பாஜக-வின் பொன்.ரா. ஏன் இப்படி காய்கிறார்…?

….
….

….

தமிழக அரசியல் களத்தில், இன்றைய தினம்
அதிமுக-வில் சில முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒருவேளை பிளவுபடுவார்களோ என்கிற நிலை ஏற்பட்ட
சமயத்தில் – சரி செய்துகொண்டு விட்டார்கள்.

அதிமுக-வில், இவர் தணிந்து போனரா,
அவர் தணிந்து போனாரா,
இவர் கழட்டி விடப்பட்டாரா,
அவர் கழட்டி விடப்பட்டாரா
என்றெல்லாம் விவாதங்கள் நடந்தால்,
அது புரிந்துகொள்ளக்கூடிய விஷயமே…

ஆனால், இவை எதுவும் இல்லாமல், அதிமுக-வின்
வெவ்வேறு குழுவினர் (தற்காலிகமாகவாவது) ஒன்றுபட்டதை
பார்த்து,

பாஜகவின் முன்னாள் தலைவர்- முன்னாள் மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் காய்வது ஏன் என்பது தான்
புரியவில்லை;

இன்றைய நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம்
பேசும்போது, இதற்கு சற்றும் தொடர்பே இல்லாமல் –

“தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகளில் மாற்றம் ஏற்படலாம்.
நாங்கள் அதிமுகவுடன் வேண்டுமானலும் கூட்டணி வைக்கலாம்.
திமுகவுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்….”

– என்று கூறி இருக்கிறார்.

தமிழகத்தில் பாஜகவைச் சேர்ந்த எந்த ஒரு மனிதராவது
திமுக-வுடன் கூட்டு சேர்வதைப்பற்றி யோசிப்பாரா…
ஒருவேளை மனதிற்குள் தோன்றினாலும்
வெட்கம் மானமின்றி அதை வெளியில் சொல்வாரா …?

“கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்; இந்துக்களுக்கு
விரோதமானவர்கள்” – என்று நேற்று வரை கூறி விட்டு –

இன்றைக்கு திமுக-வுடன் கூட
நாங்கள் கூட்டணி வைக்கலாம்
என்று சொல்கிறாரே…

இதன் பின்னணி என்ன….?
இன்றைய நிகழ்வுகளில் எது இவரை கடுப்பேற்றி இருக்கிறது…?

இவர் எதை எதிர்பார்த்தார்…
எதில் ஏமாந்து போனார்…?

திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அமைப்போம் என்று
தான் சொல்வதை பாஜக ஆபீஸ் பியூன் கூட ஏற்க மாட்டார்
என்பது அவருக்கு தெரியாதா…?

பின் பொன்’னாருக்கு ஏன் இந்த காய்ச்சல்..?

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பாஜக-வின் பொன்.ரா. ஏன் இப்படி காய்கிறார்…?

 1. புதியவன் சொல்கிறார்:

  பொன்னார் அவலை நினைத்து உரலை இடிக்கிறார். பாஜக தமிழக தலைவர் முருகன் அவர்களும் 70-90 தொகுதிகளில் பாஜகதான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக 2016ல் இருந்தது என்று சொல்கிறார். அதனைப் படித்த பிறகு எனக்கும் வாக்கு சதவிகிதம் எவ்வாறு 2016ல் இருந்தது என்று திரும்பப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. 1000 வாக்குகளுக்குக் குறைவாக வெற்றி வித்தியாசம் இருந்த தொகுதிகள் 70-90 இருக்க முடியுமா என்று. அவர் சொல்வதைப் பாருங்கள்…. அதிமுக பாஜக கூட்டணி அரசாம். ஏன் மத்திய அரசில் பாஜக அதிமுக கூட்டணித் தலைவரான மோடி அவர்கள் பிரதமராக இருக்கிறார் என்று சொல்ல வேண்டியதுதானே.

