….
….
…
அதே கல்வி நிறுவனத்தில்(I.I.T.), அதே வருடத்தில்,
அதே படிப்பை படித்துமுடித்து வெளிவந்த
2 நபர்களின் வாழ்க்கையில் எத்தனை வித்தியாசம்
பாருங்கள்…..!!!
ஒருவர் – கூகுள் தலைமை அதிகாரி – சுந்தர் பிச்சை…
மற்றவர் – இஸ்கான் அமைப்பில் – துறவியாக,
உயர்ஆசானாக ஆன்மிகப்பணியாற்றும் – கௌரங் பிரபு….
(புகைப்பட உதவிக்கு நன்றி – நண்பர் அஜீஸ்…)
மனிதரின் வாழ்க்கை –
எங்கே, எப்படி, எப்போது, யாரால் – நிர்ணயிக்கப்படுகிறது…?
……………
…………….
.
—————————————————————————————————————————-
ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே வாழ்க்கையில் வித வித நிலைகளை அடையும்போது ஒரு instituteல் படித்ததால் மட்டுமே இருவரும் ஒரே நிலையில் (அல்லது ஒப்பிடும் அளவில்) இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஒரு தாயின் பிள்ளைகளின் குணம், வாழ்க்கையில் எவ்வளவு வித்தியாசம். அதுதான் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. ஒரே facility, ஒரே உணவு, ஒரே தராதரம் ஆனால் விதி, அவங்க குணம் வெவ்வேறு.
இன்னொன்று, இருவரிடம் ஒரே அளவு பணம் (ஒப்பீடு அளவில்) இருந்தாலும் ஒருவர் வாழ்க்கையை அனுபவிப்பார், இன்னொருவர் செலவழிக்காமல் சேர்த்து செத்துப்போவார். இதுவும் என்னை ஆச்சர்யப்படுத்தும்.
எனக்குத் தெரிந்த ஒருவர், சாதாரண நிலைதான், ஆனால் தர்ம காரியத்துக்கு பணம் நிறையவே கொடுப்பார். என்னைப்போன்று ஆட்டோ காரர், பெட்டிக்கடை காய்கறி இவற்றிலெல்லாம் பேரம் பேசவே மாட்டார். என்னிடமும் சொல்லுவார், நம்மகிட்ட அதிகமா வாங்குற 20-30 ரூபாய்ல இவங்க பங்களாவா கட்டிடுவாங்க, இல்லை நாமதான் ஏழையாகிவிடுவோமா என்பார். இந்த குண வித்தியாசமும் என்னை ஆச்சர்யப்படுத்தும்.
புதியவன்,
//என்னைப்போன்று ஆட்டோ காரர், பெட்டிக்கடை
காய்கறி இவற்றிலெல்லாம் பேரம் பேசவே மாட்டார்.
என்னிடமும் சொல்லுவார், நம்மகிட்ட அதிகமா
வாங்குற 20-30 ரூபாய்ல இவங்க பங்களாவா
கட்டிடுவாங்க, இல்லை நாமதான் ஏழையாகி
விடுவோமா என்பார். //
நான் கிட்டத்தட்ட இதே டைப் தான்.
ஏழைகளிடம் பேரம் பேசவே மாட்டேன்.
கேட்பதை கொடுத்து விடுவேன். கீரை விற்கும்
முதிய பெண்மணிக்கு அவர் கேட்பதை விட
பத்து-இருபது ரூபாய் கூடவே சேர்த்துக்
கொடுப்பேன்.
அதையும், ஏதோ – கடவுள் நமக்கு
இந்த அளவு உதவி செய்யவாவது
வசதியை /பாக்கியத்தை தந்திருக்கிறாரே…
என்று நினைத்துக் கொண்டே கொடுப்பேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
புதியவன்,
நீங்கள் சொல்லியிருக்கிற “ஒரே தாய்
வயிற்றில் பிறந்த பிள்ளைகளிடையே
உள்ள வித்தியாசங்கள்” – ஒரு பெரிய சப்ஜெக்ட்.
