விசித்திர தகவல் தொகுப்பு ….!!!

….
….

….

ஒரு செய்தித்தளத்தில், விசித்திரமான தகவல் தொகுப்பு
ஒன்றினைப் பார்த்தேன்… விசித்திரம் என்று
சொல்கிறேனே தவிர, அநேகமாக அத்தனையும் சரியே
என்று தோன்றுகிறது …!!!

——————————————–

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து
நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட
தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக
உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள்
மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம்.
மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில்
உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று,
அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்.
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள்.
வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும்
பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள்.
நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப்
போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில்
வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சமாக பேசுங்கள்.
உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும்.
உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் .
நாடு நாசமாகாமல் இருக்கும்….

.
——————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.