  யாரேனும் ஓரிரு கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக எழுதுவதால், விமர்சனம் தளத்துக்கு நானும் கூட்டணி, என்னால்தான் விமர்சனம் தளமே இயங்குகிறது என்று சொன்னால், அப்படிச் சொல்கிற ஆளின் சொந்த ஊர் கீழ்ப்பாக்கமாக இருக்கலாமோ என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.

  Beggers are not choosers என்ற பழமொழியை பொன்னாருக்கு, பாஜக தமிழக தலைவருக்கு யார் சொல்லுவார்? பாஜக என்பது அதிமுகவுக்கு மைனஸ் 5-8 சதவிகித வாக்குகள். அதனால பாஜக அதிமுகவுடன் கூட்டுச் சேர நினைத்தால், ஒரு சீட்டும் வாங்கிக்கொள்ளாமல், கர்நாடகாவில் அதிமுகவுக்கு 5 சதவிகித சீட்டுகள் கொடுப்பதுதான் நியாயம். பாஜக திமுகவுடன் கூட்டணி சேர்வது, அதிமுகவுக்கு மிக மிக நல்லது. சரி… உங்க கேள்விக்கு வருகிறேன்.

  //இன்றைய நிகழ்வுகளில் எது இவரை கடுப்பேற்றி இருக்கிறது…?// – அதிமுக எடப்பாடி அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்திக்க முடிவு செய்ததுதான் அவர் கடுப்பிற்குக் காரணம். அந்தக் கடுப்பிற்கு எனக்குத் தெரிந்து அவர் ‘வயிற்றெரிச்சல்’தான் காரணமாக இருக்க முடியும். அதிமுகவை மத்திய அரசில் பாஜக இருப்பதால் கபளீகரம் செய்துவிடலாம் என்று தீட்டிய (ச) திட்டம் பணால் ஆனது உண்மையிலேயே அவருக்கு வயிற்றெரிச்சல்தான். ஊர் ரெண்டு பட்டால்தானே அங்கு கூத்தாடிக்கு வேலை.

 2. GOPI சொல்கிறார்:

  ஸ்டாலின், இவதினம் தினம் இவரது தலைவரை
  வாய்க்கு வந்தபடி யெல்லாம் ஏசுவதை
  கேட்ட பிறகும் இவர் திமுகவுடன் கூட்டணி
  வைப்போம் என்று சொல்வதைப்பார்த்தால்
  எங்கோ எதுவோ கழன்று விட்டது என்று தான்
  தோன்றுகிறது.

  ஒருவேளை அவர்கள் முட்டிக்கொண்டிருந்தால்,
  இவருக்கு சந்தோஷமாக இருந்திருக்கும்.
  இவர்களுக்கு எதாவது கொஞ்சமாவது
  மரியாதை இருந்திருக்கும்.
  அது இல்லாமல் போய் விட்டதே என்கிற
  வயித்தெரிச்சல்.

 3. tamilmani சொல்கிறார்:

  கன்னியாகுமாரி தொகுதியில் ஏற்பட்ட தொடர்ந்த தோல்விகள்
  அவரை அப்படி பேச வைக்கிறது. நாள் தோறும் மோடியையும் ,
  பிஜேபியையும் எதிர்த்து வரும் திமுகவினரிடம் கூட்டணி வைக்கலாம்
  என்று பேசும் இவரை பிஜேபி தலைமை எப்படி விட்டு வைத்திருக்கிறது ?
  இவர் பேசுவதை திமுகவினரே ரசிக்கவில்லை. நல்லவேளை அதிமுகவினர்
  விழித்து கொண்டு எடப்பாடி தான் முதலமைச்சர் என்று அறிவித்து விட்டனர்.
  ஓபிஸ் நிலைமை அறிந்து “சமரசம் ” செய்து கொண்டு விட்டார். பொன்னாருக்கு
  ஏமாற்றமே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.