சிரிப்பு மேடை – குஷ்பூ மூலம் வைகோ-வுக்கு விடுதலை…!!!

….
….


….

….

….

திருவாளர் வைகோ அவர்கள் –
நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும்,
தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்
என்று அறிவித்திருப்பதைத் தொடர்ந்து
ஏகப்பட்ட வைகோ மீம்ஸ்….!!!

எவ்வளவோ உயரத்திற்கு போயிருக்க வேண்டிய வைகோ
கடைசியில், இந்த அளவிற்கு அரசியல் கோமாளியாக
வீழ்ந்து விட்டதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது …

ஆனால், இதற்கு முழுக்க முழுக்க வைகோ-வே தான் காரணம்…
அவரது நிலையற்றதன்மை தான் காரணம்…

………..

…………

………

இத்துடன் மீம்ஸ் குழுவினர் வைகோ அவர்களை
விட்டு விடுவார்கள் என்று நம்புவோமாக.

அவர்களுக்கு புதிய தீனி கிடைக்கிறது….

அதிமுகவில் தொடங்கி –
திமுகவில் இணைந்து,
கலைஞருடன் அதிகம் நெருக்கம்
காட்டியதால் அங்கிருந்து வெளியேற நேர்ந்து –

பிறகு காங்கிரசில் சேர்ந்து, ஈவிகேஎஸ் க்ரூப்பில்
அதிகம் நெருக்கம் காட்டியதால், தற்போதைய
தலைமையால் ஒதுக்கப்பட்டு,

அடுத்த 4 வருடங்களுக்கு பிழைப்பை உறுதி
செய்துகொள்ள – நாடாளும் கட்சியில் சேரும்
திருமதி. குஷ்பூ அவர்கள் மூலம்
இன்று முதல் வைகோவுக்கு சாப விமோசனம் கிடைத்து,

மீம்ஸ் க்ரூப் புதியவரை பிடித்துக் கொண்டு,
வைகோவுக்கு விடுதலை கொடுக்கும் என்று நம்புவோமாக.

.
—————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to சிரிப்பு மேடை – குஷ்பூ மூலம் வைகோ-வுக்கு விடுதலை…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இவ்வளவு அவசர அவசரமாக கட்சி மாறினால் அப்புறம் எந்தக் கட்சியில் சேர முடியும்? பாஜகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் போக வாய்ப்பு இருக்கு, ஆனா அதுக்கு கொள்ளை தெரியணுமே… ஒரே எழுத்துப்பிழையா வருது.

 2. புதியவன் சொல்கிறார்:

  ஒருவனை அழிக்க, நேரிடையாக போராடிப்பார். வெற்றி பெற முடியாது என்று உறுதியாகத் தெரிந்துவிட்டதா? பேசாமல் அவனிடம் சேர்ந்துகொள். உடனிருந்தே கொல்லப்பார். அதற்குள் தலைவன் சுதாரித்துக்கொண்டு, தங்கள் கட்சியிலேயே உன் கட்சியைச் சேர்ந்த அனைவரையும் சேர்த்துக்கொண்டோ இல்லை தங்கள் கட்சிச் சின்னத்திலேயே போட்டியிட வைத்து உன்னைக் கரைக்கிறானா? விதியை நொந்துகொண்டு வியாபாரம் செய். உன் ராசியாவது புதுத் தலைவனுக்கு எதிராக வேலை செய்யாதா என்று கடவுளிடம் வேண்டிக்கொள். அவ்ளோதான் செய்யமுடியும்.

 3. புதியவன் சொல்கிறார்:

  குஷ்பு மிகவும் capable person. சொந்தக் கருத்துக்கள் உடையவர். மக்களை ஈர்க்கும் வசீகரம் உண்டு. ஆனால் தவறான செயல்களால், பல கட்சிகள் மாறியவர் என்ற அவப்பெயரைப் பெற்றுவிட்டார். இதற்கு, அதிமுகவிலேயே இருந்திருந்தால் கெளரவமாக இருந்திருக்கும் (கட்சியில் சேர்ந்திருந்தால்). இல்லை பாஜக தலையெடுக்கிறது என்று தெரிந்து அப்போதே சேர்ந்திருக்கலாம். வாய்ப்பே இல்லாத திமுகவில் சேர்ந்தது, பிறகு அடிமைகளான காங்கிரஸில் சேர்ந்தது என்று தன் அரசியல் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டுவிட்டார். சொந்தத் தங்கையே தன்னை மிஞ்சிவிடுவாரோ என்று அனுதினமும் கட்டையைப் போடுபவர், எதையாவது செய்து மக்களின் மனதில் இடம் பெறணும் என்று காலம் போன காலத்திலும் டோப்பா வைத்து அதனால் மக்கள் மனத்தில் இடம் பெற முடியுமா என்று நினைப்பவர், மக்களிடம் பிரபலமாக வாய்ப்புகள் (அரசியல் ரீதியாக) இருந்த குஷ்புவை விட்டுவைப்பாரா?

