….
….
….
120 ஆண்டுகளுக்கு முன் முதல் முதலாக லண்டனில்
எலெக்ட்ரிக் ட்ராம் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது,
லண்டன் தெருக்கள் எப்படி இருந்தன…? மக்கள்
எப்படி இருந்தார்கள்….?
அவர்களின் சீதோஷ்ணம், குளிர், பழக்க வழக்கங்கள்
காரணமாக கோட்டு-சூட்டு என்பது அவர்களது சாதாரண
உடையின் ஒரு பகுதி…
– மற்றபடி, நாட்டுப்புறத்தான்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்
லண்டன் மக்கள்.
நம் மக்களில் சிலர் தான் ஏதோ கோட்டு-சூட்டு
போட்டவர்கள் எல்லாம் பெரிய நாகரிகம் என்று
நினைத்துக்கொண்டி-ருந்தார்கள் / -ருக்கிறார்கள்…!!!
…..
…..
.
————————————————————————————————————————————-
நம் நாட்டு மக்களைப்போல்தான் எல்லா நாட்டிலும். ஆனால், வளர்ந்த நாடுகளில் (நான் பார்த்தது இங்கிலாந்தில், ஃப்ரான்ஸில், தாய்வானில் மற்றும் சில நாடுகளில்) மக்களிடம் ஒரு ஒழுங்கு காணப்பட்டது. கியூ சிஸ்டம், பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, consideration for other citizens போன்றவை. இவை இந்தியாவில் சுத்தமாகக் கிடையாது. இந்த மாநிலம், அந்த மாநிலம் என்ற வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலான இந்தியர்கள் சுயநலவாதிகளாக இருப்பதால்தான் இந்த நிலை. கடவுள் பக்தி, வீட்டில் பூஜை அறை, காலையில் குளித்தல், வாசலில் கோலம் போடுவது என்றெல்லாம் செய்துவிட்டு, ரோட்டில் தங்கள் வீட்டுக் குப்பைகளைப் போடுவாங்க, தெருவில் துப்புவாங்க, எந்த இடத்துக்குப் போனாலும் முண்டியடித்து அடுத்தவனைத் தள்ளிவிட்டு அல்லது ஏமாற்றி தாங்கள் கியூவில் முன்னேறப் பார்ப்பாங்க. உடையில் அல்ல வித்தியாசம் (நமக்கு வெயில் தேசம், சட்டை போடாம இருப்போம், அங்க குளிர்…கோட் சூட் போடறாங்க), நம் ஆட்டிடியூடில் வித்தியாசம்.
இதுல நாம ஆறுதல் பட்டுக்கொள்ள ஒரு விஷயம்… இந்தியர்கள் இந்த மாதிரி வளர்ந்த தேசங்களில் அதிகமாக புலம் பெயர்வதால், நம் பழக்க வழக்கங்களை அங்கேயும் தொடர்ந்து, அந்த நாடுகளையும் நம் நாட்டைப்போல் ஆக்க முயற்சி பண்ணுவாங்க என்பதுதான்.
(ஈஸ்ட் ஹேம் என்று நினைவு. அங்க இருந்தவர் சொன்னார், இங்க ஒரு இடத்துல 80 சதவிகிதம் பிரிட்டிஷும், 10 சதவிகிதம் இந்தியர்களும் (மீதி 10ஐப் பற்றிச் சொல்ல விரும்பலை) இருந்தாங்க. பார்த்த இடத்திலெல்லாம் துப்பித் துப்பி, இவங்களோட கலாச்சாரம் சகிக்காம, பிரிட்டிஷ் ஜனங்க அந்த இடத்தைவிட்டு வேற இடத்துக்குப் போயிட்டாங்க. இப்போ இங்க 70 சதவிகிதம் புலம் பெயர்ந்தவங்க மத்தவங்கதான் ஒரிஜினல் ஆட்கள் என்றார்.