுக்கு வந்தால், தங்களுக்கு
ஏற்படக்கூடிய பாதிப்புகளை நினைத்து,
சிலர் அவரைப்பற்றி தவறாக எழுதுகிறார்கள்.
நீங்களும் அவர்களில் ஒருவரோ…?
உங்கள் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு
அவர் எதிராக இருப்பார் என்பது தான்
உங்கள் விரோதத்திற்கு காரணமா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Rajinikanth Varukirar. Velvaar.. No doubt on it.
மன்னிக்க வேண்டுகிறேன்.
“ஏன் சார் நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.
இந்த நாட்டில் ரஜினி மட்டும் தான் ஊர் சொத்தை கொள்ளையடிக்காமல் இருக்கிறாரா ?மக்களுடைய பொதுச் சொத்தைச் சூறையாடி தன்
குடும்பத்திற்கு சேர்த்து வைக்காமல் இருக்கிறாரா என்ன ?.”
என்று எழுதி இருக்கவேண்டியது.
“ஏன் சார் நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.
ரஜினி மட்டும் தான் ஊர் சொத்தை கொள்ளையடிக்கவில்லையா ?.
மக்களுடைய பொதுச் சொத்தைச் சூறையாடி தன்
குடும்பத்திற்கு சேர்த்து வைக்கவில்லையா என்ன ?.”
என்று எழுதிவிட்டேன்.
அருள் ஐயா,
கொஞ்சம் பழைய பத்திரிக்கைகளை தேடிப்பிடித்து படியுங்கள். ஆரம்ப காலத்தில் மதுரை அவனியாபுரத்தில், குடிபோதையில் ஒரு பெட்டிகடையில், சோடா குடித்துவிட்டு, நான் யார் தெரியுமா. நான் ரஜினி காந்த். உனக்கு பணம் எல்லாம் கொடுக்கமுடியாது என்று சண்டை போட்டு அடிவாங்கிய வரலாறு எல்லாம் ரஜினிக்கு உண்டு.
ரஜினிக்கு நல்லவன் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியவர்பத்திரிக்கையாளர் சோ. பிற்காலத்தில் அரசியலுக்கு தேவைப்படலாம் என்று தனது ஆரிய மூளையால் உணர்ந்து ஏற்படுத்தியது.
நீங்கள் ரஜினிக்கு எதிராக வரும் செய்திகளை படிக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். வாடகை கொடுக்காதது இன்னும் நீதி விசாரணையில் இருக்கிறது.
நீங்கள் சொல்லும் சம்பவம் ரஜினி தனது நெர்வ் பிரச்சினை ஸ்டார்ட் ஆனபோது நடந்தது ..தான் எவ்வாறு இருந்தேன் என்பதை அவர் வெளிப்படையாகவே பேசியுள்ளார் …ஒருவருக்கு வெறும் நல்லவன் இமேஜ் அடுத்தவர் கொடுப்பதால் வந்து விடாது ..இந்த உலகத்தில் தவறு செய்யாதவர்கள் இல்லை என கூறலாம் ..அது எப்படி பட்டது அதில் இருந்து மாறி தனது வாழ்க்கையையே எப்படி எந்த உயரத்துக்கு சென்றாலும் எப்படி வைத்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அந்த நல்லவன் இமேஜ் இருக்கும் .. தன் இயல்பிலே நல்லவனாக இருக்க வேண்டும் ..அவனால் தான் தவறை திருத்திக்கொள்ள முடியும் ..தவறை தவிர்க்க முடியும் ..ஒருவனால் மிக குறைந்த தீமையும் மிக அதிக நன்மையையும் அதே நேரத்தில் அவன் வலிமையாகவும் இருப்பானேயானால் அவனால் மாற்றத்தை கொண்டு வர முடியும் …ரஜினி அப்படி பட்டவர் என்று நான் நம்புகிறேன் ..நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளையும், மற்ற இருக்கும் அரசியல்வாதிகளையும் ஒரு தராசுவில் வைத்து பாருங்கள். பிறகு உங்கள் முடிவுக்கு வாருங்கள் ..ரஜினி என்பவரை எனது 10 முதல் பார்த்து வருகிறேன் ..எல்லா (நல்லது / கெட்டது) செய்தியையம் சேர்த்து தான் ..இப்போ எனக்கு 40 வயது ..12 வயது முதல் இந்த அரசியலையும் பார்த்து தான் வருகிறேன் சார் ..ரஜினியின் உயரத்துக்கு, செல்வாக்கிற்கு அவர் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளை இல்லாமலே செய்து விடலாம் ..ஆனால் அதை அவர் செய்வதில்லை செய்யவிரும்புவதுமில்லை …சட்டபடியே எதிர் கொள்கிறார் ..
