நம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம்ஒன்றுமே தெரியாது …..!!!

….
….


….

முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் மகன்
கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008-ஆம்
ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள
பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில்
சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப்
பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம்
அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்துள்ளார்…

இந்த சொத்துக்களை சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட
சொத்துகள் என்று அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக
2 நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக செய்திகள்
வெளியாகியுள்ளன.

இந்த முதலீடுகள் செய்யப்பட்டிருப்பது 2008-ல்….?

எப்போது…? கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி
நடந்துவந்த அப்போது..!

இந்த யோக்கிய சிகாமணியின் தந்தை திருவாளர் பொன்முடி
அவர்கள் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சிபுரிந்த
திமுக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக
பதவி வகித்தபோது…!!!

அமலாக்கத்துறையின் விசாரணையின் விளைவாக
கவுதம் யோக்கிய சிகாமணியின் முடக்கப்பட்டுள்ள இந்த
ரூ.8.60 கோடி மதிப்புள்ள சொத்துகள் சிகாமணிக்கு
எப்படி வந்து சேர்ந்தது என்பதற்கு அவரது
தந்தை திருவாளர் பொன்முடியும், அவரது தலைவர்
திருவாளர் மு.க.ஸ்டாலினும் என்ன விளக்கம்
தரப்போகிறார்கள்…?

இந்த மோசடி 2008-ல் நடந்திருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் 2019-ல் நடந்த நாடாளுமன்றத்
தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் இவரைத்தான்
திமுக வேட்பாளராக நிறுத்தி, இந்த யோக்கிய
சிகாமணியும் தற்போது திமுக சார்பாக பாராளுமன்ற
உறுப்பினராக இருக்கிறார்.

பாவம் – திரு.ஸ்டாலின் அவர்களுக்கு யோக்கிய சிகாமணி
மற்றும் அவரது தந்தையின் சொத்துகள், அவை
வாங்கப்பட்ட விதம், காலம் பற்றியெல்லாம் ஒன்றும்
தெரிந்திருக்காது; தெரிந்திருந்தால் அவர் இவருக்கு
எம்.பி. ஆவதற்கு டிக்கெட் கொடுத்திருப்பாரா என்ன…?

இவருக்காக பிரச்சாரம் எல்லாம் செய்திருப்பாரா என்ன…?

சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக
குற்றம் சாட்டப்பட்டுள்ள யோக்கிய சிகாமணி அவர்கள்,
இன்று சட்டமியற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்கு
ஸ்டாலின் என்ன செய்ய முடியும்….?

தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களில்
ஒரு கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அத்தனை பேரும்,
தாங்கள் அந்த சொத்தை வாங்க எப்படி பணம் சம்பாதித்தனர்
என்பதை விளக்கச் சொல்லி –

திரு.ஸ்டாலின் அவர்கள் திமுக தலைவர்
என்கிற அதிகாரத்தில் ஒரு உத்தரவு
போட முடியுமா …?
(அடிமடியிலேயே கைவைத்தது போலாகி விடுமோ..? )

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஜெயிக்கப்போவது
சர்வ நிச்சயம் என்று ஸ்டாலின் அவர்கள்
கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தினமும் கூறிக்கொண்டே
இருக்கிறார்.

ஒரு வேளை அதேமாதிரி ஜெயித்தால் –
அமைச்சர்களாக ஆட்சியில் அமரப்போவது யார் யார்…?

திருவாளர்கள் – பொன்முடி, நேரு, எ.வ. வேலு, துரைமுருகன்
போன்ற ஊழலின் நிழல்கூடப் படாத உத்தமர்கள் தானே…?

இந்த ஊழலுடன் கூட்டணி வைக்க படாதபாடு பட்டு
முயற்சிக்கும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மற்றும் விசிக
போன்ற தோழமைக்கட்சிகள் –

வரவிருக்கும் தேர்தலின்போது திமுக மீதான
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டியிருக்கும்….அவர்கள் தயாராக இருப்பார்களா …?

தேர்தலில் இவர்களுக்காக பிரச்சாரம் செய்யப்போகும்
உத்தமர்கள் – திருவாளர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு,
ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், திருமதி கனிமொழி
ஆகியோர்….

பிரமாதம்…. தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள்…!!!

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to நம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம்ஒன்றுமே தெரியாது …..!!!

 1. Rajs சொல்கிறார்:

  Where is the alternative? Rajani – superconfusion

 2. புவியரசு சொல்கிறார்:

  ரஜினியை விடுங்கள்.

