….
….
….
முன்னர் – தமழ் நாட்டில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக
இருந்தபோது, 2005 முதல் 2008 வரை சென்னை உயர்நீதிமன்றத்தின்
(High Court of Madras ) தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்
ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா.
இருவருக்கும் ஒத்துப்போகாததால், திரு.கருணாநிதி அப்போது
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த
ஜஸ்டிஸ் பாலகிருஷ்ணன் அவர்களிடம் தன் செல்வாக்கை
பயன்படுத்தி, ஜஸ்டிஸ் ஷா அவர்களை தமிழ்நாட்டை விட்டு
அகற்றினார் என்று முன்னர் ஒரு செய்தி உண்டு.
நியாயமாக அடுத்து பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்
ஜட்ஜாக போகவேண்டிய ஜஸ்டிஸ் ஷா டெல்லி
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம்
செய்யப்பட்டு அங்கேயே பணி ஓய்வு பெறவேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டது என்றும் அந்த பழைய செய்தி கூறும்.
அதன் பிறகு ஜஸ்டிஸ் ஷா 2013 முதல் 2015 வரை
இந்தியாவின் 20-வது சட்டக்கமிஷன் (20th Law Commission of India )
தலைவராகவும் பணியாற்றினார்.
ஜஸ்டிஸ் ஷா மிகச்சிறந்த நேர்மையாளர்…
தன் மனதில் பட்டதை பளிச்சென்று கூறுபவர்…
இங்கே சொல்ல வந்தது – அண்மையில் ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா
அவர்கள் சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் நடைபெறும் விதம் பற்றி
மனம் திறந்து வெளிப்படையாக சில கருத்துகளைக்
கூறி இருக்கிறார். நாம் அதை தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டால் சரியாக அமையாது என்று நினைக்கிறேன்….
நீதித்துறையில் அனுபவம் மிக்கவர்….
அவர் சொல்வதை அவர் வார்த்தைகளிலேயே கேட்டால் தான்
அதன் முழு வீரியமும் புரிய வரும்…
அவர் சொல்லும் சில கருத்துகள் கவலை தருவன.
சிந்தனைக்குரியவை…
கீழே – ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா அவர்களின் ஒரு அண்மைய பேட்டி –
……….
……….
.
—————————————————————————————————————–
உண்மையைச் சொல்கிறார்.
ஆனால் பலருக்கு எரியும்.
யோசிக்க வேண்டிய விஷயங்களை பளிச் என்று சொல்லியிருக்கிறார். நேர்மை உறங்கும்ப்போது புலிகள் ஊரில் வேட்டையாடும். பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மெஜாரிட்டியில் இருக்கும்போது, நீதித்துறைதான் கேள்வி கேட்கும் நிலையில் தன்னை வைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு முதல் படி, நீதித் துறையில் இருப்பவர்கள் ஓய்வு பெற்ற பிறகு எந்த கமிஷன் பதவிக்கும், அரசியல் பதவிக்கும் ஆசைப்படக் கூடாது, அரசியலில் இறங்கக்கூடாது என்று சட்டம் வரணும்.
கருணாநிதிக்குப் பிடிக்காதவரா..(வேற என்ன.. சட்டத்தை வளைக்க விலை பேசியிருப்பார் கருணாநிதி). அப்போ இந்த நீதிபதியின் நேர்மையைப் பற்றி சந்தேகத்திற்கே இடம் கிடையாது. மிக நேர்மையான நீதிபதிதான்.
நேற்று ராகுல் காந்தி பேசியது :
எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து விட்டதா என்ற கேள்விக்கு
ராகுல் காந்தி பதில் அளிக்கும் பொழுது.
எதிர்க்கட்சிகள் இயங்குவதற்கான தளங்கள் அமைப்புக்கள்
எல்லாவற்றையும் பிரதமர் மோடி தன் வசப்படுத்திக் கொண்டார்.
பிரதமர் மோடிக்கு தன்னைப் பற்றிய அபிப்பிராயம்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தான் கவலை உள்ளது.
சுதந்திரமான பத்திரிகைகள் இன்று இல்லை.
சுதந்திரமான அமைப்புக்கள் கிடையாது.
சுதந்திரமான பத்திரிகைகளை இந்திய அரசு உறுதி செய்தால்
இந்த அரசு தொடர வழியில்லாமல் போய்விடும்
மெய்ப்பொருள்,
இதற்கு மோடிஜியின் அரசு
மட்டும் காரணமல்ல.
குட்டிக்கரணம் போடு என்று
சொல்லி முடிக்கும் முன்னரே
“இதோ எண்ணிக் கொள்ளுங்கள்”
என்று வெட்கமின்றி தண்டனிடும்
தொடைநடுங்கி மீடியா முதலாளிகளும்
முக்கிய காரணம் – இல்லையா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ராகுல் காந்தி பேசியதில் ஒரு அர்த்தமும் இல்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மட்டும் ஜனநாயகம் தழைத்துக்கொண்டிருந்ததா? அரசு அதிகாரிகளை, தங்களுக்கு ஜால்ரா போட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக கவர்னர் மற்றும் பல பதவிகளில் கொண்டுவர வில்லையா? ஏன்..கலாம் திரும்பவும் ஜனாதிபதியாக ஆகக்கூடாது என்பதற்காக பொம்மை பாடீலைக் கொண்டுவரவில்லையா? துக்ளக்கிற்கு, இந்தியன் எக்ஸ்ப்ரஸுக்கு காங்கிரஸ் செய்யாத அநீதியா? அந்தக் காலங்களில் ஹிந்து போட்ட ஜால்ராவை எல்லோரும் அறிவார்களே.
பத்திரிகை, தொலைக்காட்சிகள் சேவை செய்ய வரவில்லை. அதெல்லாம் கோயங்கா காலத்தோடு போய்விட்டது. புற்றீசல் மாதிரி பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் வந்தது, எப்படி சம்பாதிக்கலாம் என்பதற்காக வந்தவை. காசு யார் கொடுக்கிறார்களோ அதற்கேற்றவாறுதான் செய்திகள் வெளிவரும். விகடன் தன் நிறம் முழுமையாக மாற்றிக்கொண்டது, தினத்தந்தி, திமுக தலைவர் சொன்னதற்காகச் செய்த மாற்றங்கள், ஹிந்து ராம், மத்திய அரசு நிறைய விளம்பரங்கள் தரணும் அதற்கு நிறைய கூலி தரணும் என்றெல்லாம் சொன்னது நியாயமாக நடப்பதற்கா?
திரு ராகுல் காந்தி மிகவும் சரியாகவே பேசியிருக்கிறார் .
நீதிபதி A P ஷா சொன்னதும் அதைத்தான் .
பா ஜ க இன்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது
என்ற முனைப்புடன் செயல்படுகிறது .
செய்தித்தாள்கள் மற்ற எந்த ஊடகமும் கேள்வி
கேட்பதில்லை – முதலாளிகள் மட்டுமில்லை
வேலை செய்பவர்களும் பயப்படுகின்றார்கள் .
இதில் நீதி மன்றங்களும் அடங்கும் .
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கே சாட்சி .
சேகர் ரெட்டி வழக்கும் ” முடித்து ” வைக்கப்பட்டுள்ளது .
பிரச்சினையின் தீவிரம் தெரிந்தும் மு க
செய்யாததா , இந்திரா செய்யவில்லையா என்பது பதிலாகாது .
திரு அமித் ஷா – எங்களிடம் 30 லட்ச பொய்யான
சமூக வழித்தட கணக்குகள் உள்ளன .
எந்த பொய்யையும் உண்மையாக்க முடியும் என்கிறார் .