jksmraja,
கொஞ்சம் அசந்தால்,
5-ஆம் வகுப்பு படிக்கும்போது கணக்கு
தப்பாகப் போட்டு, வாத்தியாரிடம்
அடி வாங்கியதைக்கூட சொல்வீர்கள்
போலிருக்கிறதே..
// ரஜினிக்கு நல்லவன் என்ற பிம்பத்தை
ஏற்படுத்தியவர் பத்திரிக்கையாளர் சோ.//
நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா ?
உங்களுக்கு ஆசிரியர் சோ-வையும் தெரியாது
என்று காட்டிக் கொள்கிறீர்கள்.
உங்கள் வசனங்கள் காட்டிக் கொடுக்கின்றன.
எதனால் நீங்கள் இப்படி எழுதுகிறீர்களென்று.
அதென்ன ஆரிய மூளை…?
அப்படியானால் உங்களுக்கு இருப்பது
என்ன மூளை…?
ஆரியன், திராவிடன் என்று பேசுவதே
அபத்தம். ஆங்கிலேயர்கள் நம்மை
பிளவுபடுத்த செய்த சூழ்ச்சி.
200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே
ஆரியர், திராவிடர் பேச்செல்லாம் இருந்ததா…?
.
– வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அருள் ஐயா,
நீங்கள் சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்பவர் என்று நினைக்கின்றேன். ஆகையால்தான் உங்களுக்கு சொத்து வரிக்கும், வருமான வரிக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை..
அதாவது வாடகை மூலம் வருமானம் வந்தால் மட்டுமே கட்ட வேண்டியது வருமானவரி . நீங்கள் உங்கள் வீட்டை பூட்டியே வருடம் முழுவதும் வைத்திருந்தாலும் கண்டிப்பாக கட்டியே ஆகவேண்டியது சொத்துவரி . கொஞ்சமாவது விவரம் தெரிந்து எழுதுங்கள்
jksmraja,
நான் தலையிட வேண்டாமென்று இருந்தேன்.
ஆனால் நீங்கள் தப்பு தப்பாக எழுதி,
தலையிட வைக்கிறீர்கள்…
சொந்த வீட்டுக்கு வரி விதிக்கப்படுவது
வேறு அடிப்படையில்…
திருமண மண்டபம் போன்ற
commercial building -களுக்கு வரி
விதிப்பது வேறு அடிப்படையில்…
திருமண மண்டபங்களுக்கு, அதன்
ஆண்டு (வாடகை)வருமான அடிப்படையில்
தான் வரி தீர்மானிக்கப்படுகிறது.
கட்டிடம் பயன்படுத்தப்படாமல் இருந்தால்,
வரி விலக்கு/குறைப்புக்கு விண்ணப்பம்
செய்யலாம் என்று சட்டவிதியே இருக்கிறது.
அதன் அடிப்படையில் தான் வரி குறைப்பிற்கு
விண்ணப்பித்திருக்கிறார்கள்.
நீங்கள் அவலை நினைத்துக்கொண்டு
உரலை இடிக்கிறீர்கள்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Nantree KM sir..Naan vaadagi veetilum irunthu irukiren sontha veetilum irukiren sir
நூறு ரூவா டிக்கெட்ட ஆயிரம் ரெண்டாயிரம் னு வித்தது எல்லாம் எந்த கணக்குல வருதுனு தெரியல.
“சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு இரண்டு
திராவிட கட்சிகளுடன் கூட்டணியமைத்துத் தங்கள்
சொந்த நலனைப் பெருக்கிக்கொள்ளும் கட்சித் தலைவர்களால்
இதைச் சாதிக்கக்கூடுமா?”
கருணாநிதிய பாராட்டு விழாவுல புகழ்ந்தது….
மோடி செஞ்ச கோமாளிதனத்துக்கு ஹேட்ஸ் ஆப் சொன்னதுலாம் பொதுநலன்ல வரும் போல.
சம்மந்தப்பட்ட ரஜினி காந்த் மேலும் இந்த கட்டுரையை எழுதிய தமிழருவி மணியன் இந்த இரண்டு பேருமே தவறு நடந்து விட்டது என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியென்றால் ரஜினி செய்த அந்த
தவறு தான் என்ன ?
” திருமண மண்டபங்களுக்கு, அதன்
ஆண்டு (வாடகை)வருமான அடிப்படையில்
தான் வரி தீர்மானிக்கப்படுகிறது.
கட்டிடம் பயன்படுத்தப்படாமல் இருந்தால்,
வரி விலக்கு/குறைப்புக்கு விண்ணப்பம்
செய்யலாம் என்று சட்டவிதியே இருக்கிறது.
அதன் அடிப்படையில் தான் வரி குறைப்பிற்கு
விண்ணப்பித்திருக்கிறார்கள்”
அப்படியென்றால் அவர்கள் சொத்து வரி விலக்கு கேட்டுஇருப்பது எப்படி தவறாகும்?. அதனை அவர்கள் ஏன் தவறு என்று குறிப்பிடுகிறார்கள்?. சென்னையில் ரஜினி காந்த் மண்டபத்தை போல குறைந்தது ஆயிரம் மண்டபங்களாவது இருக்கும். அந்த மண்டபங்களும் கண்டிப்பாக கொரோனா ஊரடங்கினால் முடியேதான் இருந்திருக்கும். அவர்களுக்கும்
இந்த விதி கண்டிப்பாக தெரிந்தேதான் இருக்கும்
அப்படி இருக்கும் போது அவர்கள் எல்லாம் ஏன் விலக்கு கேட்க வில்லை?.
அல்லது மற்ற மண்டபங்களுக்கு எல்லாம் சொத்து வரி விலக்கு கொடுத்து விட்டு ரஜினி காந்துக்கு மட்டும் மறுத்துவிட்டார்களா ?
அப்படி ரஜினி காந்துக்கு மட்டும் மறுத்திருந்தால் அது எவ்வளவு பெரிய அயோக்கிய தனம். அந்த அநீதியை யாரும் தட்டிக்கேட்க வராதது நம் தமிழ் நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம்?. நம்மைபோன்றவர்கள் எல்லாம் ஏன் தட்டி கேட்காமல் பதிவு மட்டும் போட்டுக்கொண்டிருக்கிறோம் யாராவது கொஞ்சம் விளக்குங்களேன்
எங்கள் ஊரில் எங்களின் சாதி சங்கமே கல்யாண மண்டபம் நடுத்துகிறது. எங்களின் பேரூராட்சி எந்த விலக்கும் கொடுக்காமல் முழு சொத்து வரியைத்தான் அந்த மண்டபத்திற்கும் வசூலித்திருக்கிறது
அரைகுறை அறிவு ஆபத்தானது என்பதற்கு
இது மிகச்சிறந்த உதாரணம்.
முழுச்செய்தியையும் தெரிந்துகொள்ளாமல்
மீண்டும் மீண்டும் உளறிக்கொண்டே இருந்தால்
யார் பதில் கொடுக்க விரும்புவார்கள் ?
நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது –
முதலில் மாநகராட்சிக்கு விண்ணப்பித்து,
அது என்ன முடிவு எடுக்கிறது என்று
பொறுத்து பார்த்து விட்டு, பிறகு தான்
நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும்.