  பாஜகவில், அவர்கள் வலுப்பெறும்படியாக தமிழகத்தில் கடுமையாக உழைத்தால், குஷ்புவுக்கு எதிர்காலம் இருக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // மக்களை ஈர்க்கும் வசீகரம் உண்டு…//

   எதை வைத்து அவர் மக்களை ஈர்க்கிறார்…?

   உங்களால் இதற்கு நேர்மையான பதிலை சொல்ல
   முடியாது….உங்கள் மனதிற்கும் அது தெரியும்.

   // தவறான செயல்களால், பல கட்சிகள் மாறியவர் //

   அதற்கு என்ன பெயர்…?
   அவர் கட்சிகள் மாறியதற்கு என்ன காரணம்…?
   100 சதவீதம் சுயநலம்.

   //பாஜகவில், அவர்கள் வலுப்பெறும்படியாக
   தமிழகத்தில் கடுமையாக உழைத்தால்,
   குஷ்புவுக்கு எதிர்காலம் இருக்கும்…//

   பாஜக தமிழகத்தில் வலுப்பெறும் என்று
   நிஜமாகவே நீங்கள் நம்புகிறீர்களா…?
   அத்தைக்கு மீசை முளைத்தால்தானே
   குஷ்பூ சித்தப்பா ஆக முடியும்…!!!!

   100 % சுயநலமியான ஒருவரை –
   அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் –
   ஆதரிப்பது தவறு…தவறு… தவறு…

   உடனேயே சுயநலம் இல்லாதவர் யார்..
   என்று ஆரம்பித்து விடாதீர்கள்;
   குறைந்த பட்சம் – சுயநலமிகளை ஆதரிக்காமல்
   இருக்கவாவது முயற்சிப்போம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    Charishma என்பதற்குத்தான் கவர்வது என்ற அர்த்தத்தில் எழுதினேன். நமீதா, விந்தியா, லதா என்று பெரிய லிஸ்ட் இருக்கு. அவங்க நீங்க சொல்லும் ‘கவர்ச்சி’. பொதுவான அரசியல்வாதிகளிடம் இல்லாத ‘thinking logically on issues’ இவர்ட்ட இருக்கு. ஆனா பொதுவா ambition உள்ளவங்க செய்யக்கூடாத தவறுகளை இவர் செய்வதால்தான் இவருடைய அரசியல் ஏற்றம் பெறவில்லை.

    கட்சிக்கு உழைக்காமலேயே ‘ஏதேனும் பதவி’ என்று ஏற்றுக்கொண்டால் அதில் அவருக்கு நிச்சயம் பிரயோசனம் இருக்காது.

    //அவர் கட்சி மாறியதன் காரணம் என்ன?// – அதில் சுயநலம் மட்டும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை (சுயநலம் இல்லாத ஒருவரைத்தான் நாம் ஆதரிக்கணும் என்றால் இனி புதிய அரசியல்வாதி யாராவது பிறந்துவந்தால்தான் உண்டு). ஸ்டாலினுக்கு குஷ்புவின் ‘கவரும் தன்மை’ பிடிக்கவில்லை. கட்சியில் தன் பிடியைப் பற்றி அதிகம் கவலைப்பட்டு, குஷ்புக்குப் பிரச்சனை கொடுத்ததால்தான் அவர் திமுகவை விட்டு விலகவேண்டியதாகிவிட்டது. (ஏன் வடிவேலு அரசியலுக்கு வரணும்? அதுவும் விஜயகாந்த் குண்டர்கள் தொந்தரவு கொடுத்ததால்தான்) காங்கிரஸில் லோக்கல் கட்-அவுட்டுகளால் அவருக்கு எதிர்காலமே இல்லை என்னும்படியாக உள் பாலிடிக்ஸ். ஈ வி கே எஸ் மாதிரி கொஞ்சம் independentஆ தைரியமாகப் பேசுபவர்கள் இல்லை. இப்போதைய தலைவர், திமுகவை அட்டை போல் ஒட்டிக்கொண்டு இருந்தால்தான் பிழைப்பு நடக்கும் என்று நினைப்பவர். ஸ்டாலினுக்குப் பிடிக்காது என தாங்களே assume செய்துகொண்டு அதற்கேற்றவாறு ஆவர்த்தனம் வாசிப்பவர். அப்போ, அரசியலில் எப்படித்தான் முன்னேறுவது என்று யோசித்து பாஜகவுக்குப் போயிருப்பார். கொள்கை காரணமாக என்பதை யாருமே-அவர் உட்பட, நம்பமாட்டார்கள்.

