….
….
….
மஹாபாரத யுத்தம் முடிந்து, தர்மர் அரசராக மகுடம்
சூடிக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.
அரசர் நாள்தோறும் கொலுமண்டபத்தில் வீற்றிருந்து
அறிஞர் பெருமக்கள் துணையுடன் வழக்குகளை விசாரிப்பது
வழக்கம். அன்றைய தினம் அவருக்கு முன்பாக வழக்கு ஒன்று
வந்திருந்தது.
வழக்கின் சுருக்கம் –
ஒருவன், மற்றொருவனுக்கு தனக்குச் சொந்தமான 10 ஏக்கர்
நிலத்தை விற்றுவிட்டான். அதை வாங்கியவன் ஏர் பூட்டி
நிலத்தை உழுது கொண்டிருக்கும்போது, தங்கக் காசுகள் நிறைந்த
பானையொன்று கிடைக்கிறது. அவன் அதை எடுத்துச்சென்று
நிலத்தை விற்றவனிடம் கொடுத்து,
‘இது நீங்கள் எனக்கு விற்ற நிலத்தில் கிடைத்தது.
அதனால், இது உங்களுக்கே சொந்தம். எனவே நீங்களே
வைத்துக்கொள்ளுங்கள்’ என்றான்.
ஆனால், விற்றவனோ, ”இது நான் உனக்கு விற்றுவிட்ட நிலம்.
அதில் என்ன கிடைத்தாலும் அது உனக்குதான் சொந்தம்.
எனவே அதை நீயே வைத்துக்கொள்’ என்றான்.
இருவருமே அதை எடுத்துக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தனர்.
‘சரி, நம் தர்ம மகாராஜாவையே கேட்போம்’ எனப் புறப்பட்டு
ஹஸ்தினாபுரம் வந்து தங்கள் வழக்கை அரசரிடம் கூறினர்.
இருவரிடமும் தர்மர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும்
இருவருமே புதையலை எடுத்துச் செல்ல மறுத்து விட்டனர்.
அதனால் தர்மர், ”சரி, நீங்கள் இருவரும் இன்று போய் நாளை
வாருங்கள். உங்கள் வழக்கில் நல்லத் தீர்ப்பைச் சொல்கிறேன்”
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
பொழுது விடிந்து. மறுநாள் சபையும் கூடியது. வரும்போதே
விற்றவனும், வாங்கியவனும் தனித்தனியாகவே வந்தனர்.
இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்ளவும் இல்லை. ரொம்பவும்
மௌனமாகவும், மர்மமாகவுமே இருவரும் இருந்தனர்.
தர்மர் தனது ஆலோசகர்களுடன் வந்து சபையில் அமர்ந்தார்.
நிலத்தை விற்றவன், ” நேற்று நான் கூறியதை எல்லாம்
மறந்து விடுங்கள்…. நிலம் என் மூதாதையரின் சொத்து. எனவே,
அந்த நிலத்தில் கிடைத்த புதையல் எனக்குத்தான் சொந்தம்”
என்றான்.
” என்று ஒரு பொருளை அடுத்தவருக்கு விற்று விட்டோமோ?
அப்போதே அதில் வரும் நல்ல பலன் தீய பலன் எல்லாமே
வாங்கியவரையே சேரும். அதனால் புதையல் எனக்குத்தான்”
என்றான் வாங்கியவன்.
தர்மருக்கும் சரி, சபையோருக்கும் சரி தலை சுற்ற ஆரம்பித்து
விட்டது. ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு…
”இது என்ன மாயம்? நேற்றைக்கு அப்படிக் கூறியவர்கள்,
இரண்டு பேருமே இன்றைக்கு இப்படி நேற்று சொன்னதற்கு
நேரெதிராக மாறிவிட்டார்களே” என்று ஆச்சர்யத்துடன்
அமைச்சரை நோக்கிக் கேட்கிறார் தர்மர்.
அமைச்சர் சொன்னார்… ” பெருமைமிகு தர்ம மகாராஜா
அவர்களே… நீங்கள் காலக் கடிகாரத்தை கவனிக்க வேண்டும்…
இன்றிலிருந்து கலியுகம் ஆரம்பிக்கிறது” என்றார்.
-அன்று ஆரம்பித்தது தான் “கலிகாலம்…”
அப்படியானால் இன்று…..? ” கலி முற்றிய காலம்…” …… !!!
.
——————————————————————————————————————–
ஆமாம் இடித்தவனுக்கே நிலம் சொந்தம். (பாபர் மசூதி)
Jayakumar
ஆமாம். போன வாரம் சொன்னதை
இந்த வாரம் இல்லை என்கிறார்களே (பாஜகவில் குஷ்பூ)
வீட்டிற்கு சென்று மனைவியிடம் கலந்தாலோசித்திருப்பார்கள்.
Super Karthikeyan !