மாநகராட்சியின் முடிவு தெரிவதற்கு முன்
ஏன் நீதிமன்றத்திற்கு வந்தீர்கள்
என்று கேட்டது.
அதைத்தான் அவசரப்பட்டது தவறு தான் என்று
ரஜினியும், தமிழருவி மணியும் கூறினார்கள்.
எதையும் புரிந்துகொள்ள பொறுமையோ,
ஆர்வமோ இல்லாமல் அரைகுறை அறிவோடு
எள்ளுருண்டை போல மறுமொழி போட மட்டும்
துள்ளிக்கொண்டு வந்தால் இப்படித்தான்
மூக்குடைபட வேண்டியிருக்கும்.
” நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது –
முதலில் மாநகராட்சிக்கு விண்ணப்பித்து,
அது என்ன முடிவு எடுக்கிறது என்று
பொறுத்து பார்த்து விட்டு, பிறகு தான்
நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும்.
மாநகராட்சியின் முடிவு தெரிவதற்கு முன்
ஏன் நீதிமன்றத்திற்கு வந்தீர்கள்
என்று கேட்டது.
அதைத்தான் அவசரப்பட்டது தவறு தான் என்று
ரஜினியும், தமிழருவி மணியும் கூறினார்கள் ”
ரெம்ப சரி .
ரஜினி மாநகராட்சியில் விலக்கு கேட்காமல் மொத்த பணத்தையும் கட்டியது ஏன்? அப்படியே நான் கேட்ட மற்றதற்கும் கொஞ்சம் பதில் சொல்லிவிடுங்கள் திரு கோபி அவர்களே
//ரஜினி மாநகராட்சியில் விலக்கு கேட்காமல் மொத்த பணத்தையும் கட்டியது ஏன்? //
அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு
பின்னூட்டம் போடுபவர்கள் நான் கொடுத்த கடந்த
விளக்கத்திற்கு
பிறகாவது செய்தியை முழுவதாக தெரிந்துகொள்ள
முயற்சி செய்திருக்க வேண்டும். முட்டாள்தனமாக
மீண்டும் மீண்டும் கேள்வி தான் கேட்பேன் என்றால்
யாருக்கு பொறுமை இருக்கும் ?
இருந்தாலும் சொல்கிறேன். மாநகராட்சியில்
விலக்கு கேட்டிருக்கிறார்கள். இருந்தாலும்,
அபராதம் இல்லாமல் வரி செலுத்த வேண்டிய
கடைசி நாள் வந்து விட்டதால், கட்டி விட்டார்கள்.
அவர்களது கோரிக்கை இன்னமும் மாநகராட்சியின்
பரிசீலனையில் இருக்கிறது.
காவிரிமைந்தன் சாருக்கு ஒரு வேண்டுகோள்.
இங்கே பின்னூட்டம் போடுபவர்களுக்கு குறைந்தபட்ச
பொது அறிவாவது இருக்க வேண்டும் என்பதை
கொஞ்சம் விளக்கி எழுதுங்களேன்.
