….
….
….
ஒரு செய்திச்சுருள் பார்த்தேன்.
இதுவரை நாம் கேள்விப்படாத வெகு சுவாரஸ்யமான
பல பழைய சரித்திரத் தகவல்கள்…
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், சென்னையில்
அற்புதமான, முக்கியமான பல கட்டிடங்களை கட்டிய,
பிரிட்டிஷ் அரசு காண்டிராக்டர் நம்பெருமாள் செட்டி
என்பவரைப் பற்றி ….
அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
அடங்கிய காணொலி –
……
……
.
————————————————————————————————————–
வைணவத்திற்கு தெலுங்கு செட்டியார்கள் நிறைய செய்திருக்கின்றனர். கோவில்கள் புனரமைப்பு, முகலாயர்களால் பாதிக்கப்பட்ட கோவில்களை மீட்டெடுத்து அதற்கான பணிகளைச் செய்தது, முக்கியக் கோவில்கள் இருக்கும் ஊர்களில் எல்லாம் தர்ம சத்திரம் கட்டிவைத்தது என்று நிறையச் செய்திருக்கின்றனர். எங்கோ தென் தமிழகத்தில் இருக்கும் கோவில்கள் இருக்கும் ஊரில், ‘தெலுங்குச் செட்டிகளால் அமைக்கப்பட்ட சத்திரம்/மண்டபங்கள்’ போன்றவற்றைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். நாயகர்கள் (நாயக்கர்கள்) தமிழ் நிலப்பரப்பை ஆள வந்த பிறகு தமிழகத்தில் கணிசமாக தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டவர்கள் பரவலாக இடம் பெயர்ந்தனர். தமிழர்கள் என்று சொன்னால் அவர்களில் தெலுங்கர்களும் அடக்கம்.
அதுபோல நகரத்தார்கள் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சைவ சமயத்திற்கு நிறையச் செய்துள்ளனர். காந்தியைப் பற்றி முதல் ஆவணப்படம் எடுத்த ஏ கே செட்டியார், அவர்களில் ஒருவர்.