இதைப்பற்றி நிறையவே பேசலாம்.
எங்கள் பெற்றோருக்கு பிறந்தவர்களில்
ஜீவித்திருந்தவர்கள் -நாங்கள் 6 பிள்ளைகளும்,
2 பெண்களும்….
பெண்களை விடுங்கள்..
6 பிள்ளைகளில் யாருமே ஒருவர் போல்
மற்றொருவர் இல்லை… உருவத்தில்
சொல்லவில்லை – குணாதிசயங்களில்….!!!
6 பேருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே
இருக்காது. ஒரே ஒரு அண்ணா மட்டும்,
சில ரசனைகளில் என்னுடன் ஒத்துப் போனான்.
புத்தகங்கள், இசை, திரைப்படங்கள்…என்று.
மற்றபடி எல்லாருமே வித்தியாசமானவர்கள் தான்.
– இந்த இடுகையை பொருத்த வரை –
நான் சொல்ல வந்தது, ஐ.ஐ.டி.யில் ஒரே ஆண்டில்,
ஒரே வகுப்பில் படிப்பவர்கள் –
படிப்பில், வயதில், அனுபவத்தில்,புத்திசாலித்தனத்தில்
கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருந்திருப்பார்கள்.
ஒரே மாதிரி எதிர்காலத்தை எதிர்நோக்கித் தான்
அதுவரை நகர்ந்து வந்திருப்பார்கள்.
அதன் பின்னர் நடந்தவை தான் அவர்களை
மாற்றி, வெவ்வேறு தடங்களில் பயணப்பட
வைத்திருக்கிறது…
அதைத்தான் குறிப்பாக சொல்ல வந்தேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சார்…அந்த ஒப்பீடு (பள்ளி) அவ்வளவாக சரியாக இருக்காது. என் அண்ணனுடன் படித்த ஒருவன் யூனிவர்சிடி கோல்ட் மெடலிஸ்ட், அண்ணன் 85 சதவிகிதம் என்றால் அந்தப் பையன் 98 சதவிகிதம் மார்க். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அண்ணன் ஒரு கல்ஃப் தேசத்தில் இந்த கோல்ட் மெடலிஸ்ட் பையனைவிட நாலு மடங்கு அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தான். குவாலிஃபிகேஷனில் சாதாரணமானவன் ப்ரம்மாண்டமான சம்பளம் வாங்கிக்கொண்டு இருப்பதையும் கண்டிருக்கிறேன். ஒரே ப்ரொஃபஷனில் இருப்பவர்களிடம் இந்த அதீத வித்தியாசத்தை நான் பார்க்கிறேன் (பார்த்திருக்கிறேன்). இது எதனால் நிகழ்கிறது என்பதற்கு, ‘பூர்வ ஜென்ம வினை/பலன்/ என்று மட்டும்தான் சொல்லமுடியும்.
அடுத்த விஷயம்… எது பாக்கியமான நிலை என்று நாம் நினைப்பதற்கும் நம் கர்மவினையே காரணம். ஒருத்தருக்கு சுந்தர் பிச்சையின் நிலை மிக உயர்ந்ததாகத் தெரியலாம், எனக்கு அவர் நண்பரின் நிலை இன்னும் உயர்ந்ததாகத் தெரிகிறது. அவர் நண்பரின் நிலையில் பாவம் செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு (அனேகமாக) ஆனால் சுந்தர் பிச்சையின் இக வாழ்வில் பாவம் செய்யும் வாய்ப்புகள் மிக அதிகம். எவ்வளவு நல்லவராக இருந்தாலும் தொழில் என்று வரும்போது அதில் பாவம் செய்வது அதிகம்.
எனக்கு இருப்பதே அதிகம், எனக்கு எதுவும் தேவையில்லை என்ற நிலை இருப்பதைப்போலச் சிறந்தது உண்டா?
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்
மு.வ உரை:
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை
முகேஷ்/அனில் அம்பானிகள்