ரஜினி, தன்னுடைய உரிமையில் ஒன்றான நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இதற்கு முன், தன் பண்ணைவீட்டிற்குப் போவதற்காக ஈபாஸ் வாங்கிவைத்திருந்தார். இதிலெல்லாம் என்ன தவறு இருக்க முடியும்? சாக்கடையிலேயே இருந்துகொண்டு இருப்பதால் இருக்கிற எல்லாரையும் சாக்கடைக்குள் சேர்க்கும் ஆர்வம்தான் பலருக்கு இருக்கிறது. அடுத்து, படங்களில் ரஜினி தன் மனைவியைத் தவிர மற்றவர்களையும் தொட்டு நடித்தாரே என்றுதான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. ரஜினி நல்லவர்தான். அரசியல் தலைவர்கள் தவறு லட்சம் கோடிகள் என்றால் ரஜினி தவறு சில நூறு இருக்கலாம். இதுதான் மற்றவர்களுக்கும் ரஜினிக்கும் உள்ள வித்தியாசம். ஏதோ மாநகராட்சி மிகவும் நேர்மையாக நடப்பது போலவும், ரஜினி, கட்டவேண்டிய பணத்தைக் கட்டாதது போலவும் இங்கு விமர்சிப்பது அவர் மீதான காழ்ப்புணர்வு. (இத்தனை வருட அரசியலில் ஸ்டாலின், குறுநில கொள்ளையர்களைத்தான் தன் இரண்டாம் கட்டத் தலைவர்களாக வைத்துள்ளார், அவருக்கு தன் கட்சியில் ஒரு நல்லவர் கூட இல்லை என்பது நன்றாகவே தெரியும்)
நிற்க… நான் இந்த தமிழருவி மணியன் போன்றவர்கள் பேசுவதை பொருட்படுத்துவதில்லை. அவங்களுக்கு இன்றைக்கு பொழுது போகலை, ரஜினி சூப்பர் என்றெல்லாம் பேசுவார்கள், நாளைக்கே ரஜினி இடது கையால் மாலை வாங்கினாரே என்றெல்லாம் ஆரம்பித்துவிடுவார்கள். ஆனானப்பட்ட காமராசரே முடிந்த அளவு நேர்மையாக அரசியலில் இருந்தார், அதைவைத்து சொத்து சேர்க்கவில்லை என்றுதான் சொல்லமுடியுமே தவிர, எல்லோருக்குமே 100 சதவிகிதம் பாகுபாடின்றி இருந்தார் எனச் சொல்லமுடியாது, காரணம் அவரும் ஒரு மனிதர்தான். ஆனால் அவர், அவர் காலத்தைய நல்ல அரசியல்வாதிகளையும் விட பல படிகள் உயர்ந்திருந்தார், வெளிப்படையாக இருந்தார் மக்கள் மீது மிகுந்த அக்கறையும், சட்டங்கள் மக்களுக்கு நன்மை மட்டும்தான் செய்யணும் என்பதிலும் குறியாக இருந்தார்.
இருந்தாலும், ரஜினி, தீவிர அரசியலில் நுழையும் காலம், குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது கடந்துவிட்டது. அவர் கட்சி ஆரம்பிக்கும்போது, அதில் தமிழக மக்களில் பலர்தான் நிர்வாகிகளாக இருப்பார்கள், அவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள் இருக்கும். இவர்களைக் கண்காணித்து, தைரியமான முடிவெடுத்து ஸ்டார் தலைவராக தமிழக அரசியலுக்கு வருவதற்கெல்லாம் பலப் பல ஆண்டுகள் ஆகும். அதற்கெல்லாம் அவருக்குக் காலம் இல்லவே இல்லை.
சொத்து வரி பற்றி சென்னை கார்பரேஷன் சொல்வது :
https://www.commonfloor.com/guide/property-tax-guide-chennai-36536.html
https://www.chennaicorporation.gov.in/departments/revenue/department.htm#property
இரண்டு திராவிட கழகங்களும் தமிழ்நாட்டை 1967முதல்
சூறையாடியது போதும். 2021லேநிச்சயம் ஒரு மாற்றம் வேண்டும்.
அப்படி ஒரு மாற்றம் வருமே ஆனால் அது நிச்சயம் ரஜினியால்
மட்டுமே ஏற்படும். அதை வர விரும்பாத திமுக சார்பு ஊடகங்கள்
ரஜினி என்ன செய்தாலும் அதை ஊதி பெரிதாக்கி விடுகின்றன.
இந்த தடவையும் மாற்றம் ஏற்படா விட்டால் திமுக குடும்ப ஆட்சி
உலகெங்கும் சொத்துக்களை வாங்கி குவிக்க நாமே உதவி செய்தவர்கள்
ஆகி விடுவோம். நாம் ரஜினியிடம் எதிர்பார்ப்பது கலைஞர், எம் ஜி ஆர் ஆட்சி அல்ல . காமராஜ் ஆட்சி மட்டுமே. அது வருவது நம் கையில்தான் இருக்கிறது.