    குஷ்புவை எப்போது பிடிக்காமல் போகும் என்றால், அவருடைய கொள்கைகளை மூச்சு விடாமல் பேசி, நடித்து, அழுது, புலம்பி, தேசப்பற்று என்று வேஷம் கட்டி எல்லாம் செய்து கடைசியில் ஸ்டாலின் காலைத் துடைத்துவிடும் அளவு கோமாளி ஆனவர் போல அரசியல் இகழ்வுகளைச் செய்தால்தான் யாருக்குமே குஷ்புவைப் பிடிக்காமல் போதும்.

    பாஜக வலுப்பெறும் என்று நான் நம்பவில்லை. ஆனால் அதை நோக்கி முன்னேறப்பார்க்கும் என்று நினைக்கிறேன். வாடகை மனிதர்களை இழுத்து கட்சியை வளர்க்க முடியும் என்று நினைத்தால் அது வேலைக்காகாது.

    சுயநலமிகளை ஆதரிக்கக்கூடாது – இது நம் கொள்கையா வச்சிக்கிட்டோம்னா, நாம யாரையுமே ஆதரிக்க முடியாது. அவங்க, அப்போ பேசற பேச்சு நமக்கு ஒத்துவந்தால் அதை மட்டும்தான் ஆதரிக்க முடியும்.

 4. Arul சொல்கிறார்:

  Kushboo never been with ADMK sir

 5. புவியரசு சொல்கிறார்:

  குஷ்பூவின் திட்டம்;
  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு
  பாஜக+ அதிமுக கூட்டணி ஏற்படும்.
  பாஜக கோட்டாவாக குறைந்தது
  10 சீட்டாவது கிடைக்கும்.
  அதில் ஒன்றில் போட்டியிட்டு,
  அதிமுக ஆதரவில் எம்.எல்.ஏ. ஆகி
  சட்டமன்றத்தில் கால் பதிப்பது.

  இதற்கு தமிழக பாஜகவில் தற்போது
  இருக்கும் சீனியர் தலைவர்கள் குறிப்பாக
  வானதி சீனிவாசன் போன்றவர்கள்
  இடம் கொடுப்பார்களா ? தங்களைத் தாண்டி,
  குஷ்பூ போக அவர்கள் அனுமதிப்பார்களா ?

  குஷ்பூ அடுத்ததாக போக எந்த கட்சி பாக்கி
  இருக்கிறது ?

 6. GOPI சொல்கிறார்:

  அதென்னவோ புதியவன் சாருக்கு குஷ்பூவின்
  கரிஸ்மாவும், திறமைகளும் பாஜகவுக்கு
  வந்த பிறகு தான் go
  தெரிகிறது.

  • புதியவன் சொல்கிறார்:

   ஒரு கட்சில சேர்ந்துவிட்டால், அந்தக் கட்சிக் கொள்கைகளைப் பேசியே ஆகணும். அதனை ஜஸ்டிஃபை பண்ணியே ஆகணும். இத்தகைய அரசியல் பேச்சுகளை நான் ரசிப்பதில்லை. ஹிந்தி, விவசாய மசோதா, ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு என்று எல்லாவற்றிலும் இனி குஷ்பூ ஆப்போசிட் வியூக்கள் சொல்லி, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நிறைய வேலை வைப்பார். வைகோ இதைச் செய்துதான் மதிப்பிழந்தார். எல்லா அரசியல்வாதிகளும் இதனைச் செய்தாலும் வைகோ இரண்டு extremeக்குப் போய் சிவாஜி மாதிரி ஆக்டிங் கொடுத்து நம்மை நகைச்சுவையில் ஆழ்த்தினார். குஷ்பூ அந்த மாதிரி பண்ணமாட்டங்கன்னு நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s