….
….
….
….
கலைஞர் கருணாநிதி –
எம்ஜிஆரை –
திமுகவிலிருந்து வெளியேற்றிய பிறகு,
எம்ஜிஆர் அவர்கள் தனிக்கட்சி துவங்கி,
தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்று,
முதலமைச்சரும் ஆன பிறகு,
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒன்றாக,
அருகருகே அமர்ந்து கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி
டாக்டர் தமிழிசை அவர்களின் திருமண நிகழ்ச்சி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் ஒன்றாக
கலந்துகொண்ட நிகழ்ச்சி என்பதால், அப்போது இது ஆவலுடன்
எதிர்பார்க்கப்பட்டது.
இது இரண்டு வருடங்களுக்கு முன்பே
தந்தி தொலைக்காட்சியில் வெளிவந்திருக்கிறது என்றாலும் கூட,
நான் இப்போது தான் பார்த்தேன்…
நண்பர்களுக்கும் சுவாரஸ்யப்படும் என்பதால் இங்கே பகிர்ந்து
கொள்கிறேன்….
ஒலிப்பதிவு சரியாக இல்லை; எனவே, பல இடங்களில்
பேச்சு புரிவதில்லை; என்ன சொல்கிறார்கள் என்பது
சரியாகப் புரியாததால் பேச்சை ரசிக்க முடியவில்லை;
காணொலியில் கவனித்தது –
இருவர் முகத்திலும் பகை இல்லை;
அதே சமயம் அந்நியோந்நியமும் நட்புணர்வும் இல்லை;
ஆனால் சகஜமாக இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். – கருணாநிதியை –
” எனது நண்பரும் என்னுடைய அன்பருமான
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களே ”
என்று விளிக்கிறார்.
கருணாநிதி – எம்.ஜி.ஆரை –
” அன்பிற்குரிய நண்பரான மாண்புமிகு தமிழக முதல்வர்
அவர்களே ” என்று விளிக்கிறார்…
( எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லவே இல்லை…!)
வழக்கமாக, கலைஞர் பேசும் கூட்டங்களில், எல்லாரும்
பேசிய பிறகு அவர் தான் கடைசியாகப் பேசுவார்.
ஆனால், இங்கே முதல் முறையாக, கலைஞர் பேசிய பிறகு
கடைசியாக எம்.ஜி.ஆர். பேசுகிறார்… ( protocol…? )
இந்த வீடியோவைப் பார்க்கும்போது –
முதல் முறையாக எம்.ஜி.ஆர்., கருணாநிதியை விட
வயதில் மூத்தவர் என்கிற உணர்வு தோன்றுகிறது….!!! ஏனோ…?
இந்த காணொலி பல பழைய நினைவுகளைக் கிளறுகிறது….
…………….
…………….
.
——————————————————————————————————