அம்பலமானது ரிபப்ளிக் டிவி அர்னாப்’பின் மோசடிகள் …

….
….

….

விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பியில் மோசடி செய்த
அர்னாப் கோஸ்வாமி; ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்கள்
மீது வழக்கு –

In a press conference held on Thursday, Mumbai Police Commissioner
Param Bir Singh said the city police is probing an alleged TRP scam
where certain news channels manipulated BARC data to boost
their ratings. He identified –

Republic TV,
Fakt Marathi and
Box Cinema by name.

விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை
போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்பட
3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு
தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை
போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களில்
ஒருவர் வீடுகளுக்கு வழங்கப்படும் செட் டாப் பாக்ஸை
இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் .

வீடுகளுக்கு வழங்கப்படும் செட் டாப் பாக்ஸில் அதிகம்
மக்கள் தங்கள் சேனலை பார்ப்பது போல் காட்டி டிஆர்பி
மோசடியை அரங்கேற்றியதாக ரிபப்ளிக் டிவி மற்றும்
இரண்டு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ்
மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.

இதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் செட் டாப் பாக்ஸில்
தில்லுமுல்லு செய்ததும்
விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மும்பை
போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்தார்.

இப்படி போலியான அதிகரித்து காட்டியதன் மூலமே
டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் ரிபப்ளிக் டிவி
வந்திருப்பதாகவும், இந்த மோசடி தொடர்பாக இன்று
அல்லது நாளை ரிபப்ளிக் டிவி நிறுவனத்தார் விசாணைக்கு
அழைக்கப்படுவார்கள் என்றும் மும்பை போலீஸ் கமிஷனர்
பரம் பீர் சிங் கூறினார்

மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் இதுபற்றி மேலும்
கூறுகையில், “நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம்
தொடர்பாக விசாரித்த போது, அதிக டிஆர்பி காட்டுவதற்காக
இந்த காரியங்களை செய்ததை பிடிப்பட்டவர்கள் ஒப்புக்
கொண்டுள்ளனர். எனவே இந்த மோசடி தொடர்பாக
ரிபப்ளிக் டிவி தொலைக்காட்சியின் இயக்குநர்கள் மற்றும்
விளம்பரதாரர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

சேனல்களின் வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்படும்.

விளம்பரதாரர்களிடமிருந்து அவர்கள் பெறும் நிதி மற்றும்
“அவை குற்றங்களின் வருமானத்திலிருந்து வந்தவையா”.
என்பது குறித்தும் விசாரிப்போம்.

விசாரணையில் ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப்
கோஸ்வாமியும் அடங்குவாரா என்று கேட்கிறீர்கள். சேனலில்
சம்பந்தப்பட்ட எவரும், எவ்வளவு பெரிய உயரத்தில்
இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

அதில் அவர்களுக்கு சம்பந்தம் இருந்தால் , விசாரிக்கவும்
படுவார்கள். குற்றம் நிரூபணம் ஆனால், சேனல்களின்
வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும். அடுத்தடுத்த
நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த டிஆர்பி மோசடி என்பது வீடுகளில் டிவி சேனல்களை
மக்கள் எந்த அளவிற்கு பார்க்கிறார்கள் என்பதை
பார்ப்பதற்காக கணக்கீடு மீட்டர் வைக்கப்படும். அதில்
போலியாக, மதிப்பீடுகளை அதிகரித்து காட்டி மோசடி
செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக
விளம்பர நிதியைப் பெற்றிருக்கிறர்கள். இது மோசடியான
வருமானமாகக் கருதப்படும். இப்படி பல முக்கிய விளம்பர
வருவாய்கள் வந்துள்ளது,

தவறான டிஆர்பி விவகாரத்தில். டிஆர்பி கணக்கீட்டிற்காக
குறிப்பிட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து மதிப்பீட்டு மீட்டர்களை
வைத்து வரும் ஹன்சா என்ற நிறுவனத்தின்
முன்னாள் ஊழியர்கள், மூன்று சேனல்களுடன் ரகசியமாக
டேட்டாக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். டிஆர்பிக்காக
ஊடக நிறுவனங்கள் தங்கள் சேனலை எல்லா நேரத்திலும்
ஆன் செய்தே வைத்திருக்க வேண்டும் என்று வீடுகளுக்கு
லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஏனெனில் அந்த டேட்டாக்களை பார்த்தால், ஆங்கிலம் பேசாத
ஏழை படிக்காத குடும்பங்கள் ஆங்கில தொலைக்காட்சி
சேனல்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கிறது.
தங்கள் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக டிவியை
ஆன் செய்து வைக்கும் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும்
400-500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது”
என்றார்.

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அம்பலமானது ரிபப்ளிக் டிவி அர்னாப்’பின் மோசடிகள் …

 1. புதியவன் சொல்கிறார்:

  இங்க தமிழ்நாட்டு சேனல் குழுமம் ஒன்றும் ஆரம்பத்திலிருந்தே இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். அதனால இது ஒரு பெரிய விஷயமாக எனக்குத் தெரியவில்லை. பல சேனல்கள் இந்த ஃப்ராடைச் செய்கின்றன. காங்கிரஸ், சிவசேனா அரசினால் இவரைக் குறி வைத்திருக்கின்றனர். அவ்ளோதான்.

 2. GOPI சொல்கிறார்:

  புதியவன் சார்

  “அவன்” பண்ணல்லையா
  “இவன்” பண்ணினா என்ன தப்பு ?

  அதானே சொல்ல வர்ரீங்க ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மும்பை போலீஸ் கமிஷனர் இது குறித்து
   அளித்துள்ள பேட்டி கீழே –

   ….

   ….

  • புதியவன் சொல்கிறார்:

   இந்தியாவில் என்ன மாதிரியான ஊழல் நடந்தாலும் அதன் ஆணிவேர் திமுகவில்தான் போய் முடியும். கத்துக்கொண்டிருப்பார்கள். அவ்ளோதான் விஷயம்.

 3. bandhu சொல்கிறார்:

  முதல் விஷயம். இந்த TRP ரேட்டிங் சேனல் பார்வையாளர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. பிடித்தால் பார்க்கப் போகிறார்கள். இல்லை என்றால் பார்க்கப் போவதில்லை. அவ்வளவே.

  இரண்டாவது. TRP ரேட்டிங் என்றுமே வெளிப்படையாக இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. ஏனென்றால் இது கம்பெனிகள் எந்த மீடியா கம்பெனிக்கு விளம்பரத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க உதவும் கருவி. TRP ரேட்டிங் கினால் பாதிக்கப் படப்போவது இவர்கள் மட்டுமே.

  இது போன்ற தகிடு தத்தங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்.

  இந்த கேஸை பொறுத்தவரை someone is settling their score!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s