….
….
….
மேற்கத்திய நாடுகள் இவரை ஒரு
கொடுங்கோலர், சர்வாதிகாரி,
– மக்களை ராணுவத்தின் உதவியோடு அடக்கியாள்பவர்
என்றெல்லாம் கதை கதையாகச் சொல்கின்றன.
ஆனால், இதற்கு நேர்மாறான
ஒரு காட்சியை இங்கே காண்கிறோம்.
வட கொரிய அதிபர் – சர்வாதிகாரி கிம் ஜாங் உன்
அழுகிறார்… அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில்…
ராணுவத்தினரும், பொது மக்களும் பெருந்திரளாக
கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில்…
அவர் பேசுவதையும் கண்கலங்குவதையும் பார்த்து,
ராணுவத்தினர் அனைவரும் கதறி அழுகின்றனர்…
நம்பவே முடியவில்லை…
கிம் அழுவது ஒருவேளை நடிப்பாகக் கூட இருக்கலாம்.
ஆனால், ராணுவத்தினரும், வட கொரிய மக்களும்
அவர் மீது இத்தனை பாசம் வைத்திருப்பதும்
இப்படி கண்ணீர் விட்டு அழுவதும் அதிசயமாகவே
இருக்கிறது.
இந்த சர்வாதிகாரியிடம் மக்களுக்கு
இத்தனை அபிமானமா ?
நம்பகத்தன்மை வாய்ந்த பிபிசி செய்தியில்
வருவதால் இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை …..
…..
…..
.
——————————————————————————————————–
முதலில் ஸ்டாலின் பெயரில் உள்ள
சொத்துகளை அவர் எப்படி சம்பாதித்தார்
என்று சொல்லட்டும் பார்க்கலாம்.
பிறந்தது முதல் அவர் எந்த தொழிலிலும்
ஈடுபட்டு, உழைத்து சம்பாதித்ததாகத்
தெரியவில்லை
( அரசியலைத்தவிர ).
இடம் மாறி கேள்வி கேட்டிருக்கீங்க. எல்லாப் பயலுகளும் தொழில் என்ற இடத்தில் ‘அரசியல்’ என்று போட்டுக்கொண்டு பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபராவதுதான் இந்திய அரசியல். இதில் ராமதாஸ் மகனும் விதிவிலக்கில்லை, ராஜபக்ஷேவிடம் பல்லிளித்த திருமா, டி.ஆர் பாலு, 25 கோடி தேர்தல் லஞ்சம் வாங்கிய கம்யூனிஸ்ட் யாருமே விதிவிலக்கில்லை.
உணர்ச்சி வசப்படுவது – ஹிட்லரைப் பற்றியும் சதாக் ஹுசேன் அவர்களைப் பற்றியும் நிறைய படித்ததில், அவரை நம்புபவர்கள் அவ்வளவு விசுவாசம் காட்டியிருக்கின்றனர். வட கொரியாவிலேயே, கிம்மை, அப்பா என்றுதான் பெண்கள் பேசுவதைப் பற்றிப் படித்திருக்கிறேன் (அவ்வளவு விசுவாசம்…நாட்டிற்கே தந்தை என்ற முறையில்). ஒரு நாடு ஜனநாயகமாகும்போதுதான் அந்த நாட்டு மக்களின் உண்மை உணர்வு வெளிப்படும். அதனால்தான் சீன மக்களின் உண்மை உணர்வும் உலகத்துக்குத் தெரியாததன் காரணம். முன்பு யூஎஸ் எஸ் ஆர் மக்களின் உணர்வும் தெரியாமலிருந்த காரணம்.
“நம்பகத்தன்மை வாய்ந்த பிபிசி செய்தியில்
வருவதால் இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை …..”
Not sure any media is reliable these days!!!
I fully agree. Especially now, BBC seems to have a set agenda against India!
Not against India.
If you say against BJP then you may be right.
வட கொரிய மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுகின்றார்கள் .
இது உண்மைதான் – கிம் , அவர் அப்பா , அவர் தாத்தா
என மூவரும் செய்தது சர்வாதிகார ஆட்சி .
இங்கே மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை .
60 – 70 வருடங்களாக கேட்டதில் அவர்களுக்கு
வேறு எதுவும் சிந்திக்கவே தோன்றாது .
மக்களால் சுயமாக சிந்திக்க விடுவதில்லை .
1984 என ஜார்ஜ் ஆர்வெல் ஒரு நாவல் எழுதினார் .
அதில் உள்ளது அப்படியே வருகின்றது .
பி பி சி காண்பித்தது உண்மையே .
எனக்கென்னவோ ஜெ இறந்தபோது பதவியேற்பு நிகழ்ச்சிதான் நியாபகம் வருது. யார் அழலையோ அதுக்கப்புறம் அவங்களுக்கு என்னாகுமோன்னு பயமா இருக்குமோ!
“அவர் பேசுவதையும் கண்கலங்குவதையும் பார்த்து,
ராணுவத்தினர் அனைவரும் கதறி அழுகின்றனர்…
நம்பவே முடியவில்லை…”
அழாவிட்டால் இவர்களின் குடும்பத்தினர் அழவேண்டி வரும், இவர்கள் வீட்டுக்கு பதிலாக மயானத்துக்கு நேரே அனுப்பப்படுவார்களே! இவர் தனது மாமனுக்கு அளித்த பரிசு உலகப்பிரசித்தி பெற்றதாயிற்றே!