  ஸ்டாலின் என்ன விளக்கம் வைத்திருக்கிறார் இதற்கு ?
  ஊழல் பெருச்சாளிகள் தானே அவருடன் இருப்பவர்கள்
  அத்தனை பேரும் ?

 3. GOPI சொல்கிறார்:

  திருடர்கள் முன்னேற்றக் கழகம்

 4. புதியவன் சொல்கிறார்:

  வெளியில் தெரிந்ததைப்போல நூறு மடங்கு சம்பாதித்திருப்பார்கள். அதில் 25 சதவிகிதம் போக வேண்டிய இடத்திற்கு கப்பமாகப் போயிருக்கும். கேள்வி கேட்க தலைவரும் அவர் குடும்ப உறுப்பினர்களும் யோக்கிய சிகாமணிகளா? அவர்களே ஊழல் அசிங்கங்கள். லட்சம் கோடிகளை திருடியவர்களால் ஊழலை இன்னும் வளர்க்கத்தான் முடியும்.

  திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவரும் சுருட்டினவர்கள். அவர்களிடம் 25 கோடி தேர்தல் நிதி என்ற பெயரில் லவட்டியது கம்யூனிஸ்ட் கட்சி. தேர்தலுக்கு தங்கள் தொகுதிக்கு கோடிகளை வெட்கமில்லாமல் லஞ்சமாகப் பெற்றுக்கொள்கிறார்கள் கூட்டணிக் கட்சிகள்.

  இதுல ஸ்டாலின் ஊழலை ஒழிப்பாராம். அதைவிட திமுகவை ஒழிக்கப் போகிறேன் என்று சொன்னாலாவது நம்பலாம்.

 5. GOPI சொல்கிறார்:

  ஜெயலலிதா மரணத்தில் உள்ள
  சதியை விசாரிப்பேன்…
  குற்றவாளிகள் முகத்திரையை
  விலக்குவேன்
  -ஸ்டாலின் உறுதி

  Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/

  ஸ்டாலின் அய்யா முதலில்
  பொன்முடி, யோக்கிய சிகாமணி
  முகத்திரையை கொஞ்சம்
  கிழியுங்களேன்.

  • புதியவன் சொல்கிறார்:

   அதுக்கு முன்னால, தன் தொலைக்காட்சிக்கு 220 கோடி லஞ்சம் வாங்கியது, வயதான வீட்டுக்காரரை விரட்டிவிட்டு தன் பையன் ஆக்கிரமித்த 5 கோடி ரூபாய் சொத்து, லட்சம் கோடிகளை அடித்த ஆ.ராசா, கனிமொழி, சாராய ஆலையில் பங்கு வைத்துக்கொண்டு, சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து இன்னும் பல தொழிலதிபர்களாக தன் குடும்பத்தாரை உருவாக்கிய டி.ஆர்.பாலு, கேபிள் டிவ் ஊழல்/தொலைக்காட்சி அலைவரிசை ஊழலில் ஈடுபட்ட கேடி பிரதர்ஸ், கிரானைட் ஊழல், பொறியியல் கல்லூரி அதிபர் ஆன மு.க.அழகிரி, இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்யுமளவு வளர்ந்த ஜெகத்ரட்சகன், சாதாரண கிளார்க் ஆக இருந்து பல்லாயிரம் கோடி அதிபரான துரை முருகன், அவர் மகன், திருச்சி சாம்ராஜ்ஜியத்தையே ஊழல் பல செய்து கையில் வைத்திருக்கும் நேரு, அடுத்தவன் சொத்துக்களை ஆட்டையைப் போட்ட வீரபாண்டி குடும்பம், ஊழல் செய்து சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்த கீதா ஜீவன் குடும்பம், லீலைகள் பல செய்து சந்தி சிரித்த திருச்சி சிவா, வக்கீலுக்குப் படித்து பல்லாயிரம் ஹெக்டேர்களை உறவினர் பெயரில் குவித்திருக்கும் ஆ.ராசா, எப்படி 50,000 கோடி தங்கள் டிரஸ்டில் சேர்ந்தது, துணைவியாகச் சேர்ந்து எப்படி பெரிய பெரிய தொழில்களை ஆரம்பித்து டாடாவையே மிரட்டும் அளவு சென்று கோடீஸ்வரியான ராசாத்தி அம்மாள் – இவைகளையெல்லாம் விசாரிக்க கெத்து இருந்தால், சாதாரண ஆசிரியராக இருந்து பல நூறு கோடி சாம்ராஜ்யத்தை எழுப்பிய பொன்முடியையும் ஸ்டாலின் அவர்களால் விசாரிக்க முடியும்.

 6. GOPI சொல்கிறார்:

  Super Puthiyavan Sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s