பிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு…..!!!

….
….


….

பொதுவாக, பெற்றோர்கள் தங்களை கட்டுப்படுத்துவதை
சிறு பிள்ளைகள், பெண்கள் விரும்புவதில்லை… ஆனால்,
அந்தக் கட்டுப்பாடுகள் அவர்களின் நலன் கருதியே
என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பது எப்படி…?
பெரும்பாலான அப்பா, அம்மா-க்களுக்கு இது
ஒரு பெரிய சவால்…

இது குறித்து,
ஒரு சுவாரஸ்யமான, உபயோகமான செய்தி படித்தேன்…

—————–

தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும்
ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கையின்
விளைவு –

தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து
கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்…
ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…???
என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று…

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்…
இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்…

ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்..
அப்பா நான் பட்டம் விட்டு விளையாடப்போகிறேன்,
நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின்
மொட்டை மாடிக்கு சென்றாள்…

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்…
அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்…
பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது….
ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை..
அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா ..??? என கேட்டார்…

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா
அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது
என்று சொன்னாள்…

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே
அறுத்து விட்டார்… பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால்
சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது…

அப்பா சொன்னார்.. மகளே.. இந்த நூல், இந்த பட்டத்தை
தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை…
நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய
இந்த நூல் தான் உதவியாய் இருக்கிறது…

இதே போலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும்
ஒரு நூல்தான்… நீதான் அந்த பட்டம்… நீ என்னுடைய பேச்சை
கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன்
உயர பறக்கலாம்…

ஆனால் உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம்
கிழிந்து காகிதம் ஆனது போல – உன் வாழ்க்கையும்
சீரழிந்துவிடும்…இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை
கண்டித்தேன் என்பதனை…

நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே
மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்…!!!

ஆம் அன்பான பிள்ளைகளே… உங்களுக்கு இனிமையாய்
தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால்
அவற்றின் முடிவு பயங்கரமானது…

எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக்
கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு
உங்களை வரவேற்கும்…!!!

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால்
மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்….

( நன்றி : தினமும் ஒரு நற்செய்தி…)

.
—————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு…..!!!

  1. Karthikeyan சொல்கிறார்:

    அருமை சார்
    ஆனால் இந்த போலி பெண்ணியம் பேசுபவர்களை நினைத்தால் 😔

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.